இந்தக் கணினி யில் பதிவு போடுவது சுலபம். போட்ட பதிவைப் பார்ப்பது கஷ்டம்.
பின்னூட்டங்களைப் பிரசுரிப்பது சுலபம். அதற்குப் பதில் எழுதுவது கஷ்டம் சிரமம்.
எப்படியோ தட்டிமுட்டிச் சமாளிக்கிறேன்.
ஆதலால் இந்தப் பதிவு வாழ்த்தியவர்களுக்கு மறு மொய் எழுதவேண்டி ஒரு பதிவு போட வேண்டியதாப் போச்சு. மன்னிக்கணும்.
அன்பு சுப்பு சார் மீனாக்ஷி தம்பதியருக்கு வணக்கம். வாழ்த்துகளுக்க்கு நன்றி. என் சிங்கமும் உங்கள் வயதுதான்.:) 72.
@அன்பு கீதா சாம்ம்பசிவம் மிக மிக நன்றி. இறையருள் நம்மை எப்போதும் காக்கட்டும்.
அன்பு வெங்கட்,ஆதி இருவருக்கும் எங்கள் ஆசிகள்.
@அன்பு அப்பாதுரை மிக நன்றி.
@ அன்பு மீனாக்ஷி கண்டு காதல் காணாமல் காதல் என்பது போல நம் நட்பு காணாத நட்பு. எங்க்கே இருக்கிறீர்கள் என்று கூடத் தெரியாது
இருந்தும் அன்புக்கு ஏது கட்டுப்பாடு.நன்றிமா.
@,அன்பு திரு கருணாகரன் உங்களுக்கும் எங்கள் ஆசிகள்.
துளசிமா ப்ளாகர் படுத்தல் என்று சொல்லவில்லை. இந்தக் கணினி என் ப்ளாகைத்தான் திறக்க மறுக்கிறது.
மருமகள் முயற்சியில் சிலசமயம் பதில் போட முடிகிறது.நன்றிமா.
அன்பு ஹுசைனம்மா உங்களுடன் இன்னும் நான் பேசவில்லை.
ஸாரி.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
அன்பு இராஜராஜேஸ்வரி மிக மிக நன்றிமா
வேறு பெயர்கள் விட்டுப் போயிருந்தால் தயவு செய்து மன்னிக்கணும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
அருமையான திருமணப் படம்.
பகிர்வுக்கு நன்றி.
this webpage is not availablனு ஒரு பக்கம் சொல்லிட்டே இன்னொரு பக்கம் பதிவையும் காட்டிட்டு இருக்கு. இந்தப்பின்னூட்டம் போகுமானு தெரியலை! :)))) இப்போக் கொஞ்ச நாட்களா எந்தப் பதிவுக்குப் போனாலும் இப்படித்தான் வருது! :))))காலையிலே இருந்து மொபைல் எல்லா சர்விசும் வேலை செய்யலை! :))))
நன்றிக்கு நன்றி.
பதில்களில் என் பெயர் விட்டுப் போனது வருத்தம்தான்! :( உங்களின் என் பங்கு ஆசீர்வாதம் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை! :)))
ஆஹா, பின்னூட்டப் பதிலுக்கு பதில் சொல்ல பதிவா? அப்ப இதுக்கும் பதிலாக ஒரு பதிவு வருமோ?
இங்க வந்ததிலிருந்து ரொம்ப ஃபிரீயா, ரிலாக்ஸா இருக்கீங்க போல!! தினம் ஒரு பதிவு வருதே :-))) இங்கயே செட்டிலாகிடுங்க பேசாம!
//உங்களுடன் இன்னும் நான் பேசவில்லை. ஸாரி.//
நானும் ஸாரி!!
படம் பொக்கிஷம். அருமை. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா:)!
ஆஹா வந்திருச்சுனு பாட்டுப் பாட ஆசை.:)
இதுவரை உபயோகப் படுத்தாத பட்டன்களையெல்லாம்
தட்டியாச்சு.
அன்பு ஸ்ரீராமுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் கோடி கோடி.
இப்ப சரியா ஸ்ரீராம்!!:)
நன்றி கோமதி.
கீதாம்மா, இங்க சில பதிவுகள் திறக்கிறது. சிலசமயம் ப்ளாகர் பிரச்சினை என்று வருகிறது.
அழகியில் தட்டச்சி காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
மொபைல் வேலை செய்யலியா.குருவிகளோட சூழ்ச்சியா இருக்குமோ/.:)
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா :-)
ஹுசைனம்மா உங்களிடம் பேசினது மிக மகிழ்ச்சி. காலையில் சீக்கிரம் கண் விழித்து விடுகிற படியால்
எதையாவது எழுதத் தோன்றுகிறது. அதற்கேற்றார்ப் போல் நிகழ்ச்சிகள். படங்கள்.
மேலும் நம் வீட்டைப் போல இங்கே பொறுப்பு கிடையாது.
அது ஒரு வரம்.;)
நன்றி ராமலக்ஷ்மி. பதிவில் பதிந்திருப்பது ஒரு விதத்தில் நன்மையாகப் போனது
கருப்பு வெள்ளையில் அற்புதமான படம்....
உங்களது ஆசிகளுக்கு மிக்க நன்றிம்மா...
//அன்பு ஸ்ரீராமுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் கோடி கோடி.
இப்ப சரியா ஸ்ரீராம்!!:)//
ஆஹாஹா..... நன்றி... நன்றி.
அன்பு திரு சீனு,மிக மிக நன்றி. எங்கள்
ஆசிகள் உங்களைத் தேடி வந்திருக்கும்.
அழகான திருமணப் படம். ஆசீர்வாதங்களுக்கு நன்றிம்மா.
அருமையான படம் வாழ்த்துகள்.
Post a Comment