Add caption |
வந்தேன்
வந்தேன் மீண்டும் நானே வந்தேன்னு ஒரு பதிவு போடணும்னு நினைத்தேன்.
ஏதாவது
யோசனை தோணினால் தானே எழுத.
நல்லதாப்
போச்சு எல்லார் சொல்கிற மாதிரி நாமும் உண்மையாவே எழுத்தாளி ஆகிட்டோம் போலிருக்கு. இந்த மெண்டல் ப்ளாக் வந்திடுத்து.
மெண்டல்
ப்ளாக் வந்தால் கட்டாயம் நாம் எழுத்தாளர் என்பது லாஜிக்.
அதாவது
தலைவலின்னு ஒண்ணு வந்தால் தலை இருக்கு என்பது நிதர்சனம்,
ஒண்ணு
இருக்கு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அது இல்லாமல் மேல ஒண்ணும் நடக்காது என்று சொல்லணும்.
அதே
போல முதிய பதிவாளர் என்றால் அப்பப்போ உணர்ச்சிகரமா ஏதாவது எழுதவேண்டும்.
வர்த்தி
ஏத்தவேணும். அதாவது கொசுவர்த்தி.
கவிதை
எழுதலாம்.அநேகமா அது உரைநடைல இருக்கணும்.
ஐயோ
ஏன் இந்த அம்மா இப்படி வதைக்கிறாங்கன்னு நாலு பேராவது நினைக்கணும்.
பந்தபாசம்
,படிக்காத மேதை, கணவனே கண் கண்ட தெய்வம் ,பொன்னித் திருநாள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்இந்த மாதிரி புதுப் படங்களுக்கு ரெவ்யூ எழுதலாம். பழசுக்கு எப்பவும் மதிப்பு இல்லையா.
இதெல்லாம்
இந்த துபாய்க்கு வந்த பிறகு எனக்குத் தோன்றிய எண்ணங்க இங்க வீட்டுக்குள்ள குளிருகிறது.
வெளியில்
நல்லா இருக்கிறது.
வெளி
வராந்தாவை சிங்கம் குத்தகை எடுத்து விட்டதால், வீட்டுக்குள்ள ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு, என்னடா எனக்கு வந்த சோதனைன்னு யோசித்தேன்.
பாப்பா
தூங்கின பிறகு வாங்கி வைத்திருக்கும் குங்குமம்,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
உள்குளிர்
நம்மளை வெளில தள்ளினாலும், ஒத்துக் கொள்ளவில்லை.
நல்லவேளை
இந்த சமயம் பேத்தி,மருமகள் பிறந்த நாட்கள்,இவர்களது திருமண ஆண்டு நிறைவு எல்லாம் வருவதால் போர் அடிக்க சந்தர்ப்பம் இல்லை.
''
பாட்டி நீ இங்கயே இருக்கியா. நான் செய்யற கேக் செய்ய ஆளே இல்ல.(கற்பனை)
ஊ
இருக்கலாம்.
நீ
யேன் எப்பவும் தமிழ் பேசறே. இங்க்லிஷ் பேசு.
எனக்கு
இங்க்லிஸ்கஹ் வராதே
அப்போ
அரபி பேசு.
அஸ்ஸலாம்
அலைக்கும்
வாலேக்கும்
அஸ்ஸலாம்
இன்ஷா
அல்லா
அல்லா
மாலிக்
மாஷா
அல்லா.
அச்சோ
இதெல்லாம் விஷிங்க்.
என்று
விட்டு அதுவே எனக்குக் கற்றுத்தர ஆரம்பித்திருக்கிறது.
பாரபி
டால் வாங்கப் போறியா
என்னது
ஓஓஓஓஓஓஓ
சாரி பார்பி
ம்
வாங்கித்தரேன்.
நிறைய
பொம்மை இருக்கு . நாம் யாருக்காவது கொடுத்துடலாம். இல்ல பாட்டி. ஆமாம் செல்லம்.
இந்தப்
பூனை அத்தை வாங்கிக் கொடுத்தது.
இது
டெல்லிப் பாட்டி
இது
அப்பா.
இது
என் ஃப்ரண்ட்.
இந்த
இரண்டும் மை கிட்ஸ்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
. மமேபி நெக்ஸ்ட் இயர் கொடுக்கலாம். இப்ப கொடுத்தா இதெல்லாம் அழும் பாட்டி
ஓஹோ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
இனிதாக வாழ வேண்டும்
17 comments:
இத்தருணங்கள் இனியவை:)!
//மமேபி நெக்ஸ்ட் இயர் கொடுக்கலாம். இப்ப கொடுத்தா இதெல்லாம் அழும் பாட்டி//
ச்சோ ஸ்வீட் :-)
குழந்தை பிறந்தாள், மருமகள் பிறந்தநாள், மணநாள் எல்லாம் சிறப்பாக கொண்டாடி அவர்களை ஆசீர்வாதம் செய்து மகிழுங்கள்.
மகிழ்ச்சியான நாட்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
//மெண்டல் ப்ளாக் வந்தால் கட்டாயம் நாம் எழுத்தாளர் என்பது லாஜிக். //
இப்படி ஒண்ணு இருக்கா ? பரவாயில்லயே!
பேத்தியோட விளையாட்டு பேச்சு அழகாய் இருக்கு.குழந்தையோட சந்தோஷமாக பொழுதை போக்குங்க இங்க திரும்பி வந்தப்பறம் இருக்கவே இருக்கு படிப்பு எழுத்தெல்லாம்..
//மமேபி நெக்ஸ்ட் இயர் கொடுக்கலாம். இப்ப கொடுத்தா இதெல்லாம் அழும் பாட்டி
ஓஹோ//
hihihihihihi
பெண் எழுத்து என்னும் என் பதிவுக்கு வந்து படித்துப் பின்னூட்டம் இட்டதாக நினைவு. பெண்கள் சம்பந்தப் பட்ட ஒரு பதிவு இன்று என் வலைப்பூவில் படித்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி.
பாட்டி, பேத்தியின் உரையாடலை ரொம்பவும் ரசித்தேன்.
அன்பு ராமலக்ஷ்மி
நன்றிமா. குழந்தை மனசு கற்பனை வளம். எப்பவுமே ஆச்சர்யம் தான்.
வரணும் சாரல்.
நலமாப்பா.இனிமை,உறுதி,பேச்சு வளம்,பிடிவாதம் எல்லாம் சேர்ந்த
கல்கண்டு:)
கட்டாயம். கோமதி.
தை மாதம் முழுவதும் கல்யாண நாட்கள்,பிறந்த நாட்கள்.
ஒன்றாக அமைந்து விட்டது. இதே போல சித்திரை வைகாசி மாதங்களும் அமையும்.
மிக நன்றி மா.
இந்தப் பதிவு பாதி எப்பவோ எழுதினது.இந்த நாட்களுக்கும் பாதி பொருந்தியது.மீதி பேத்தியின் கருணை
ரமா.:) ஆனால் என்ன எழுதுவது என்று தெரியாமல் விழித்த நாட்களும் உண்டு.:)
அதான் குழந்தையின் சாமர்த்தியம் கீதா.எல்லாப் பொம்மைகளுக்கும் பெயர் உண்டு. சில பேரில்லாத உருவங்களும் வேற ஊரில் வசிக்கிற நண்பர்களும் உண்டு .கீதா:)
அன்பு திரு.பாலசுப்ரமணியம்,
உங்கள் வலைப்பூ திறக்க முடியவில்லை.
வெகு ஆவலாக முயற்சி செய்தேன்.
மன்னிக்கணும்.
அன்பு ரஞ்சனி,மிக மிக நன்றிமா.
இங்கே ப்ளாகர் திறப்பதே பெரும்பாடு ஆகிவிடுகிறது.
என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சிலசனமயம் அபூர்வமாக இணைய வேகம் அதிகரிக்கும்போது மற்றவலைப்பூக்களைப் படிக்க முடிகிறது.
பேத்தி கணினியைக் கைப்பற்றிபவிட்டால் அதுவும் போச்சு:)
இனிமையான தருணங்கள் இவை. அனுபவியுங்கள் அம்மா.
இப்படி ஒன்றும் செய்யாமல் குழந்தைகளின் மழலையில் மூழ்கிவிடுவதும் நன்றாகத் தான் இருக்கிறது..... எஞ்சாய்!
Post a Comment