எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Thursday, May 29, 2014
சில சில் பதிவுகள் 13 தை 22 மார்ச் 5 வரை.
ரோஜா இல்லை
மனம் கவர்ந்த ஆர்க்கிட் மலர்கள்
தில்லை அம்பல நடராஜா
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
நர்த்தன கண்ணன். பால் வடியும் முகம் நினைந்து நெஞ்சம் பரவச மிகவாகுதே என் பாட்டி கிளம்புமுன் எனக்கு வேண்டிய அத்தனை உணவுப் பொருட்களையும் தயார் செய்ய ,அப்பா அதைக் காற்றுப் புகாமல் டப்பாக்களில் அடைத்துவைத்தார். நிறைய ஜவ்வர்சி வடாம். மாப்பிள்ளைக்குக் கூழ் பிடிக்குமே என்று வடாம் கூழ், எனக்கு ஆறு மாதம் காணக்கூடிய அளவு லேஎகியம் ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் என்று இரண்டு டப்பாக்கள். அப்பளங்கள் என்று அசராமல் செய்து வைத்தார். பொங்கள் கழிந்து கிளம்ப இருக்கையில் சிங்கமும் வந்தார். அடுத்தநாள் போகி. அப்பாவும் தம்பியும் மதுரை டவுனுக்கு கரும்பு,வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் இஞ்சிக் கொத்து,மற்றும் காய்கறிகள் வாங்கக் கிளம்பி விட்டார்கள். இவர் அப்பாவிடம் பாப்பாவை வெளியே அழைத்துப் போக அனுமதி கேட்டார். சீனிம்மா திடமாக மறுத்துவிட்டார். சாயங்காலம் குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று அவர் தீர்மானம்
இப்படியாகத்தானே எங்கள் சினிமாப் பயணம் தொடங்கியது. மேஜர் சந்திர காந்த். முதலில் காலேஜ் ஹவுஸில் காஃபி. பிறகு என்ன தியேட்டர் என்று நினைவில்லை. அங்கே போ டிக்கட் வாங்கிக் கொண்டு படம் பார்த்தோம். திரும்பி வர ஒன்பதரை மணி ஆகிவிட்டது. எனக்கோ குழந்தை அழப் போகிறானே என்ற பயம். இவரோ நடுவில் இறங்கி மிச்சதூரத்தை நடந்தே கடக்கலாம் என்று பிடிவாதம். நல்ல நிலா. நடக்க இனிமையாக்த்தான் இருந்தது. மெதுவாக வரப் போகும் திருமண நாள் பற்றிக் கேட்டேன். ஹ்ம்ம் நான் வரணுமா என்ன. புடவை வாங்கி அனுப்பட்டுமா. என்றார். எனக்கு உடனே மனம் வாடியது. பின்ன என்னமா எனக்கு மட்டும் நினைவிருக்காதா...எப்படி மேனேஜ் செய்யலாம்னு யோசிக்கறேன்.இங்க வந்து விட்டுப் போனால் இரண்டு நாட்கள் இந்த நினைவிலேயே போய்விடுகிறது.வேலையில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று கதை அடித்தார்:)))))))))))))))))) சரிதான்.எதுக்கு இவ்வளவு சிரமம். இன்னும் இரண்டு மாதம் ஆனால் நாங்களே வந்துவிடுவோம் என்று நடக்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு வந்து சேர மணி பத்து. பாபு பாஅலும் குடித்துத் தூளியில் உறங்கியும் விட்டான். சரியான ரெண்டுங்கெட்டானா இருக்கியே அம்மா. குழந்தை பசியில் துடித்துப் போனான். நல்லவேளை பசும்பால் இருந்தது. பாலாடையில் போட்டிவிட்டேன் என்று அம்மா குறைப்பட்டுக் கொண்டார். என்னால் தான்மா லேட் ஆச்சு. அவள் போகலாம்னு தான் சொன்னாள். மாமா சாப்பிட்டுவிட்டு கேரம் ஆடலாமா என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார். அப்பாவுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ,கேரம்போர்டும் 28 என்கிற சீட்டு விளையாட்டும். போகியும் பொங்கலும் உற்சாகமாகக் கழிந்தன. சிங்கமும் கிளம்பினார். சீனிம்மாவும் கிளம்பினார். அம்மாவுக்குக் கையொடிநது போனது போல. எனக்கோ அருமைத் தோழி இல்லாத குறையாகிற்று. இப்பொழுது பாபு முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான். பெரிய கண் அப்பா மாதிரி. கண் கள் அடர்த்தியான இமைகள் கொண்டவை. அடிக்கடி ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளும்:))) தூங்கும்போது பரவாயில்லை. விழித்திருக்கும் போது இது நிகழ்ந்தால் வீடே இரண்டாகிவிடும். நாளாக நாளக இந்தப் பிரச்சினையும் தீர்ந்தது. கடிதங்கள் போக்குவரத்து தொடர்ந்தது. ஃபெப்ரவரி மூன்றும் வந்தது. ரங்கன் வாசலுக்கும் உள்ளுக்கும் போய் வந்து கொண்டிருந்தான். அவன் சிநேகிதன் மோகன்{காமேஸ்வரன்*} பிற்காலத்தில் நல்ல ஈ என் டி வைத்தியராக வந்தவர். வீட்டுக்கும் போகவில்லை. பலூன் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன். அத்திம்பேர் வரமாட்டாரா என்று சொல்லிக் கொண்டே இருந்தான். சேலத்திலிருந்து பஸ் பிடித்தே வந்துவிட்டார் சிங்கம். மாமனார் மருமனுக்குச் சீர் செய்வது பார்த்திருக்கிறோம். இங்கே மாப்பிள்ளை எனக்கு மணிப்பூர் பட்டுப் புடவை,ரங்கனுக்கும் அப்பாவுக்கும் நீளக் கைவைத்த லிபர்டி சட்டைகள் நீலக்கலரில். அம்மாவுக்கு என்னவாங்குவது என்று தெரியாமல் ஆர்யபவன் ஸ்வீட்ஸ் கொண்டுவந்து கொடுத்தார். இவரையா ஒன்றும் தெரியாதவர்னு சொன்னே. எவ்வளவு விதரணை என்று மகிழ்ந்து போனார்கள் பெற்றோர். பாபுவுக்கும் புது சொக்கா. அந்தத் தைமாத 22 மறக்க முடியாது. எல்லோரும் கூடலழகர் கோவில் போய் வந்தோம். அடுத்த வாரம் சென்னை கிளம்பவேண்டும். கொண்டுவிடும்போது வெறுங்கையோடு போகக் கூடாதே. அப்பா குழந்தைக்கு ஒரு செயின் வாங்கினார்.குட்டி மோதிரம். வெந்நீர் நிரப்ப ஃப்ளாஸ்குகள் என்று சேர்ந்தன. அம்மா என்னைப் பாரிஜாதத்தில் கொண்டு விடுவதாக ஏற்பாடு. அப்பாவும் ரங்கனும் மதுரையில் தங்கிவிடுவார்கள் இரண்டு நாளில் அம்மா வந்துவிடுவார். இதுதான் திட்டம்..அதே போல என்னைப் பாரிஜாதத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போய் விட்டார். புது இடம் கொசுக்கள். எல்லாம் குழந்தையை மிரள வைத்தன. தாத்தா ஓடோமாஸ் கொண்டு வந்து கொடுத்து யாரங்கே.குழந்தை அழவேண்டாம் .இதைப் போட்டுவிடு என்று வைத்துவிட்டுப் போனார். அவர் யாரையும் பெயர் சொல்லி அழைத்தே நான் பார்த்ததில்லை:)))
//சாயங்காலம் குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று அவர் தீர்மானம்.//
ஆமாம், பக்ஷி தோஷம் படும் என்பார்கள். :)) என் பெண் குழந்தை பெற்று வந்தப்போவும் என் அப்பா இதையே சொல்ல அவள், என்ன தாத்தா, பக்ஷிகளுக்கெல்லாம் குஞ்சு இல்லையா? என்னோட குழந்தையைப் பார்த்துட்டு அதுங்களுக்கும் தோஷம்னா என்ன பண்ணறது? ஒண்ணுக்கொண்ணு சரியாயிடும்னு சொல்லிட்டுத் தூக்கி பிராமில் வைத்துத் தள்ளிக்கொண்டு போய் விட்டாள்.
ஆமாம் கீதா.அதுவும் பசுமலை அதிக சத்தம் இல்லாத இடம்.நல்ல பஸ் போக்குவரத்து. டிவிஎஸ் பஸ்கள் நேரத்துக்கு வரும். டவுனுக்கு வந்தால் கலகலப்பு.மல்லிகைப்பூ வாசனை.சந்தையில் மலை சுண்டைக்காய்.புதுமண்டபம். எல்லாமே அருமை. உங்கள் அப்பா சென்னையில் இருந்தாரா உங்கள் பேத்தி பிறந்த போது.அருமை.
அப்பா எண்பதுகளிலேயே மதுரை எஸ்.எஸ். காலனி வீட்டை வித்துட்டுப் பையர்களோடு வந்து செட்டில் ஆயிட்டார். அதுக்கப்புறமாத் தான் அம்மா போனதும். :(
எங்க வீடு அம்பத்தூரில் இருக்கு இல்ல? அதுக்குப் பின்னாடி தெருவிலேதான் அப்பாவும் வீடு கட்டி இருக்கிறார். இப்போ அண்ணா அங்கே தான் இருக்கார். தம்பி தான் மாம்பலம். :)
ஆமாம் துளசி. பழைய பாரிஜாதத்தில் தோப்புக்கு நடுவே வீடு. ஜன்ன்னல்களோ ஆறடிக்கு மூன்றடி என்று வீட்டைச் சுற்றி இருக்கும். சாயந்திரம் ஆறு மணிக்கு அத்தனை ஜன்னல்களையும் மரக்கதவுகளையும் சாத்துவதற்கே உதவியாளுக்குக் கை ஓய்ந்து போய்விடும். அப்படியும் கொசு வந்துவிடும். கொசுவலைகளும் உண்டு.என்னிக்கு நாம் கொசுவை ஜயித்திருக்கிறோம்.
ஆமாம் ஸ்ரீராம். பசுமலையில் எங்களுக்கு எதிர்த்த சாரியில் சாலைக்கு அந்தப் பக்கம் அவர்கள் வீடு. ஏகப்பட்ட ஆர்ச்சி,காமிக்ஸ்,காஸ்பர்.வெண்டி போன்ற ஹார்வி காமிக்ஸ் எல்லாம் கொடுத்துவிடுவார்கள். சென்னை வந்து கூட தம்பி அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்திரா நகரில் இருந்தார்கள். இப்பொழுதும் மோகன் காமேஸ்வரன் மயிலை நீல்கிரீஸ் பின்னால் மருத்துவமனை வைத்திருக்கிறார்.
15 comments:
ஆஹா, நினைவுகள் அருமை. அந்தக்கால மதுரையின் பொங்கல் நினைவுகள் எனக்குள் வந்து போயின. நல்ல பதிவு.
//சாயங்காலம் குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று அவர் தீர்மானம்.//
ஆமாம், பக்ஷி தோஷம் படும் என்பார்கள். :)) என் பெண் குழந்தை பெற்று வந்தப்போவும் என் அப்பா இதையே சொல்ல அவள், என்ன தாத்தா, பக்ஷிகளுக்கெல்லாம் குஞ்சு இல்லையா? என்னோட குழந்தையைப் பார்த்துட்டு அதுங்களுக்கும் தோஷம்னா என்ன பண்ணறது? ஒண்ணுக்கொண்ணு சரியாயிடும்னு சொல்லிட்டுத் தூக்கி பிராமில் வைத்துத் தள்ளிக்கொண்டு போய் விட்டாள்.
தாத்தாவும் பேத்திக்கு அடங்கிப் போனார். :)))))
ஆமாம் கீதா.அதுவும் பசுமலை அதிக சத்தம் இல்லாத இடம்.நல்ல பஸ் போக்குவரத்து. டிவிஎஸ் பஸ்கள் நேரத்துக்கு வரும். டவுனுக்கு வந்தால் கலகலப்பு.மல்லிகைப்பூ வாசனை.சந்தையில் மலை சுண்டைக்காய்.புதுமண்டபம். எல்லாமே அருமை. உங்கள் அப்பா சென்னையில் இருந்தாரா உங்கள் பேத்தி பிறந்த போது.அருமை.
மனம் நிறைந்த பகிர்வுக்ள் ரசிக்கவைத்தன.!
இனிய நிகழ்வுகள் ரசிக்க வைத்தன அம்மா...
அப்பா எண்பதுகளிலேயே மதுரை எஸ்.எஸ். காலனி வீட்டை வித்துட்டுப் பையர்களோடு வந்து செட்டில் ஆயிட்டார். அதுக்கப்புறமாத் தான் அம்மா போனதும். :(
எங்க வீடு அம்பத்தூரில் இருக்கு இல்ல? அதுக்குப் பின்னாடி தெருவிலேதான் அப்பாவும் வீடு கட்டி இருக்கிறார். இப்போ அண்ணா அங்கே தான் இருக்கார். தம்பி தான் மாம்பலம். :)
ஏம்ப்பா.... அப்போகூட சென்னையில் கொசுத் தொல்லை இருந்துச்சா!!!!
ஆமாம் துளசி. பழைய பாரிஜாதத்தில் தோப்புக்கு நடுவே வீடு. ஜன்ன்னல்களோ ஆறடிக்கு மூன்றடி என்று வீட்டைச் சுற்றி இருக்கும். சாயந்திரம் ஆறு மணிக்கு அத்தனை ஜன்னல்களையும் மரக்கதவுகளையும் சாத்துவதற்கே உதவியாளுக்குக் கை ஓய்ந்து போய்விடும். அப்படியும் கொசு வந்துவிடும். கொசுவலைகளும் உண்டு.என்னிக்கு நாம் கொசுவை ஜயித்திருக்கிறோம்.
நன்றி அன்பு ராஜராஜேஸ்வரி.
நன்றி தனபாலன்.ரசிப்பதற்கும் பின்னூட்டத்துக்கும்.
ஓஹோ .கீதா. அம்பத்தூரில் என் தோழி இருக்கிறாள். ஆவடிக்குப் போகும் சாலையில்.அப்பவே வந்திருந்தால் உங்களையெல்லாம் பார்த்திருக்கலாம். அம்மா இங்க வந்து போனாரா. வருத்தமாக இருக்குமா.
இனிமையான நினைவுகள்.....
கொசுவிடம் நாம் என்றைக்கு ஜெயித்திருக்கிறோம்! :)
காமேஸ்வரன் என்பவர் லலிதா காமேஸ்வரன் கணவர். அவரா?
இனிமையான நினைவுகள். அந்தக் கால மதுரையும் அழகாக இருக்கும்.
வரணும் வெங்கட். கரப்பான்,கொசு இரண்டும் ஜன்மவிரோதிகள்:))

Post a Comment