Blog Archive

Tuesday, July 23, 2013

தண்ணீராய்ச் செலவழிந்துவிட்ட நாட்கள்.!

ஆட்டத்திற்குக் காத்திருக்கும்  நாற்காலிகள்!
முகர்ந்து போ என்றழைக்கும் சம்பங்கி மலர்கள்
மழைக்கு ஒதுங்கும் காகங்கள்
வண்ண வண்ண மலர்கள் வாசனை மலர்கள் சாய்ந்து படிக்க படுக்க நாற்காலிகள் இதமாக வருடும் காற்று. வேறென்ன வேண்டும்?
கரையைத் தாண்டித் தென்னையைத் தொடவும் முயற்சித்தன அலைகள்.
கத்தும் கடலோசை சற்றே வந்து காதை நிரப்பும் இடம்   ..உணவு விடுதிதூரத்தில் தெரிவது கடற்கரைக் கோவில்
பொன்னைக்கண்ட பெண்ணைப் போல மண்ணை அள்ளவா இந்த ஆட்டம்?
பச்சையா நீலமா,கறுப்பா, பழுப்பா  என்னவண்ணம் இந்த நீர்?
அக்கரைப் பச்சை:)
நுரையும் மணலும் போட்டியிட்டன. வென்றது அலைகள் தான்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படங்களுக்கு கருத்துகளும் அருமை... வாழ்த்துக்கள் அம்மா...

சாந்தி மாரியப்பன் said...

ஹை.. மஹாபலிபுரம்.

Geetha Sambasivam said...

எந்த ஊர்?? படங்கள் எல்லாம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.இடத்தின் மஹிமை அப்படி.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே சாரல்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.நம்ம மஹாபலிபுரம் தான். அங்கே ஜி ஆர் டி ரிஸார்ட் இருக்கிறது.குழந்தைகளுக்காக இரண்டு நாட்கள் போனோம்.

Geetha Sambasivam said...

ஓஹோ, மஹாபலிபுரம் நாற்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்தது! :)))) அப்புறமாப் பலமுறை போக நினைச்சுப் போகவே இல்லை. :))))

கோமதி அரசு said...

குழந்தைகளுடன் களித்த நாட்கள் சிறந்த தருணங்கள் அல்லவா!
படங்களும், கருத்துக்களும் மிக அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்கள் அழகு. கருத்துக்கள அருமை. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்.... அத்தனையும் ரசித்தேன்...

ஸ்ரீராம். said...

பிரமாதமான, பிரம்மாண்டமான படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. அதேதான். ஊர் இப்ப கிராமம் இல்லை. உளிச் சத்தம் அவ்வளவாக இல்லை. மெஷினால் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி.
பேரன் நலமாக இருக்கிறான் என்று நம்புகிறேன்.
பொழுது இனிமையாகக் கழியட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். கடலே பிரம்மாண்டம் தானே.

மாதேவி said...

உங்கள் படங்கள் பழைய நினைவுகளை எழுப்பிவிட்டன. இரண்டுதடவை போயிருக்கின்றேன்.

எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத இடம்.

துளசி கோபால் said...

அழகு அள்ளிக்கிட்டுப் போகுதே!!!!