Blog Archive

Saturday, May 23, 2015

முதுமை தனிமை இனிமை

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


முதியோர் இல்லங்கள் ...சீனியர் சிடிசன்ஸ் ஹோம் என்று   பதிவர்கள்
நாங்கள்   ஒரு ஆறெழு  வருடங்கள் முன் நடத்திய  ,எழுதிய பதிவுகள் நினைவுக்கு
வருகின்றன. அப்போது கண்மணி டீச்சர்,துளசிகோபால்,  நான் எல்லோரும்

பதிவர்கள்  எல்லாம் சேர்ந்து ஒரு இடம் தேர்ந்தெடுத்து... ரிஷிகேஷ்  போன்ற இடங்களில்

குடில்கள் அமைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம்  எழுதிக் கொண்ட  நினைவு. அந்தப் பதிவைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஆளுக்கொரு  கணினி,குளிரூட்டப்பட்ட  அறைகள்,அவ்வப்போது  கங்கையில்
குளிப்பு,  சமையல்  கண்டிப்பாகச் செய்யக் கூடாது.
புத்தகங்களும் வேண்டும்.,தினம் பதிவர் சந்திப்பு. கணவர்களைப் பற்றி அப்போது ஏன் மறந்தோம்னு
தெரியவில்லை.

Add caption

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

யாருடைய எதிர்காலம் + இறுதிக்காலம் எப்படி இருக்குமோ ? நினைத்தாலே மனம் கலங்கத்தான் செய்கிறது.

படங்களும் பதிவின் அடிப்படை நோக்கங்களும் மிகவும் இனிமை.

நானும் இவ்வாறெல்லாம் அடிக்கடி மனதில் சிந்திப்பது உண்டு. கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு. குறிப்பாக நம்மைப் போலவே ஒத்த உணர்வு உடையவர்கள் ஒரே இடத்தில் கூடி வாழ்ந்து, தினமும் சந்தித்துப்பேசி மகிழ்ந்தால் அது மிகவும் ஆனந்தமாகத்தான் இருக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

அப்போது தோன்றிய ஒரு கற்பனை, அவ்வளவுதானே! முகநூலில் விஸ்ராந்தி பற்றிய பகிர்வைப் படித்ததும் இது நினைவுக்கு வந்திருக்கவேண்டும்! சரிதானா?

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் துளசி நானா நானி கோவை போய்விட்டு வந்ததைப்
பற்றி எழுதி இருந்தார்கள். அதைப் படித்ததும் இது நினைவுக்கு வந்தது. உங்கள்
பதிவையும் படித்தேன். அது முன்னாலயே படித்த நினைவு,. கல்கியில் பீட்சா பாட்டி பற்றி படித்திருக்கிறேன்மா.
இப்போது அது பற்றி யோசித்துக் கொண்டும் இருக்கேன்.

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரத்னவேல் ஜி. மிக நன்றி. ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபு சார், நீங்கள் எல்லாம் கலங்கலாமா.
இது ஒரு ஆசைக் கற்பனை. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
நம் காலம் வேறு.
பெரியவர்களப் பார்த்துக் கொள்ளத் தெம்பும் நேரமும் இருந்தது.
நாம் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதே
என் யோசனை.

நான் நினைத்தால் போதுமா. மலைக் கோட்டைப் பிள்ளையாரும் நினைக்கட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கட்டும் அம்மா...

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் நாங்க முதியோர் இல்லம் தான் போகணும்னு நினைச்சோம்; நினைக்கிறோம். பையர் அனுமதி கிடைக்கலை! பார்க்கலாம், போகப் போகத் தெரியும். :)

Geetha Sambasivam said...

நீங்க முன்னால் எழுதியதைக் குறித்து எனக்கு ஏதும் நினைவு வரலை. கண்மணி என்றால் ஆறு, ஏழு வருஷம் முன்னாடி இருந்திருக்கணும், இல்லையா?

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை சகோதரியாரே