Add caption |
பூக்கள் எல்லாம்,செடிகள் எல்லாம் ,மரங்கள் எல்லாம் உங்களைத்
தேடுகின்றனவாம்.
உரமிட்டு,
மண்ணிட்டு,களை எடுத்து ..பாவமம்மா இந்தக் செடிகள் .வாய்விட்டுக் கேட்கமுடியாது. நாம்தான பார்த்துக் கொள்ளணும்.. என்றவர் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டீர்கள்.
யார் கனவிலாவது வந்து சொல்லிவிட்டுப் போகவும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
40 comments:
oh..!
மரம் செடி கொடிகள் மட்டுமா, அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவரைத் தேடிக் கொண்டிருக்கும்.
தன்னை நேசித்தவரை தேடும் தோட்டத்தின் புலம்பல் மனதை கனக்க வைத்து விட்டதே!
அந்த செடிகளும் இனிதாக வாழட்டும்..!
அம்மா கலங்காதீர்கள்.தன் நினைவாக தோட்டத்தை வளர்த்திருக்கிறார். அவர் இடத்திலிருந்து அவ்வுயிர்களிடம் பேசி வாருங்கள்
நிச்சயம் அவர் அங்கே, அவற்றுடன் இருப்பார்.
:( நினைக்கவே மனம் கலங்குகிறது ரேவதி. அங்கே இருந்தும் தோட்டத்துச் செடிகளை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரையானும் பார்த்துக் கொள்ளச் சொல்லிட்டுத் தானே வந்திருக்கீங்க? செடிகள் மட்டுமா பாவம்? :((((
"கவலைப்படாதே , என் பிரியசகி நாச்சியார் இப்ப எனக்காக செய்வானு" அந்த நல்லமனசு பூச்செடிகிட்ட சொல்லியிருக்கும் .snow flakes , Santa வர நேரம் இன்னிக்கு மனசார Santa வை Poinsettiaவும் X Mas lilies ம் கொண்டு வந்து தர வேண்டிக்கிறேன் .நாச்சியாரம்மாவோட தோட்டத்து முதல் செடி. பூரிச்சுப்போயிடுவார் ஆண்டாளம்மாவோட சிங்கம். Warm ragards Mrs Simhan.Please take care.
"கவலைப்படாதே , என் பிரியசகி நாச்சியார் இப்ப எனக்காக செய்வானு" அந்த நல்லமனசு பூச்செடிகிட்ட சொல்லியிருக்கும் .snow flakes , Santa வர நேரம் இன்னிக்கு மனசார Santa வை Poinsettiaவும் X Mas lilies ம் கொண்டு வந்து தர வேண்டிக்கிறேன் .நாச்சியாரம்மாவோட தோட்டத்து முதல் செடி. பூரிச்சுப்போயிடுவார் ஆண்டாளம்மாவோட சிங்கம். Warm ragards Mrs Simhan.Please take care.
purigirathu ungal vedhanai.
Dear Valliamma,
"Those we love don't go away,
They walk beside us every day,
Unseen, unheard, but always near,
Still loved, still missed and very dear"
He is always with you and family.
Uma
Yes.I called to talk to the gardner.
he told me they look a little peevish even after watering. thanks Dhurai.
ஆமாம் ஸ்ரீராம். வீட்டை நினைக்கக் கூட வருத்தமாக இருக்கு. நன்றிமா
--
அன்புடன்,
அன்பு கோமதி ,
இப்படிப் புலம்ப வேண்டாமே என்றெ எழுதாமல் இருக்கிறேன்.
நன்றி மா.
YES rajarajesvari. thanks ma.
வணக்கம்
அம்மா
மனவேதனையின் வடிவம் எழுத்து வடிவமாக கட்டியுள்ளீர்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதின் மூலையில் ஒரு வலி:(
பெருமாள் பார்த்துக்குவார். கவலை வேண்டாம் ப்ளீஸ்.
அக்கா , இப்படி மனதை விட்டு வேதனைகளை சொல்லி விடுவது நல்லது. சிங்கம் சாரின் நினைவுகளை எழுதுங்கள். நினைவுகள் தரும் ஆறுதல். அவர் நேசித்த செடி, கொடிகளை இப்போது யார் பார்த்துக் கொள்கிறார்கள்?
Welcome back! Time and time alone would alleviate all sufferings.
நன்றி உமா .,ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை. நானும் மகனும் பேசும்போது அவரைப் பற்றித்தான் பேசுவோம் சின்னச்சின்ன நிகழ்வுகள் .பெரிய பெரிய மகிழ்ச்சிகள்..என்னைவிட அவன்தான் இன்னும் அதிகம் நினைக்கிறான். ஆறுதலாக இருக்கிறது உங்கள் வார்த்தைகள் .
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அன்பு கடைசிபெஞ்ச் ,வருந்தாமல் இருக்கவே முயற்சிக்கிறேன்.இன்னும் கொஞ்சம் கவனமாக் இருந்திருக்கலாமோ என்ற கவலை அரிக்கிறது மனத்தை.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அன்பு கோமதி, கட்டாயம் எழுதுவேன்.அவரைப் போல ஒரு மனிதர் இனிக் காணக் கிடையாது .எல்லாக் கலைகளையும் கற்றவர்.
இன்னும் கொஞ்சம் பாராட்டி இருக்கலாமோ இது போல வருத்தங்களே மிஞ்சி இருக்கின்றன.
--
அன்புடன்,
ரேவதிநரசிம்ஹன்
அன்புள்ள வல்லிசிம்ஹன் அவர்களுக்கு ,
துளசி அவர்களின் Blog மூலம் உங்களை அறிவேன் . உங்கள் எழுத்துக்களும் எனக்கு பரிச்சயம் . கவலைபடாதீர்கள் . செடிகளின் மூலமாக உங்கள் துணைவர் உங்களோடு இருக்கிறார் . அப்பூக்களின் சிரிப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் துணையாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .
இதுவும் கடந்து போகும் வல்லிம்மா......
இன்றைக்கும் அவர் உங்களுடன் தான் இருக்கிறார்....
மனதைத் தளர விடவேண்டாம்.....
தொடர்ந்து எழுதுங்கள்....
அன்பு சசி கலா மிக நன்றிமா. உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். காலம் மாறும்.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
THANK YOU NAMBALKI. YES I TRUST SO.
YRS WE DO LIVE IN HOPE AND GOD.
HAVE A HAPPY NNEWYEAR.THULSIMA.
அன்பு ரூபன் புரிதலுக்கு மிக நன்றி . புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பு ஜயஷ்ரீ ,வார்த்தைகள் போதாது உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமானால் .
எத்தனை அழகான பரிசு. இன்னும் எனக்கு சாந்தாவை ரொம்பப் பிடிக்கும். கண்டிப்பாக மனசார சிங்கம் மகிழ்வார்.
நானும் பூக்களைப் பொருத்தி எங்கள் வீட்டை மனக்கண்ணால் பார்த்துக் கொள்கிறேன்
அன்பு கீதா,எதை நினைத்துக் கலங்குவது எதை விடுப்பதுன்னு புரியவில்லை.
கலக்கத்திற்கு மருந்தாகப் பேரனும் பேத்தியும் கொடுத்தது இறைவன் கருணை.
தோட்டத்தைப் ப பார்த்துக்கொள்ள ஆ ள் இருக்கிறர்ர .மா
நினைத்து, நினைத்து, மறுகி மறுகித்தான் துக்கத்தை பழக்கிக்கொள்ள வேண்டும், வல்லி. உங்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ள உங்கள் பிள்ளை இருப்பது மிகப்பெரிய வரம். நிறையப் பேசுங்கள். நிறைய நினையுங்கள். அந்த நினைவுகளே உங்களுக்குத் துணையாக இருக்கும்.
anbu Ranjani,
maRukiththaan naalaik kazhikkiREn.
Kids being near the children is God.s Blessing.
Thank you ma.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
Thank you Venkat. please forgive my english.
Thamizh font download seya mudiyavillai.
google thamizh sometimes help seykirathu.
Thank you Gauthaman.I know he loved his plants too much. we have got some expert to lookafter the cactus and orchid plants.
Thank you INTHIRA.I know I have to take neccessary steps to come out of this. but that feels like another death.
Dear Valli Amma,
It is a big sad news for me. I am so sorry to hear. Let the time bring peace.....
Thank you Selva Nayaki.
It is so good to see you here.
yea I have to go through this .in whichever way I divert myself He is there at the back of mind. well .take care ma. thank you so much.
அன்பிற்கினிய வல்லி அம்மா,
நேற்று அவசரமாய் உங்கள் பதிவு படித்து ஆங்கிலத்தில் எழுதிச் சென்றேன். இன்று உங்கள் பதில் படித்து மேலும் நெஞ்சம் விம்முகிறது. நான் தமிழ் வலைப்பதிவுகளில் இப்போது எழுதாவிடினும் எப்போதாவது என் பிரியத்துக்குரிய உங்களைப் போன்றவர்களின் பக்கங்களுக்கு வந்து போவதுண்டு. அப்படித்தான் இன்றும் வந்தேன். செய்தி படித்து அதிர்ச்சியாக இருந்தது. எதுகொண்டும் நிரப்ப இயலாத வெற்றிடம் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறீர்கள். காலத்தின் கைகள் உங்களை அன்பு கொண்டு அரவணைக்கட்டும்! உங்களோடு பேச முடிந்ததில் நெகிழ்ச்சி. நான் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என்னை எப்போதும் வாழ்த்திய உங்களின் அன்பு இப்போதும் என் நினைவில். நீங்கள் மகள் வீட்டுக்கு வரும்போது தொலைபேசி எண் கொடுங்கள், அழைக்கிறேன். எனது மின்னஞ்சல் snayaki@yahoo.com
அன்பு செல்வா,
உங்கள் எழுத்தின் நேர்மை உங்கள் பதிலிலும் தெரிகிறது. என் காலத்தின் கோலம் என்னை இந்த நிலைக்கத் தள்ளி இருக்கிறது. அவரது நிழலில் சுகமாக இருந்துவிட்டேன் .இனி ஊன்றுகோல் அவர் -- நினைவுகளே .நன்றி அம்மா. அமேரிக்கா வந்ததும் உங்களை அழைக்கிறேன்..
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
Post a Comment