Blog Archive

Thursday, December 20, 2012

மாயையின் சகோதரன் மாயன்

தூய பெருநீர் யமுனைத் துறை
Add caption
கூகிள் தந்த  கண்ணன்
நிர்மால்ய  குருவாயூரப்பன்
கண்ணன்
மார்கழி ஐந்தாம் நாள்  மாயனைப் பாடும்  திருநாள். அதென்ன  எல்லாப் பாடல்களும் அவனைப் பற்றித்தானே  இதில்  இந்தப் பாடலுக்கு என்ன  மகிமை பெரிதாக என்றால்...இது அவதாரப் பெருமை,யமுனையின் பெருமை, தேவகியின் பெருமை,யசோதையின்  பெருமை எல்லாம்  விகசிக்கும்  பாடல் இது.

மாயங்கள் செய்பவன்,அதிசயங்களை  நிகழ்த்துபவன்  மாயன்.
மதுராவில் பிறந்தவன்.  யமுனையை மகிழ்வித்து  அதைத் தாண்டித் தன் தந்தை வசுதேவரால்   எதிர்க்கரையில் இருக்கும் நந்தகோபனிடம் ஒப்படைக்கப் பட்டவன்.
யமுனையைக் கௌரவித்தவன்.
வைகுந்தத்திலிருந்து கீழே  இறங்கி தேவகியின் கர்ப்பத்தில் புகுந்தததால் தாயைக் குடல் விளக்கம் செய்தவன்.
யசோதை  அவனைக் கயிற்றால் கட்டப் புகுந்தபோது கயிறு பற்றாமையால் சோர்ந்தபோது குழந்தை எடுத்துக் கொடுத்ததாம் இன்னோரு கயிற்றை.
அம்மா இதைவைத்து என்னைக் கட்டு என்று. அவன் தாமோதரன்.

அவனைத்,,,,,,,,  நாம் தூயநீரில்  நீராடி,  புது மலர்களைப் பறித்து அவனைத் தொழுது,மலர்களைத் தூவி, வாயினால் பாடி,மனதில் அவனையே    நினைத்து,உடல் பூமியில் அங்கமெல்லாம் பட கீழே விழுந்து வணங்கி னால்
இதுவரை   செய்த பாபங்களும் இனி செய்யப் போகும் பாபங்களும்(அறிந்தோ அறியாமலோ)  தீயினில் இட்ட தூசு  போல  மறையும் என்று உருதி சொல்கிறாள் நம் கோதை.
இதோ   பாசுரம்.
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தின்ல் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடுஇ மனத்தினால் சிந்திக்கப்
போயபிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர்  எம்பாவாய்....மாயனை.......
வில்லிபுத்தூர்க் கோதை தாள்களில் சரணம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

18 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவதாரப் பெருமை,யமுனையின் பெருமை, தேவகியின் பெருமை,யசோதையின் பெருமை எல்லாம் விகசிக்கும் பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

துளசி கோபால் said...

இந்த மாதம் பூராவும் தினமும் சக்கரைப் பொங்கலா கிடைக்குது!

ஒவ்வொரு பதிவும் அருமை!

கண்ணன் கொடுத்து வைத்தவன்:-)

சாந்தி மாரியப்பன் said...

பாசுரமும் பகிர்வும் அக்கார அடிசில் :-)

கோமதி அரசு said...

நல்ல மலர்களைத்தூவி, நம் ம்னதை தாமோதரனிடம் செலுத்தினால், எல்லா நன்மையும் வந்து சேரும் உண்மைதான்,
உங்கள் அழகிய படங்களுடன் பகிர்வு அருமை அக்கா.

ஸ்ரீராம். said...

ஆஹா... இங்கயும் மாயனா? நாள் பார்த்து வார்த்தை யூஸ் பண்றீங்களே!! :))

மேலே உள்ள குழலூதும் கண்ணனின் பொம்மை 'குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னே' என்று பாட வைக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.பாராட்டுகளே அழகா இருக்கு கோதையின் தயவில்.

வல்லிசிம்ஹன் said...

இந்தத் தடவை மார்கழிப் பதிவுகள் நிறையவே வருகின்றனா.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித சர்க்கரைப் பொங்கல் துளசி. கண்ணன் அலுக்காமல் சலிக்காமல் சாப்பிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல். மீதி 25 நாளும் ஒழுங்கா நிறைவேத்தணும்:)

வல்லிசிம்ஹன் said...

மனதுக்கு நல்ல பயிற்சி கோமதிமா. லேசாகிவிடுகிறது எழுதி முடித்த பிறகு.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

இந்த மாயன் அந்த மாயனைத் தூக்கிப் பந்தாடிவிடுவான் ஸ்ரீராம்.:)அந்தக் கண்ணனுக்கு 37 வயசு.

Ranjani Narayanan said...

மார்கழித் தொடர் பதிவு அருமை வல்லி!

தொடருங்கள்....தொடர்ந்து வாசிக்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

தினமும் இங்கே அக்காரவடிசல்.... :) மொத்தமாய் சேமித்து வைக்க நினைத்திருக்கிறேன்!

S.Muruganandam said...

படங்களும், பாசுர விளக்கங்களூம் அருமை வல்லியம்மா.

கோதை திருவடிகளே சரணம்

காரஞ்சன் சிந்தனைகள் said...

தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_22.html
நன்றியுடன்
காரஞ்சன்(சேஷ்)

காரஞ்சன் சிந்தனைகள் said...

தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_22.html
நன்றியுடன்
காரஞ்சன்(சேஷ்)

Anonymous said...

வணக்கம்

அருமையான படைப்பு நல்ல கருத்தை வாசக உள்ளங்களுக்கு விதைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ,இன்று22.12.2012 உங்களின் ஆக்கம வலைச்சரம் வலைப்பூவில் பகிரப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்,

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மாதேவி said...

யமுனை படித்துறை,ஆநிரைக்கண்ணன் என மனதைக் கொள்ளையிடுகின்றன.

ராமலக்ஷ்மி said...

கிடைத்தது யமுனையின் தரிசனமும்.