Saturday, July 29, 2006
வழி,தங்குமிடம் ராமேஸ்வரம்
எல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான்.
இந்தப் பதிவு ஒரு பின்குறிப்பாக எழுதுகிறேன்.
ஒரு நாள் பயணமாகவே போய் விட்டு வரக்கூடிய இடம் தான். ஆனால் அங்கே தங்கி வந்தால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்கலாம்.
மதுரையில் இருந்து நான்கு மணிநேரப் பயணம்.
ராமனாதபுரத்தில் நல்ல வசதியுடன் விடுதிகள் இருக்கின்றன.
அங்கே இறங்கி சேது விலிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்.
வைணவர்கள் சேது தீர்த்தத்தில் குளித்துவிட்டு அடுத்த நாள் ராமேச்வரம் அக்கினி தீர்த்ததில் குளிப்பார்கள்.
சேதுவில் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்கு நினைவாக கட்லில் குளித்து அங்கே வாழும் வசதி குறைந்தவர்களுக்கு நாம் அணிந்த் உடையோ ,அன்னதானமோ செய்யலாம்.
அங்கிருப்பவர்களே நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
அங்கெ பக்கத்திலேயே ராமன் தபம் செய்த திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கொவிலுக்குப் போனால் மதிய சாப்பாடு உறுதி.
கடலுக்குக் குளிக்கப் போவதற்கு முன்னால் சொல்லிவிட்டால் போதும். சமைத்து வைத்துக் கொடுப்பார்கள். ஆஹா அந்தப் பசிக்கு அந்தப் பொங்கல் அமிர்தம் தான்.
இங்கு இராமபிரானுக்கு கடலரசன் சேதுப் பாலம் கட்ட வழி சொல்லிக் கொடுத்தானாம்.
கடலைப் பிளந்து இலங்கைக்குப் பாலம் அமைத்தால் கடலில் உள்ள உயிர்கள் அழியும், அதனால் மிதக்கும் பாலம் ஒன்றை நளன் என்னும் தேவ சிற்பியை வைத்துக் கட்டலாம், என்று யோசனை சொல்ல, இராமனும் நளனை
வேண்ட வானரங்கள் உதவியுடன் அதிகக் கனமில்லாத கற்களால் சேதுப்பாலம் அமைந்ததாம்.
அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அப்போது இன்னும் சிறப்பாக இயங்கி இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகியது.
பக்கத்தில் தேவிட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் நவபாஷணம் என்னும் நவக்கிரக பரிகார தலம் இருக்கிறது.
கடலுக்குள் போய் ராமபிரான் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் கிரஹங்களைச் சுற்றி வந்து அர்ச்சனை செய்யலாம்.
அங்கேயும் தானம் செய்யும் வழக்கம் உள்ளது. நம் பின்னாலேயெ அவர்கள் குறி வைத்து வருவதைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்
அங்கிருந்து நேரே ராமேஸ்வரம் தான். அங்கே ந்இறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன.
நாற்பது வருடங்கள் முன்னால்
நமக்கு பரிகாரம் செய்ய உதவியாக கைருக்கும் சாஸ்திரிகள் வீட்டிலேயே தங்கவும், சாப்பிடவும் வசதி செய்வார்கள்.
இப்போது நமக்குத்தான் அந்த வசதி எல்லாம் போதாதே..
அதனால் (பண) வசதிக்கு ஏற்ப விடுதிகள் கிடைக்கின்றன.
ஸ்ரீ ராமனாத ஸ்வாமி ஆலயத்துக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன.
எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,,(நிவர்த்தி) செய்யக் காத்துக் கொண்டு ,அந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பதையே சேவையாகச் செய்யும் நண்பர்களோடு
தயார் நிலையில் உள்ளன.
எத்தனை உயர்ந்த சேவை.!!
பர்வதவர்த்தினி அம்மனும், இராமலிங்கமும் ஜோதியாகத் அவ்வளவு ஓளியோடு காட்சி தருகிறார்கள்,
அங்கெ இன்னும் கை நீட்டும்
காட்சி வரவில்லை.
பக்தியும் சுத்தமும் ஆன்மீகமும் இருந்தன.
ஏழ்மையும் இருந்தது.
இன்னோரு தடவை என்னை இராமேஸ்வரம் போக வைத்த தமிழ் மணத்துக்கு நன்றி..
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
8 comments:
ராமேஸ்வரம் பற்றிய நல்ல பயனுள்ள பதிவு. நீங்கள் சொல்வது போல் அங்கு இரண்டு மூன்று நாள் தங்கினால் தான் பக்கத்தில் உள்ள எல்லா கோவில்களையும் நிம்மதியாக பார்க்க முடியும்.
பயனுள்ள தகவல்கள். செல்லும் போது உதவியாக இருக்கும்.
சமீபத்தில் தான் அப்பா-அம்மா சென்று வந்தார்கள்.... நாங்கள் சிறுவயதில் சென்றிருக்கிறோம்...
மீண்டும் செல்ல வேண்டும் ஆதி மற்றும் ரோஷ்ணியுடன்.... பார்க்கலாம்.
ராமேஸ்வரத்தில் அதிகாலை 5மணி இராமலிங்க சுவைமி தீர்த்த அபிஷேகப்பூசை காணும் பாக்கியம் முன்பு கிடைத்தது.
உங்கள் பகிர்வு மீள்நினைவுகளை தந்தது. மகிழ்ச்சி.
உண்மைதான் கோமதி. அவசரமாகப் புனிதத்தலங்களுக்குப் போகக் க்கூடாது
அன்பு ஆதி அடுத்த பின்னூட்டத்தில் உங்கள் கணவர் ராமேஸ்வரத்திட்டம் போட்டு இருக்கிறார்.
நல்ல பயணம் வாய்க்க வாழ்த்துகள்.
அன்பு வெங்கட் சிறுவயது பயணம் சீக்கிரம் மறக்கக் சந்தர்ப்பம் உண்டு. இப்பொழுது போகின்ற
பயணம்., ரோஷ்ணிக்கும் ஆதிக்கும் மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறேன்.
அன்பு மாதேவி உங்களுக்குத் திருமஞ்சன தரிசனம் கிடைத்தது அருமை.
அந்தத் தீவும் கோவிலும் எப்பொழுதும் மனனிறைவைத் தரும் இடங்கள். நன்றி மா
Post a Comment