|
இருக்கும் இடம். |
|
இருந்த இடம் |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
செல்லும் இடம்
மழைக்குப் பின் சூரியன் வருவது அவசியம் இல்லையா.
காமிராவுக்குப் பின்னால் நிழலுக்கருகில் நின்று வெய்யிலில் குளிக்கும் இயற்கையைப் படம் பிடிப்பதும் ஒரு நிகழ்வுதான்.
மேலே இருக்கு கேசியா பூக்களைப் பிடித்தது சிங்கம்!!
அவருடைய கையில் வளர்ந்த செடி மரமாகி
வருடா வருடம் தங்க மலர்கள் கொட்டுகிறது.
இப்பொழுது மகிழமரமும் இறைவனுக்கு
மலர்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
போன வருடம் பெய்த மழையை இலைகளில் வாங்கி வேரில் விட்டு
மண்ணை நனைத்து
மண்ணும் சலிக்காமல் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு
மரங்களின் தலையில் மலர்களாகவும்,
மாமரத்தில் மாங்காய்களாகவும்
செம்பருத்திப் பூக்கள் ஒரு முப்பது ஆவது பூக்கின்றன.
அதற்காகத்தான் கேட்கிறேன் மழைத் தாயே
என்று வருவாய்.
அடுத்த வருடமும் நிலம் மகிழமும் மகிழ வேண்டாமா.
தருமப்பயிர் வாழத்
தருண மாமழையே
தன்குலம் எங்கிலும்
மங்கலம் தங்கவே
அருள் பொழிவாய்
கருணைக்கடலே..
இந்தப் பாடல் திரு சுத்தானந்த பாரதியின் படைப்பு.
கீதா கீழே குறிப்பிட்டிருப்பது போல்
தினம் பள்ளி அஸ்ஸெம்பிளியில் இந்தப் பாடலும்,
செந்தமிழ் நாடென்னும் போதினிலேயும்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழரும் உண்டு. ரகுபதி ராகவராஜராமும் உண்டு.
|
4 comments:
அழகிய படங்கள்......
பயணம் சிறக்க வாழ்த்துகள்.
கைபட்டு வளர்ந்த மரத்தின் தங்க மலர்கள் அழகு.
அனைத்துப் படங்களும் அருமை.
நன்றி வெங்கட்..... நலமே இருக்க வாழ்த்துகள்.
மீள் பதிவா? சுத்தானந்த பாரதியின் பாடல் குறித்து எழுதி இருப்பதைப் பார்த்தால் அப்படித் தான் தோணுது. எங்கே உங்களைக் காணோம்? பயணம்? உடல் நலம் தானே?
Post a Comment