Blog Archive

Monday, March 28, 2016

கீரை வடையும் நானும். 1982

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வடைப் பிரியர்களால் நிறைந்தது இந்த உலகம்.
எலியிலிருந்து  ஏந்தி பவன் வரை
 மடைப் பள்ளியிலிருந்து  மரினா கரைவரை எங்கும் வடை மணம்.

என் மாமா எனக்கெழுதிய கடிதத்தில் மாமி செய்த கீரைவடையை வெகுவாகச் சிலாகித்து
என்னை இன்ஸ்டண்ட் கீரை வடை மோகத்தில் ஆழ்த்திவிட்டார்.
கூடவே நீ தில்லி வந்தால் வடை கிடைக்கும் என்று சவால் வேற.

இது ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கை முடிந்து ,மதுரையில்
ஃபெமினா,பொம்மை,பழைய தொடர்கதைகள், ரேடியோ சிலோன்
 என்று  நேரம் கழிந்த காலம்.

இந்தக் கீரைவடை படித்ததும்  அம்மாவிடம் சொன்னேன். மாவில் கீரையை அலசிப் போட்டு
   வறுத்தெடுத்தால் போதும்  என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அம்மாவுக்கு  என் சமையலறை  வேகம் விவேகம் இரண்டுமே தெரியும்.
  ஒரு நாள் செய்கிறேன் என்றார்.
அதற்குள்  வாழ்க்கை திருமணத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டது.
தில்லியிலிருந்து வந்திருந்த  மாமியிடம் கேட்டேன். கீரை வடை சாப்பிடலாமே போறேனுன்னு.
மாமி அழுதுவிட்டார்.
    இதை நான் எதிர்பார்க்கவில்லை. அச்சோ மன்னி அந்தவடையை நான் போகுமிடத்துகல் எப்படியாவது பழகிக் கொள்கிறேன்   என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.

          கீரைவடையை மறந்தும் போனேன்.
பிறகு  பத்துவருட தனிக்குடித்தனம் முடிந்து மாமியார் வீட்டுக்கும் வந்துவிட்டோம்.
கீரை வடை மட்டும் அங்கிருந்த சமையற்காரர் செய்யவில்லை.

வேறு என்னவெல்லாமோ டிபன் காஞ்சீவரம் இட்லி, அழகர் கோவில் தோசை,
சேம்பு இலை அடை  என்றெல்லாம்  வந்தாலும் எனக்கு ருசிக்கவில்லை.
கொக்குக்கு ஒண்ணே மதி..
 அப்பொழுது கிண்டி அருகே தனி  பணிமனையும், லேத் பட்டறையும்   வைத்து நடத்தி வந்தார் சிங்கம்.
மதியம் சாப்பாடு வீட்டில் தான்.
அப்போது ஒரு நாள் வாசனையாகப் பொட்டலம்  ஒன்று கொண்டுவந்தார். ஆஹா மிளகாய் பஜ்ஜி
  என்று பிரித்தேன். அங்க இருந்ததோ வண்ண மயமான  பச்சைப் பசெல் என்ற கீரைவடை.
மசாலா வடைதானேமா என்றி வரிடம் கேட்டதற்கு, கீரை சேர்த்திருக்கான் மா. அதுவும் ஸ்பினச்
என்றதும் ஆ  வென வாய் பிளந்தேன்.
கிண்டி ராஜ் பவன் அருகே ராஜ்பவன் என்றே ஹோட்டல் ஒன்று இருக்கும். அங்கு போனபோது,
குடும்பத்துக்கும் கொண்டு வந்துவிட்டது சிங்கம்.  என் வடை மோகம் பற்றி அவருக்குத் தெரியாது.ஏதோ மனல்ல அலைவரிசை இருந்ததால் அவர் வழியாக எனக்குக் கீரைவடை கிடைத்தது.
பிறகு கேட்பானேன். தினசரி வடை பஜ்ஜியோடு  சாப்பாடு.
         இதுவரை  நான் கீரைவடை செய்யவில்லை.



10 comments:

ராமலக்ஷ்மி said...

மனமறிந்து வாங்கித் தரப்பட்ட வடை. இரு மடங்கு ருசித்திருக்கும். அருமையான பகிர்வு.

Angel said...

செம ருசி :) கீரை வடை சாப்பிட்ட மாதிரியே இருக்கு ! கீரை குணுக்கு செஞ்சிருக்கேன் நான் வாழைப்பூ வடையே போன வருஷம்தான் முதல் முறையா செஞ்சேன் .இங்கே மகளுக்கு நம்ம ஊரு ஐட்டம்ஸ் நொறுக்சில் பெரிய ஆர்வ்மில்லைம்மா ..சில நேரத்தில் நாம் நினைப்பதை ஒரே அலைவரிசையில் இருக்கும் better half எதிர்பாராமல் கொண்டுவந்தா ஆனந்தம் தான் :)

மனோ சாமிநாதன் said...

பழைய நினைவுகளில் ஆழ்வது தான் எத்தனை சுகம்! கீரை வடை கதை மிக அருமை! அதற்கு போட்டிருக்கும் படம் கீரை வ‌டை ஆசையை எனக்கும் கொண்டு வருகிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ, வாங்கப்பா. உண்மைதான் பா. கணவர் வாங்கித்தந்தால் சுகம் அதிகம்.

சில நாட்களில் அதிகமாகப் பழைய நினைவுகள் அதிகம் அம்மா.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அதை சொல்லுங்க ஏஞ்சல். வரம்பு மீறி பசி வந்தால்
நம்ம சாப்பாடு கொஞ்சம் இற்ங்கும்,. ஆனால் வடைக்கு மறுப்பு கிடையாது.
ஆல் டைம் ஃபேவரிட். நீங்களும் செய்யுங்க. கடலைப் பருப்பு.அதில கால்வாசி
உ.பருப்பு சேர்த்து கரகரன்னு அரைத்து, பாலக் கீரையை பொடி செய்து கலந்து செய்யலாம்னு சொன்னாங்க,.நல்லா இருக்கும். கட்டாயம் வெங்காயமும் சேர்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி, எங்க போனாலும்
சாப்பிடும் சமாசாரம் வீட்டுக்கும் சேர்த்துதான் வாங்கி வருவார்.
சிறந்த மனது.

ஸ்ரீராம். said...

பதிவின் தொடக்கத்தில் வ போச்சே....!

அவ்வளவு ஆர்வம் இருந்தும் வருடக் கணக்கில் பொறுமையாய்க் காத்திருந்தீர்களே... ஆனால் கீரையைப் போடுவதற்கு வடை பொருத்தம் அல்ல என்பது என் எண்ணம். எண்ணெயில் பொரிந்து கீரையின் குணம், சுவை மாறி இருக்கும்! ஆனால் சாப்பிட்டிருக்கிறேன். வடை எனக்கும் சரி, என் அப்பாவுக்கும் சரி, என் அம்மாவின் அப்பா (தாத்தா) வுக்கும் சரி, இஷ்டமான வஸ்து. அப்பாவுக்கு மெதுவடை மொறுமொறுவென மிகப் பிடிக்கும்.

sury siva said...

கீரை வடை !

எங்கள் வீட்டு அருகில் இருக்கும் கணேஷ் அய்யர் மெஸ்ஸில் அடிக்கடி செய்கிரார்கள். சூப்பர் சுவை.

நீங்கள் சென்னைக்கு வரும்போது செல் அடியுங்கள்.

ஒரு நூற்றி எட்டு கொண்டு வந்து
எதிர்த்தாபோல இருக்கும் அனுமனுக்கு மாலையாப் போட்டு விட்டு
அங்கே எல்லோருக்கும் சாதித்து விட்டு,
நாமும் ஒன்னு இரண்டு வாயில் போட்டுக்கொண்டு சுவைக்கலாம்.

அனுமார் வடை ஆமை வடை என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
ஒரு நாளைக்கு இத சாப்பிட்டால் அடுத்த நாள் முதல்
கீரை வடை தான் இனிமேல் வடை மாலை என்று ரூல் போட்டு விடுவார்.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இதைச் சூடாகச் சாப்பிட வேண்டும். கையலகம் இருக்கும் அந்த வடையின் ருசி அமோகம்.எனக்கும் மெதுவடை மொரமொரப்பாக இருந்தால் மட்டுமே பிடிக்கும். அதுவும் இப்ப வாயுத் தொந்தரவுகள் வந்துவிடுவதால் அரை வடையோடு நிறுத்திக் கொள்வேன்.
பொறுமை என்றெல்லாம் இல்லை ராஜா.
வாழ்க்கையோட சவால்கள் நிறைய ஆகும்போது வடை நினைவு ஏது.

இவர் கையால் நிறைவேறிய எத்தனையோ ஆசைகளில் இதுவும் ஒன்று.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அண்ணா. அனுமார் வடை பிடித்த ஒன்று.
பெண் அருமையாகச் செய்வாள்.
பத்து நிமிஷத்துக்கு மேல் ஊறாமல் கடகட வென்று
மிளகு,உப்பு போட்டு அரைத்து செய்து அனுமன் பூஜையை பூர்த்தி செய்வாள்.
பாங்க் அனுமனுக்கு எத்தனையோ கடமைப் பட்டிருக்கிறேன்.
வடை மாலையும் சொல்லிவிடலாம்.நீங்களும், மன்னியும் வாருங்கள். வீட்டில் அன்று
திரு நாள் தான்.