மறைந்திருந்து கொண்டாட வைத்திருக்கிறாய்.
உன் நிறைவேறாத ஆசைகள் எல்லாம் இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
நேர்மை
நாணயம்
கடமை
அத்தனையையும் பொன்னாடையாகப் போர்த்திக் கொண்டாய்..
நல்லவனடா நீ.
அறுபது என்ன
எக்காலமும் நான் வாழ்வேன் என்று கண்தானம் செய்தாய்..
உன் அக்காவும் அண்ணாவும்,உன் பெண்ணும் உன் மனைவியும் நீ வளர்த்த எங்கள் குழந்தைகளும்
உன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.
உன்னிடமிருந்து பெற்றது நிறைய.
திரும்பித் தரத்தான் நீ இல்லை.
உலகமெங்கும் வாழும் எத்தனையோ நல்லிதயங்களுக்கு உன் பெயரால் உதவி போய்ச் சேரும்.
மீண்டும் சந்திக்கும் வரை.......................................
மன்னனாய் மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
இதயத்தில் குடிகொண்டான் ரங்கன்.
அன்பு ரங்கா,உன் உதவிகளை இப்போது இன்னும் தேவையாக உணர்கிறேன்.உன் அன்பும் பாசமும் என்னை மீட்டிருக்கும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
நினைவஞ்சலி.
//அறுபது என்ன எக்காலமும் நான் வாழ்வேன் என்று கண்தானம் செய்தாய்..//
நெகிழ்ச்சி.
எக்காலமும் நான் வாழ்வேன் என்று கண்தானம் செய்தாய்..//
இறவாப் புகழ்பெற்ற உங்கள் தம்பிக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள்.
அவர் உங்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்... வாழ்த்துக்கள்...
இனிய நினைவஞ்சலி.
துளசி டீச்சர் இங்கு வந்த போது சொன்னார் - ரங்கனிடம் ரங்கனுக்காக வேண்டிக்கொண்டதாக....
நிறைய சொல்லியிருக்கிறீர்கள் இவரைப் பற்றி. எங்கள் அஞ்சலிகளும் வணக்கங்களும்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள்
வைக்கப்படும்
சுப்பு ரத்தினம்.
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு எங்கள் அஞ்சலிகளும், வணக்கங்களும்....
அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
மீண்டும் பார்ப்போம்.
முன்பும் ரங்கனைப் பற்றி சொல்லியிருந்தீர்கள் மனம் நெகிழும் பகிர்வு.
எனது அஞ்சலிகள்.
மனம் நெகிழும் பகிர்வு.
அஞ்சலிகள்.
அன்பு ஆதி,அன்பு மாதேவி,திரு.ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி.
அன்பு சுப்புரத்தினம் ஐயா மிக் மிக நன்றி.
மனம் நெகிழ வைத்த பதிவு. இன்னும் சில காலம் இல்லாமல் போனாரே என்று தவிப்பாகத் தான் இருக்கிறது. :(
ரங்கன் ஒரு சிரஞ்சீவி.
ரங்கன் ஒரு சிரஞ்சீவி.
அன்பு கீதாமா. எல்லோரும் நன்றாக இருக்கணும்
நன்றி இ சார்.பகவான் பக்கத்தில் சுகமாக இருப்பான்.
Post a Comment