எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்த மாத படப் போட்டி பிட் படப் போட்டி பைகள்.
பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் பை. தான் வெளியே போனால் கூடவே பையனோ பையோ வரவேண்டும். இல்லாவிட்டால் நடை துவங்காது.:)
ஏனிப்படி? முதலில் அம்மாவைப் பிடித்துக் கொண்டோம்.
பிறகு பால் கிண்டியைப் பிடித்தோம்.
பிறகு பள்ளிக்கான தோள் பையப் பிடித்தோம். ...
கல்லூரிக்குப் பைகிடையாது.(எல்லாம் ஸ்டைலுதான் காரணம்) இரண்டு பெரிய புத்தகங்கள். நடுத்தரமக்களுக்கான ஒரு சின்ன டிபன் பாக்ஸ்.
அதோடு பஸ்ஸில் ஏறி,
தோழிகளுடன் சேர்ந்து இடம் பிடித்து
நிற்கும் தோழிகளின் புத்தகங்களை வாங்கி வைக்க இடம் செய்துகொண்டு
பஸ்ஸில் ஏற்றம் இறக்கம் வரும்போது கிளுகிளுவெனச் சிரித்து,
ஏஏய் அங்க பாரேன் எக்மோர் ஸ்டாப்பில ,காலங்களில் வசந்தம் பாட்டுக்கு ஜெமினி போட்டுக் கொண்ட சட்டையைப் போட்டுக் கொண்டு
ஒரு பையன் நிற்கிறான்!
எல்லா முகங்களும் அந்தப் பக்கம் திரும்பும்.
ஹ்ம்ம்ம் என்ற பெருமூச்சு கிளம்பும்.
இதற்கப்புறம் திருமணம்.
எனக்குத் திருமணப் பரிசாக வந்தவை ஐந்து வகை ஹாண்ட்பாக் கள்தான்.
ஒன்று கையில் மாட்டிக் கொள்வது.
அதை வைத்துக் கொண்டு நான் பட்ட பாடு.:(
அதுவேண்டாம் என்று சிறிய க்ளட்ச் பையை எடுத்துக் கொண்டால் என்னவைப்பது அதில் . நாத்தனார்கள் அழகாக் கைக்குட்டை,லிப்ஸ்டிக்,
காம்பாக்ட் பவுடர் என்று நிறப்பி இருந்தினர்.
ஒரு நாள் தன் மேலதிகாரி வீட்டுக்கு ப் போக தயாராக இருக்கும்படி
ஆஃபீஸ் பையன் ஷண்முகம் சொல்லிவிட்டுப் போனான்.
படபடப்பு ஆரம்பித்தது.
மையிட்டுக்காதே. வட்டப் பொட்டு வாடாமல்லிக் குங்குமம்
பச்சை பனாரஸ்,முத்துமாலை எல்லாம் சரி.
லிப்ஸ்டிக் எப்படிப் போட்டுக் கொள்வது?
போட்டுக் கொண்டேன் அசல் கிளி மூக்குமாதிரிச் சிவப்பில் கலர் லிப்ஸ்டிக்.
அதைத் திறக்கவே ஒரு போராட்டம்.
திறந்தது வந்த வண்ணக்குச்சியைப் பட்டையாக உதட்டில் வர்ணம் போட்டாச்சு.
சிங்காரம் செய்து கொள்ளும்கலை கற்காத நாட்கள். இப்பவும் ஒண்ணும் தெரியாது என்பது வேற விஷயம்:)
தசபுசா புடவை கட்டியாச்சு. என் கைச்சாப்பாட்டினால் இளைத்த உடம்பு, தொளதொள சட்டை..
வாசலில் ஜீப்.
படபடன்னு பூட்ஸ் சத்தம் மாடி ஏறி வருகிறார்.
ஈ என போஸ் கொடுத்தபடி நான் நிற்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார் சிங்கம்:))))))))))))))))))))))))))))))))))))))))
ஏம்மா இப்படி லிப்ஸ்டிக் போட்டுண்டு இருக்கே.
அழகா இருக்கு. ஆனால் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.
நீ என்ன பண்றே அந்த டிஷ்யூ கர்சீஃப் இருக்கு இல்லையா,அதனால
ஒத்தி எடுத்துடு. லிப்ஸ்டிக் இல்லைன்னால் தப்பில்லை'' என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போய் தயாரானார்.
ஹைலைட் என்ன தெரியுமா. நாங்கள் சாப்பிடப் போன இடம் ஒரு பக்கா
வைணவ தம்பதிகளின் வீடு.
வா வா என்று ஆரம்பித்த நட்பு வெகுநாட்கள் நீடித்தது.
எனக்கு முதல் குழந்தை பிறக்கப் போகிறது என்ற செய்தியை விளக்கியவரே
அவர்தான். முதலில் உன் மாமியாரிடம் ட்ரன்க் கால் போட்டுச் சொல்லு!
என்று அறிவுறுத்தியவரும் கூட..
பைகள் இப்போது இன்றி அமையாத சாதனங்கள் ஆகிவிட்டன.
அருமையான லண்டன் கைப்பை ஃபீடிங் பாட்டில் பால் கொட்டி வீணாகியது.
சிங்கம் ஒரு நிகழ்ச்சிக்கும் கோபித்துக் கொள்ளமாட்டார்.
இன்னோண்ணு வாங்கிக்கலாம்மா என்பார்.:)பாவம்.
இப்ப அந்தப் பொண்ணு போயி ,,வேறஅம்மாவா மாறிட்டாங்க.
உலகமே என் கைப்பையில் தான்:)

நாட்டுப்புற மனைவியும் நாகரீகக் கணவரும்:) | பை பை | கவனியுங்கள்!! |
36 comments:
பை பையாய் நிரம்பிய
இனிய நினைவுகள்..!
நினைவுகளும் கடைசிப் படமும் க்ளாஸ்:)! பை பை. . கவனித்தோம் அதையும். மற்ற படங்களும் அருமை.
லிப்ஸ்டிக்யை டிஷ்யூ கர்சீஃப்பாலா துடைப்பார்கள்... ஹிஹி...
அழகான பையுடன் படம் பிரமாதம் அம்மா...
ஹைய்யோ!!!
படமும் சேதிகளும் சூப்பரோ சூப்பர்!!!
படமும் நினைவுகளும் அருமை...
பை நிறைய இனிய நினைவுகளை வெச்சிருக்கிங்க போல?! ஒண்ணொண்ணா எடுத்து விடுங்க.
//சிங்கம் ஒரு நிகழ்ச்சிக்கும் கோபித்துக் கொள்ளமாட்டார்.இன்னோண்ணு வாங்கிக்கலாம்மா என்பார்.:)//
ச்சோ ஸ்வீட்..
பை பை.. கவனிச்சுட்டோமே. அதுலதான் அந்த லிப்ஸ்டிக் இருக்கா :-))
வரணும் இராஜராஜேஸ்வரி. இனிய நாட்கள். மிகவும் பொறுமைசாலி என் கணவர்.
நன்றி மா.
இன்னும் ஃபோகஸ் செய்து எடுத்திருக்கலாம் ராமலக்ஷ்மி! பேரன் தான் அடுக்கிக் கொடுத்தான். அதைக் கலைக்க மனமில்லை. அப்படியே எடுத்துவிட்டேன்.
படப் பெண்ணின் கையில் இருக்கும் பைதான் பாட்டில்,குழந்தைதுணிகள் வைக்கும் பையானது.
கொஞ்சம் நாகரீகம் போதாது:(
வேற வழி அப்போலாம் தெரியாது தனபாலன்:)
அந்த கைப்பையிலேயே இருந்த பட்டுத் துணியால் எடுத்துவிட்டேன்.:0)
நன்றிமா. என்னைப் பார்த்தால் ஒரு சாதுப் பூனை மாதிரி எனக்கே தோன்றும்:)
நன்னிங்கோவ் துளசிமா.
பட்டிக்காடும் பட்டணமும் சேர்ந்தால் இப்படித்தான் கதைகள் வரும்.:)
நன்றி சங்கவி.
பைகள் தலைப்பு பார்த்ததும் இந்த வெள்ளைப்பை சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தன.
பொட்டி நிறையன்னு சொல்லுங்கப்பா ராஜி:)
தாங்காது பதிவுலகம்!!!
அறுந்த பை, திருட்டுக் கொடுத்த பை இன்னும் எத்தனையோ!!!நன்றி மா.
ஆமாம் சாரல். லிப்ச்டிக் ,காம்பாக்ட், கைக்குட்டை.வெளியில் எடுக்கவே மாட்டேன்.:)
கையிலிருந்து வழுக்கிக் கொண்டே இருக்கும்...உள்ள ஒண்ணும் இல்லை இல்லியா:)
ஹிஹிஹிஹி, நல்லாச் சிரிச்சேன். என் கிட்டேயும் நிறையவே கைப்பைகள் இருக்கின்றன. படம் எடுக்கணும்னு காலம்பர கூட நினைச்சேன். என்னவோ மூட் இல்லை. :((( போகட்டும். லிப்ஸ்டிக் எல்லாம் கூடப் போட்டுண்டீங்களா?
கற்பனை பண்ணிட்டுச் சிரிச்சேன்.எப்போவானும் கோகுல் சான்டல் பவுடர் மட்டும் போட்டுப்பேன். அதுக்கே எங்க பையர் கோவிச்சுப்பார். பவுடர் எல்லாம் வேண்டாம்மானு சொல்லுவார். இந்த மேக்கப் சமாசாரங்கள்ளாம் என்னனே இன்னி வரை தெரியாது.
காலமைன் லோஷன் மட்டுமே பயன்படுத்துகிறேன். லாக்டோ-காலமைன் இல்லை. அது வேறே, காலமைன் லோஷன் வேறே. :)))) அதுவும் மருத்துவர் ஆலோசனையின் பேரில்.
அருமையான பைகள்.
கையில் பையும்,
வாயில் பொய்யும்
இல்லாமல் எங்கும் கிளம்பக்கூடாது என்பார்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
நான் கூட நினைப்பதுண்டு, தொழில் தொங்கும் அந்த ஹேண்ட் பேக் இல்லை என்றால் பெண்களுக்கு நடக்கவே தெரியாதோ என்று! படங்கள் நன்றாக இருக்கின்றன. கடைசிப் படம் எனக்கு ஓபன் ஆகவில்லை! அதை அப்புறம் பார்க்கிறேன்!
ஆஹா பார்த்துட்டேன். படம் பார்த்துட்டேன். சிங்கமும் சிங்கியும்!
யாரு நீங்களா நாட்டுப்புறம்? சரிதான் :) படம் சூப்பர்
ஹை பை....
நிறைய பைகள் கூடவே உங்கள் நினைவுகள் என பதிவினை ரசித்தேன்!
//தொழில் தொங்கும் அந்த 'ஹேண்ட் பேக்' இல்லை.....//
தோளில் என்பது தொழில் ஆனதற்கு மன்னிக்கவும்.
பெண்களின் கைப்பை அட்சய பாத்திரம்.
சின்ன டப்பாவை தூக்கி வைக்க ஐயோ அம்மா யாராவது உதவக்கூடாதா ஹூஹூ என்று முனகுவோர் ரெண்டு டன் கைப்பையை அலட்சியமாகத் தூக்கிக் கொண்டு போவது பெரிய முரண் :)
படம் சூபர். இன்னும் அப்படியே இருக்கீங்க ரெண்டு பேரும்!
வரணும் கோபுசார்.
கை நிறைய பை சரி. வாய் நிறைய பொய் எதுக்கு./?:)நன்றி.
ஆமாம் ஸ்ரீராம். பையில்லாமல் கிளம்புவது ரொம்பவே கஷ்டம்.
உண்மையாகக் கைகொடுப்பது நல்ல பை. அதில் வேண்டாத பொருட்களை அடைத்தால் தான் வம்பு.
இன்னும் கடைச் சரக்குகள் வாங்கி வரும் பைகளைக் கூட விட்டுவைப்பதில்லை. சட்டுனு யாருக்காவது ஏதாவது கொடுக்கணும்னால் பை வேண்டி இருக்கிறதே;)
வரணும் தக்குடு.
நன்றிமா.
காயமே இது பையடான்னு தலைப்பு வைக்கலாம்னு நினைத்தேன் வெங்கட்:)
இன்னும் பாஸ்கெட் எல்லாம் சேர்த்திருந்தா கதை விரிவாக இருந்திருக்கும்.:)
உண்மையான வார்த்தை துரை.
ஆனால் பையின் நன்றி மா.பாரமே என்னை இழுக்க ஆரம்பித்ததனால் குறைத்துவிட்டேன்.
இப்போதெல்லாம்
லைட் தோள் பைதான்.:)
கடைசி படம் சூப்பரோ சூப்பர்....:) பையும் தான்...:))
நீங்க லிப்ஸ்டிக் போட்டுண்டதை நினைச்சு பார்த்தேன்...:)) நானும் இதுவரை இந்த சமாச்சாரங்கள்லாம் போட்டுண்டதே இல்லை....திருமணத்தில் உள்பட....
என்னவரும் எனக்கேத்த ஜோடி இந்த மேக்கப்பல்லாம் பிடிக்கவே பிடிக்காது...:))
பை சமாச்சாரங்கள் ஒன்றொன்றாக தொடரட்டும் அம்மா...:)
இந்த பை பை என்று எப்போ பார்த்தாலும் பையைப் பத்தியே
பேசிக்கொண்டு இருக்கிற பைத்தியம் பிடிச்ச எங்க வூட்டுக்கிசவிக்கு
எப்பதான் பை பைத்தியம் தெளியுமோ என
வருத்தமும் வேதனையும்
சோகமும் விரக்தியும்
கொண்டு தவிக்கும் இந்த கிழவன் முன்னே
இன்னுமொரு பை பற்றிய புராணமா ??
சிவா சிவா ? சாரி. சாரி.
நாராயணா நாராயணா
காஸ்ட்கோ, வால்மார்ட் அப்படின்னு மூணு தடவை போய்
மூணு மணி நேரம் சுத்தி முப்பது டாலர் வீதம் அஞ்சு
பை வாங்கின பிறகும்
இந்த கிழவி, இன்னொரு தரம் போயீ, கருப்பு கலர்லே இன்னும்
சின்னதா ஒரு ஹாண்ட் பாக கிடைக்கிறதா அப்படின்னு பார்க்கணும்
அப்படின்னு சொல்றா.
பக்கத்திலே மகா லக்ஷ்மி கோவிலுக்கு போவோம் என்கிறேன்.
புதுசா பை வாங்கிண்டு அப்படியே போவோம்.
தாயார் தான் புத்தி சொல்லணும்.
கொண்டு வந்த 500 டாலரும் ஹாண்ட் பாக்லேயே போய் விட்டது.
I have sent this
Telegram to SorgththilE irukkara Maamanar and Maamiyaar:
Please send 1000 dollars immediately for your daughter
சுப்பு தாத்தா.
www.subbthatha72.blogspot.com
//லிப்ஸ்டிக்யை டிஷ்யூ கர்சீஃப்பாலா துடைப்பார்கள்
////
பக்கத்திலே ஹஸ்பண்ட் இருந்தா
அவங்க சட்டை லேயும் துடைப்பாங்க.
திண்டுகல் சார்.
சுப்பு தாத்தா
சுப்பு சார் ,மீனாட்சி ஜி பை வாங்குவது அக்கம்பக்கத்துக் காரகளுக்கொ உறவினர்களுக்கோ பரிசாகக் கொடுக்க. எனக்குத் தெரியும்.:)
மஹாலக்ஷ்மி தாயாரே இப்போது பை கொண்டுபோவதாகத் தகவல்.
பக்தர்களுக்கு அப்படியே அள்ளித்தரத்தான்.:)கேட்டது கேட்டீர்கள் 2000 டாலராக் கேட்கக் கூடாதோ!!
கை பை விஷயங்கள் அருமை. மலரும் நினைவுகள் மிக அருமை.
பழைய படம் சூப்பர். பட்டிகாடாய் தெரியவில்லை. நாகரீக பெண்மணிதான்.
கீதா, உங்கள் முகமே பளிச்சென்றுதான் இருக்கும். இதில் வேண்டாத வம்பையெல்லாம் போடுவானேன்!! என்னிடம் கூட ஆலோவீரா லோஷன் இருக்கு. நல்ல பலன்.
நல்ல புன்னகை போதும் முக அழகுக்கு . இல்லையா ஆதி. வேற நகாசு வேலையெல்லாம் வேண்டாம்.
மனசுல கிராம்ம்தான் கோமதி. அப்புறமாத்தான் வேஷம் போட ஆரம்பித்த்து
நன்றி. பை பலகதைகள் சொல்லும்.!!!
Post a Comment