எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
நிறைய கேள்விகள் மனதைத் துளைக்கின்றன...........தனிமை சகிக்க முடியாததுதான். அதை மீறி மனவலிமையோடு வாழத்தான் விருப்பம்... உலகத்தில் கணவன் மனைவியரில் யாராவது ஒருவர் முந்த வேண்டியதுதான்.. மிஞ்சியவர் எழுந்திருக்க நாளாகலாம். எத்தனையோ நல்ல மனங்கள் சூழ இருக்கும்போது மனப் பாரம் வெகுவாகக் குறைகிறது. ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர. எங்கள் சிங்கத்தின் உடல் பயிற்சிக்கூட நண்பன் வெகு நாள்த் தோழன் இருவருக்கும் ஏதோ விட்டகுறை தொட்ட குறையாக ஒரு பந்தம். அவனுக்கு வயதாகியும் திருமணம் கூடவில்லை. நாங்கள் இருவரும் அவனைப் பார்க்கும்போதெல்லாம், தன் தாயைப் பற்றி வருத்ததோடு பகிர்ந்து கொள்வான். அம்மா எந்தப் பெண்ணுக்கும் சரியென்று தலை ஆட்டுவதில்லை. நான் இப்படியே இருக்கவேண்டியதுதான் என்று. வீட்டில் அமரவைத்து இவர் ஆறுதல் சொல்வார். பல நாட்களாக அவனைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது ஐயா காதல் வசப் பட்டிருக்கிறார் என்று. எப்படியோ திருமண நிச்சயம் வரை வந்துவிட்டது. நடுவில் சிங்கம் இறைவனடி க்கு எழுந்தருளிவிட்டார். சேதி தெரிந்து வந்த பிள்ளையை நானும் என் புதல்வர்களும் ஆறுதல் சொன்னோம். திருமணம் நடந்ததா என்று அறியப் போனவாரம் தெரிந்த ஒரு நபரிடம் இமெயில் அனுப்பிக் கேட்டிருந்தேன். ஓ அதெல்லாம் ஆகிவிட்டதே. உங்களுக்கு அழைப்பு வரவில்லையா. இணைய அழைப்பு எல்லோருக்கும் அனுப்பி இருந்தாரே என்று பதில் வந்தது. பிறகு தெரிய வந்த சேதி, வெகுநாள் கழித்து நடக்கும் திருமணம். துக்கம் நடந்தவீட்டுக்கு அழைப்பு வைக்க வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களாம். இதுவரை நான் இழந்ததைக் குறித்து அழுதிருக்கிறேனே தவிர தவிர எந்த விதத்திலும் என்னைப் பற்றித் தாழ்வாகவோ வேறு விதமாகவோ எண்ணியதே இல்லை. இதென்ன பழங்காலமா. நம் சோகம் நம்மட்டும். மேலே வரவேண்டும்.எத்தனையோ பெண்களுக்குக் கிடைக்காத நல்வரங்கள் எனக்கு அமைந்திருக்கின்றன. அவைகளைப் போற்றிப் பாதுகாத்திரு இறைவா என்று தான் தினம் பிரார்த்தனை.. இன்னமும் அதுதான் வேண்டுதல். . மணமக்கள் நலமே வாழ ஆசிகள். எல்லோரும் நலமே வாழப் பிரார்த்தனைகள். |
29 comments:
முதன்முதலாக(?)தளத்துக்கு வந்தால் மனம் கனக்க வைக்கும்பதி. பொதுவாகச்சொல்லக் கேள்வி.ஆண் துணை இல்லாமல் பெண்கள் சீக்கிரமே சுதாரித்துக் கொள்வார்களாம். ஆண்கள் பாடுதான் மோசமாம் இந்தப்பதிவு என்னென்னவோ நினைக்க வைக்கிறது I can only request you to buck up and be cheerful
வரவேண்டும் ஜி எம் பி சார். நீங்கள் சொல்வதே உண்மை. பெண்களுக்கு எத்தனையோ பொறுப்புகள் என் பாட்டி 37 வயதில் ஐந்து குழந்தைகளோடு கண்வனில்லாத எதிர்காளத்தை நோக்கினார். உடன்பிறப்புகள்,அண்டைவீட்டுக்காரர்கள் அனைவரும் ஆதரவு. இருந்தும் சுயமரியாதையைக் காப்பாற்றி. வீட்டைவிட்டு வெளியே வராமல் வாழ்வில் வெற்றி கண்டார். அந்த நாட்களில் ஒரு விசேஷத்துக்கும் போக மாட்டார்.வருடம் முடிந்ததும் ஏதோ ஒரு வயிற்றுவலிக்காக மருத்துவமனைக்குப் போகநேர்ந்தது. மற்றபடி சலிப்பு என்பதை அவர் முகத்தில் பார்த்ததே இல்லை. மாறாக என் அத்தையின் கணவர் மனைவியை இழந்து மருமகள்களிடம் மாறாத் துன்பம் கண்டார். பாவம்.சுசி ருசியாக மனைவியைச் சமைக்கச் சொல்லி வேலை வாங்கியவர். நீங்கள் வருத்தப் படாதீர்கள். காலம். மாறும். நன்றி.
***பிறகு தெரிய வந்த சேதி, வெகுநாள் கழித்து நடக்கும் திருமணம். துக்கம் நடந்தவீட்டுக்கு அழைப்பு வைக்க வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களாம். இதுவரை நான் இழந்ததைக் குறித்து அழுதிருக்கிறேனே தவிர தவிர எந்த விதத்திலும் என்னைப் பற்றித் தாழ்வாகவோ வேறு விதமாகவோ எண்ணியதே இல்லை. இதென்ன பழங்காலமா. நம் சோகம் நம்மட்டும். மேலே வரவேண்டும்.எத்தனையோ பெண்களுக்குக் கிடைக்காத நல்வரங்கள் எனக்கு அமைந்திருக்கின்றன. அவைகளைப் போற்றிப் பாதுகாத்திரு இறைவா என்று தான் தினம் பிரார்த்தனை.. இன்னமும் அதுதான் வேண்டுதல். மணமக்கள் நலமே வாழ ஆசிகள். எல்லோரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.****
காலம் மாறிவிட்டது வல்லியம்மா. இந்த நிகழ்வு என்னவோ எனக்கு ஒரு "மிஸ்ஸண்டர்ஸ்டேண்டிங்" போலதான் தெரிகிறது.
இன்னும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் தொலையாதது வேதனைக்குரியது!
ரொம்ப வருத்தமா இருக்கு வல்லி. இவ்வளவு வருஷமாப் பழகிய அந்தப் பிள்ளை அவர் நினைவைப் போற்ற வேண்டியாவது உங்களுக்கு மெயிலில் பத்திரிகை அனுப்பி இருக்க வேண்டும். பெரிய தவறு நடந்திருக்கிறது. மனம் வருந்தாதீர்கள். :((((
இந்தக் காலத்தில் கூட இப்படி எல்லாம் மனிதர்கள்! :(
/தவிர எந்த விதத்திலும் என்னைப் பற்றித் தாழ்வாகவோ வேறு விதமாகவோ எண்ணியதே இல்லை.//
இது ஒன்றே போதும்.. நம்மை மதிப்போரே நமக்குப் போதும்.
//மணமக்கள் நலமே வாழ ஆசிகள்//
உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நலமாகும் வல்லிமா!!
அவரும் தவறை உணர்வார்.
இந்த விஷயத்தில் மனதின் வருத்தம் தவிர்க்க முடியாதது வல்லிம்மா. விடுங்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்.
//எல்லாரும் இனிதாக வாழவேண்டும் //
உங்க பதிவுகள் டேஷ்போர்டில் பார்க்கும்போது எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா வல்லிம்மா ..
அவர்கள் மறந்தாலும் நீங்க வாழ்த்திட்டீங்க ..அந்த அன்பே போதும்
Angelin.
வரணும் வருண். நான் தாஅன் ஊரிலேயே இல்லை. அழைத்தாலும் இன்னும் ஒரு வருடத்திற்கு எங்கயும் போவதாகவும் இல்லை. எனக்குக் கவலை எல்லாம் திருமணம் தடையில்லாமல் நடந்ததா என்றுதான். இருவரும் வேறவேற பிரிவு. எப்படியோ இந்தப் பையன் சம்மதிக்க வைத்துவிட்டான். ஏன் நான் உலகக் கவலையை மண்டையில் ஏற்றிக் கொள்ளவேண்டும். அவசியம் இல்லை. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகவே இருக்கட்டும்மா. அந்தக் குழந்தை நன்றாக இரூக்க வேண்டும்
தளிர் சுரேஷ். நாம் மாறினாலும் அக்கம்பக்கத்தில் ..நல்லவர்கள் புத்திமதி சொல்லி மாற்றிவிடுவார்கள்.போனால் போகட்டும் பா.
அன்பு கீதா முதலில் வருத்தமாக இருந்தது. திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது. 39 வயசில் திருமண்மாகி இருக்கிறது. அந்தப் பிள்ளை என்ன கவலைப் பட்டதோ. போகட்டும்.உண்மை நிலை கசக்கவே பதிவெழுதிவிட்டேன். இப்போது மனம் தெளிந்துவிட்டது.
அன்பு ஹுசைனம்மா, முதலில் அதிர்ச்சி. பிறகு இப்போது தெளிவு. உண்மையில் நாம் விரும்புவது அடுத்தவரின் நலத்தைத் தானே. நன்றாக இருக்கவேண்டும் அந்தத் தன்ம்பதிகள். உலகவழக்கிலிருந்து மாறுபட தைரியம் வேணும்.பரவாயில்லைம்மா. நன்றி.
அன்பு ஸ்ரீராம்,சிலசமயம் இந்த மாதிரி அதிர்ச்சி காத்திருக்கிறது. இனி மறக்கவேண்டும். விட்டுவிட்டேன்மா.
அன்பு ஏஞ்சலின், அன்பில்லாத உலகம் வெற்றிடமாகிவிடும் அதில் நாம் வாழ முடியுமா. எல்லோரும் நலமாகவே இருப்போம். நன்றி மா.
வருத்தம்தான். என்ன செய்ய முடியும்? தங்களை அழைக்க முடியவில்லையென்று அவர்களுக்கும் வருத்தம் இருந்திருக்கும் அல்லவா? . சிலவிஷயங்களை நம்புபவர்களை மாற்ற முயல்வது அவர்களை மனதளவில் பாதிக்கும். இந்தக் காரணத்தால் சொந்த மகன் திருமணத்துக்கு வர மறுக்கும் தாய்களும் இருக்கிறார்கள்.
அட!இப்படியுமா?
அறியாத்தனம்.
நீங்க ஊரில் இல்லையேன்னு (கூட) நினைச்சிருக்கலாம்.
போயிட்டுப் போறது விடுங்க.
நாமும் வாழ்த்தினால் ஆச்சு. எங்கிருந்தாலும் வாழ்க!!!
உங்கள் நல்ல மனதுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லையம்மா... விட்டுத் தள்ளுங்கள்.
உண்மைதான் திரு .பக்கிரிசாமி. என் எதிர்பார்ப்பு என்னை இந்தப் பதிவு போட வைத்துவிட்டது. உலகம் உடனே மாறவேண்டும் என்று நினைப்பதே தப்பு. எங்கள் பாட்டியும்ம் தன் முதல் மகன் திருமணத்துக்கு வர மறுத்துவிட்டார்கள். தாத்தா இறந்து 10 வருடங்கள் கழித்து...கொடுமை. மிக மிக நன்றி.அருமையாகக் கணித்திருக்கிறீர்கள்.
ஆமாம் துளசி. அப்படியும் இருக்கலாம்.எதுக்கு ஒரு அழைப்பை வீணாக்கணும்னு நினைத்திருக்கலாம்<}}}}}}}}}}
நல்லது ஆதி. நேற்றுக் கோபம் நீராகிப் போச்சு. இனி இதைப் பற்றி யோசிக்கவில்லை. நன்றி மா.
கவலைப்படாதீர்கள். மறந்திடுங்கள்.
மறப்போம்.... மன்னிப்போம்....
பல சமயங்களில் இந்த மாதிரி செயல்படும் மனிதர்கள் இருக்கிறார்கள் அம்மா..
என்னதான் வெளியில் முன்னேறியதாக நினைத்தாலும், உள் மனதுக்குள் பழமைவாதிகளாகவே பலர் இருக்கிறார்கள்......
சிலர் ஊரில் இல்லையென்றால் பத்திரிக்கை போட மாட்டார்கள் . அது போல் நீங்கள் ஊருக்கு போய்விட்டீர்கள் திருமணத்திற்கு வரமுடியாது என்று தெரிவிக்கவில்லை போலும்.
உங்களுடன் எல்லா குடும்பவிஷ்யங்களை பகிர்ந்து கொண்டவர் உங்கள் நலம் விசாரித்துவிட்டு தனக்கு திருமணம் ஆனதை சொல்லி இருக்கலாம்.
உங்கள் வாழ்த்து அவருக்கு கிடைத்து விட்டது. அது போதும்.
மணமக்கள் வாழ்க வளமுடன்.
நீங்கள் மனதைரியத்துடன் இருங்கள்.
கவலை விட்டாச்சு. மாதேவி உலகம் போகும் பாதை மாறாவில்லை. நான் மாறிக்கொள்கிறேன். நன்றி மா.
அன்பு வெங்கட் மறந்துட்டேன். உலகில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு. அதை நினைக்கிறேன். நன்றி மா.
ஊரி வழக்கத்தை அவரும் அனுசரித்திருக்கிறார் கோமதி. அவருக்கு மகனுடன் இணையத்தொடர்பு உண்டு. வயதில் சிறியவர்கள் செய்யும் தப்பை நான் மறக்கத்தான் வேண்டும். எத்தனியோ கவலைகளுக்குப் பிறகு நடக்கும் கல்யாணம். எங்களிடம் தேதியும் சொல்லி இருந்தான் அந்தப் பிள்ளை. பத்திரிகை ஈமெயிலில் வராமல் போகவே மகனும் யோசித்தான். ஆனால் என்னை விடன் மகன் தெளிவு. மாப்பிள்ளை ஜோர்ல இருப்பான்மா. கவலைப் படாதே. எல்லாம் நல்லா நடந்திருக்கும் என்று சிரித்துக் கொண்டான். நன்றி மா கோமதி.
துளசி அவர்கள் பதிவின் மூலம் உங்கள் பதிவு அறிந்தேன் . முன்பு ஒரு முறை உங்களுக்கு பின்னூட்டமிட்டேன் . அனால் என்னை பதிவர் சசிகலா என்று நீங்கள் எண்ணி விட்டீர்கள் நான் பதிவர் அல்ல ஆனால் துளசி அவர்களின் விசிறி!! அதே போல் பல பதிவும் படிப்பவள் . உங்கள் பதிவுகளைப் படித்து உங்களுக்கு ஆறுதல் கூற உங்கள் மனம் ஆறுதலைடைய எப்போதும் பிரார்த்திப்பேன் .
இம்முறை துளசி அவர்கள் சென்னை வந்த போது அவரையும் சென்று பார்த்தோம் . அப்போதும் உங்களை பற்றி விசாரித்தேன் . உங்கள் செடிகள் நலமாக உள்ளதாக கூறினார்கள் . துளசி அவர்களின் பேச்சில் உங்களிருவரின் நெருக்கம் அறிந்தேன் :) . உங்களிருவருக்கும் தான் நான் பின்னூட்டமிடுகிறேன் . வேறு பதிவுகள் படிப்பதோடு சரி .
இந்த பதிவில் குறிப்பிட்டது பற்றி வருத்தபடாதீர்கள் .
Insensitive people . you need not heed to such people .
though iam younger to you , i wanted to make you feel better ,that s why iam writing this . dont worry Madam . your husband is always with you .
keep writing . that will make you feel better and nice .
s.sasikala
நன்றி சச் கலா. மிக மென்மையானவர் நீங்கள். துளசியை அறிது ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. துளசி எல்லாவற்றையும் பார்த்துச் சக்கிக்கக் கற்றவர். பெரிய மனுஷி. எத்தனை எத்தனை ஆறுதல்கள் இந்த இணையத்தினால். சிரமம் எடுத்து எனக்க்ப் பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள். வெறும் நன்றி போதாது. துளசி உங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். இங்கு வந்தபிறகு நேர வித்தியாசத்தில் எல்லாம் விட்டுப் போகிறாதூ. இந்த அன்புக்கு ஈடு இல்லை,. நன்றி,.மா.
Post a Comment