நெருப்பென நின்ற நெடுமாலே |
தந்தையின் கையில் குழந்தை வாசுதேவன் |
மற்றொருத்தி மகனாக வளர்ந்த மாதவன் |
பல்லாண்டு பாடும் கோதையின் தந்தை பெரியாழ்வார் |
தேவகி வசுதேவன் மகனே போற்றி |
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
**************************************************
ஸ்ரீகண்ணனின் திருமுக மண்டலத்தில் லயித்த ஆண்டாள்
தன் திருவாய் திறந்த கண்ணனைப் போற்றத்துவங்குகிறாள்.
கண்ணா நீ எப்பேர்ப்பட்டவன். மாயன் அல்லவா.
கம்சன் கண்ணை மறைத்து தேவகி வசுதேவருக்கு மகவாய்ப்
பிறந்து அவர்களுக்கு மட்டட்ட மகிழ்ச்சி கொடுத்தாய்!!
வசுதேவரின் மார்பில் அணைந்து கொண்டு சின்னஞ்சிறு குழந்தையாக
ஆய்ப்பாடி வந்தடைந்தாய்.
யமுனை காலை வருட ஆதிசேஷன் குடைபிடிக்க வந்த உன் பெருமையை
என்னவென்று சொல்ல!
செருக்கு மிகுந்த கம்சனின் நெஞ்சில் பயம் எனும் நெருப்பை எப்பொழுதும் எரிய
வைத்தாய்.
உன்னைதேடி உன் அருகில் வந்தோம்.
எங்களுக்கு வேண்டியது உன் அருள், அதைப் பறையாகப் பரிசாகக்
கொடுப்பாய். அப்படிக் கொடுப்பாயானால் திருவுக்கு நிகரான பாகவதர்களுக்குச்
சேவை செய்வோம். உன்னைப் பாடுவோம்.
எங்கள் வருத்தமும் தீரும். இது போதும் எங்களுக்கு. கொடுத்து நீயும் மகிழ்வாய்
கண்ணா. என்று பூர்த்தி செய்கிறாள் நம் ஆண்டாள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
20 comments:
இதுவும் என் ஃபேவரிட் பாட்டுதான்.
எல்லோர் வருத்தமும் தீரணுமுன்னு 'அவள்' மூலம் நானும் கேட்டுக் கொள்கின்றேன்.
வசுதேவன் கையில் வாசுதேவன் சூப்பர்!!!!!
இனிய பாடல். எளிய விளக்கம்.
இரண்டாம் படம் எனக்கும் மிகப் பிடித்தது.
நன்றி வல்லிம்மா.
அன்பு துளசிமா.
அவள் எப்போதும் உங்கள் பக்கம்தான்
அவள் சொன்னால் அவள் நாயகனும் உங்கள் பக்கமே.துளசிக்கில்லாத
அருளா.
எப்பொழுதும் நெகிழ வைக்கும் காட்சி.
தந்தையின் கையில் மகன்.
இந்த அணைப்பு சிறுவயதில் கிடைக்கும்போது
என்ன ஒரு இதம்.வசுதேவர் முகத்தில்தான்
எத்தனை கம்பீரம் ,தியாகம்.
ராமலக்ஷ்மி ,இது படமாயிருந்தாலும் பேசுகிறதே.!
பாடல் விளக்கமும், அதற்கு தகுந்த அழகிய படங்களும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தருகிறது.
திருப்பாவை என்றதுமே எனக்கு நினைவுக்கு வருவது ‘ஒருத்தி மகனாய்’ தான். என்னமோ தெரியவில்லை சிறு வயது முதல் இந்த பாசுரத்தின் மேல அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு.
மிக அழகான பாசுரம் அருமையான விளக்கம் மேடம்.
அழகிய படங்களுடன் அருமையான பாடல் வரிகள்.
அருமையான விளக்கம். அரிய படங்கள். அசத்தறீங்க வல்லிம்மா.
மிக எளிய பாடல் இல்லையா கோமதி.பொருள் சொவது பெரிய விஷயம் இல்லை. உட்பொருள் தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி மா.
வரணும் ராம்வி.
நிறையப் பேருக்குத் தெரிந்த மிகப் பிரசித்தியான்பாடல் .எல்லப் பிரவசனக்களிலும் மன்றங்களிலும் அடிக்கடி கேட்போம். உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்பது மகிழ்ச்சி.நன்றி மா.
நன்றி சசி கலா. வருகைக்கும் கருத்துக்கும்.
மிக மிக நன்றி சாரல்.
திருப்பாவையில் மகுடம் இந்தப் பாடல்.
உங்கள் விளக்கம் அருமை வல்லி!
துளசி டீச்சரின் பிரார்த்தனையை வழி மொழிகிறேன்.
படங்கள் அனைத்தும் அருமை.
திருமுக மண்டலத்தில் என்பதை ஒருகணம் தி மு க மண்டலத்தில் என்று படித்து விட்டேன்! :)))
வழக்கம் போல படங்கள் யாவும் அருமை வல்லிம்மா.
அன்பு ரஞ்சனி,
கண்ணனை அவன் தோற்ற நாளிலிருந்து கம்ஸன் மறைவு வரை எட்டேவரிகளில் சொல்லிப் பிரார்த்தனையையும் முன் வைக்கிறாள்.
மிக மிக நன்றிமா.அவள் நம் எல்லோரையும் நன்கே இன்பன் கொடுத்து ஆதரிப்பாள்.
நன்றி அமுதா கிருஷ்ணா.எல்லாம் கூகிளார் கொடுத்தவைதான்.
வரணும் ஸ்ரீராம். வேற மாதிரி பிரித்துப் படிக்காமல் இருந்தீர்களே;)
கண் டெஸ்ட் பண்ணனுமா.கவனமாக இருக்கவும். இல்லயே உங்க பதிவில் தப்பு இல்லையே!!!
நன்றி மா.
அழகான விளக்கம் அம்மா...
Mika NanRi dear Dhanabalan.
Post a Comment