 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |

எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
 |
இளம் கதாநாயகி. ஹெலன் மிர்ரென் நடித்திருக்கிறார்.கூடவே ஓம் புரியின் சிறப்பு என்று நம்பிப் பார்க்கப் போன படம். ஒரு இந்திப் படத்தை ஆங்கில டப்பிங்கில் பார்த்த உணர்வு. எங்கயோ ஏமாந்த தவிப்பு. எதிபார்த்த அளவுக்கு அமையவில்லை இந்தப் படம். மஹா பெரிய ஸ்டார்வால்யூ. ஓப்ரா வின்ஃப்ரி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் படம் என்கிற அதீத விளம்பரங்கள்.ட்ர்ய்லரைப் பார்த்த பெண்ணும் பக்கத்தில் இருக்கும் படத்தியேட்டர் காம்ப்ளெக்ஸுக்கு வண்டியை ஓட்டி வந்துவிட்டாள். துணைக்கு அவள் மகனும் என் மகனும். :)
அய்யோடான்னு ஆகிவிட்டது. ஆரம்ப காட்சிகளில் ஜூஹி சாவ்லா,மகன் ,தந்தை சாப்பாட்டுக் கடை,அதில் மதக் கலவரத்தீ ,தாய் மரணம்.குடும்பம் லண்டனை நோக்கிப் பயணம் என்று விருவிருப்பாக நகர்ந்த கதை அப்புறம் இன்ச் இன்ச்சாக நகர ஆரம்பித்தது. கமர்ஷியல் படமா,ஆர்ட் படமா ம்ஹூஉம் ஒன்றும் புரியவில்லை. காட்சி அமைப்புகள் ,இயற்கை யிலியே அமைந்து ஐரோப்பிய நிலத்துக்கே உரிய பசுமை. இந்தியப் பையனும் ,ஃப்ரென்ச் பெண்ணும் காதலித்து,மோதிப் பின் உள்ளம் கலந்து என்று போகிற கதையில் ஓம்புரியின் பிடிவாதமும்,ஹெலன் மிர்ரனின் ஈகோவும் முட்டிக் கொள்ளும் காட்சிகள் அருமை.
ஏற்கனவே இருக்கும் பிரெஞ்ச் உணவகத்துக்கு முன்னால் இந்தியக் கடை நடத்தி வெற்றியும் பெறுகிறார் ஓம் புரி. இளைய தலைமுறை மகன் ஹெலன் மிர்ரனுடன் சேர்ந்து பல உணவு முறைகளைக் கற்று ,பாரீசுக்குப் பயிற்சி எடுத்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப் படுகிறான்.அப்பா மனசில்லாமல் அனுப்பினாலும் பெருமைப் பட்டுக் கொள்கிறார். அங்கே போய்க் கற்றுத் தேர்ந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கறி மசாலாவின் மணத்தில் அம்மாவின் நினைவு வந்து கண்ண்ரில் நனைகிறான். அடுத்த காட்சி அப்பாவைப் பார்க்க ரயிலேறிவிடுகிறான். அங்கெ தன் ஃப்ரெஞ்ச் காதலியோடு தன் திட்டத்தைச் சொல்லி ப்ரெஞ்ச் இந்திய கூட்டமைப்பாக ஒரு புது உண்வகம் உருவாகிறது. பெரியவர்கள் மனதிலும் ஒரு புதிய உற்சாகம். இருவரும் மனதால் ஒருமித்த சிந்தனை உள்ளவர்களாக இணையும் காட்சி இருக்கிறது. ஆங்கிலப் படம் அல்லவா.....அதனால் சர்ச் கல்யாணம்,இந்தியக் கல்யாணம் ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு ஜோடிகளும் சேர்ந்து சுதந்திரதின கொண்டாட்டத்தை வாணவேடிக்கையோடு காண்பதாக திரைப்படம் பூர்த்தி. எனக்கு இன்னும் குழப்பம் .நான் பார்த்தது. இந்தியப் படமா,ஆங்கிலப் படமா. |
12 comments:
சீனி கம் படமும், ஏக துஜே கேலியே படமும் இணைந்த கலவை போல!
இப்படி ஒரு படம் வந்திருக்கா? :))) பழசா? புதுசா? விளம்பரம் ஒண்ணும் காணோம். :))))
ஏன் ?? உங்களுக்கு பிடிக்கிலையா? எனக்கு பிடிச்சிருந்தது மிஸ் சிம்ஹன் அது இங்கத்திய ரியாலிட்டி கூட. அது ஹாலிவுட் movie .ஹிந்தி அவா பேசறா ஆனா ஹிந்தி மூவி இல்ல
ஹாஹா ஸ்ரீராம். உண்மைதான். இதோ கீழ ஜயஷ்ரீ ரொம்பப் பிடிச்சிருந்ததூண்ணூ சொல்கிறார். எனக்குத்தான் இந்த ரெண்டுங்கெட்டான் உணர்வுன்னு நினைக்கிறேன்.
ஆகஸ்ட் எட்டு யுஎஸ்ல ரிலீஸ். எல்லா ஊர்லயும் வந்திருக்கும்னு நினைக்கிறேன் கீதா.நான் ரொம்ப எதிர்பார்த்துண்டு போனேன்.
ஜயஷ்ரீ உங்களுக்குப் பிடித்தது ரொம்ப சந்தோஷம்.கதையெல்லாம் தெளிவான நதிபோலத்தான் போச்சு. ரொம்ப நிதானம். ஹாலிவுட் மூவின்னு தெரியும்.அதனாலதான் ஏமாந்தேன்.:)
நல்ல விமர்சனம்..!
நன்றி ராஜேஸ்வரி.
நல்ல பகிர்வு. எதிர்பார்ப்புகள் இல்லாமல் படம் பார்க்கணும் போலிருக்கு:).
உண்மைதான் ராமலக்ஷ்மி.நடிகர்கள் மீது அளவுகடந்த எதிர்பார்ப்புகள் வைப்பதே தவறு. கதை என்று ஒன்று அடித்தளத்தில் இருந்தால் அல்லவா படம் ரசிக்கும். இது சம்பவங்களின் கோர்ப்பு.ஆக்கி வைத்த பண்டத்தைக் குறை கூறுவது என் தவறு.நன்றிமா.
ஒரு படைப்பைக் குறித்து அவரவர் கருத்தை விமர்சனத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமே. அது குறை சொல்வதாகாது. ஆம். சில நேரங்களில் நம் எதிர்பார்ப்புகளால் ஏமாற நேர்ந்து விடுகிறது.
நன்றி ராமலக்ஷ்மி.எனக்கே அவசியம் இல்லாமல் சொல்லிவிட்டோமோ என்ற எண்ணம் வந்தது. உங்கள் கருத்து சரி. பார்க்கப் போனால் ஒரு சினிமா. அதில் அத்தனை எதிர்பார்க்கக் கூடாது.அவர்கள் பணமுதலீடு செய்கிறார்கள். எல்லா வகையிலும் திருப்தி செய்யவேண்டியது அவர்கள் தீர்மானமாக இருக்கும்.
Post a Comment