Blog Archive

Monday, January 21, 2013

ராமேஸ்வரம் 3

பர்வதவர்தினி அம்பாளும்  ராமலிங்கேஸ்வரரும்
Add caption
பாம்பன் பாலம்.
செந்தூர ஆஞ்சனேயர்
படம் அளித்தவருக்கு நன்றி
புதுப்பிக்கப்பட்ட கோவில்  தனுஷ்கோடி
மூன்றாம் பிரகாரம்
ஸ்ரீகோதண்டராமர் கோவில் விபீஷண சரணாகதி



ஸ்ரீராமனாத ஸ்வாமி சரணம்.
இராமெஸ்வரம் ,ராமன் ஈஸ்வரனைப் பூஜித்த இடம்.
ராவணவதம் முடிந்து சீதையுடன் மகிழ்வாகப் புஷ்பக விமானத்தில் ஏறும்போது,
விபிஷணப் பட்டாபிஷேகம் முடிந்து அரசாட்சி ஆரம்பமான நிலையிலும் ,
சீதை பல உயிர்க்ள் பலியானதை நினைத்து மனம் வருத்தம் கொண்டாளாம்.
அப்போது இராமனுக்கும் ரவணவதம், என்னதான் லோக க்ஷேமம் என்றலும் உயிர் வதை தோஷம் பாதிக்கும்
என்று அறிவுறுத்தப் பட்டது.
சிவனாரைப் பூஜித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.
அங்கிருந்த முனிவர்கள் உணர்த்தினார்கள்.

உடனெ முன்வந்தது யாராக இருக்க முடியும்?
நம்ம ஹனுமான் ஜி தான்.

உடனே காசிக்கு சென்று, விஸ்வநாத லிங்கத்தைக் கொண்டு வருவதாக விண்ணில் பாய்ந்து விட்டார்.
சீதையும் இராமனும் முறைப்படி சிவலிங்க அர்ச்சனைக்கு வேண்டிய (அங்கே கிடைக்கக் கூடிய)
இலை, பழங்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பித்துக் காத்திருக்கலானார்கள்.
இந்த சம்பவம் நடப்பது இராமேஸ்வரம் என்று இப்போது அழைக்கப்படும் கடல் கரையில்.
அனுமனுக்கு எதனாலொ தாமதமாகிறது.
முஹூர்த்த நேரம் நெருங்கியதால் ராமன் சீதையை நோக்கி, இந்த நேரத்தைத் தவிர்க்கக்கூடாது.
நீயெ சிவரூபமான லிங்கத்தை மணலில் பிடித்து வை.
பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அவளும் அவ்வாறே மணலும் நீரும் கலந்து லிங்கம் செய்து வைக்க,
இருவரும் ஈஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டனர்.
அவர்கள் இஷ்டப்படியே பாப விமோசனமும் கிடைத்தது.
சீதையும் ராமரும் வழிபட்டு முடிக்கும்போது அநுமன் காசிலிங்கத்தோடு வருகிறார்.
இங்கோ பூஜை முடிந்துவிட்டது.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்தைக் கீழே வைத்தார்.
மீண்டும் அதை அசைக்கப் பார்த்தால் முடியவில்லை.
விச்வரூபம் எடுத்து அசைத்துப் பார்த்தாலும் ஸ்வாமி
மனம் வைக்க மாட்டென் என்கிறார்.காசிக்குத் திரும்ப மனமில்லை
அந்த ஸ்வாமி ராமனாதன் ஆகிவிட்டார்.
ராமன் பூஜித்த லிங்கம் ராமலிங்கம்
அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசிலிங்கம்.
இரண்டு பேருக்கும் கோவில் உண்டு.
அனும்ுக்கும் செந்தூரவர்ணத்தோடு ஒரு தனி சன்னிதி.
நல்ல ஆகிருதியோடு கோவில் வாசல் பக்கம் பாதி உருவம் நிலத்திலும் மீதி உருவம் கடலிலும் இருக்கும்படியான தோற்றம்.
அவ்ர சன்னிதி அருகே நிற்கும்போது காலுக்குக் கீழே கடல் ஓசையிடும் சத்தம் கேட்கும்.
ராமனாதர் கோவில் நந்தி பெரிய வடிவில் உள்ளது.
உள்ளே ஈச்வரனுடன் தாய் பர்வதவர்த்தினி.
ஆடி மாதம் தங்கத் தேரோட்டம், வெள்ளித் தேரொட்டம் உண்டு.
ராமேச்வரம் ஒரு magical place.
பாம்பன் பாலத்தைக் கடக்கும்போதே நம் உற்சாகம்
ஆரம்பம்.முன்னால் இந்த தார்ச் சாலை வருவதற்கு முன்
ராமெச்வரம் -போட் மெயில் ஒன்றுதான் அங்கே போகும்.
நாம் போகும் அந்த ரயிலில் தான் அந்த ஊருக்குப் பால்,தயிர்,காய்கறி,நியூஸ் பேபர் எல்லாம் போகும்.
எங்கள் தந்தை அங்கே தபால்தந்தி அலுவலக மேலாளராக இருந்த 2 வருடமும் ,தினந்தோறும் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.
நாட்டுத் தலைவ்ர வருவார். சென்னைப் பிரமுகர்கள், கவர்னர் என்று யாராவது ப்ரார்த்தனை செலுத்த வருவார்கள்.
யாத்திரிகர்களால் வாழும் ஊராய் அது இருந்தது.


எனக்குத் தெரிந்து கழுதைகளும் மாடுகளும்
வெளியே உலர்த்தும் புடவைகளை சாப்பிடும் ஒரே ஊர் அதுதான்:-))
முதல் தடவை நாங்கள்(நாங்களும் எங்கள் முதல் புத்திரனும்) 4 நாட்கள் விடுமுறையில் போனபோது,
பாம்பன் பாலத்தின் மேல் ரயில் ஊர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே சன்னலுக்கு வெளியே காற்றும் அலை ஓசையும் நம்மை
தாலாட்டும்.
1964 புயல் ஞாபகம் வந்தால் பயம் பற்றிக்கொள்ளும்.
அதில் தானே ஒரு ரயிலோடு பயணிகள் மறைந்தார்கள்.

பழகுவதற்கு இனிய மக்கள். அவ்வளவு வியாபாரம் எடுபடாத நாட்கள் அவை.
இதே பிரயாணம் 2003இல் செய்த போது நிலமை மாறி இருந்தது. (மீண்டும் பார்க்கலாம்)



12 comments:

sury siva said...

இராமலிங்கேஸ்வரர், காசிலிங்கேஸ்வரர்
இருவரையும் ஒரு சேர்ந்து குடியிருக்கும்
இந்த க்ஷேத்திரத்திற்கு போகாத குறை ஒன்று

இந்த 45 வருட நிறைவு நாளன்று
இனிதே தீர்ந்தது.

சிவ பெருமான் க்ருபை வேண்டும்

ஸ்ரீ தாம்ரபர்ணி ஜல ராசி யோகே
நிபத்ய ஸேதும் நிஷி பில்வ பத்ரை:
ஸ்ரீ ராமசந்த்ரேண சமர்ச்சிதம் தம்
ராமேஸ்வாரக்யம் சததம் நமாமி. (த்வாதச லிங்க ஸ்தோத்ரம்)

சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.
if u have some time, pl visit
www.vazhvuneri.blogspot.com

கோமதி அரசு said...

இராமேஸ்வரத்தில் சிறு வயதில் இருந்தோம். 79ம் ஆண்டு அண்ணன் இருந்தார்கள் அப்போது போய் வந்தது.
அப்போது கடலில் இருந்த ஒரு பெரிய கப்பலை ஏறிப்பார்த்து அங்கு உள்ள நூலகத்தில் புத்தகம் வாங்கி வந்த நினைவுகள் நீங்காது நெஞ்சைவிட்டு.

மூண்டும் ஒருமுறை உங்கள் பதிவில் தரிசனம் செய்து விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் சுப்பு சார்.
ராமேஸ்வர புண்ணிய ஸ்நானம் கிடைத்தது மகிழ்ச்சி,. நீங்கள் சொல்வது போல இறைவன் அழைத்தால் அன்றி எங்கும் நகர இயலாது.
சொல்ல்யிருக்கும் ஸ்லோகமும் பிடித்திருக்கிறது.தாமிரவருணி வருகிறதே!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி. நீங்களும் அங்கே இருந்திருக்கிறீர்கள். நாங்களும் சிறு படகில் ஏறிக் கப்பலைப் பார்த்துவிட்டு வந்தோம்.
அந்த க்ஷேத்ரத்தின் பெருமையை எத்தனை சொன்னாலும் போதாது. நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

உண்மை.... எல்லா இடங்களும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது.

நெய்வேலியிலும் சில மாடுகள் துணியைத் தின்றுவிடும்! :)

இராஜராஜேஸ்வரி said...

ராமேஸ்வர புண்ணிய யாத்திரை பலமுறை சென்றிருக்கிறோம் ..

ஒரு சூரிய கிரஹணம் முடிந்த நேரத்தில் அக்னித்தீர்த்தத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது சுவாமி ஊர்வலக்காட்சி தீர்த்தக்கரையில் கிடைத்தது பசுமையாக இருக்கிறது ..

கோவில் எல்லாம் அல்ம்பி விட்டு பளிச் என்று இருந்த நேரத்தில் ஆலய தரிசனம் அருமையாக இருந்தத்து ..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட்.மாற்ற்ம் ஒன்றுதான் மாறாததுன்னு சும்மாவா சொல்கிறார்கள்.:(

சங்கு கடைகளும் சோழிகடைகளும் நிறம் மாறி கடும் வியாபாரத்தலங்களாக ஆகி இருந்தன.
இவர் வாங்கி வைத்திருந்த பெரிய சங்கு இப்போது பத்தாயிரம் ரூபாயாம்.
அம்மனும் ஸ்வாமிகளும் தான் மாறவில்லை:)

ஸ்ரீராம். said...

படங்களுடன் விவரங்கள் அருமை. இங்கு போனதேயில்லை. இலை தழை கிடைக்காத ஆடு மாடுகள் துணிகள் சாப்பிடுவது வினோதம்.

வல்லிசிம்ஹன் said...

இராஜராஜேஸ்வரி நீங்கள் கொடுத்துவைத்தவர். கடவுளின் பக்கத்தில் எப்பொழுதும் இருக்கிறீர்கள்.

உங்கள் அனுபவமும் ஆனந்தமாக இருக்கிறது.
கோவில்களின் புனிதத்தை எத்தனை அனுபவைத்தாலும் போதாது. நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம் .சீக்கிரம் போய்விட்டு வாருங்கள். கோடை வருகிறதே:)குழந்தைகளுக்கும் நல்லது.
நல்ல பயணம் அமையட்டும்.

மாதேவி said...

பாம்பன்பாலம், தலம், செந்தூர ஆஞ்சநேயர், பிரகாரம் என படங்களுடன் சிறப்புப் பெறுகின்றது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி.உங்கள் பயணங்களும் இனிதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.