| Add caption | 
வந்தேன்
  வந்தேன்  மீண்டும் நானே  வந்தேன்னு   ஒரு  பதிவு போடணும்னு நினைத்தேன்.
ஏதாவது
  யோசனை  தோணினால் தானே எழுத.
நல்லதாப்
 போச்சு  எல்லார் சொல்கிற மாதிரி நாமும்  உண்மையாவே  எழுத்தாளி ஆகிட்டோம்  போலிருக்கு.  இந்த  மெண்டல் ப்ளாக்  வந்திடுத்து.
மெண்டல்
 ப்ளாக் வந்தால்  கட்டாயம் நாம் எழுத்தாளர்  என்பது  லாஜிக்.
அதாவது
  தலைவலின்னு ஒண்ணு வந்தால்  தலை  இருக்கு  என்பது நிதர்சனம்,
ஒண்ணு
  இருக்கு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அது  இல்லாமல் மேல ஒண்ணும் நடக்காது என்று சொல்லணும்.
அதே
  போல  முதிய பதிவாளர்  என்றால்  அப்பப்போ  உணர்ச்சிகரமா  ஏதாவது எழுதவேண்டும்.
வர்த்தி
 ஏத்தவேணும். அதாவது கொசுவர்த்தி. 
கவிதை
 எழுதலாம்.அநேகமா  அது  உரைநடைல இருக்கணும்.
ஐயோ
 ஏன்  இந்த அம்மா  இப்படி  வதைக்கிறாங்கன்னு நாலு  பேராவது நினைக்கணும்.
பந்தபாசம்
,படிக்காத மேதை,  கணவனே  கண் கண்ட  தெய்வம் ,பொன்னித்  திருநாள்,  மங்கையர் உள்ளம் மங்காத  செல்வம்இந்த மாதிரி புதுப் படங்களுக்கு  ரெவ்யூ  எழுதலாம்.  பழசுக்கு எப்பவும்  மதிப்பு  இல்லையா.
இதெல்லாம்
  இந்த  துபாய்க்கு வந்த பிறகு எனக்குத் தோன்றிய  எண்ணங்க  இங்க  வீட்டுக்குள்ள  குளிருகிறது.
வெளியில்
 நல்லா  இருக்கிறது.
வெளி
 வராந்தாவை  சிங்கம்  குத்தகை எடுத்து விட்டதால், வீட்டுக்குள்ள  ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு,  என்னடா எனக்கு வந்த  சோதனைன்னு யோசித்தேன்.
பாப்பா
  தூங்கின பிறகு  வாங்கி வைத்திருக்கும் குங்குமம்,விகடன் எல்லாம் படிக்க  ஆரம்பித்திருக்கிறேன்.
உள்குளிர்
  நம்மளை வெளில  தள்ளினாலும், ஒத்துக் கொள்ளவில்லை.
நல்லவேளை
 இந்த சமயம்  பேத்தி,மருமகள் பிறந்த நாட்கள்,இவர்களது திருமண  ஆண்டு நிறைவு  எல்லாம் வருவதால் போர் அடிக்க சந்தர்ப்பம் இல்லை.
''
பாட்டி நீ இங்கயே இருக்கியா.  நான் செய்யற கேக் செய்ய ஆளே இல்ல.(கற்பனை)
ஊ
 இருக்கலாம்.
நீ
 யேன் எப்பவும் தமிழ் பேசறே. இங்க்லிஷ் பேசு.
எனக்கு
 இங்க்லிஸ்கஹ் வராதே
அப்போ
 அரபி பேசு.
அஸ்ஸலாம்
 அலைக்கும்
வாலேக்கும்
 அஸ்ஸலாம்
இன்ஷா
 அல்லா
அல்லா
 மாலிக்
மாஷா
 அல்லா.
அச்சோ
  இதெல்லாம் விஷிங்க்.
என்று
 விட்டு அதுவே எனக்குக் கற்றுத்தர ஆரம்பித்திருக்கிறது.
பாரபி
 டால் வாங்கப் போறியா
என்னது
ஓஓஓஓஓஓஓ
   சாரி பார்பி
ம்
 வாங்கித்தரேன்.
நிறைய
 பொம்மை இருக்கு . நாம் யாருக்காவது கொடுத்துடலாம். இல்ல பாட்டி. ஆமாம் செல்லம்.
இந்தப்
 பூனை அத்தை வாங்கிக் கொடுத்தது.
இது
 டெல்லிப் பாட்டி
இது
 அப்பா.
இது
 என் ஃப்ரண்ட்.
இந்த
 இரண்டும் மை கிட்ஸ்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
. மமேபி  நெக்ஸ்ட் இயர் கொடுக்கலாம். இப்ப கொடுத்தா இதெல்லாம் அழும் பாட்டி
ஓஹோ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
இனிதாக வாழ வேண்டும்
 























