சோளக்கருது,விளாம்பழம்,வாழைப்பழம்,கொய்யா,கரும்பு தர வைத்த கணேசா நல்ல புத்தி கொடு. |
தீப மங்கள ஜோதி நமோ நமஹ |
என்றும் துணை இவர்கள் |
நம் வீட்டு விநாயகர் |
கணபதியே வருவாய் அருள்வாய் |
Add caption |
சந்தன அபிஷேகம் ஸ்வாமிக்கு |
ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா கணேசனைத் தரிசிக்கும் காட்சி |
எங்கள் லஸ் விநாயகன்.
பாபம் தீர்ப்பான்.சோகம் தீர்ப்பான். நோயகற்றுவான்
ஆனந்த மழை பொழிவான்.
போற்றி கணநாயக போற்றி.
விக்னவிநாயக பாத நமஸ்காரம்.
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
32 comments:
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
வல்லி அம்மா விநாயக சதுர்த்திக்கு என்ன பதிவு போடுவார்கள்
என்று நேற்று நிமிஷத்துக்கு அறுபது தடவை உங்கள் பதிவுக்கு சென்று பார்த்தேன்.
ஒரு வேளை விஸ்வக்சேனர் தான் எல்லா சுப காரியங்கள் துவக்கத்திலே இவர் செய்வார்கள்.
கணானாம் தவா கண்பதி ஹும் ஹவாமஹே என்று
வீர வைஷ்ணவர் சொல்வதற்கு பதிலாக எதைச் சொல்லி
எல்லா ஹோமங்கள் இத்யாதி ஆரம்பிப்பார்கள் என்று
பக்கத்தில் ஒரு ஆர்தொடாக்ஸ் வைஷ்ணவ பட்டாசார்யாரை கேட்டென்.
நாங்கள் தர்பையில் மஞ்சள் வைத்து விஸ்வக்ஷேனரை ஆவாஹனம் பண்ணி, சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்று ஆரம்பிப்போம். என்றார்.
மஞ்சள் வைச்சு ஆவாஹனம் பண்ணினாலே அதுவே போதும் என்று எங்க குட்டி விநாயகன் தொந்தி கணபதி வந்து உடகார்ந்து விடுவாரே ஸ்வாமி என்றேன்.
பேஷா வரட்டுமே...
பெரியவா சொல்லிருக்கா.. ஹரியும் ஹரனும் ஒன்று தான்.
நான் மட்டும் மாத்தி சொல்வேனா... சொல்லத்தான் முடியுமா ?
ஏதோ எங்க சம்பிரதாயம்... அவ்வளவு தான். என்றார்.
சரி ..எதுக்கலாம் இதை சொல்றேள் அப்படின்னு கேட்கறீக இல்லையா..
உங்க வீட்டுலே இன்னிக்கு கொழக்கட்டை உண்டா இல்லையா அப்படின்னு
தெரிஞ்சுக்கத்தான்.
எங்க வீட்டுலே இன்னிக்கு பாயசம் மட்டும்தான்.
சுப்பு தாத்தா.
you may visit at your leisure time
www.vazhvuneri.blogspot.com
www.menakasury.blogspot.com
to see our vinayaka chathurthi festivities.
அற்புதம் வல்லிம்மா...
பழங்கள் நைவேத்தியம் வைத்து பிள்ளையாரும், அவருடைய துணைவர்கள் எல்லோரையும் அழகாய் தரிசித்தோம்.. தீபமங்கள ஜோதி நமோ நமஹ:
ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா கணேஷை தரிசிப்பதும் கண்டு மகிழ்ந்தோம்...
ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எவ்ளோ பெரிய வினாயகர் நின்ற கோலத்தில்.. சந்தன அபிஷேகம்.. கண்ணும் மனமும் நிறைகிறது...
ஆஹா உச்சிப்பிள்ளையார், கற்பகப்பிள்ளையார் எல்லோரையும் தரிசித்துவிட்டேன்..
நிறைவான அன்பு நன்றிகள் வல்லிம்மா... அன்பு கணேஷ சதுர்த்தி வாழ்த்துகள்!
நானும் ஒவ்வொரு சென்னைப் பயணத்திலும் உங்க
லஸ் விநாயகரைப்போய் சேவிக்கணுமுன்னு நினைப்பேன். ஆனா அவர் அப்பாய்ண்ட்மெண்ட் தரவே மாட்டேங்கறார்.
இப்ப உங்க பதிவின் மூலம் தரிசனம் ஆச்சு.
ப்ரசாதங்களைக் கண்ணில் காட்டலையேப்பா:(
உங்க ஊர்ப் பிள்ளையாரை தினசரி பார்க்காமல் பொழுது விடிவதில்லை எங்களுக்கு! தினசரி ராஜ் டிவியில் பார்த்து விடுகிறோம்!
சந்தன அபிஷேகம் கண்கொள்ளா அழகு.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
உங்களுக்கெல்லாம் லஸ் பிள்ளையார்னா எனக்கு மதுரை நேருப் பிள்ளையார் தான் ஸ்பெஷல்!:)) இன்னிக்குக் கூட அவரைத் தான் நினைச்சுட்டு இருந்தேன். அவசரம் அவசரமா அந்தப் பிள்ளையாரைப் பார்த்துட்டு, ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்திக்கும் 108 பிள்ளையாரைத் தரிசிக்கணும்னு போனது எல்லாம் நினைவில் வந்தது. இப்போல்லாம் வீட்டுப் பிள்ளையார் மட்டும் தான். :)))
அன்பு தனபாலன், நம் ஊர் வெள்ளைவிநாயகர் நினைவுதான் வருகிறது.வாழ்த்துகளும் வணக்கங்களும்.
வரணும் சுப்பு சார்.
பிள்ளையார் விஷயத்திலோ,கற்பகாம்பாள் விஷயத்திலோ எங்களுக்கு வித்தியாசம் எல்லாம் கிடையாது.எங்களைச் சுற்றி எல்லாக் காவல் தெய்வங்களும்
காத்து வருகிறார்கள்.மாமியாரும் கொழுக்கட்டை விஷயத்தில் அக்கறை காட்டுவார். இன்றும் எங்கள் வீட்டில் கொழுக்கட்டையும்,சர்க்கரைப் பொங்கலும் உண்டு.:)
பெரியவா சொல்லிருக்கா.. ஹரியும் ஹரனும் ஒன்று தான்.
நான் மட்டும் மாத்தி சொல்வேனா... சொல்லத்தான் முடியுமா ?
இதுதான் எங்கள் விஷயமும் !!!!!!
இனிய வாழ்த்துகள்.
பாயசமா உங்கள் வீட்டில்.நான் வந்து எடுத்துக் கொண்டுவிட்டேன். குறைந்திருக்கானு பாருங்கோ.:)
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
மற்ற நைவேத்யங்களைப் படம் எடுப்பதற்குள் நேரம் ஆகிவிட்டது.
எடுத்துச் சாப்பிட்டும் ஆச்சு. இருவர்தானே. ஐந்து வெல்ல கொழுக்கட்டையூம்,ஐந்து உப்பும்.
அன்பு மஞ்சு ,
அழகான அக்கறையான பின்னூட்டத்துக்கு மிகநன்றி.
உங்களுக்கும் நல்லபடியாகப் பிள்ளையார் வந்து அனுக்கிரஹம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
விநாயகர்சதுர்த்தி வாழ்த்துகள்.
அனைவருக்கும் சகல நலன்களையும் அருள எல்லாம் வல்ல சித்திவிநாயகனை வேண்டுவோம்.
அதற்கென்ன துளசிமா, அடுத்த தடவை நாம் எல்லோரும் போலாமே . இப்ப கூட்டம் தாங்கவில்லை.அப்படியே முண்டகக்கண்ணி அம்மன் தரிசனமும் கிடைக்கணும்.
பிரசாதங்களைப் படம் எடுக்க மறந்துவிட்டது.வகைக்கு ஐந்து.வடைதான் அதிகமாகிவிட்டது.:)
ஆமாம் ஸ்ரீராம்.எங்களுக்கும் அப்படித்தான்.அவரை நினைத்த பிறகு தான் வேறு வேலை!!
வரணும் ராமலக்ஷ்மி. உங்களூர்
சங்கரா தொலைக் காட்சியில் தான் இவரைப் பார்த்தேன்.
நல்ல பக்தி செழிக்கும் ஊர் பங்களூர்.!!
நாங்க நவ விநாயகரைத் தரிசிக்கணும்னு ஒவ்வொரு வீடாகப் போவோம். கீதா.
என் மதுரை நினைவுகள் கொஞ்சமே.
நேற்றுக் கோவில் தரிசனம் கிட்டியது.மனதார மனசில் பல கணபதிகளைத் தரிசனம் செய்து கொண்டேன்:)
எங்கள் லஸ் விநாயகன்.
பாபம் தீர்ப்பான்.சோகம் தீர்ப்பான். நோயகற்றுவான்
ஆனந்த மழை பொழிவான்.//
லஸ் விநாயகனை வணங்கி கொண்டேன்.
படங்கள் எல்லாம் அழகு.
பழைய விநாயகரா, புதிய விநாயகரா! நவசக்தி கணபதியே....
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வல்லிம்மா. தாங்களும்,தங்கள் குடும்பத்தினரும் சகல செளபாக்கியங்களுடன் இருக்க அவ்விநாயகர் அருள் புரிய வேண்டுகிறேன்.
எல்லா விநாயகர் படங்களும் மிக அழகும்மா. நன்றி
வரணும் ஸ்ரீராம். போன வருடத்திய பதிவு.படங்கள் பழையவை.விநாயகர் எப்பவும் புதிதுதான்.வாழ்த்துகள் மா.
அன்பு பிரியசகி அம்மு,வாழ்த்துகளுக்கு மிக நன்றி. ஸ்ரீ கணேசர் எல்லோருக்கும் நல்வாழ்வு சிறக்க அருள் புரிய வேண்டும்.
எனக்கும் லஸ் பிள்ளையார் கோவில் போவதற்கு அமைய மாட்டேன்குது . போகணும்.
உங்கள் பதிவின் மூலம் தரிசித்தேன் . சந்தன அபிஷேகம் படம் அருமை . முண்டககன்னியம்மன் கோவில் பற்றி விவரம் தர இயலுமா .
வரணும் சசிகலா. நன்றி. முண்டகக் கண்ணி அம்மன் கோவில் கச்சேரி ரோடுக்குப் போனால் இடது பக்கம் பிரியும் சாலையில் இருக்கு. பெரிய வளைவில் எழுதி இருக்கும் கோவில் பெயரும் தெரியும்.கண்டிப்பாகப் போய் வாருங்கள் எளிமையான சக்திவாய்ந்த தாய்.
நானும் ஏற்கெனவே வந்திருக்கேனானு பார்த்துண்டேன். :)
கணேசன் என்றால் நீங்கள் வரும் வாய்ப்பு அதிகமே கீதா.
மிக அருமை அம்மா. கண் கொள்ளாக் காட்சி :)
தேனம்மா,கால் வலி தேவலையா. ஊருக்கு வந்தாச்சா. கவனமாக இருங்கள்.நன்றி மா.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் அவனருள் கிடைக்கட்டும்.
முண்டகக்கண்ணியம்மன் கோவில் சென்று வந்தேன் . நீங்கள் சொன்னது போல் எளிமையான தாயாக இருக்கிறாள் . அருமையான உணர்வு தந்தது .நன்றி வல்லியம்மா !!
அன்பு மாதேவி நலமாப்பா. நன்றி கண்ணா.
அன்பு சசிகலா,தாயைப் பார்த்தது மிக சந்தோஷம். நோயில்லாமல் வாழ்வைப்பாள்.
Post a Comment