Saturday, December 22, 2012

கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் அழைக்கிறது


திருக்கோஷ்டியூர் ஸ்ரீஆண்டாள்

கீழ்வானம் வெள்ளென்று
நன்றி   திரு நடராஜன்
நவமி நிலா
வாயிலில்  தாமரை
கோகுலம்                         
 மார்கழியின் 7  ஆம்நாளின் சித்திரம் வரைகிறாள் கோதை.

அவள் கண் முன்  ஆய்ப்பாடி விரிகிறது. அங்கே காலை 4 மணி . சூரியனின்
கிரணம்  பூமியைத்தொடுவதற்கு முன்  வெண்ணெய்  திரண்டுவிடவேண்டும்.

பெண்கள் தயிர்ப்பானைகளின் முன் உட்கார்ந்து  கடைய ஆரம்பிக்கிறார்கள்.
அதென்ன இப்ப வரும் ஆவின் தயிரா....கத்தியால் வெட்ட வேண்டிய அளவு
கெட்டியான தயிர்.
அதைத்தான் கைபேர்த்து என்று சொல்கிறாள் ஆண்டாள். அந்தத் தயிரைச்
சாப்பிட்டவர்களுக்குத் தான் அதைக் கடையும் பலமும் கிடைக்கும்.
ஆனைச்சாத்தான் பறைவைகள்  அன்றைக்கு இரை தேடவேண்டிய இடங்களைப்
பற்றி ஒன்றுக்கொன்று விவாதிக்கின்றனவாம். அந்தச் சத்தாம். ஆய்ச்சியரின் கழுத்து
ஆபரணங்களும் கைவளைகளும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சத்தம் போட்டுக்
 கொண்டு மேலும் கீழும் ஓடுகின்றனவாம்.

வெண்ணெய் கடையும் வேகத்தில் ஆய்ச்சியரின் தலைக் கற்றைகள் சற்றே அவிழ்ந்து அவற்றில்
உள்ள பூக்கள் உதிர்ந்து வாசம் பரப்புகின்றனவாம்
அந்தத் தயிரரவம் உனக்குக் கேட்கவில்லையா பெண்ணே.
நாயகப் பெண்பிள்ளாய்,நம்  நாராயண மூர்த்தி,கேசவன்,மாதவன்,கண்ணன்
என்று நாங்கள்  பாடுவது கூட உன்காதில் விழவில்லையா.அதைக் கேட்டும்
இப்படித்தூங்குகிறாயே,
அன்புடன் வந்து வாயில் கதவைத் திற என்று எழுப்புகிறாள் கோதை

இதோ பாடல்

கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலாகலப்பக் கைபேர்த்து
வாசநறுங்குழல்  ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே  கிடத்தியோ.
தேசமுடையையாய்  திறவேலோ ரெம்பாவாய்....

ஆண்டாள் திருவடிகளே சரணம். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

16 comments:

Unknown said...

அருமை!

இராஜராஜேஸ்வரி said...

ஆய்ப்பாடி சித்திரம் வரைந்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

ஸாதிகா said...

கடைசிப்படத்தை ரொம்ப நேரம் ரசித்தேன்.

sury siva said...

//அதென்ன இப்ப வரும் ஆவின் தயிரா....கத்தியால் வெட்ட வேண்டிய அளவு
கெட்டியான தயிர்.
அதைத்தான் கைபேர்த்து என்று சொல்கிறாள் ஆண்டாள். அந்தத் தயிரைச்
சாப்பிட்டவர்களுக்குத் தான் அதைக் கடையும் பலமும் கிடைக்கும்.//

கிடைச்சுதே !! கெட்டி கெட்டியா தயிர் சாப்பிட்டதிலே அந்த பலம் மட்டுமா கிடைச்சுது !!
கூடவே கொலஸ்ட்ராலும் கிடைச்சுது....
ஸைட் டிஷ்ஷா ப்ளட் பிளஷரும் கிடைச்சது.
டிரினிடி லே என்னோட கார்டியாலஜிஸ்ட் கிட்ட போனபோது
டின் டின் ஆ ஸ்டோர் வாஸ் மாத்திரையும் கிடைச்சது..

அந்த மாத்திரை வாங்க ஆயிரக்கணக்கா பணமும் கிடைச்சது.
ஆனா அந்த ஆண்டாள் கோதை நாச்சியார் பத்மாவதி தாயார் கடாட்சம் மட்டும்
இன்னும் கிடைக்கல்லயே.......!!!

சுப்பு ரத்தினம்.
www.pureaanmeekam.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பு. பறவை படம் மிகவும் ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு.சேஷாத்ரி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா இராஜராஜேஸ்வரி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸாதிகா. எங்கள் வீட்டிலும் வெண்ணெய் எடுக்க நின்றுதான் மத்தெடுக்கணும். அத்தனை மாடுகள் இருந்த இடம்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். மோர் மட்டுமே சாப்பிட்ட எங்க அப்பாவுக்குமே கொலெஸ்ட்ரால் வந்தது.
சர்க்கரையைக் கண்டாலே வெறுக்கும் எனக்கு டயபடிஸ்:)
யார் சொன்னது உங்களுக்குதாயார் நாச்சியார் கடாட்சம் இல்லை என்று. மீனாட்சி அம்பாளே கூடவே இருக்காரே.

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு. சுப்பு தாத்தா...உடம்புக்கு வந்தாலும் கூடவே சரியா(க்)க மாத்திரையும் கொடுத்திருக்கிறாளே ஆண்டாள்...! :)))

வல்லிம்மா... இன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், நாரத கான சபா என்று உங்கள் இல்லம் சுற்றி கச்சேரி! நடுவில் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் வந்து எட்டிப் பார்த்திருப்போம்!

மாதேவி said...

அருமையான பகிர்வு.

கோகுலம் படம் மிகவும் நன்றாக இருக்கின்றது.

ராமலக்ஷ்மி said...

அருமை.

என்ன அழகான படங்கள்!

நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி மா.பாராட்டுகளை கூகிளாரிடம் கொடுத்துவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி கூகிளார் கொடுத்த படங்கள் இவை.அழகாகத்தான் இருக்கும்:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நடுவில் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் வந்து எட்டிப் பார்த்திருப்போம்!//
ஓஹோ அப்படிப் போகிறதோ கதை ஸ்ரீராம்.
மறுபாதி அம்மாவீட்டிற்குப் போகலாம் என்றிருப்பார். எதுக்கு சங்கடம் கொடுக்கணும்னு நீங்கள் கச்சேரியில் நிலைத்திருப்பீர்கள்:)பரவாயில்லை.நான் வரலாம் இல்லையா:)


வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு வெங்கட். சிறப்புப் பறவை கொடுத்தது கூகிள்தான் என்றாலும் ,படம் எடுத்தவர் நம்நடராஜனார்.