Blog Archive

Monday, January 20, 2014

ஆற்றின் கரையோரம் ஒரு கதை

ஒரு  டப்பாவையும் வெளியே  போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும் 
mukkombu dam  Trichy
அப்பா  எத்தனை செடிகளைக் காப்பாற்றி இருக்கிறார்.பார்த்தியா..எனக்கே  இரண்டாம்  சான்ஸ் கொடுத்தவராச்சே !!!!

சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.

ஆடிப் பெருக்கு சமயம்  1974 என்று நினைக்கிறேன சிங்கத்தின் சினேகிதர்களும் அவர்கள் குடும்பத்தார் என்று நாலைந்து வண்டிகளில் முக்கொம்பு அணைக்கு  வந்து சேர்ந்தோம்.  வெள்ளமான  வெள்ளம்..சுழித்தோடும் தண்ணிரைப் பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு. இவரோ    என்னப்பா அக்கரைக்கும் இக்கரைக்கும்  ஸ்விம்   போய் விட்டு வரலாமா  என்றதும் யாரும் தயாராகவில்லை.ஒரு பெரிய தரைவிரிப்பைப் போட்டு  சீட்டு விளையாட ஆரம்பிக்கவும்,குழந்தைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவரும் நானும் எங்கள் மூன்று குழந்தைகளும் மேல் படியில் உட்கார்ந்தவாறு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.  சின்னவன் ஒரு படி கீழே இறங்கினான். சட்டென்று அவனைப் பிடித்துத் தன் மடியில் இருத்திக் கொண்டார்.  குட்டி இதெல்லாம் செய்யக் கூடாது. பத்திரமா இருக்கணும் என்கிற எச்சரிக்கையோடு மீண்டும் தண்ணீரைப் பார்த்தபடி இருந்தபோது தான் அந்த விபரீதம் நடந்தது.                           
  சட்டென்று  எழுந்த  சின்னவன்    ஒன் டூ த்ரீ என்று கூவியபடித் தண்ணீரில் பாய்ந்துவிட்டான்.      இப்பொழுது  நினைக்கவும் உடல் நடுங்குகிறது,. ஒரு செகண்டு கூட இருக்காது. அடுத்த நொடி சிங்கமும் தண்ணீரில். கண்முன்னே  குழந்தை ஆ ற்றின் அடிக்குப் போவது தெரிந்தது. வாழ்விட்டு அலறக் கூட முடியாமல் எழுந்து   நின்றுவிட்டேன்  மற்ற இருவரையும் பிடித்தபடி......அடுத்த நொடியில் சிங்கம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்து   நின்றார். அதற்குள் மற்றவர்கள் ஓடிவந்து    குட்டியின்  நலம்விசாரித்தபடி துண்டுகள் கொடுத்து அவன் சட்டை நிஜார் எல்லாம் கழற்றித் துடைத்துவிட்டு   ஆஸ்வாசப் படுத்தினார்கள். கல்லுளிமங்கன்  மாதிரி நிற்கிறான். ஏண்டா   குதிச்சேன்னு  கேட்டால் தண்ணிக்குள்ள இன்னோரு பாப்பாம்மா என்கிறான்..                               நீ மயக்கம் போட்டுடாதே உன்னைத் தூக்க இன்னோரு தரம் தண்ணீரி  ல்        பாய முடியாது.  சியர் அப் மா. அதான்    சௌக்கியமா இருக்கானே     என்றார் சிரித்தபடி.

 பதினெட்டடி ஆழம்  சுழலிட்டு ஓடும் அந்த ஆற்றையே வெறித்துப் பார்த்த எனக்கு வீட்டுப் போகலாமே  என்று தோன்றியது.  மன்னார்புரம்   வந்து சேருவதற்குள்    சின்னவன் உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூன்றுவாரங்கள்    காய்ச்சல்.  தொடர்ந்தது.அதிர்ச்சியினால் வந்த  ஜுரம். மடியில்   வைத்தபடி நான் உட்கார்ந்திருந்தேன்.    எப்படியொ கடவுளும் சிங்கம்  ரூபத்தில் தன் பிள்ளையைக்  காப்பாற்றிக் கொடுத்தார்.  நாந்தான் அவருக்குக் கடைசியில் உதவ முடியாமல் போனது. இறைவன் சித்தம்..

33 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு நினைவும் கலங்க வைக்கிறது அம்மா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன். 18 அடிகள் ஆழம் அங்கே. பயம் என்பது துளிக்கூட கிடையாது அவர் அகராதியில். நன்றி மா.

தி.தமிழ் இளங்கோ said...

திருச்சி –முக்கொம்பு, காவிரி ஆற்றில் விழுந்து மூழ்கியவர்களும், காப்பாற்றப் போய் உயிர் இழந்தவர்களும் நிறையபேர். உங்கள் சின்னவனை காப்பாற்றிய சிங்கம் உண்மையிலேயே சிங்கம்தான்.
படிக்கும்போதே பகீர் என்றது.

ADHI VENKAT said...

நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறதே...

ஓவ்வொன்றும் மறக்க இயலாத நினைவுகள்..

வல்லிசிம்ஹன் said...

நன்றி தமிழ் இளங்கோ
எத்தனையோ பேருக்கு இப்படி உதவிகள் செய்திருக்கிறார்.
அதெல்லாம் புராணம் மாதிரி நீ ண்டு கொண்டே போகும். .

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

வல்லிசிம்ஹன் said...

அஆமாம் ஆதி. அவன் தண்ணிரில் விழுந்ததும் இவர் அப்படியே பாய்ந்ததையும் நினைக்கும் போதெல்லாம், கடவுள் எவ்வளவு என் பக்கம் இருந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன். இப்போதும் இருக்கிறார்தான். நான் தான் அதிகம் அவர் பக்கம் திரும்புவதில்லை.

சாந்தி மாரியப்பன் said...

சிங்கத்தைப் பத்தி நிறைய எழுதுங்க வல்லிம்மா.

Geetha Sambasivam said...

ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க இல்லை? நினைவு இருக்கு எனக்கு. படிக்கையில் இன்னும் பதைபதைப்பு அதிகம் ஆச்சு! உண்மையிலேயே துணிச்சல் தான். முக்கொம்பு மிக ஆபத்தான இடம். அங்கே போய் இப்படி எல்லாம் விளையாடி! இன்றைக்கு நினைத்தால் பெரிசாய்த் தெரியாது. ஆனால் எவ்வளவு பெரிய விஷயம்.

ஒவ்வொன்றாய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள் வல்லி.

Geetha Sambasivam said...

உங்களால் இயன்றவரை எல்லாமும் செய்திருக்கீங்க. அந்தக் கடைசி நிமிடம் என்னனு உங்களுக்கும் புரிஞ்சிருக்காது. அவரும் எங்கோ இருந்திருப்பார். ஆகவே அதையே நினைச்சுக் கலங்காமல் மனசைத் தேத்திக்குங்க. கொடுத்து வைச்சது அவ்வளவு தான்! :(((((

ஸ்ரீராம். said...

நினைவின் சுழல் வல்லிம்மா.

துளசி கோபால் said...

//சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்//

தலைப்பு சூப்பர். அப்படியே தொடரட்டும் இந்த புத்தகம்.

இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாந்தி. எழுதலாம். ஒவ்வொன்றாகச் சின்னவன் சொல்கிறான் அவனுக்குத் தெரிந்ததை. அவனும் அப்பாவும் ரொம்ப அந்யோன்னியமாக இருப்பார்கள் நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா . நாம் எல்லோரும் எட்டு,பத்து ,ஆறு என்று என்னவெல்லாமோ பதிவுகள் போட்டது நினைவில் இருக்கிறது. அதைத் தேடிப் பார்த்தேன் .கண்டு பிடிக்க முடியவில்லை.அவருடைய கடைசி நிமிடங்கள் இன்னும் சரியாகக் கவனித்திருக்கலாமோ ன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. தேவகில பார்க்கக் கூட மாட்டேன்னு சொல்லிவிட்டார்களே. நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் ஸ்ரீராம் சுத்திச் சுத்தி அவரைப் பற்றியே நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா துளசி. சின்னவன் சொன்ன வார்த்தைகள் தான் இவை. மறக்க முடியாமல் தான் பதிந்து வைக்கிறேன் மா.

ராமலக்ஷ்மி said...

சரியாகச் சொல்லிவிட்டார் ஸ்ரீராம்.

திவாண்ணா said...

we want more singam stories! :-))

Anonymous said...

சிங்கத்தின் புகழ் நிலைத்து நிற்கட்டும்

அப்பாதுரை said...

idhai naan en padivil ezhutha ninaichen.. muthal thadavai kettappove silirthup ponen.

தனிமரம் said...

நினைவுகள் சுமையாக கனக்கவைக்கின்றது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

செய்யலாம் தம்பி வாசுதேவன். கோர்வையாக யோசிக்கணும். யோசிக்கவே தயக்கமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

Wநன்றி கடைசிபென்ச்.

வல்லிசிம்ஹன் said...

துரை, இப்பக் கூட எழுதலாமே..ஆர்வமாக இருக்கிறது.இன்னொருவரின் பார்வையிலும் இந்த சம்பவம் பயங்கரமாகத்தான் இருக்கும்.ஒரு அயர்வில்லாத மனிதரைப் பற்றி எழுதுவது எனக்குப் பெருமைதான்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நிஜத்தை ஏற்கமுடியாத மனம் நினைவுகளில் ஆறுதல் காண நினைக்கிறது.நன்றி தனிமரம்.

வெங்கட் நாகராஜ் said...

நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. சிங்கம் இப்போதும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்..... அவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கும் மன அமைதி கிடைக்கும்..... தொடரட்டும் பதிவுகள்....

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.வெங்கட்.அவரை நினைக்கும்போது பெருமையாகவும் இருக்கிறது. இழந்துவிட்டோமே என்று துக்கமும் பொங்குகிறது.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.வெங்கட்.அவரை நினைக்கும்போது பெருமையாகவும் இருக்கிறது. இழந்துவிட்டோமே என்று துக்கமும் பொங்குகிறது.

கோமதி அரசு said...

சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.//

ஆம் , முன்பு ஒருமுறை இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து படித்து இருக்கிறேன். அந்த கணம் சிங்கம் சாருக்கு துணிச்சலை அந்த நரசிம்ம கடவுள்தான் கொடுத்தார்.

எழுதுங்கள் நிறைய,நினைவுகளில்வாழ்பவரை பற்றி..
மன ஆறுதல் கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி. ஆமாம் ஏற்கனவே எழுதியதைப் பிரசுரிக்க நினைத்தேன். புதிதாக எழுதினால் மனம் தெளியும் என்றே இந்தப் பதிவைப் பகர்ந்தேன். உங்கள் எல்லோருடைய ஆதரவும் எனக்கு இருப்பது பூர்வ ஜன்ம புண்ணியம்.

மாதேவி said...

மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள்.