Blog Archive

Saturday, April 20, 2013

வசுந்தரா---- சுதாமா (குசேலர்) மனைவியின் பெருந்தன்மை.

Add caption
Add caption
அவல்  கொள்ளும்  கொடைவள்ளல்

 தொலைக்காட்சியில் ஸ்ரீகிருஷ்ணா  என்று ஒரு இந்தி  தொடர்  மாலை 4 மணிக்கு வருகிறது.

தெரிந்த பிடித்த கதை.
கிருஷ்ண  மந்திரம் ஒன்றே தெரிந்த குசேலனின் கதை.
ஒரு சுயமரியாதையை உயிருக்கும் மேலாக மதிக்கும் நல்ல மனிதனர். அவர் குடும்பம் நம்பவொண்ணா வறுமையில் வாடுகிறது. அவர் மனைவி வசுந்தரா  கண்வன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு அளவில்லை.
அந்தக் கால பிராமணதர்மப்படி
குசேலசுதாமா ஒவ்வொரு நாளும் ஐந்து வீடுகளில்
பிக்ஷை எடுத்து  அதையே குழந்தைகளுக்கும்
மனைவிக்கும் பகிர்ந்து    கொடுக்கும் வழக்கம் தினசரி  நடக்கும்.

அதையே நல்ல  உணவாக சமைத்துப் பகிர்ந்து
கொடுப்பார் வசுந்தரா.சுசீலை என்று பெயர்க்காரணமும் அவளுக்கு உண்டு..
அவ்வளவு சீலமான குணத்தைக் கொண்டவள்.

கணவனின் பக்தியையும்  சம்சார பந்தத்தில்  அவ்வளவு 
ஈடுபாடு காண்பிக்காததையும்  அவள் மதித்தாலும் குழந்தைகள் பசியில் வாடுவதைப் பொறுக்க முடியவில்லை.

சுதாமவின் தொழன் ஒருவர் அந்த ஊர் அரசனைப் புகழ்ந்துபாடிப்
பிழைக்கிறார்.
அவர் சுதாமிவின் வறுமையைப் போக்க ஏண்ணி அரசனிடம்
அழைத்துப் போக, அரசவையில் ஸ்ரீகிருஷ்ண  துதி பாடுகிறார் சுதாமா.
மது போதையில் இருந்த அரசன் அவரை விரட்டி அடிக்கிறான்.
உள்ளமும்   உடலும் நொந்து வீட்டுக்கு வந்து அரற்றும் கணவனைத் தேற்றுகிறாள்.

அடுத்தநாள்  கணவனிடம் இதமாக எடுத்துச் சொல்லுகிறாள்
''நீங்கள்  உங்கள் நண்பர் கிருஷ்ணனைப் பார்த்துவரலாமே.
அவர் உங்களைப் பார்த்ததுமே புரிந்து  கொள்வார்''
என்று சுதாமவைப் பலவழியில் இத உபதேசம் செய்து பக்கத்து விட்டில்  கடனாக  வாங்கின  அவலைச் சுத்தம் செய்து
அவர் கையில் கொடுக்கிறார்.
பிறகு நடந்தது அனைவருக்கும்   தெரிந்ததே.

நடுவில் நடப்பதைத்தான்  இன்று  பதிவிட வந்தேன்.
குசேலரும்  கிருஷ்ணரைப் பார்த்து
மகிழ்ந்து
கண்ணீர்விட்டு நெகிழ்ந்து அவன் உபசாரத்தில்திளைது அவலைக் கொடுக்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணனும் அதை உண்டபிறகு,நண்பனின் கால்களைப் பிடித்தவாறு

அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரிக்கிறார்.

நட்பின் பரிசாகச் சுதாமவுக்குத் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேகும்போது சுதாம  மறுக்கிறார்.


தன் குடும்பம் களிப்புடனும்,
நிம்மதியாலவும்  சங்கடமில்லாமல் இருப்பதாகவும் மனதாரச் சொல்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணனுக்கு உண்மை நிலை தெரியும்.

பக்கத்தில் லக்ஷ்மி தேவியான ருக்மணியும்


குசேலசுதாமாவுக்கு  ஏதாவது செய்யவேண்டும்  என்று தவிக்கிறாள்.

கண்ணன் அவளைச் சமாதானப் படுத்தி,  குசேலரின் வாய்வழியாக வந்த வார்த்தைகளைத் தான் மெய்ப்பிப்பதாகச் சொல்லி
தேவசிற்பி விஸ்வகர்மாவை  வரவழைக்கிறார்.
அவரிடம்
சுதாமாவின் விவரங்களைச் சொல்லி
உடனே வ்ரிந்தாபுரிக்குச் சென்று  ஒரு மாளிகையை அமைக்கும்படி 
கேட்டுக் கொள்கிறார்.
அவரும் உடனே வசுந்தரா வீட்டில் பிரத்தியட்சமாகிறார். கிருஷ்ணரின் கட்டளையை நிறைவேற்றத் தான்    வந்திருப்பதாகச் சொல்கிறார்.

பிரமிப்புடன் கேட்ட வசுந்தரா,
தான் அந்த உதவியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்கிறாள்.
விஸ்வகர்மா சுற்றும்  முற்றும் பார்த்து விசனப்படுகிறார்.
அவரிடம் வசுந்தரா தெளிவாகத் தன் நிலையை விளக்குகிறாள்.

இந்த இருபது வருடங்களாக   இந்தக் கிராமத்தில் உள்ள  அத்தனை மக்களும் எங்கள் ஒரு வேளைபோஜனத்துக்காவது வழிவகுத்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது உங்கள் கருணையால் எங்கள் வீடு மட்டும் கிருஷ்ணரின் த்வாரகா போலக்   காட்சி  அளித்தால்
அது  தர்மமாகாது என்று சொல்லி நிறுத்துகிறாள்.

விஸ்வகர்மா,   வறுமையிலும் ஒளிவிடும் அவள் கருணையையும் நேர்மையையும் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ணரிடம் விண்ணப்பிக்க

அவரும் வசுந்தராவிம்  தயாள உள்ளத்தை மெச்சி அவள் விருப்பபடியே பிருந்தாபுரி வீடுகள் அத்தனையும் மாளிகையாக வேண்டும் என்று கட்டளை இடுகிறார்.

வெளியே   வந்து அந்த ஊர்மக்கள்
அனைவரிடமும் வசுந்தராவின் பெருமையைச் சொல்கிறார்  விஸ்வகர்மா!
அவர் பேசின சில நொடிகளில்

அந்த ஊரே த்வாரகா புரி போல  ஒளிர்கிறது.
மக்களின்  இன்பத்துக்கு அளவில்லை.
வசுந்தராவின் கருணையை வாய்விட்டு மெச்சுகிறார்கள்.

ருக்மணி தேவி தன்பங்குக்கு  வீடுகளில் செல்வம் செழிக்கச் செய்கிறாள்.
இந்தக் காட்சி நேற்று நான் பார்த்தது.
இனி சுதாமா வந்து வியக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்.:)

அன்பர்கள் பலருக்கு இந்தக் கதை தெரிந்திருக்கலாம்
இருந்தும் நான் அறிந்தது இப்போதுதான்.
அதை உங்களுடன்  பகிர்ந்து கொண்டேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

வெங்கட் நாகராஜ் said...

தெரியாத கதை.

நம் ஊரில் நாம் கேட்பதற்கும் வடக்கே இருப்பவர்கள் சொல்லும் கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள்....

அது போலவே இதுவும் என நினைக்கிறேன்.

நல்ல பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

கோமதி அரசு said...

இங்கு உள்ள குசேலர் கதையில் கிருஷ்ணர் அவல் சாப்பிட, சாப்பிட குசேலர் வீடு செழிப்பு பெறுவதும்,ருக்மணி ஒரு கட்டத்தில் போதும் என்று கிருஷ்ணரை தடுப்பதும் தான் இருக்கும். இது நல்ல கதையாக இருக்கிறது குசேலர் மனைவியால் அந்த ஊரே நலம் ,வளம் அடைவது மிகுந்த மகிழ்ச்சி.
எந்த தொலைக்காட்சி என்று சொல்லவில்லையே!


//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.//

மழை பெய்யட்டும்.
பகிர்வுக்கு நன்றி.


சீனு said...

இந்தக் காட்சியை கற்பனை செய்து பார்க்கிறேன் துவாரகா போல் என்ன ஒரு ஒளி வெள்ளம்... அருமை

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட். அவர்கள் வழியில் கதைகள் வேறுபடுகின்றன.
இந்தக் கதையில் கலந்த நற்சிந்தனை என்னைக் கவர்ந்தது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி.
மூன்றாவது பிடி அவலில் கையைத் தடுத்துவிடுவாள் ருக்மணி.

எனக்குத் தோன்றும் லக்ஷ்மியிடம் இருக்கும் செல்வம் வற்றுமா என்ன என்று.
இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணியிலிருந்து ஐந்துவரை காட்டப் படுகிறது.
வாழ்க வளமுடன் .

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நமக்கும் அந்த ஒளிவெள்ளம் வேண்டும் பாலகிருஷ்ணன். வருகைக்கு மிக நன்றி.

துளசி கோபால் said...

ஆஹா..... புதுக்கதை! நல்லா இருக்குப்பா!!!

நானும் நேத்து ஸ்ரீராம்நவமி உபன்யாசத்தில் ஒரு புதுக் கதை பிடிச்சுக்கிட்டு வந்தேன்.ஒருநாள் பதிவா எழுதணும்:-)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

தெரிந்த கதையை ஓர் வித்யாசமான முறையில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.//

ஸ்ரீராம். said...

சுசீலையின் பெருந்தன்மை சிலிர்க்க வைக்கிறது.

'ஒரு பிடி அவல் தின்றானே' 'ஒரு பிடி அவல் தின்றானே' என்று மூன்றாவது பிடிக்குப் பிறகு கண்ணனைச் சாப்பிடவிடாமல் அவன் மனைவி தடுத்து விடுவாள். அதையும் கண்ணன் அன்பினால் சாப்பிட்டு விட்டால் கண்ணனே குசேலனின் அடிமையாகி விடுவானே என்று!

என்னுடன் மூன்றாம் நான்காம் வகுப்புகளில் சுதாமன் என்ற நண்பன் படித்தான். எங்கிருக்கிறானோ? ஒரு பிடி அவல் சாப்பிட்டுப் பார்க்கவா? :)

Geetha Sambasivam said...

வட இந்தியாவில் பிரபலமான கதை என்பதோடு அல்லாமல் சுதாமாபுரிக்குப் போயிட்டும் வந்தோம், போர்பந்தர் தான் சுதாமாபுரி. அங்கே போய்ப் பார்த்துட்டும் வந்திருக்கோம். தொலைக்காட்சித் தொடர் வரது தெரியாது. வந்தாலும் அந்த நேரம் மின்சாரம் இருக்காது. :))))

வல்லிசிம்ஹன் said...

கோமதிதொடர் ஒளிபரப்பாகும்சானல் ஸ்டார் உத்சவ்.
சொல்ல மறந்துவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,இந்தக் கொடுமைக்கார மாமியார் மருமகள் சீரியல்கள் பார்ப்பதைவிட
இந்த மஹாபாரதம்,ராமாயணம் ,கிருஷ்ணா,மஹாதேவ் சீரியல்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது.
அதிலும் சிவனாக நடிப்பவர் முகத்தில் அப்படியொரு சாந்தம்.

வல்லிசிம்ஹன் said...

தெரிந்த கதையையே தொலைக்காட்சியில் வேறுவிதமான முறையில் பார்க்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது கோபு சார்.என்னுடையமொழி வளர்ச்சியும் பிடித்திருக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

ஆஆ! அதெப்படி.
அவர் கொண்டுவந்து கொடுத்தால் தான் நீங்கள் அவல் சாப்பிடமுடியும் ஸ்ரீராம். பேரும் ராமனாப் போச்சு. வேணும்னால் குகனைக் கிழங்குகள் கொண்டு வரச் சொல்லிச் சாப்பிட்டுப் பார்க்கலாம்.
ஆனால் குகன் ஏற்கனவே ராஜா. ம்ம். வேற சினாரியோ யோசிக்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

சுதாமா புரியா ,,,கீதா. அந்த ஊரெல்லாம் கற்பனையில் கூடப் பார்த்ததில்லை:)

உங்களுக்கு இதெல்லாம் நிறையத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

மாதேவி said...

"ஊரே துவாரகா புரியாக ஒளிர்கிறது"
கதை முடிவு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

துளசி கோபால் said...

வல்லி,

இக்கடச் சூடு:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/17.html

அப்பாதுரை said...

அறியாத விவரம். அவல் சாப்பிடும் போது தடுத்த பரவலான கதை தெரியும்.

ராமாவதாரத்துல அணிலுக்குப் பட்ட கடன்னும் ஒரு கதை கேட்டிருக்கேன். அணிலை சுதாமராக்கி ஏழ்மைப்படுத்தி அத்தனை குழந்தைகளைப் பாடுபடுத்தி அதற்கப்புறம் அருளுவானேன்னு கேட்டு முறைப்பும் பின் மண்டையில் லேசான அடியும் வாங்கியிருக்கிறேன்.

(ருக்மிணி மகாலட்சுமி அம்சம்னா மத்த மனைவிங்க?)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நம்ம ஊர்களுக்கும் அருள் வெள்ளம் வரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அட, துளசி

இதை எப்படி மறந்தேன். உங்கள் குஜராத் டூர் இல்லையா இது. சாரிம்மா. பார்த்ததே இல்லைன்னு சொல்லிட்டேனே.
தான்கீஸ்பா. மீண்டும் படித்தேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை ஜி.

இதென்ன புதுக்கதை. அணிலுக்கு நல்லதுதானே செய்வார்.
சபிக்கவாவது. சுதாமவோட பிராரப்தகர்மாவுல அணிலுக்கு இடம் கிடையாது:)

ருக்மிணி மகாலட்சுமியின் அம்சம்.
சத்ய பாமா பூமாதேவியின் அம்சம்(எனக்குத் தெரிந்தவரை)
நப்பின்னை நீளா தேவி.
பாமா கோபப் படுவது பார்த்தால் கொஞ்சம் யோசனை வருகிறது:)

இராஜராஜேஸ்வரி said...

கதையில் கலந்த நற்சிந்தனை
மனதை நிறைத்தது ..

Anonymous said...

பிற்பாதியில் வந்த கதையை இன்றுதான் கேட்கிறேன். வெகு அற்புதம்.

RajalakshmiParamasivam said...

வலைச்சரம் மூலமாக இங்கு வந்தேன்.
வந்ததில் பார்த்தால் குசேலன் குபேரன் ஆன கதையை படித்தேன். சுசிலையின் இந்த அரிய குணம் உங்கள் தளம் மூலம் அறிந்து கொண்டேன்.
மிக்க மகிழ்ச்சி.உங்களத் தொடரவும் செய்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திருமதி பரமசிவம்,
முதல் வருகைக்கு நன்றி.
நாம் சுசீலை என்போம்.அங்கே வசுந்தரா என்கிறார்கள்.
கதையும் மாறுகிறது. ஆனால் அழகாக இருக்கிறது.

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE