Blog Archive

Saturday, April 08, 2017

. திருமங்கலம் திண்டுக்கல் காட்சிகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நாங்கள் குடியிருந்த உசிலம்பட்டி மதுரை ரோடு
Thirumangalam Busstand.
Dindugal Junction
எங்கள் பள்ளி.
பல பயணங்களுக்கு வழிகாட்டி.
 ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கிய பயணம் இதோ இந்த ஜாகர்தாவில் நிற்கிறது.
இடைப்பட்ட வருடங்கள்  திருமங்கலம், திண்டுக்கல்,பசுமலை,புதுக்கோட்டை ,சேலம்,கோயம்பத்தூர்,திருச்சி,சென்னை என்று  வந்து சேர்ந்தது.
கற்றகாலம், அனுபவப்  பாடம் கற்றகாலம், சிரித்துக் கழித்த காலம். உறவுகள் சேர்ந்த காலங்கள் ,அவர்களுடன் களித்த  காலம்,அவையே பிரிந்த காலம்,
புதுப்புது நட்புகள்
அங்கங்கே நடப்பட்ட தூண்கள்

ஆதரவுகள் .
காலம் மாறிக் காட்சி மாறி,
வந்தது வருவது எல்லாவற்றையும் ஏற்றுச்  சிரிக்கவும் ஏற்கவும் அதே காலம் கற்றுக்கொடுக்கிறது.
அனைவரும் வாழ்க வளமுடன்.

13 comments:

ஸ்ரீராம். said...

காட்சிகளை ரசித்தேன். நினைவுகள் தொடரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அன்றைய St. Joseph Higher Secondary School - பார்த்து வியப்பு....! இப்போது எவ்வளவு மாறி விட்டது...!

நன்றி அம்மா...

நெல்லைத் தமிழன் said...

ஒரு சின்ன பத்தில வாழ்க்கை கடந்த பாதையைச் சொல்லிட்டீங்க. எனக்கும் வாழ்க்கைப் பாதையில் கடந்து சென்ற இடங்களை மீண்டும் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். சிலவருடங்களுக்கு முன்னால் கீழந்த்தத்தைப் பார்த்தபோது 35 வருடங்களுக்கு முன்னால் வசித்த இடமா என்று ஆச்சர்யம்தான் வந்தது. மாற்றம் ஒன்றுதான் மாறாத்து.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், மிக நன்றி மா.அப்படியே ஆகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

இது என் தோழி அனுப்பிய படம். புதிதாகத் தெரிகிறது. நான் படித்த போது
இவ்வளவு புதுமையாக இருக்காது. தனபாலன். இந்தப் பள்ளியிலியே படித்த என் ஓரகத்தி அனுப்பின படம்..]]] நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

நினைவுகள் தொடரட்டும்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன். வருகைக்கு மிக நன்றி மா.
எங்கள் திருமங்கலமே மாறிவிட்டது நான் பிரம்மாண்டம் என்று நினைத்த வீடு சின்னதாகக் காட்சி அளித்தது. சுற்றிலும் கடைகள் வேறு.
கோவில் ஒன்றுதான் மாறவில்லை. அப்போதிருந்த எளிமை இல்லை.நீங்கள் சொல்வது சரிதான்
மாற்றம் ஒன்றே மாறாதது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். கட்டாயம் தொடரலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பா.

இராய செல்லப்பா said...

மதுரை போகும் வழியில் திண்டுக்கல் பார்த்திருக்கிறேன். அங்கு யாரும் தெரிந்தவர்கள் இல்லை.(அப்போது). இனிமேல் போனால் 'பதிவுலக முன்னவர்' திண்டுக்கல் தனபாலன் இருக்கிறார். போகும் அதிர்ஷ்டம் வேண்டுமே!

மு க அழகிரியின் தயவால் உலகிலுள்ள எல்லா தமிழர்களும் தமிழர் அல்லாதவர்களும் 'திருமங்கலம் (பார்முலா') என்ற பெயரைத் தெரிந்துகொண்டபோதுதான் நானும் தெரிந்துகொண்டேன். நீங்கள் இன்னும் அங்குதான் இருக்கிறீர்களா?

-இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்-இன்று) நியூ ஆர்லியன்ஸ்

வல்லிசிம்ஹன் said...

அந்த பஸ்ஸ்டாண்டில் திண்டுக்கல் மரே...]மதுரை மழுங்கி] ஒலிக்கும் கண்டக்டர் குரலில்.
இவையெல்லாம் நாங்கள் இருந்த இடம் திரு செல்லப்பா.
இந்த வாரம் திரும்பிப் பார்க்கும் நேரம்.

வல்லிசிம்ஹன் said...

பல பத்துகள் கடந்த காலம் அது. இப்பொழுது கண்டம் விட்டு கண்டம் செல்லும் பறவை நான். திரு செல்லப்பா. இந்தோனேசியாவில் இருக்கிறேன்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் சமீபத்தில் இந்தியா போயிருந்தீங்களா?

வல்லிசிம்ஹன் said...

இல்லை கீதாமா. நவம்பர் இங்க வந்தது தான். இங்கே
ரெசிடென்ஸ் விசா வாங்கி விட்டான் பையன்.
இனி மெடிகல் செக்கப் செய்ய போணும்.
ஜூலை யுஎஸ் ஏ . போக ப்ளான் இருக்கு. நீங்கள்
எப்போது ஸ்ரீரங்கம் வருகிறீர்கள்.