ப்ளாகர் பிரச்சினையில் எழுதிய இரண்டு பதிவுகளும் காணாமல் போயின. இப்போது படங்களை மீட்டுப் பதிந்திருக்கிறேன்.பிரான்சில் உள்ள நகரம் ஸ்ட்ராஸ்பர்க்.
பனிரண்டாம் நூற்றாண்டு கலைப் பொக்கிஷங்கள் பலவற்றைப
பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்
ஸ்ட்ராஸ்பர்க் நகரம்
, பாசலிலிருந்து நூற்றறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
முந்தைய பயணங்களில் எங்களிடம் செங்கன் விசா இல்லை.
இந்தத் தடவை அதை எடுத்த ஆக வேண்டிய கட்டாயம்.
எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவாக
அது நடை முறைக்கு வந்திருக்கிறது.
அதற்காகவே புதுப் பாஸ்போர்ட்டும் எடுக்கச் சொன்னார்கள். மார்ச் முதல் வாரம் கிளம்ப வேண்டியவர்கள்,
இன்னும் ஒரு மாதம் கழித்துத் தான் கிளம்ப முடிந்தது.
வந்ததிலிருந்து சின்னக் குழந்தையின் சளித்தொல்லை, பெரிய குழந்தையின்
பள்ளி வேலை என்று நாட்கள் கடந்தன.
மகனுக்கோ எங்களை ஒரு இடமாவது அழைத்துச் சென்று
வரவேண்டும் என்று ஆவல்.
ஸ்விட்சர்லாந்து மூன்று பக்கமும் மூன்று எல்லைகளைக் கொண்டது. மேலே வடக்கில் ஜெர்மனி.
கீழே இத்தாலி.
மேற்கே பிரான்ஸ் நாடு.
எல்லாம் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடும்.
இத்தாலிக்கு மூன்று மணி பிடிக்கும்.
ரயில்களின்வேகம்
தெரிந்ததுதான்.
நேரம் தவறாமை. சுத்தம். இவை ரயில் பயணத்தை மேலும் ரசிக்கச் செய்கின்றன.
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ச்விட்சர்லாந்துக்கும் ,பக்கத்திலயே
இருக்கும் பிரான்சுக்கும் எவ்வளவு வேறுபாடு!
நம்ம கேரளாவும்,தமிழ்நாடும் போலத்தான்.
அங்கே ஸ்ட்ராஸ்பர்க் என்ற ஊருக்குப் போனால் பேத்தி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் முன்னால் வந்துவிடலாம்
என்று திட்டம்.
நேரம் கழித்துத்தான் வந்தோம். பேத்தி கண்டு கொள்ளவே இல்லை.:)
நீ ஊருக்குப் போயிட்டயோன்னு நினைத்தேன் என்றாள்:)
ஏதாவது வாங்கிண்டு வந்தியா?????
ம்ம். இந்தாம்மா. தலைக்குக் கிளிப்.
டிராயிங் செய்ய பெயின்ட்."
என்று எடுத்ததும் குஷியாகிவிட்டது.
எனக்கு இன்னும் பாஸ்போர்ட் வரலை தாத்தா. ஐ கானாட் கம் வித் யூ.
சோ ஐ வில் நாட் கெட் அங்க்ரி. "ஒகே?
என்று தாத்தா
முதுகில் தட்டிக் கொடுத்தாள் பெரிய மனுஷி.:)
.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்