அசுர வதம் |
ஆலிலைக் கண்ணன் |
புள்ளின் மேல் விரையும் திருமால் |
பிள்ளாய் எழுந்திராய் |
சொல்லாழி வெண்சங்கே |
புட்கள் |
ஸ்ரீ ஆண்டாள் |
ஆறாம் நாள் பாசுரம் புள்ளும் சிலம்பினகாண்..
இன்று உண்மையாகவே பட்சிகளின் சப்தம் அருமையாக ஒலி பரப்பிக்கொண்டிருக்கிறது.அதிகமாக.
கண்ணனை நம்புங்கள் அவன் எந்த நிலையிலும் நம்மைக் காப்பான்.
நம்பிக்கையை விடாதீர்கள்.''என்று கூவிக் கொண்டிருக்கின்றன.
இதோ இந்த 21 ஆம்தேதி பயம் எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கும்.
இந்தப் புரளிகளைப் பரப்புவதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
எதிர்பாராமல் நடக்கும் நிகழ்ச்சிகளே நம்மைப் புரட்டிப் பார்க்கின்றன.
முதல் ஐந்து பாசுரங்களில் முன்னுரையாகக் கண்ணனையும் நம்மையும் தயார் செய்கிறாள்.
ஆறாம் பாசுரத்திலிருந்து தோழிகளை அழைக்க ஆரம்பிக்கிறாள்.
பறவைகள் விழித்துக் கொண்டு சிலம்புகின்றன.
கருடனை வாகனமாகக் கொண்ட மாலின் கோவிலில் வெள்ளை சங்குகள் விளிக்க ஆரம்பித்துவிட்டன.
அது கேட்கவில்லையா பெண்ணே உனக்கு?பேரரவமாக என்காதில் ஒலிக்கிறதே. ஆண்டாள் தூங்கியே இருக்கமாட்டாள் போலிருக்கிறது.
எப்பொழுது கிழக்கு வெளுக்கும் எப்போது இறைவனைப் பாடலாம் என்றே காத்திருந்து இருப்பாள். போலும்.
கருடவாகனின் கோவிலுக்குப் போவதற்காக முனிவர்கள் மென்மையான சப்தமாக ஹரியின் நாமத்தை உச்சரித்து
ஊழி வெள்ளத்தில் ஆலிலையில் மிதந்துவரும் கண்ணன் என்னும் வித்தை,உலகத்தைத் தன்னுள் அடக்கியவனைப் பாடக் கிளம்பிவிட்டார்கள்.
இன்றைய பாடல் | அவள் திருவடிகள் சரண். |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
17 comments:
அருமை
ஹைய்யோ!!!!! படங்கள் அள்ளிக்கொண்டு போகின்றன.
அதிலும் வெண்சங்கங்களும் பட்டு மெத்தைகளும் சூப்பர்மா!!!!!
மெத்தையில் ஏறிப்படுப்பது இப்படி:-)
கண்ணன் கூடவே நாமும் போகலாம்.
பட்சிகளின் சப்தம் அருமையாக அதிகமாக கண்ணனை நம்புங்கள் அவன் எந்த நிலையிலும் நம்மைக் காப்பான்.நம்பிக்கையை விடாதீர்கள்.''என்று கூவிக் கொண்டிருக்கின்றன.
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
படங்கள் அப்படியே நெஞ்சை அள்ளிக் கொண்டு போனது.... :)
பட்சிகளின் சப்தம் தேனாய் பாயுது....
படங்கள் எல்லாம் தெய்வீகம். ஆண்டாள் வந்து எழுப்பும் படம் மிக அழகு.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வல்லிம்மா..படங்கள் எல்லாம் பளிச் அழகுதான்.உங்கள் கைவண்ணமா?
படங்களும் உங்கள் மென்மையான - மேன்மையான விளக்கமும் அருமை வல்லி!
அசுர வதம். என்ன ஒரு படம்!
ஆலிலைக் கண்ணன்.. அழகு!
ஆண்டாளும் அழகு.
வருகைக்கு மிகநன்றி. பல உபன்யாசங்களின் தொகுப்பே இவை. என் எண்ணம் எப்போதாவதுதான் இழையோடும்.:)மதுரையில் இருக்கிறீர்கள். கொடுத்துவைத்தவர்தாம்.
துளசிமா,எல்லாமே கூகிளார் அருளிச் செய்த படங்கள்.
ஆமாம் ரொம்ப உயரமான மெத்தை இல்ல.ஏணி வச்சு ஏறுவாங்களோ.
21 ஆம்தேதி அழைச்சுட்டுப் போவானோன்னு பார்த்தால் நடக்கலையே:)
இபோழுது குளிர்காலப் பறவைகள் வீட்டைச் சுற்றி விதவிதமாகப் பறக்கின்றன இராஜராஜேஸ்வரி. காமிராவைக் கையில் எடுக்கும் முன் ஓடிவிடுகின்றன.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.பாட்டி அக்கு பட்சி,நாராயண பட்சி என்று விதவிதமாகச் சொல்லுவார்.
நம்பிக்கையை விட்டால் நமக்கு வேறு ஏது ஊன்றுகோல்.நன்றிமா.
குருவிகள் மட்டும் என்னுது. மற்றவை ஆண்டவர் குகிளார் அருளிச் செய்தது வெங்கட். :0) என் மனசாந்திக்காகத் தினம் பாவையை எழுதுகிறேன். பிறகு அதுவே மகிழ்ச்சியாகிவிடுகிறது.
வரணும் கோமதி. உங்கள் ஊரிலும் பாவைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் வைப்பார்களா. இங்கே கேட்பதே இல்லை.வாழ்க வளமுடன்.
அன்பு ஸாதிகா வேறு யாரோ வலையேற்றினது அம்மா இந்தப் படங்கள். மூன்று குருவிகள் மட்டும் என் காமிரா பிடித்தது.வருகைக்கு நன்றி.
ஆமாம் ரஞ்சனி ,ஆண்டாளை நினைத்தால் மனம் குழைந்துதான் போகிறது ஐந்து வயதுப் பெண் குழந்தை அதிசீக்கிரம் வளர்ந்து இறைவனையும் அடைந்தாள். இந்தப் பக்தியை நாம் பாடத்தான் முடியும்.
பாராட்டுகள் எல்லாம் அவளுக்குத் தான்.
வரணும் ஸ்ரீராம்.படங்கள் ஹரேகிருஷ்ணா தளத்தில் கிடைக்கும். வெறுமனே கிருஷ்ணான்னு சொன்னப் போதும் ஓடிவந்து குதித்துவிடுகிறான்.:)நன்றி மா.
அற்புதம்.
தேடி அளித்திருக்கும் படங்களுக்காகக் கோடி நன்றி:)! மிக அருமை.
Post a Comment