Blog Archive

Wednesday, September 18, 2013

சின்னச் சின்ன வீடு கட்டிச் சிங்கார வீடு கட்டி.........1979இல் ஆரம்பித்த கனவு

கனவு  இல்லம்

 எங்கள் தந்தை  ஓய்வு பெற்றது 1978இல்.
மஹாபலிபுரம் தபால் அலுவலகப் பொறுப்பிலிருந்து
 விடுதலை!!
அம்மாவுக்குத்தான்  அங்கே இருந்து வர மனசில்லை.
வாயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தையலோ, எம்ப்ராய்டரியோ போட்டுக் கொண்டு கொஞ்ச தூரத்தில் தெரியும்
நீலக் கடலை  ரசித்த வண்ணம்  இருப்பார்.
அம்மாவுடைய தோழிகள் புத்தகங்களும்  பத்திரிகைகளும்தான்.
சின்னவன் சென்னையில் வேலையில் இருந்தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. வெள்ளி இரவு அம்மா அப்பாவைச் செல்லம் கொண்டாட வந்துவிடுவான்.


சென்னையிலிருந்தால் என்னை ஏதவது தமிழ்ப் படத்துக்கு அழைத்துப் போவான். ஒரு வருடத்தில் பதினைந்து படங்கள் பார்த்திருக்கிறேன்!அது எனக்குப் பெரிய ரெகார்ட் !!

இந்தச் சமயத்தில் அப்பாவின் வயிற்று அல்சர்
மிகத் தொந்தரவு கொடுக்கவே  வாலண்டரி ரிடயர்மெண்ட் வாங்கி
உடலைக் கவனித்துக் கொள்ளவேண்டும்   என்கிற நிலைமை.

அப்பொழுது எங்கள் வீட்டில் மாமியார் கமலம்மா குவைத் சென்றிருந்தார்.
அவர் கிளம்பும் போதே  சொல்லிவிட்டுப் போனார்.
நாராயணனையும் ஜயாவையும்
இங்க இறங்கச் சொல்லு.
வீடு பார்த்துக் கொண்டுப் போகும் வரை இங்கேயே இருக்கட்டும்''என்று ஆர்டர் போட்டுவிட்டுப் போய்விட்டார்:)

மாப்பிள்ளைவீட்டில் சாமான் செட்டோட வர அப்பாவுக்கு   அவ்வளவு  மனம் ஒப்பவில்லை.
சிங்கம் விடுவதாக இல்லை. நேரே   மஹாபலிபுரம் சென்றார்.
 பாதி பொருட்கள்  அம்மாவின் அம்மாவீட்டிலிறக்கப் பட்டன. உடைகள் மற்ற உடமைகள்
பாரிஜாதத்திற்கு   அம்மாப்பா சிங்கம் ரங்கன் சகிதம் வந்து இறங்கின,.

குழந்தைகளுக்கோ ஒரே  கொண்டாட்டம்.
வந்து இறங்கின  அடுத்த வினாடியிலிருந்து சமையலறையில்
அம்மா  புகுந்ததுதான் தெரியும்.

அவர்கள்  இருந்த பத்து நாட்களில் வீடே மாறியது.
சமையல் காஸ்  அடுப்பை அழகாகச் சுத்தம் செய்து புது பெயிண்ட் அடிக்கப் பட்டது.

ஸ்வாமி படங்கள் துடைக்கப் பட்டன.
வாயிலில்  புது திரைச்சீலை போடப் பட்டது.
தரையில் படிந்திருந்த பலவிதமான அழுக்குகளைக் கெரசின் கலந்த

தண்ணீரால்  துடைத்துத் துடைத்துப் பளீர் என்ற  பழைய மொசெயிக்கின் வடிவங்கள்  தெரிந்தன.
மாடியில் புதுக் கொடிக்கயிறு கட்டப் பட்டது.

அப்ப  குடும்பத்தலைவியும் தலைவரும் அவ்வளவு மோசமாகவா 
வீட்டை வைத்திருந்தார்கள்   என்கிற கேள்வி  வரத்தான் செய்யும்.

அதற்கு நூறு பதில்கள் வைத்திருக்கிறேன்.
ஒன்றே ஒன்று அப்போ கூட்டுக் குடும்பம்.
எதையும் பெரியவர்கள் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
பாட்டியும் இங்க இல்லை. அம்மாவும்(மாமியார்)  வெளியே போனதால் இவர்கள்  சுதந்திரமாகச் செயல் பட்டார்கள்.
வந்த பத்தாம் நாள் இந்திரா நகரில் வீடு கிடைத்தது.

அப்போது அப்பா சொன்ன வார்த்தைகள். உன் வீட்டில்
ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்மா.
வயிற்றுவலி கூட வரவில்லை என்று
குழந்தைகள் மூவருக்கும் ஆளுக்கொரு நூறு   ரூபாய் கொடுத்தார்.

'அம்மாவிடம் கொடுக்கக் கூடாது.   ஹிக்கின்பாதம் போய்ப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொல்லியபடி
ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.

பிறகு  எப்போது சொந்த வீடு வாங்கினார்கள்?
அது அடுத்த பதிவில்:)


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

30 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் அம்மா...

துளசி கோபால் said...

நீலக்கடலைப் பார்த்த திண்ணையா??

ஹைய்யோ!!!!! அந்த வீடு இப்பவும் இருக்கோ?

இங்கே நம் தோழி வீட்டுக்கு அவர்கள் அம்மா வந்திருந்தார்கள்.

அப்போ சொன்னது.....

"கண்ணாடி போட்டுக்கிட்டு பார்த்தால் ஸ்டவ் எல்லாம் ஒரே அழுக்கு. தேய்ச்சு சுத்தம் செஞ்சு கொடுத்தேன்!"

குழந்தை வளர்ப்பில் பிஸியாக இருக்கும் இளம்தாய்மாரால் இதுக்கு கேலே அடுப்படியில் உழல முடியாதுல்லையோ!!!!

இராஜராஜேஸ்வரி said...

அம்மாவிடம் கொடுக்கக் கூடாது. ஹிக்கின்பாதம் போய்ப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்'

தாத்தாவின் அன்பு..!

sury siva said...

//அதற்கு நூறு பதில்கள் வைத்திருக்கிறேன்.
ஒன்றே ஒன்று அப்போ கூட்டுக் குடும்பம்.
எதையும் பெரியவர்கள் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.//
ஒண்ணே ஒண்ணு தானே சொல்லி இருக்கீங்க...

2. ? 3? 4? 5.? 6? 7.? 8.? 9.? 10?.........................................................91? 92? 93 ? 94 ? 95? 96? 87? 98? 99? ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு பதிவு போடலாமே.
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஆர்டர் அதாவது way of keeping things இருக்கும்.
அது மத்தவங்களுக்கு (அவங்க எத்தனை தான் சொந்தம் கூடப்பிறந்த புறப்பு அப்பா அம்மா, தம்பி, தங்கை, நாத்தனார், ஓர்ப்படி என்று இருந்தாலும், ) அன் டைடி ஆக, அஅக்ளி ஆகவும் தான் தெரியும்.

நான் சமீபமா பொண்ணு வீட்டுக்கு அமேரிக்கா போயிட்டு திரும்பி வர்றத்துக்குள்ளே என் பையன் தோஹாலேந்து வந்துட்டான்.

அப்பா என்ன இவ்வளவு குப்பையா போட்டு வச்சு இருக்காரே என்று அத்தனை புத்தகத்தையும் மற்ற நோட் புக் எனது குறிப்பு புத்தகம் எல்லாம் ஒரு தினுசு பண்ணி அடுக்கி வைத்து விட்டான்.

நான் வந்து பார்த்தா எது எங்கே இருக்கு அப்படின்னே தெரியல்லே ?

ஜன்மாஷ்டமி அன்னிக்கு முதல் நாள் தான் வந்தேன். அந்த பூஜை புஸ்தகத்திலே நிகமாந்த மகா தேசிகன் அவர்கள் எழுதிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கும். அது சம்ஸ்க்ருத்தத்திலே ஒரு க்ளாசிகல் பொயட்ரி அபார்ட் ப்ரம் இட்ஸ் ரிலிஜியஸ் வால்யூ.

எது எது எப்பப்ப கிடைக்கணுமோ அது அது அப்பப்ப கிடைச்சாச்சா தானே விசேஷம் ?

இரண்டு நாள் கழிச்சு கிடைக்கிறது.

இதுவும் அந்த குட்டி கிருஷ்ணன் விளையாட்டோ என்று நினைத்தேன்.

சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
www.subbuthatha.blogspot.com

அப்பாதுரை said...

ஒரு வாரத்துல பதினஞ்சு படமா.. this must be an all time record. டென்டுல்கர் பாணி ரெகார்ட்.

கூட்டுக்குடும்பம் கொஞ்சம் இப்படி அப்படியான விஷயம். சில வசதிகள். சில துன்பங்கள்.

இதுல சஸ்பென்ஸ் வச்சு எழுதுறது சுவாரசியம் தான்.

அப்பாதுரை said...

வீடு படிக்கறப்பவே நல்ல விஷுவல்.

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, கண்ணாடி போட்டுக்கலையா? ஒரு வருடத்தில் பதினைந்து படங்கள்னு சொல்லி இருக்காங்களே! :))))) கண்ணாடியைத் துடைச்சுப் போடுங்க. :P

Geetha Sambasivam said...

//அப்பா என்ன இவ்வளவு குப்பையா போட்டு வச்சு இருக்காரே என்று அத்தனை புத்தகத்தையும் மற்ற நோட் புக் எனது குறிப்பு புத்தகம் எல்லாம் ஒரு தினுசு பண்ணி அடுக்கி வைத்து விட்டான்.

நான் வந்து பார்த்தா எது எங்கே இருக்கு அப்படின்னே தெரியல்லே ? //

ஹாஹாஹாஹா, ரேவதி, இந்த விஷயத்தில் நான் சுப்பு சாரோட (முதல்முறையா?) ஒத்துப் போறேன். :))) இங்கே நம்ம வீட்டிலேயும் இப்படித் தான் நடக்கும். ஒழிச்சு வைக்கிறேன் பேர்வழினு! கடைசியிலே எந்தப் புத்தகம் எங்கே இருக்குனு தெரியாம, எந்தப் பக்கம் பார்த்துட்டு இருந்தோம்னு புரியாம, இதிலே வைச்சது வைச்ச இடத்திலே இல்லைனு புகார் வேறே வரும்.

புத்தகத்தை வைச்ச இடத்திலே தானே தேடுவோம்! :)))) இப்போ ஶ்ரீரங்கம் வந்தப்புறமா இந்தப் புத்தக அறை தனியாப் போயிட்டதாலே பிரச்னை ஜாஸ்தி இல்லை. அப்படியும் சில சமயம் நாற்காலி எடுக்கப் போனால் வரும். சமாளிப்போம்! வேறே வழி! தேடற கஷ்டம் எனக்கில்லை தெரியும்! :)))))

சாந்தி மாரியப்பன் said...

முன்புறம் புல்வெளியோட வீடு செம அழகு.

//ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஆர்டர் அதாவது way of keeping things இருக்கும்.
அது மத்தவங்களுக்கு (அவங்க எத்தனை தான் சொந்தம் கூடப்பிறந்த புறப்பு அப்பா அம்மா, தம்பி, தங்கை, நாத்தனார், ஓர்ப்படி என்று இருந்தாலும், ) அன் டைடி ஆக, அக்ளி ஆகவும் தான் தெரியும்//

சுப்பு ஐயா சொன்னது ரொம்பச்சரி :-))

ஸ்ரீராம். said...

சுப்பு தாத்தாவின் அபிப்ராயம்தான் என் அபிப்ராயமும்! அவரவர்க்கு அவரவர் சௌகர்யம்!

வீடு வர்ணனை மனதில் அந்த வீட்டைக் கொண்டு வந்து நிறுத்தி ரசிக்க வைத்தது!

ஸ்ரீராம். said...

அப்பா அம்மாவைச் செல்லம் கொண்டாட....! ஹா ஹா ஹா!

கோமதி அரசு said...

அம்மாவுக்குத்தான் அங்கே இருந்து வர மனசில்லை.
வாயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தையலோ, எம்ப்ராய்டரியோ போட்டுக் கொண்டு கொஞ்ச தூரத்தில் தெரியும்
நீலக் கடலை ரசித்த வண்ணம் இருப்பார்.//

அருமையான வீடு.
நீலக் கடலை ரசித்த வண்ணம் என்று கற்பனை செய்து பார்க்கும் போதே மனம் துள்ளுகிறது.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் பதிவும் அதற்கான சுப்புத் தாத்தாவின் கருத்துரையும் ந்ன்றாகவே இருந்தன. வீட்டை கட்டினீர்களா? வாங்கினீர்களா? அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

நீலக் கடலை நோக்கி ஒரு வீடு.... ஆஹா ஆனந்தமா இருக்குமே.....

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.என் பெற்றோரின் கனவு இது.நிறைவேறும் வழியைத்தான்
எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. மஹாபலிபுரத்தில் அந்த வீடு இருக்கிறது. தபால் ஆஃபீஸ் இடம் மாறிவிட்டது.
35 வருடங்களில் ஏகப்பட்ட மாற்றம்.
அழகாக இருக்கும் கடல் புயல் வரும் காலங்களில் பயங்கரமாக இருக்கும்.
அப்போதெல்லாம் இந்த ரிசார்ட் எல்லாம் வரவில்லை.
கடற்கரைக் கோயிலுக்குத் தினம் நடப்போம்.கடல்கரையோரமே நடந்து போய்வருவோம்.ரொம்பக் குளிரும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி.அம்மா செலவழித்துவிடுவேன்:)
குழந்தைகள் நிறையப் படிக்கவேண்டும் தாத்தாவின் ஆசை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பாக் கிருஷ்ணனோட விளையாட்டாதான் இருக்கும் சுப்பு சார். அதுமட்டும் உங்க பையன் கண்ணில் படாமல் போச்சே:)
நூறு காரணங்களில் ஒன்று எப்பவும் வீடு நிறைய உறவினர்கள் வந்த வண்ணம் போன வண்ணம் இருப்பார்கள்.

சமைக்க மட்டும்தான் தெம்பு இருந்தது.
இப்போது போல நவீன சமையல் அறை இல்லை.கரி அடுப்பு,ஸ்டவ் எல்லாம் இருக்கும். கூடவே காஸ் ஸ்டவும்.
90 களில் தான் அந்த அறை வெளிச்சமே பார்த்தது.எத்தனையோ கதை..என் பெண் வந்தாலும் இப்படித்தான். என்னைத் தவிர எல்லாமே வேஸ்ட் என்று சிரிப்பாள்.
அவள் ஊருக்குப் போகும்போது வீடு பளபளா என்றாகிவிடும்!!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
ஒரு வாரம் இல்லை. ஒரு வருடம்.:)
சஸ்பென்ஸ் இல்லை மா.
நீளம்.நடுத்தர மக்கள் வீடுகட்டுவதில் த்ரில் ஏது. போராட்டங்கள் தான் அதிகம்.:)

வல்லிசிம்ஹன் said...

கீதா!! தான்க்ஸ் பா.
துரை விஷுவல் னு பாராட்டி இருக்கிறாரே!

வீட்டுக்கு வீடு வாசப்படி.
பையன் வந்தால் அவன் வரை அவன் பொருட்களைப் பத்திரப்படுத்திவைப்பான்.
பெண் வந்தால் என் புத்தகங்களில் ,அலமரியில் கை வைத்துவிடுவாள்.
தேடித்தேடி என் டயரிகளை
எடுப்பதற்குள் போதும்டா சாமின்னு ஆகிடும்.''clutter free life is ithe way to peace''னு லெக்சர் வேற.:)

வல்லிசிம்ஹன் said...

அப்பாடி!!சரியாச் சொன்னீங்க சாரல்.
என்னுடைய அறை கொஞ்சம் பாவம்தான்.தினசரிகள்,வாராந்தரிகள்,
மருந்து பெட்டிகள்,ப்ரஷர்,க்ளூகோஸ் மீட்டர்,பழைய டயரிகள் என்று கொஞ்சம்(!!!!!!!)ஒரு மாதிரிதான் இருக்கும். என்னால் ஒன்றையும் தூக்கிப் போட முடியாது.:)
என் மாமியாரால் வளர்க்கப் பட்ட பெண், தட் தட் திங் தட் தட் ப்ளேஸ்:) நீங்க சொன்ன அத்தனை உறவுகளும் புருவத்தைத் தூக்கி இருக்கிறார்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
சின்னவன் எங்க வீட்டில் கொஞ்சநாட்கள் இருந்துவிட்டு தனி அறை பார்த்துக் கொண்டு போனான்..அம்மா அவன் வரும் ஞாயிறுக்காகவே ஓமப் பொடி தேங்காய் பர்ஃபி எல்லாம் செய்து வைப்பார். எங்களுக்கும் அனுப்புவார்.அப்பா செல்லம் வேற.கேட்கணுமா.அந்த நாட்களில் இந்த வீடு இருந்த விதமே வேறு.!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதிமா.
அம்மாவுக்கு அக்கம்பக்கத்தில் போய்ப் பேச யாரும் கிடையாது. போகவும் மாட்டார். ஒரு பூரண குடும்பத்தலைவி. ஒரு சிறு அழுக்குக் கூடக் கண்ணில் படாது.
சாமி அறையில் கோலம் போட்டு விளக்கேற்றும் அழகே தனி.
வாழ்க வளமுடன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
பசங்க,பள்ளிக்கூடம், அவங்க டிஃபன், பாத்திரம் தேய்க்க என்று இப்படி நேரம் போய்விடும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் திரு தமிழ் இளங்கோ.
அபார்ட்மெண்ட்கள் வர ஆரம்பித்த வேளை அந்தக் காலம். அப்பாவும் தம்பிகளுமாகச் சேர்ந்து பணம் போட்டு இரண்டு அபார்ட்மெண்ட்கள் வாங்கினார்கள்.
முதல் தடவையாக வருகிறீர்களா! நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சுவாரஸ்யம் தான் வெங்கட்.
ஒரு ட்ராபேக். வீட்டுக்கு நேர் எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு கல்லறையும் இருந்தது:)
அம்மா பயப்படும் ஆள் இல்லை. ஆனால் பேரன் பேத்திகளை இரவு நேரம் வெளியே விடமாட்டார்.:)

ராமலக்ஷ்மி said...

கூட்டுக் குடும்பம். அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்:)! தொடரக் காத்திருக்கிறோம்.

தி.தமிழ் இளங்கோ said...

// முதல் தடவையாக வருகிறீர்களா! நன்றி. //

மேடம்! நான் ஏற்கனவே உங்கள் பதிவிற்கு வந்து கருத்துரை தந்துள்ளேன். உங்கள் வலைப்பதிவினைப் பற்றி, நான் வலைச்சரம் ஆசிரியராக இருந்தபோது அதில் எழுதியும் இருக்கிறேன்.
6. வலைச்சரம் ஆறாம் நாள்: வலைப் பதிவு ஒரு கலை
http://blogintamil.blogspot.in/2013/02/6.html

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். ராமலக்ஷ்மி.
நிறைய ப்ளஸ் கொஞ்சம் மைனஸ் =கூட்டுக் குடும்பம்.நைட்ஷோ சினிமா போகலாம்:)
20 பேருக்குப் பஜ்ஜி போட்டு முடிந்த பிறகு டேஸ்ட்டுக்குக் கூட ஒண்ணும் மிஞ்சாது:) அடுத்தது தொடர வேண்டியதுதான்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

என் மறதியை மன்னித்துவிடுங்கள் தமிழ் இளங்கோ.
மறந்துவிடுகிறேன்.
மீண்டும் அந்தப்பதிவைப் படிக்கிறேன்.
மிக மிக நன்றி.