லட்சுமி அன்னையுடன் வீற்றிருக்கும் பெருமான் என்றும் என் உள்ளத்தில் தங்கி அருள் புரிவான். .இன்று அவனது அவதார தினத்துக்கு என் உள்ள எண்ணங்களே அர்ப்பணம் துதி எல்லாம்.. அன்பான தந்தையே கரையேற்றிவிடு,. எல்லோரும் நலமாக இருக்கட்டும்.
முந்தைய பதிவு கீழே
இன்று அழைத்த குழந்தையின் வாக்கைக் காக்க அவதாரம செய்தான் எம் பெருமாள் அழகியசிங்கம்.
வைகாசி சுவாதி
மாலை நேரம்.
இந்த வருடம் சித்திரை சதுர்த்தி அன்றே வருகிறான். வேகமாக.
அவனுக்கு வேண்டியது என்ன. பக்தர்களின்'
மாறாத பக்தி.
அண்டசராசாரங்கள் கிடுகிடுக்க
ஒரு வெற்றித் தூணைப் பிளந்து கம்பீரமாய் வந்த
நரசிங்கா
உன் கருணை எத்தகையது!
என்றும் துணை இருப்பாய்.
சம்சார சாகரத்தில் அகப்பட்ட துண்டுகள் நாங்கள்.
துன்பம் வந்தால் மட்டுமே
நரசிம்மா காப்பாத்து என்று கூவுவோம்.
நீயோ இமைப் பொழுதும்
எங்களைவிட்டு அகலுவதில்லை.
ஒரு நாள் ஒரு மணித்துகள் சரணம் சொன்னால்
போதும். நினைத்தால் போதும்.
அபார கருணா சாகரம் நீ.
பெற்றதாய்க்கும் மேலே உடன் வந்து காப்பாய்.
அப்பனே உன்னை என்றும் மறவாமல் நினக்கும் வரமதை எப்போதும் அளிப்பாய்.
வாயில் உன்நாமம் ஒலித்துக் கொண்டிருக்கட்டும். சிந்தையில் உன் கருணைமுகம் பதிந்திருக்கட்டும்.
வேறு ஒன்றும் வேண்டாம்.
|
சிங்கவேள் குன்றம் சிங்கவடிவில் குன்று. |
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹா சரணம்.
|
பானகநரசிம்மன் |
அஹோ!பிலம்!!! ஆஹா பாருங்கள் ஒரு குகை.அங்கிருந்து கிளம்பிய சிங்கப் பெருமான்.
அஹோ பலம். என்ன ஒரு வீர்யம்!!! இன்றும் அந்தக் குகை இருக்கிறது. ஹிரன்யனை வதை செய்யும் கோலத்தில் மஹா உக்ரமாக க் காணக் கொடுக்கிறார் ஒரு நல்ல தரிசனம்.
கூடவே நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்.கெட்டவனுக்குத் தான் இந்த கதி என்று சொல்வது போலத் தோன்றும்.
நாங்கள் 1993 இல் அஹோபலம் சென்ற போது மேலே காணும்
உக்ரஸ்தம்பத்தின் அருகில் செல்ல வழி கடினம். தம்பி சின்னவன் .மேல போய் விடலாம் என்று சொன்னாலும்,அப்பா மறுத்துவிட்டார்.
கற்கள்,முள். துளிதப்பினாலும் உருளவேண்டியதுதான்.
கீழிருந்துபார்க்கும்போதே ஒரு சிங்கம் பிடரி மயிர் சிலிர்க்க நிற்பது போல
சிகர வடிவம்.
அதன் உச்சியில் உக்ரஸ்தம்பம்..
கஷ்டப்பட்டு ஏறினால் ஸ்தம்பத்தைச் சுற்றி வந்து சேவிக்கலாம்.
அதுதான் நிருசிம்ஹன் அவதாரஸ்தலம் என்றார்கள்.
முதன் முறையாக அப்பாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன்.
'அம்மா எனக்கு முதல் போஸ்டிங் சிம்மாசலத்தில்தான்.
அப்பொழுதெல்லாம் இவ்வளவு தீவிர வழிபாட்டுச் சிந்தனை இருந்ததில்லை. ஸஹஸ்ரநாமம் மட்டும் தினம் பாராயணம் செய்வேன்.
தாத்தாவின் முறைகளைப் பின்பற்றி.
நினைத்திருந்தால் இந்த புண்ணிய இடங்களுக்கெல்லாம் வந்திருக்கலாம். முடியவில்லை
இப்போழுது உடலில் வலிமை இல்லை. இங்கிருந்தே உன்னைச் சேவிக்கிறேனப்பா என்று கைகூப்பினார்.
அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்றதால் அங்கே போகமுடிந்தது .
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
|
10 comments:
நாங்க 2010 ஆம் ஆண்டில் தான் அஹோபிலம் போனோம். அப்போவே கஷ்டம் தான். மேலே ஏற அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார்கள். ஒரு இடத்தில் இரும்பு ஏணி தொங்க விட்டிருக்கும். அதில் ஏறணுமாம். ஆகவே யாரையுமே கூட்டிப் போகலை. உங்களைப் போல் கீழே இருந்து தான் தரிசித்தோம்.
இது பார்த்துக் கருத்துச் சொன்ன நினைவா இருக்கே?
காணக் கிடைக்காத காட்சிகளைக் கண்டேன்
நன்றி சகோதரியாரே
நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள். லக்ஷ்மி ந்ருசிம்மன் அருள் எல்லோருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.
__/\__
God Narasimha
showers all His Blessings on you
ever and ever and ever.
subbu thatha
சிலிர்க்கும் அனுபவத்தை அறிந்தேன் அம்மா...
நரசிம்ஹனின் அருள் பெற்றோம் .
உங்களின் profile picture அருமை . இருவரும் looks very smart
அருமையான பதிவு. அஹோபிலம் போனது இல்லை.
Thank you Sasikala. God Bless.
அன்பு கோமதி . எப்படியும் நல்லது கிடைக்கும் அம்மா.
சீக்கிரமே கோவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கட்டும்.
Post a Comment