Blog Archive

Tuesday, June 03, 2014

சிங்கம் பார்ட் 7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தாயே  பராசக்தி









சேலத்தில்     இருந்த போது   நடந்தது  1968   ஜனவரி   என்று நினைக்கிறேன். இரவு  சிங்கம் வேலை முடிந்துவரவே  நேரமாகிக் கொண்டு வந்தது.  பையனோ டாடிப் பைத்தியம். தளர்நடையோடு வாயில் கதவைப் பிடித்துக் கொண்டு             நின்றிருப்பான்.  ஜீப் சத்தம் கேட்டது. ஒருமலோடு நின்ற வண்டியிலிருந்து  க்ரீஸ் ஆன  கறுப்பு உடைகளொடு இறங்கிய சிங்கம்.ஸாரிமா ஐ ஹவ் டு கோ பேக். வந்து சொல்கிறேன். நல்ல காஃபி    மட்டும் கொடு  என்று குளிக்கப் போனார். வேஷ்டி ஷர்டுடன் வெளியே வருபவரை அதிசயமாகப் பார்த்தேன். முகத்தில் படு சோகம். கேட்கப் பயம். பேசாமல்  காஃபியைக் கொடுத்துவிட்டுக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டேன்..                                                                                                                     ஜீப்பும் கிளம்பிப் போய்விட்டது., இனம் தெரியாத சங்கடம் யாராவது வொர்க்கருக்கு அடிபட்டிருக்குமோ. அப்படியானால் வேஷ்டி எதற்கு.  என்னவெல்லாமோ  நினைப்பு.   யோசிக்கத்தெம்பில்லாமல்                                                              படுத்துக் கொண்டுவிட்டேன். ஒரு மணி இரண்டு மணி ,மூன்று மணி  என்று போனது. வாசலில்  ஜீப் சத்தம்  கேட்டது.  பாபுவை மடியிலிருந்து   படுக்கையில் விட்டுவிட்டு,வாசல் லைட்டைப் போட்டுக் கதவைத் திறந்தேன்.   சட்டென   ஒரு பயம்.அவர் முகம் சரியாகவே இல்லை.     என்ன   ஆச்சுமா என்றபடி நான் வர, இரு குளிச்சுட்டு வரேன் என்று மீண்டும்  பின்பக்கம் போய் விட்டார்.

குளித்துவந்தவர்  தயிர் சாதம் போறும்மா. வேற வேண்டாம் என்று தட்டை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். என்ன ஆச்சு சொல்ல்ங்களேன்   என்றதும்           ரொம்பக் கஷ்டமாப் போச்சுமா.  சக  தோழர்  ஒருவர்  30 வயதுக்குள்ளதான் இருக்கும். கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இன்னோன்று வரப் போகிறது என்று மெதுவாக ஆரம்பித்தார். நானும்     இடையில் பேசவில்லை.     அவன் முட்டாள் தனமா   ஏதோ செய்யப் போய்  டோட்டல் ஷாக் அடித்துப் போயிட்டாம்மா  என்றவர் நா தழுதழுத்தது.எனக்கு சொரேர்  என்று பயம்  பிடித்தது.          இவர் அந்த    இடத்தில்  என்ன செய்தாரோ.   நீங்கள் அந்த வீட்டில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன்.







என்ன்னம்மா   சொல்றே. தட் லேடி இஸ் யுவர் ஏஜ். மட்ராஸ்  கேர்ள்.ஒண்ணும் புரியவில்லை. நான் போனப் புறம்தான் எலெக்ட்ரிசிடி எல்லாம் சரியா இருக்கானு பார்த்து அவனைத் தூக்கி  ஒழுங்கு செய்து,  சென்னைக்ப் ஃபோன்  போட்டு அவர்களுக்குச் செய்தி சொல்லி, ஆம்புலன்ஸ் வரவழைச்சு     அவர்கள் அனைவரையும் அதில் ஏற்றி, இவனும்  .....கனமானவன் ஆயிற்றே  அவனையும் தூக்கி உள்ளெ வைத்தேன். அவனுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள் அவளுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.                                                  




உடனே வரமுடியவில்லை.  ஆம்புலன்சில்   சீக்கிரம் போய்விடுவார்கள்.     ரொம்பக் கஷ்டம்பா. சங்கடம்   சாமி  என்று அலுத்தபடி    எழுந்துவிட்டார்.   பிறகுதான் தெரிய வந்தது இவர் செய்த  வேலை எல்லாம்.                                      அதிர்ச்சியில் இருந்த  குடும்பத்தை      நல்ல வார்த்தை சொல்லிக் கொஞ்சம் சாப்பாடு வாங்கி வந்து  கொடுத்துச்   சாப்பிடச் சொல்லி,  அவர்களுடன் துணைக்குப் போக இரண்டு மேனேஜர்களை அனுப்பி   கையில் பணமும்       கொடுத்து எல்லாம் செய்திருக்கிறார் என்று.


 சிங்கம் சிங்கம்தான். ஆனால் அவர் விழுந்தபோதுதாம்   அவர் மனைவிக்கு   உதவி செய்யத் துப்பில்லை.காலம்.

13 comments:

ஸ்ரீராம். said...

கடைசி வரி வேதனை தருகிறது.

அவருடைய ஒவ்வொரு சிறப்பியல்புகளையும் எடுத்துச் சொல்லி வருகிறீர்கள். சிறப்பாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஸாரி ஸ்ரீராம். அந்தக் கடைசி வரியை எடிட் செய்தாலும் மீண்டும் வருகிறது. அவரைப் பற்றி எழுதும்போது என் குறையைச் சொல்லி இருக்கக்கூடாதுதான். இது போல நிறைய இடங்களுக்குச் சென்று உதவி செய்வார். நன்றி ராஜா.

அப்பாதுரை said...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பலம். இல்லையா?

Geetha Sambasivam said...

அடடா??? அதையே நினைச்சுக்காதீங்க வல்லி. :( ஒவ்வோன்றும் அருமையான ரத்தினப் பகிர்வுகள். உங்களோட குறை நியாயமானதே. எழுதினதால் தப்பில்லை. ஆனால் நீங்க அதையே நினைச்சு நினைச்சு வருந்தி உங்க உடம்பையும் கெடுத்துக்காதீங்க.

Geetha Sambasivam said...

தொடர

இராஜராஜேஸ்வரி said...

கலங்கவைக்கும் கடைசி வரிகள்....

ராமலக்ஷ்மி said...

பிறருக்கு முன் வந்து உதவும் நல்ல குணம்.

நம்மை மீறி சில விசயங்கள் நடந்து விடுகின்றன. வருந்தாதீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. உண்மைதான். ஈடு செய்வதுதானே திருமண பந்தம். என் வழியில் நான் பலமாக இருந்தேன். நன்றிம்மா. அவருக்குப் பயம் கிடையாது. அதுதான் வித்தியாசம்.

வல்லிசிம்ஹன் said...

சரியே கீதா. திருப்பிதிருப்பி அதையே சொல்வது நன்றாக இருக்காது.அவரவர் வாழ்க்கையில் எத்தனையோ .நான் மட்டும் அசோகவனத்தை ஆட்சி செய்வேன்னு உட்காரக் கூடாதும்மா.அதுவும் நீங்கள் எல்லாம் இருக்கும் போது என்ன கவலை. நல்ல சொல் சொல்ல மனிதர்கள் இருக்கிறார்களே.அதுவே பாக்கியம் தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜராஜேஸ்வரி. மனித யத்தினத்தில் எனக்கொரு குறையும் இல்லை. கொஞ்ச நாட்கள் சும்மா இருந்து தெய்வத்தை நினைக்கணும். உங்களையெல்லாம் வருந்த வைக்க எனக்கு தர்மம் இல்லை.நன்றி மா. நன்றாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி. நேரம் கைகளில் இருந்தால் இப்படி மனம் ஓடுகிறது. நிற்காமல் ஓடினால் சரியாகிவிடும்.நல்லவிஷயங்கள் கேட்கப் படிக்க டாக்டரின் உத்தரவு. செய்கிறேன்.நன்றி அம்மா.

துளசி கோபால் said...

அப்படியெல்லாம் மனசைப்போட்டு உளப்பிக்க வேணாம்ப்பா:(

போற உயிரைச் சட்னு பிடிச்சு நிறுத்த யாராலேயும் இயலுமா?

எது எது எப்படி நடக்கணுமுன்னு 'அவன்' ஒரு கணக்குப் போட்டுல்லே வச்சுருக்கான்:(

வெங்கட் நாகராஜ் said...

அவரைப் பற்றி பிரமிப்புடன் படித்து வருகிறேன்... கடைசி வரியில் கொஞ்சம் அதிகமாகவே வலி......

இதுவும் கடந்து போகும்...... வேறென்ன சொல்ல வல்லிம்மா...