Blog Archive

Monday, May 30, 2016

#அமெரிக்க அனுபவம் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



#அமெரிக்க அனுபவம் 6
++++++++++++++++++++++++++++
 கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல மெல்ல விழிக்கிறது.
அவளும் நானுமாகப் புதிய செடிகளைப் பதியன்  செய்து கொண்டிருந்த போது, அடுத்த தெரு ஆண்ட் ரூ தன் குட்டி செல்லத்துடன்   வாக்கிங்க் வந்து கொண்டிருந்தார்.
 பெண் அவரிடம் அவர் மனைவியின் உடல் நலம் விசாரித்தாள்.
 இப்போது கொஞ்சம் நினைவுக்கு வருகிறது.
ஹர் மெமரி இஸ் கெட்டிங்க் பெட்டர்  என்று சொல்லி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டுச் சென்றார்.
என்ன விஷயம். மெலனி நன்றாகத்தானே இருந்தாள் என்று விசாரித்தேன்.
50 வயது மெலனிக்கு  இருமல் ,காய்ச்சல் என்று ஒருவாரம் அவதிப்பட்டுப் பக்கத்து ஹாஸ்பிடலுக்குப் போய் எல்லா சோதனைகளையும் செய்து ஒன்றும் பயனில்லையாம்.
அவள் கூட நீச்சல் பயிற்சி செய்யும் இன்னோரு வைத்தியர்
அவளைத் தன் க்ளினிக்கிற்கு   அழைத்துச் சென்று
சோதனைகள் செய்திருக்கிறார்.
உடனே முடிவுக்கு வந்தவராய்  எட்வார்ட் ஹாஸ்பிடலில்   சேர்த்து சிகித்சை மேற்கொண்டதில் உயிர் பிழத்தாளாம். இருதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்
 சேதமடைதிருக்கிறது. அதனால் காப்பாற்றப் பட்டாலும் ஞாபக மறதி வந்துவிட்டது.
மூன்று குழந்தைகளின் பெயரெல்லாம் மறந்துவிட்டுக் கணவனையும் ஜோ என்று அழைத்து வந்திருக்கிறாள்.
இந்த ஆறு மாதத்தில் எத்தனையோ முன்னேறி இருக்கிறாள்.
 மகள் கேட்டதும் அவர் முகம் மலர்ந்து தன் பெயர் அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
இனி கார் ஓட்டப் பழகப் போகிறாள்.
ஷி வில் பி ஃபைன் யூ ஸீ என்று நடையைத் தொடர்ந்தார்.

எல்லா ஊரிலும் எல்லா மருத்துவமனைகளும் சிறப்பு என்று சொல்ல முடியாது.
அதே போல் சிறப்பில்லை என்றும் முடிவு கட்ட முடியாது.
அந்த  சினேகிதர் கவனித்திராவிடில் அவள் இரத்தக் குழாய்   உடைபட்டு இறந்திருப்பாள்.கடவுள் கருணை மிக்கவர்.
வாழ்க வளமுடன்.

Tuesday, May 24, 2016

முயற்சி திருவினையாக்கும் 1956

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வாசலில் நின்று கொண்டிருந்த  செவர்லே   பிக் அப்  வண்டி கண்ணை உறுத்தியது.
 அப்பா  தன்  வியாபாரத்துக்குக்காக  வாங்கிய புத்தம்புது வண்டி.

வா வா என்று அழைத்தது. அது வரை  நண்பர்களின்  மோட்டார்பைக்குகளை   ஓட்டி அலுத்துவிட்டது. இனி   கார்,லாரி என்று  ஓட்டவேண்டும் . பதினாறு வயதில்    உடலில்  விறுவிறுப்பு  எதையாவது செய்யத்தூண்டியது.

வண்டியின் சாவி  அவனுக்கு மறுக்கப் பட்டிருந்தது.
வண்டி ஓட்டுபவர் வரும்போதெல்லாம்  ,அவரை மிரட்டி வீட்டு தோட்டத்துக்குள் ஓட்டப் பழகி இருந்த உள்ளம் பரபரத்தது.

அப்பாவும் அம்மாவும் வேறு வண்டியில்  வெளியே போயிருந்ததும் , பாட்டி உறங்கிக் கொண்டிருந்ததும் சௌகரியமாகப் போக  அலுவலக சுவர்களை சாவிக்காக அவன் கண்கள் தேடின. 
ஆஹா கிடைத்துவிட்டது .வாசல்  இரும்பு கிராதியின் சாவியோடு இந்த சாவியும் தொங்குவது கண்ணில் பட  நீளக்கைகள்  எடுத்துவிட்டன அந்த சாவியை.

அலுங்காமல்   வெளியே வந்து ,வண்டியில் அமர்ந்து  சாவியைப் போட்டு   உறுமலுடன் வண்டியைக் கிளப்பவும், பாட்டி டே....என்று கூவிய வண்ணம் வெளிவரவும் சரியாக இருந்தது.
கையாட்டிவிட்டு,  உவகை போங்க  செலுத்தி பங்களா  வாசலுக்கு வந்தாகிவிட்டது. 
எப்படித் திரும்ப ,இடதா வலதா என்று யோசித்தபோது மெரினா கடற்கரைச் சாலியின் அமைதி நினைவுக்கு 
வர இடது பக்கம் ஸ்டீரிங் வளையத்தைத திருப்பவும்   எதிரே 4 ஆம் எண் பஸ் வரவும் சரியாக இருந்தது. 
திடீரென்று வந்த வண்டியை  எதிர்பார்க்காத   பஸ்காரர்  ப்ரேக் பிடிக்க பையனின் வண்டியும்  லாகவமாக எதிர் பக்கம்  வளைக்க ஒரு மாதிரி நிலைமை சமாளிக்கப் பட்டது.
பஸ் ஒட்டுபவருக்குப் பையனின் அப்பா மேல் மதிப்பு.அதனால் விட்டுவிட்டார்.
மீண்டும் வாகனம் பறந்தது.  அமிர்தாஞ்சன் வீட்டு மரம் அருகில் 

ஏதோ ஆணியின் மீதேறி  வண்டியின் டயர் காற்றை இழக்க ஆரம்பித்து ,வளைந்து ஓடி 
மரத்துடன்  ஒட்டியது.

இப்போதும் ஸ்டேட் பாங்க்  போகும்போது  அந்த மரம்  இருக்கிறதா என்று பார்ப்பேன்.
சிங்கத்தின் முதல்  முயற்சி.
++++++++++++++++++++++++++++++ 
பிறகு நடந்தது எல்லாம்  எல்லா வீட்டிலும் நடப்பதுதான்.
மண்டகப்படிகள்.

#அமெரிக்கானுபவம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


இங்கே  16 வயதில் கார் ஓட்டலாம். பக்கத்து வீடுகளில் அனேகமாக எல்லாக் குழந்தைகளும் ஓட்டுகிறார்கள். பொறுப்புள்ள பெண்குழந்தைகளும் உண்டு.

45 மைல்களுக்கு மேல் வேகம் எடுக்காது.
சில புலிக்குட்டிகள்  சீறிப் பாய்ந்து போலிஸில் டிக்கெட் வாங்குவதும் உண்டு.
நம்ம வீட்டுப் பெரியவனுக்கு  இன்னும் 50 மணி நேரப் பயிற்சி முடியவில்லை.

இருந்தும் பிரமாதமாக ஓட்டுகிறான்.
லைசென்ஸ் அடுத்த மாதம் வந்துவிடும்.
ஆனால் வண்டி எல்லாம் வாங்கப் போவதில்லை.

கோடைகால  அவசரங்கள் கல்லூரி விடுமுறை நாட்களில் வரும் சீனியர் தோழர்கள்.
அடிக்கடி காதில் விழும்  விபத்துகள்.
இன்னும் 5 நாட்களே பள்ளிவருடம் முடியப் போகும் நிலையில்
நேற்று ஒரு அவசர அழைப்பு  ஒரு  அம்மாவிடமிருந்து.
உங்க வீட்ல இருக்கானா. 
படிடான்னு சொன்னதுக்குக் கோபித்துக் கொண்டு பிஎம் டபிள்யுவை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
எங்கே போனான்னே தெரியவில்லை.

உன் மகனை அவனுக்கு  டெக்ஸ்ட் செய்யச் சொல்லு. நான் கூப்பிட்டால் எடுக்க மாட்டேன்        என்கிறான்.
ஒரே படபடப்பு அந்த அம்மா குரலில். இத்தனைக்கும் அந்தப் பையனுக்கு 17 வயதுதான் ஆகிறது
 நம்ம வீட்டுப் பெரியவர் அவனை செல்ஃபோனில் அழைத்தால் முதலில் எடுக்கவில்லை. பிறகு எடுத்து
பதில் சொன்னார். இவன் தனக்கு ஒன்றும் தெரியாதது போல
பாஸ்கெட் பால் விளையாட வரியான்னு கேட்டால்,நான் வெளியே இருக்கிறேன். என்னால் வரமுடியாது என்று வைத்துவிட்டான்.
இது உடனே அந்த அம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
ஒரு மணி நேரத்தில்  அவன் வந்துவிட்டான்.
என் மனம் தான்  அவதிப் பட்டது.. வேகமாக ஓட்டி ஏதாவது ஆகிடுமோன்னு.
 மகள்   அலட்டிக் கொள்ளவில்லை. எங்கம்மா போவான். வந்துடுவான் பாரு  என்று சொன்னதுதான்  நடந்தது. 

Monday, May 23, 2016

#அமெரிக்க அனுபவம் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இரண்டு அனுபவங்கள்   எழுத நினைத்தேன்.

முதல்  இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம்  கல்லூரிகளுக்குப் போகிறவர்களுக்குக் கொடுக்கப்படும்    Prom  night.

இரண்டு வருடங்களுக்கு  முன்னால்   நேவி பியர் என்னும் ஏரிக்கரையோர
பார்க்   இல்   நடந்த சம்பவங்கள்.

எப்பொழுதுமே கலகலப்பாக   இருக்கும்  இடம்.
 மாலை நேரம் காப்பி   குடிக்கும் இடத்திற்குச் சென்று  வேண்டும் என்ற
விருப்பத்தைச் சொல்லி  அமர்ந்தோம்.

பெரிய இடம்.
திடீரென  கிளுக் சிரிப்பு சப்தத்தோடு  பெண்கள் வித விதமான
மாலை நேர கவுன்களில்
வந்த வண்ணம் இருந்த வந்தார்கள்.
அவர்களைத் தொடர்ந்து   tuxedo  and bow tie  அணிந்த  இளைஞர்கள்   . என்ன ஏதாவது பார்ட்டியா என்று மகளிடம் கேட்டேன்.
உற்றுப் பார்க்காதேம்மா.
அவர்கள் பள்ளி முடிந்து  கல்லூரி  செல்லும் விழா.
பள்ளி ஆசிரியர்களும்   கலந்து கொள்வார்கள். இரவு வரை அவர்களுக்கு உணவு,டான்ஸ் என்று சம்பவங்கள் இருக்கும்.
அது   ஏன்   இந்தப் பள்ளிப் பருவ பெண்கள் இப்படி உடல் தெரிய
உடை அணிகிறார்கள்.
ஏதாவது  விபரீதம் நடந்துவிடாதோ.

அதெல்லாம் ஒன்றும்  நடக்காதுமா. அவரவர் தன்  பாய் ப்ரண்டுடன் தான் வருவார்வார்கள்.

அப்படி இல்லாதவர்கள்  இன்னொரு தோழியை அழைத்து வருவார்கள்

நான் எல்லாவற்றையும்  கேட்ட படி , வண்ணத்துப் பூச்சிகள் போல்
சுற்றி வரும் வரும் பெண்களையும் ,
கறுப்பு உடையில் வாலிபனாகத் துடிக்கும்   18  வயது  பையன் களையும்  கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கூட வந்திருந்த மகளின் தோழி  ஒரு   பெண்ணைச் சுட்டிக்காட்டி ஒரு குழந்தைக்குத் தாய் என்றார்.
அவர் பெண்ணும்  அந்தப் பள்ளியில் படிப்பதால்   அவருக்குத் தெரிந்திருக்கிறது..

எல்லாம் புதிதாக இருந்ததது.

எங்கள் பள்ளிக்கூடக் கடைசி நாள்  அனைவரும்  புடவை கட்டிக் கொண்டு போனதும்   அதுவே பெரிய மகிழ்ச்சியாக இருந்ததும்   நினைவில் வர புன்னகைத்துக் கொண்டேன்.
இந்தக் குழந்தைகளும் நல்ல வாழ்வு பெற வேண்டும்.




  

Friday, May 20, 2016

உலகம் உய்ய வந்த சிங்கப்பிரான்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  பக்தப் பிரஹ்லாதனை ஒரு  பாதையாக வைத்து
  உலகம் உய்ய வந்த அழகிய சிங்கமே
நீ வந்த  வைகாசி சதுர்த்தசி நாள் இன்று.

உதைத்த ஹிரண்யனின் காலுக்குத்தான் எத்தனை புண்ணியம்.
நம் ஸ்வாமியின் காருண்யத்துக்கு  ஏது அளவு.
 கண்ணில் கண்ணீர் வழியும் பிரஹ்லாதனை அணைத்து அரசனாக்கிய
வள்ளல்.
 ஜன்மம் முழுவதும் தன்னை வைரியாகப் பாவித்த
அசுரன்  புனிதனாக  அவனைத் தன் மடியில் கிடத்திக்
குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு அவன் வயிற்றினில் ,இதயத்தில்
தடவிப் பார்த்ததாம் நம் சிங்கம். ஏதாவது ஒருமூலையில் நாராயண நாமம் கேட்டால்
அவனை உயிர்ப்பித்துவிடலாமே என்று.
பயனில்லை. அதனால் என்ன அவனுக்குக் கிடைத்ததோ
மோக்ஷபதவி.

 நம் உயிர்களிலும் அவன் நாமம் அணுவெங்கும் நிறைந்திருக்க வேண்டும்.

எல்லோரும் இன்புற்று இருக்க அவனே வழி செய்வான்.
Add caption

Wednesday, May 18, 2016

அம்மா என்னும் உலக மஹா அதிசயம்

 June 2003
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்வான நிகழ்வுகள். பல புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய் வரும்
நன்மை  கிடைத்தது.
மகனுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. மற்றவனுக்கும்  நிச்சயம் நடக்க வேண்டும்
பெருமாளே என்று  வேண்டிக் கொண்டே இருந்தேன்.

அடுத்தவாரம் ஒரு புதன்கிழமை காலை அவசர தொலைபேசி
அழைப்பு தம்பி மனைவியிடமிருந்து.
அம்மாவுக்கு  மார்பு வலி. உங்களைப் பார்க்கவேண்டும் என்கிறார்
என்றதும் நானும் சிங்கமும் விரைந்தோம்.
அப்போதைய தேவகிக்கு அழைத்துவந்து சிகித்சை பயன் பெறாது, ஆஞ்சியோ செய்ய மலருக்கு விரையுங்கள் என்று ஆம்புலன்ஸும் கொடுத்தார்கள்.

ஒன்றுமே  மனதில் ஓடவில்லை.
அம்மா என் கையைத் தன்முகத்தில் வைத்துக் கொண்டார்.
காது,கைகள்,கழுத்தில் இருப்பதை எடுத்துவிடு என்று சைகை.
நான் பேச வேண்டாம் என்று சொல்லிமுடிப்பதற்குள்
மலர் வந்தது. அங்கே அவசர ஆஞ்சியோ செய்து

மியாட் செல்ல  முடிவு செய்யப் பட்டது.
எல்லா நாட்கள் இரவும் சின்னத் தம்பியும்,அவன் மனைவியும் மாறி மாறி
அம்மா இருந்த அறைக்கு வெளியே கொசுக்கடியில் படுத்துக் கொண்டு அவதியைப் பொருட்படுத்தாமல்  நாட்கள் கடத்தினார்கள்.
பகல்வேளையில் நான் இருந்தேன்.
அம்மாவுக்கு  இருதய அறுவைச் சிகித்சை பரிந்துரைக்கப்பட்டது.
தீர்மானமாக மறுத்துவிட்டார்.
எனக்கு இது  போதும் .நான் பத்திரமாக இருந்து கொள்கிறேன் என்று
சொல்லிவிட்டார்.
அங்கிருந்த இரண்டு வாரத்தில் நாங்கள் மூவரும் தவம் கிடந்தோம் அம்மாவைப் பார்க்க.
இண்டென்சிவ் கேர் லிருந்து தனி அறைக்கு மாறி நாங்கள் அருகில் வந்ததுதான் அம்மா முகத்தில் சிரிப்பு.
அம்மா பேரன்கள் கல்யாணம் பார்க்காமல் போகாதே என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
அம்மாவும் முயன்று வீட்டுக்கு வந்தார்.
அதன்பிறகு  2005 மே இருபது வரை அவள்  ஒரு துளி வார்த்தை வலி சொன்னது கிடையாது.
இளைய மகனை ஒரு நாள் தூக்கத்தில் பறி கொடுத்தாள். அதிலிருந்து
  உடல்,மனம் இரண்டும்  நொந்து திவ்ய பிரபந்தம் சேவிப்பதில் நாட்களைக் கழித்தாள்.
அமைதியாக ஒரு துவாதசி நாள் காலை நான் வந்து பார்ப்பதற்குள்
இறைவனில் அடங்கினாள்.

நானும் பெரிய தம்பியும் மௌனம் காத்து நாட்களைக் கடத்தி அவளுக்குச் செய்யவேண்டிய
கடமைகளை நிறைவேற்றினோம்.

நல்லதொரு ஆத்மா எங்கள் அன்னையாக ,நல்ல மனைவியாக ,பேரன்பு மிக்க பாட்டியாக
வாழ்ந்து மறைந்தாள்.
இறைவன் அவள் மேல் இன்னும் கொஞ்சம் கருணை வைத்திருக்கலாம்.
எங்கள் தம்பியை உயிருடன் விட்டிருக்கலாம்.
விதி வலியது.
அவள் பொறுமை எனக்கு வருமா தெரியாது. ஆனால் அவள் அன்பு என்னைக் காக்கிறது என்பது தெரியும்.


Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Sunday, May 15, 2016

வலை அனுபவம்........

Add caption
Add caption
       வீடு மனிதர்களை விடுகிறதோ

இல்லை மனிதர்கள் வீட்டை விடுகிறார்களோ

   நினைவுகள் மட்டும் அழியாமல்

அங்கேயே தங்கி விடுகின்றன.
----------------------------------------------------
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, May 11, 2016

#அமெரிக்க அனுபவம் 3


நாளை  சின்னப் பேரன் பள்ளியில்  
உயிர்க்காட்சி  ஒன்று.  அவரவருக்குப் பிடித்த தலைவர்களின்

வாழ்க்கை  பற்றிப் பேசி அவர்கள் போலவே நடிக்க வேண்டும்.
பேரன்  அவர்கள் ஊர்த் தலைவர் ஜான் எஃப் கென்னடி  யாகப்
பேசப போகிறான்.
அதற்கான தலை முடிக் கோதல், நீல நிற சூட் ,கையில் சிறுபெட்டி
என்று வேடம் தயார்.
அவரது வாழ்க்கையை  மனப்பாடமாக   செய்து கொண்டுவிட்டான்.
அடே அப்பா என்ன என்ன தயாரிப்பு. நூலக  விசிட்கள்.

அவரைப் போலவே  நடை,பேச்சு,புன்முறுவல் எல்லாம் செய்து பார்த்துக் கொண்டுவிட்டான்.

இப்போ அதுவல்ல கதை.
இவனைப் போலவே இவன் தோழன்  ஜனாதிபதி லின்கன்  வேடம்.
அவனுக்கு உடை உதவிகள் பெண் செய்து கொடுத்தாள் .அம்மா வேலைக்குப் போகிறவர்.

இப்போது தொலைபேசியில் பேசி, தான் ,வரமுடியாது என்றும் தன பிள்ளையை அழைத்துப் போகச் சொல்லியும்    கேட்டுக் கொண்டார். மலர்விழி நீங்கள் போன தடவையே வரவில்லை. இத்தனை பையன் கள் பெண்களின் பெற்றோர் வரும்போது  நீங்கள் வரவேண்டாமா என்று உரிமையோடு கேட்டுக் கொண்டாள். என் பெண்.

அவரது அலுவலகத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் இருக்கிறது.

விடுமுறை சொல்லிவிட்டு வரலாம்.
 என்னங்க  செய்யறது பொழைப்பை விட்டுட்டுப்  பையனை கவனிக்க முடியவில்லை என்று சொன்னார்.

அந்தப் பிள்ளை மகா சுட்டி.
 தானே எல்லாவற்றையும்  படித்துக் கொண்டான்.
நாளை சாயந்திரம் எல்லாக் குழந்தைகளும்   தங்கள் பாத்திரங்களை திறமையாக 
 அழகாக  உயர்வாகச் செய்து காண்பிப்பார்கள்,.

அந்தக் குழந்தைக்காக இந்தத் தாய் வந்தால் நன்றாக இருக்கும்.  பார்க்கலாம் .



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, May 10, 2016

அமெரிக்க அனுபவம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


பெற்றோருக்கு அலுவலக  விஷயமாக அதிகாலையிலேயே
வெளியே  போக வேண்டும்.
பெரியவன் பஸ் ஏறிப் போய்விட்டான்.  சின்னவனை அம்மா கொண்டு விட்டே வழக்கம்.
 தன் தோழியை அழைத்து ,இவனையும் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி இருக்கிறாள்.
இவருக்கு அம்மா வெளியில் சென்றதும் அர்ஜண்டா டாய்லெட். போகணும்
பாட்டி மேல வந்துடாதே. நான் உடை மாற்றணும்.
சரிப்பா.
ஆனா படி பக்கத்துலயே நில்லு.
சரிப்பா.
 எனக்குப் பசிக்கவே இல்லை.
சரிப்பா.
ஒரு ஆப்பிள் போதும்
சரிப்பா.
ஹோம்வொர்க்ல மட்டும் உன் சிக்னேச்சர் போடு.

நான் உன் அம்மா மாதிரி போட முடியாதேடா.
பாட்ட்ட்ட்ட்டீ. தட்ஸ் இல்லீகல்.
நீ உன் பேரைப் போடு. உனக்கு சைன் செய்யத்தெரியுமா.
தெரியும் பா.
ஓகே. ஆல் இஸ் நாட் லாஸ்ட்.
 எனக்கு இப்போ சீரியல் சாப்பிடலாம்னு  யோசனை வரது .
செய்டா ராஜா .
  ப்ளெண்டி ஆஃப் டைம் பாட்டி .நெவர் வொரி.
இல்லைப்பா.
குட்  யூ   பி  அட் பீஸ்.
ரைட். டா.

ஹஹ்ஹஹாஹா. சாமி.
 சாண் ஆண்.


அனுபவம் பலவிதம்..அமெரிக்கா

   இன்று  படம் பார்க்க நினைத்தது  பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால்.

பாத்திரங்களைத் தேய்க்கும்
 டிஷ்வாஷர் இல்லாமல்  கைகளால் தேய்க்கும் பணியும் பிடித்துவிட்டது.
 
நம் ஊர் எவ்வளவோ  தேவலை. உடனே வராவிட்டாலும் அடுத்த நாளாவது வருவார்கள்.
இங்கே  வேலை தெரிந்தவர்கள் குறைந்துவிட்டார்களா. இல்லை அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் குறைந்து இருக்கிறதா தெரியவில்லை.
மே ஒன்றாம் தேதி உழைப்பை நிறுத்தின இயந்திரம் இன்று வரை
பழுது பார்க்கப் படாமல் இருக்கிறது.

இத்தனைக்கும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட  மெஷின்.
வாரண்டி  நாட்கள் கூட முடியவில்லை.
நாளை வருவதாக அந்தக் கம்பெனி சொல்லி இருக்கிறது.

அதுவரை பெண் கைகள் ஓயும் வரை தேய்த்து விடுகிறாள்.
மீதியை  நான் செய்கிறேன்.
சாப்பிடாமல் இருக்க முடியுமா.
பாத்திரங்கள் தான் உபயோகிக்காமல் என்ன வேலை தான் நடக்கும்.

அவள் மும்முரத்தில்  அவள் அப்பாவைத்தான் பார்க்கிறேன்.
 நாளைப் பொழுதாவது  பணி செய்பவர் வரட்டும்.
இதுவும் ஒரு அனுபவம் தான்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, May 01, 2016

செய்யும் தொழிலே தெய்வம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ஸ்விஸ்ஸில் சிங்கம் செய்த கரடி
எனக்குத் தெரிந்த உன்னத உழைப்பாளி என் சிங்கம். அவர் நேரத்தையும்  தன்கரங்களையுமே நம்பினார். வேறு எதையும் யாரிடமும் எதிர்பார்க்கமாட்டார்.
அவர் சார்பில்  உலகின் உழைப்பாளர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.