Blog Archive

Saturday, March 26, 2016

இங்கு இளவேனில் ஈஸ்டர் விடுமுறை

எல்இப்போது சின்னப் பசங்க எல்லாம்
எங்க வீட்டில் வருபவர்களும் போகிறவர்களும் ஒரே மும்முரமாக இருக்கும்.
வெளியில் அழைத்துப் போவது என்பது ஆடி,அமாவாசை கணக்குத் தான்.
காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ்
இவர்கள் எல்லொரும் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தது அப்போது அந்த வருடங்களில்தான்.
எல்லொரும் காமிக்ஸ் புத்தக பாத்திரங்கள்.
ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் இவர்களும்
எங்களோடு இணைந்ததும் இந்தக் காலத்தில்.
.







அப்போ எல்லாம் மழை வரும், இது ஒரு மழைக்காலம் என்று சொன்னால் மழை பெய்யும். அநேகமாக செப்டம்பர் மாத விடுமுறைகளில் மேய்த்துக் கட்டுவது மகா சிரமம்.
எத்தனை தடவை காரம்போர்ட் விளையாடுவது, டிரேட்,சீட்டுக் கட்டு எல்லாம் அலுத்த பிறகு வானம் வெளி வாங்கும் நேரம்,
அவர்களை அழைத்துப் போக ஒரு நல்ல இடம் மௌண்ட்ரோடு எனும் அண்ணாசாலைதான்.
முதலில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.) அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.பிறகு வீடே கலகலப்பாகி விடும்.
முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் ,,திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்காணாமல் போகும்.
.டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானேஇருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!
எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,வை.மு.கோதைநாயகி அம்மாள்.
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,வாசந்திஇதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
விடுமுறை முடிந்து எல்லாப் புத்தகங்களையும்
திருப்பிக் கொடுக்க எடுத்தால்
இரண்டு மூணு காமிக்ஸ் காணாமல் போயிருக்கும்!
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.

நான் என்ன சொல்லுவேன்?புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாகச் சின்னவனோட அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களைசும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்,

ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,மரியோ பூசோ,இர்விங் வாலஸ்,ஆர்தர் ஹெய்லி,இயன் ஃப்ளெமிங்,பீட்டர் பென்ஜி லி ஆகியவர்களின் பேப்பர்பாக் நாவல்கள்.


மேலும் சிலருடைய புத்தகங்களைஇடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பழைய ஒலிநாடாக்கள்.
45 ஆர்பி எம் ஒலித்தட்டுகள்.
எல்லாமே ஒரு காலத்துக்கு மேல்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
நினைவுகளோடு சேர்ந்து விட்டன.எல் லோரும் இனிதாக வாழ வேண்டும்

6 comments:

காரிகன் said...

சுகமான நினைவலைகள். பகிர்ந்ததற்கு நன்றி. ஏதோ நானே அனுபவித்தது போல இருந்தது. பாராட்டுக்கள்.

கடைசிவரை டின்டின் காமிக்ஸை கொடுக்கவில்லையா? கொடுத்திருந்தால் நீங்கள் டின்டின் ரசிகையே கிடையாது.

அப்பாதுரை said...

ஆஸ்டரிக்ஸ் எல்லாம் இப்போது எக்கச்சக்க விலை. அதிகம் படிப்பவரும் இல்லை என்கிறார்கள். இன்றைக்கும் ஆஸ்டரிக்ஸ் படித்தால் சட்டென்று பனிரெண்டு வயதுக்குள் நுழைந்தாற்போல் இருக்கும். ஆஸ்டரிக்ஸ் டிவி சீரியல் புத்தகம் போல் அத்தனை பிரமிக்க வைக்கவில்லை.

எவ்வளவு தான் நினைவுகளின் இனிமையென்றாலும் சிலசமயம் குப்பை என்ற எண்ணம் தோன்றவே செய்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் கருத்துக்கு மிக நன்றி. டின் டின் லெண்டிங்க் லைப்ரரி இல்லை. ஆர்ச்சி,வெண்டி,பாப் ஐ,
லோட்டா மாதிரி ஹார்வி காமிக்ஸ் தான். ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் நான் வாங்கிக் கொடுத்ததை இன்னும் இருவரும் வைத்திருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

நானே இன்னும் படிக்கிறேன் மா துரை. இங்கே சின்னப் பேரன் அந்த ஸ்டேஜ் ல இருக்கிறான். நானும் கடைகளில் விலை பார்த்தேன். ஹாஃப் ப்ரைஸ் ஷாப்பில்10 டாலருக்குக் கிடைத்தது. ஆஸ்ட்ரிக்ஸ் அருமையான வசனங்கள் மறக்க முடியவில்லை.

ஸ்ரீராம். said...

இப்போது இதே புத்தகங்களைப் பதிப்பித்தால் என்ன விலைக்கு விற்கிறார்கள் தெரியுமா? கோமதி அரசு மேடம் வீட்டில் இது போல நிறையச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எனக்கும் படித்து விட்டுக் கொடுக்க நான்கைந்து பழைய புத்தகங்கள் கொடுத்தார்கள். படித்து விட்டு மதுரையில் வைத்திருக்கிறேன். திருப்பிக் கொடுக்க வேண்டும்!

இப்படிச் சேர்த்து வைத்திருப்பது பற்றிப் படிக்கும்போது மோகன் ஜி நினைவுக்கு வரவில்லை?

நல்ல நினைவலைகள். நான் லைப்ரரியில் இருந்து முதலில் 'கடத்திய' புத்தகம் பாரீசுக்குப் போ'

:)))

வல்லிசிம்ஹன் said...

மோஹன் ஜி யா. ஏன் ஸ்ரீராம். அவர் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறாரா.
பாரீசுக்குப் போ எங்கள் வீட்டில் இருந்ததை யார் எடுத்துக் கொண்டு போனார்கள் என்றே தெரியாது.
இந்த ஒரு காரணத்துக்காகவே மதுரை போகணும்.
கோமதி கலெக்ஷன்ஸ் பார்க்கணும்னு ஆசையாக இருக்கிறது. நடக்கிற காரியத்தைப் பார்க்கலாம். நன்றி மா