Blog Archive

Saturday, January 10, 2015

மாலே மணிவண்ணா

கோல விளக்கே
வெற்றி முழக்கம் செய்த பாஞ்சஜன்யம்   வேண்டும்
உன் சங்கமும் வேண்டும் கண்ணா
ஆலின் இலையாய்   விதானமும் வேண்டும்
உன் அருள் பாடவேண்டும்
கருடக் கொடி வேண்டும்
அன்புக்கடலான   ஆண்டாள் நாச்சியார்
மாலோடு மகிழ்ந்து இருக்கும் வேளையில் நம்மையும் அருளட்டும்
************************************************************************
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
******************************************************

கோதைக்குக் கண்ணனிடம் எல்லாம்  சொல்லிவிட வேண்டும் என்றுதான் விருப்பம்.
சிங்காதனத்துக்கு  வந்துவிட்டான். உட்கார்ந்து கனிவாக  உங்களுக்கு என்ன வேண்டும் என்றும் கேட்டுவிட்டான். நீதான் வேண்டும் என்று சொல்வதைச் சிறிய சிறிய வழிகளில் சொல்கிறாள்.
எம்பெருமானிடம் வீடு கொடு,நகை கொடு என்று அப்புறமாகக் கேட்டுக்கொள்ளலாம். முதலில் அவனைப் பாடத் தேவையான பொருட்களை
வாங்கிக் கொள்ளலாம் என்று பட்டியல் இடுகிறாள் .


கண்ணா,திருமாலே,  மணிவண்ணனே நாங்கள் சொல்வதைக் கேட்டு அருள் செய்வாய்  என்கிறாள். அப்படியே செய்கிறேன் என்று கண்ணனும் வாக்களிக்கிறான்.


மார்கழி  நீராட்டம் முடிந்து நாங்கள் வீதியில்  உன்பெருமைகளைப் பாடிவரவேண்டும்.

அதற்கு  ஒரு விதானம் வேண்டும்.
சரி கொடுத்துவிட்டேன்.

உன் கருடக் கொடி வேண்டும். நிறையக் கொடிகள் வேண்டும்.
கொடுத்தேன்
உன் சங்கம்,பாஞ்சஜன்யம் வேண்டும்,உன் நாமம் சொல்லி நாங்கள்
முழங்க வேண்டுமே. இதோ எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று போதாது. எங்கள் அனைவருக்கும் வேண்டும் என்கிறாள்.

அவனுடைய செல்லப் பெண்டாட்டி ஆகப் போகிறாளே. மறுப்பானா!
அதையும் அருளுகிறான்.

  அழகான விளக்குகள் வேண்டு,மே  என்று கேட்க
அவைகளையும் வழங்குகிறான்.  உன் அருளும் வேண்டும்  ஹே  வடபத்ர சாயி,ஆலின் இலையாய்!!!  என்று பூர்த்தி செய்கிறாள்.

மனமெல்லாம் பூரிக்கிறதே  கண்ணா கொடைவள்ளலே எங்களையும் சேர்த்துக் கொள்
உன் அடிகளில் சரணம்.
உன் அருள் வெள்ளத்தில்.


சாலப் பெரும் பறை
சொல் ஆழி வெண் சங்கே 
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
விதானம் 

15 comments:

கவியாழி said...


மனமெல்லாம் பூரிக்கிறதே கண்ணா கொடைவள்ளலே எங்களையும் சேர்த்துக் கொள்//
அருமை.நானும் வேண்டிக்கொள்கிறேன்

ஸ்ரீராம். said...


கண்ணா.. உன்னை உணரும் அறிவை எனக்குக் கொடு என்று வேண்டத் தோன்றுகிறது. காலை 'மாலே மணி வண்ணா' கேட்டேன்.கு.வராளி ராகம்! (ஹிஹி.... கண்டு பிடிச்சிட்டேனாம்!)

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு கண்ணதாசன்.
என் தமிழறிவு மிகவும் குறைவு. கண்ணன் மேல் பாசம் பெரியது:)
அதையும் கவனிக்க நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. கண்ணன் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் ஸ்ரீராம். பந்துவராளி தெரியும். புன்னாக வராளி தெரியும். அதென்ன கு வரளி?
மன்னிக்கணும் ஞான சூன்யம் சங்கீதத்தில்.பதில் வேணும் சார்:)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

பெருமாள் திருமால் இன்றைய உலகில் எல்லோருக்கும் மாலாய் அவதாரம் எடுத்துருக்கார். மால் என்று ஒருதரமாவது வாயால் சொல்லாதோர் இப்பூவுலகில் இல்லவே இல்லை.

எந்த ஊருக்குப்போனாலும் மால் இருக்கு:-)))) மாலே மால்!!!

அப்புறம் சிலர் பாடும்போது கொடியே விதானமேன்னு பாடாம கொடிய விதானமேன்னு பாடும்போது எனக்கு ஐயோன்னு இருக்கும்.

சிம்பிள் & ஸ்வீட் பதிவு.

ஸ்வீட் என்றதும்............ நாளை நாளை நாளை:-))))

RAMA RAVI (RAMVI) said...

மாலே மணி வண்ணா-- விளக்கம் படித்து மனமேல்லாம் பூரித்தது. பதிவுக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

மனமெல்லாம் பூரிக்கிறதே கண்ணா கொடைவள்ளலே எங்களையும் சேர்த்துக் கொள்//

எங்களையும் சேர்த்துக் கொண்டு எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள நாளும் வேண்டும் வல்லி அக்காவிற்கு நன்றி.
பாடல் பகிர்வும், கருத்தும் அருமை.

ஸ்ரீராம். said...

கு. வராளி = குந்தலவராளி! போகீந்திர சாயினம் பாடலும் பாலமுரளியின் இந்த ராகத் தில்லானாவும் உடனே நினைவுக்கு வந்து விடும்! [பதில் சொன்னதால் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னதை நம்பி விட்டேன் என்று பொருளல்ல! :))) ]

1) பாலமுரளி தில்லானா

2) போகீந்திர சாயினம்

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2015/01/6.html

முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான விளக்கம் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி தனபாலன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ,எனக்கும் ராகங்கள் தெரியாதுமா..நல்ல இசை பிடிக்கும் அவ்வளவுதான். மீள் பதிவுமா.