Blog Archive

Tuesday, September 15, 2015

முன் ஜாக்கிரதை .

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மூன்று நாட்களாக ஒரே பரபரப்பு.
பக்கத்து டிவிஷனில் ஏதோ ஒரு பையன் போதைப் பொருள் விற்பதாகவும்,
இந்தப் பக்கம் வந்தால் பார்த்துவிடவேண்டும் .குழந்தைகளை வெளியே தனியாக விடக் கூடாது

என்றெல்லாம் பேச்சு அம்மாக்களுக்குள்.
எல்லாரும் எல்லாருக்கும் தொலை பேசி எச்சரிக்கை விடும்
வேகம் என்னை அசர வைத்தது.

இங்கே தான் பிறந்த குழந்தையிலிருந்து கல்லூரி செல்லும் வயது வரை பெண்களும்
பையnகளும் இருக்கிறர்கள்.
செய்தியைச் சொன்னவர் இந்த ஊர்க்காரர்.வெள்ளையர்.

ஒரு குடும்பம் போல் இவர்கள் செயல்படும் அழகு எனக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் அதற்காக நடைப் பயிற்சிக்குப் போன என்னை ஏரிக்கரையில் வைத்து
இரண்டு மூன்று வட இந்தியப் பெண்கள் விசாரித்ததுதான் ஹைலைட்.]]]]]]]
இனி ஐடி கார்டோடு வாக்கிங்க் போகணுமோ.

5 comments:

ஸ்ரீராம். said...

எப்போதும் உஷாராக இருப்பது நல்லதுதானே?

வாட்சாப்பில் ஒரு செய்தி படித்தேன். அது நினைவுக்கு வருகிறது.

ஒரு பசுமாடு வேகமாக ஓடிக் கொண்டிருந்ததாம். யானை ஒன்று அதை நிறுத்தி "எதற்கு ஓடுகிறாய்?" என்று கேட்டதாம். "நாட்டில் எருமை மாடுகளை எல்லாம் தடை செய்திருக்கிறார்களாம். கைது செய்கிறார்களாம். அதுதான் ஓடுகிறேன்" என்றதாம் பசு. "அட முட்டாளே! நீ பசுதானே?" என்று கேட்டதாம் யானை. "அது எனக்குத் தெரியும். ஆனால் நான் எருமை என்றுஅரசாங்கத்துக்கு நிரூபிக்க எத்தனை வருடங்கள் ஆகுமோ? அதுதான் ஓடுகிறேன்" என்று விட்டு தொடர்ந்து ஓடியதாம் பசு. "ஆமாம், அதுவும் சரிதான்" என்று சொன்ன யானையும் அதன் பின்னே ஓட ஆரம்பித்ததாம்!

கரந்தை ஜெயக்குமார் said...

எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே

வெங்கட் நாகராஜ் said...

உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.....

சில நாட்கள் முன்பு ஒரு ஹிந்தி தெரியாத இந்தியரை சிலர் தாக்கியதும் நினைவுக்கு வருகிறது....

Geetha Sambasivam said...

ஹை, ஶ்ரீராம் சொல்லி இருப்பது புதுசா இருக்கே. யானை ஓடினால் நல்லா இருந்திருக்கும். பார்த்திருக்கலாமே!

ஹிஹிஹி இனி பதிவைப் பற்றி,

அம்பேரிக்காவில் இதெல்லாம் ஜகஜமில்லயோ?

Abi Raja said...

ஹிந்தில பேசியிருப்பாங்களே அம்மா ?ஒன்னுமே புரிஞ்சுருக்காதே? நீங்க எப்படி சமாளிச் சீங்க?