Blog Archive

Tuesday, December 04, 2012

விலகும் உறவுகள் சேரும் திருமணம்

ஒரேவானம் தான்.சேர்க்கும் பிரிக்கும்  காற்று

 சந்திப்போம் பிரிவோம்  ...நல்ல தலைப்புதான்.நெருங்கிய உறவுகளுக்குள் இது சாதாரண
வாக்கியம். நிச்சயமாக இன்னும் ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை உண்டு. அங்கே.

சில உறவுகள் பிரிவதற்கு எது காரணம் என்று யோசிக்கவைத்த
சம்பவம் ஒன்று  நாங்கள் சென்ற திருமணம் ஒன்றில் நடந்தது.

திருமண நேரங்களில் அத்தைக்குப் படு டிமாண்ட் இருக்கும். இரண்டு பக்க அத்தைகளையும்
ஆரத்தி எடுக்கக் கூப்பிடுவார்கள். நான் சென்ற திருமணம்  நங்கைநல்லூரில்
நடந்தது.

ஊர் எத்தனையோ மாறி இருந்தது. ஆனால் ரோடுகள் மட்டும் குண்டும் குழியும் தான்.
ஊர்க்காரர்கள் மன்னிக்க வேண்டும்:)

திருமண மண்டபத்து முன்  நிறுத்த  முடியாமல் குறுகலான தெரு.

கொஞ்சம் தள்ளி நிறுத்தினால்  இறங்கும் இடம்  மேடும் பள்ளமுமாக இருந்தது.
பார்த்து பார்த்து என்று  இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
ஒரு காலைக் கீழே வைத்துவிட்டேன். மறுகாலைக் கீழெ வைத்தேன். மண்சரிந்து
அடுத்த நிமிடம் வானம் பார்த்த நிலையில் கீழே இருந்தேன்.
என்ன மாயம்!!
உடனே மண்டப வாசலில் நின்று கொண்டிருந்த  இரு குட்டிப் பசங்களும்
என் தம்பியும் விரைந்து வந்து என்னைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்.

75 கிலோவைத் தூக்குவது அவ்வளவு சுலபமா.:)
கரம்பிடித்தவர்தான் கரம் கொடுத்தார்.
என்ன பரபரப்பு. பிறந்த  வீட்டுக் கல்யாணம்னால் உனக்குத் தலைகால் தெரியாது.
எங்கயாவது உடைஞ்சு இருக்கா.?
அவர் கவலை அவருக்கு:)
 நான் தலையைத் தட்டிக் கொண்டு,'இதெல்லாம் நமக்குச் சகஜம் தானே' வாங்க
உள்ள போலாம்'என்று அவரை அழைத்துச் சென்றேன்.
அங்கே இருந்த  இரண்டு மணி நேரம் ஒன்றும் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்த பிறகு கழுத்து நான்  இருக்கேன், தலை உச்சி
புடைத்துக் கொண்டு நானும் இருக்கேன் என்றது.
இந்தப் புராணத்தை நிறுத்திவிடுகிறேன்:)

இன்னோரு பதிவில் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த கதா காலாட்சேபம் எல்லோரும் எப்படித்தான் ஒரே மாதிரி சொல்லிக் கொண்டு போகிறார்களோ.  ஏகாக்கிரக சிந்தனை!
எனக்கு அது இல்லை. வருந்தவேண்டிய விஷயம் தான்:)


மாப்பிள்ளைப் பையனுக்கு இரண்டு அத்தைகள்.
பெண்ணுக்கு ஒரு அத்தை ஒரு மாமி.
முறைப்படி பிள்ளைவீட்டு அத்தையும் பெண்வீட்டு அத்தையும் முதல் ஆரத்தி எடுப்பார்கள்.
அப்பவே  ஆரம்பித்தது.
அத்தையைக் கூப்பிடுங்கனு வாத்தியார் ஸ்வாமிகள் கிட்டத்தட்டத் தவளையாய்க் கத்த, முதல் அத்தை வந்துவிட்டார். அந்தப் பக்கமாக  இன்னோரு அத்தை. இன்னோரு வழியாக்ப் பெண்ணின் அத்தை.
ஆரத்தித் தட்டில் ஆரத்தியை விட்டு  முதல் அத்தை ரெடி.நீங்க வாங்க என்று பெண் வீட்டு அத்தையை அழைக்க  அவர் நாணிக் கோணிக் கொண்டு வந்தார். வீடியோ எடுப்பது அவருக்குக் கூச்சமாம்.முதல் கல்யாணம் போல.
அதாவது ஆரத்தி எடுப்பது:)
சீதா கல்யாண வைபோகம் ஒருத்தர் ஆரம்பிக்க, ஸ்ரீராமச்சந்திரனுக்கு இன்னோருவர் ஆரம்பிக்கச்  சுற்றி இருந்தவர்கள் முகத்தில் புன்னகை.
ஒருவழியாக ஆரத்தி வாசலை நோக்கிச் சென்றது.

தட்டுக் கீழே வந்ததுமே இரண்டாவது அத்தை எடுத்துவைத்துக் கொண்டதைப் பார்த்தேன்.
ஏன்  மா,என்று கேட்டதற்கு ஆவி வந்த ஆரத்திப் பாத்திரம் .கூட்டதில் தொலையக் கூடாது இல்லியா என்றார். ஆமாம் ஆமாம் என்று நகர்ந்துவிட்டேன்.அடுத்த முறைவந்தது.
ஊஞ்சல் முடிந்து எடுக்கும் ஆரத்தி. இரண்டாம் அத்தை ரெடி முகமெல்லாம் சிரிப்பாக ஆரத்திதட்டோடு முதலில் நின்றார். பெண்வீட்டுக்கு அத்தை இல்லை போல வேறு யாரோ வந்தார்கள்.

ஸ்ரீரங்கநாயகிக்கும் ஸ்ரீரங்கனுக்கும் வைபோகம் என்று அத்தை மட்டும் பாடி, முதல் அத்தையைப் பார்த்து வெற்றிப் புன்னகை  வீசிவிட்டு வெற்றிலை தாம்பூலம் சந்தனம்,ஐம்பது ரூபாய்  ஆரத்திப் பரிசு என்று வாங்கி வந்து விட்டார்.

தாலிகட்டும் நேரம். மும்முரமாக  இரு அத்தைகளும் மேடையில் ஏறிவிட்டனர். அங்கே இடமே இல்லை.  பெண்ணோட அப்பாவுக்கு மூச்சுத் திணறும் அளவிற்குக் கும்பல்.
பத்தாதற்கு வீடியோக்காரர்கள்!

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று மேடையில் அனைவரும்
நாதஸ்வரக்காரரை  மிரட்ட  இனிதே முகூர்த்தம் நிறைவேறியது.

சாப்பிடச் சென்றோம். என்னுடன் வந்தவர் முதல் அத்தை.
நான் அவரைக் கேட்டேன், என்ன ஆச்சு உங்க ரெண்டுபேருக்கும். சின்னக் குழந்தைகள் மாதிரி ஒருத்தரோட ஒருத்தர் டூ விட்டுவிட்டீர்களா.

சரோ ,லல்லு என்று இழைபவர்கள் இப்படி மாறிவிட்டீர்களே.

எல்லாம் அவள் பையன்   செய்த வேலை. என் பையனுக்கும் அவனுக்கும் ஒரே கம்பெனியில்   இண்டர்வியூ.
இவன்  அனந்தராமன், அவன்  அரவிந்த ராமன்.
இரண்டு பேரும்  நன்றாகச் செய்திருந்தார்கள்.
இருவருக்குமே  அப்பாய்ண்ட்மெண்ட்  ஆர்டர் வந்திருக்கணும்.
வந்தது  என்னவோ  அவள் பிள்ளைக்கு. இவனுக்கு ரெக்ரெட்  கார்ட்  வந்துவிட்டது.
அனந்துவோ  இடிந்து போய்விட்டான்.
இரு இரு. ஓடாதே . இதெல்லாம்   எப்ப  நடந்தது. அது ஆச்சு பத்து  வருஷம்!
??????????????????????????????????????????????????????????????????????????????????????

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

ஹுஸைனம்மா said...

// வானம் பார்த்த நிலையில்//
அதெப்படி நீங்க மட்டும் அடிக்கடி புதையல் எடுக்குறீங்க!! அதிர்ஷடம்தான்!! :-))))

வீக்கம், வலி சரியாகிட்டதா?

அத்தை கதைகள் நல்லாருக்கு. சண்டைக்கு இப்படியெல்லாம்கூடக் காரணம் உண்டா!!

sury siva said...

சீதா கல்யாண வைபோகம்

http://www.youtube.com/watch?v=xo5Hy2pOXGY

subbu rathinam

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா. இந்தத் தடவையைப் பூமியைப் பதம் பார்த்தேன் .புதையல் கிடைக்கவில்லை.
மாறாக இன்னும் சரியாகாமல் படுத்துகிறது. கணினியைத் தூக்கி எறியப் போகிறேன் என்று சிங்கம் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.
இதுவும் இல்லையானால் உங்களோடு உட்கார்ந்து டிவி பார்ப்பேன் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறேன்.

இன்னும் பல காரணங்கள் அந்த அத்தை சொன்னார். எனக்கு எழுதி முடிக்கும் வரைப் பொறுமை இல்லை:)சக்தியும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். பாடல் கேட்ட்டேன்.இப்பொழுதான் முழுமையாகக் கேட்கிறேன்.
மிகவும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொருத்தரும் நல்லபடியா ஊருக்குப்போய்ச் சேர்ற வரைக்கும் டென்ஷந்தான்.

சரி,.. வல்லிம்மா. பூமாதேவியோட அன்பளிப்பா எவ்ளோ கிடைச்சது :-)))
உடம்பைப் பார்த்துக்கோங்க.

அப்பாதுரை said...

இதெல்லாம் நமக்கு சகஜம் தானேனா அதுக்கு அர்த்தமே வேறே இல்லையோ? பராக்கு பாக்கற அர்த்தமாயிடாதோ?

: விழுந்து அடிபட்டுதா?
: இல்ல இல்ல
: உனக்கு இல்லே, தரைக்கு அடிப்பட்டுதானு கேட்டேன்

ஹிஹி.. எங்க குடும்ப ஜோக்.

ராமலக்ஷ்மி said...

இப்போது பரவாயில்லையா?

தலைப்பும் /ஒரேவானம் தான்.சேர்க்கும் பிரிக்கும் காற்று/ ஃபோட்டோ கேப்ஷனும் மிகப் பொருத்தம்.

அற்பக் காரணங்களை மனதில் சுமந்து விலகியே வாழுகிற உறவுகள் எத்தனை! மனித வாழ்வின் விநோதங்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், கிடைத்தது கண்வலி,தலைவலி,ஒரு தோள் வலி.ப்ரஷர் ஏறினது.எல்லாம் அப்படித்தான்.
எல்லாரையும் பார்த்துப் பேச முடிந்தது. அது இதெல்லத்தையும் விட பெரிய சமாச்சாரம் இல்லையாமா. தான்க்ஸ் கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்வார். என்ன அப்பவே விழுவீர்களான்னு கேக்காதீங்கொ.
அப்போ மாடிக்கு மாடி தாவும் வாலில்லாத ஜன்மம்.
அடி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அம்மா முதுகில் தோசை வார்ப்பார்.
அம்மா என் கை கணுக்கால் எல்லாம்பார்த்துவிட்டு உனக்கே இப்படிக் காயம் ன்னா ,நீ விழுந்த இடத்தில் பள்ளமாயிருக்குமே என்று சொல்லி சிரிக்க வைப்பார்,. அதைத் தொடர்ந்து என் குழந்தைகளுக்கும் அதே உபயோகிப்பேன்:)
பராக்குப் பார்க்கலைப்பா. வண்டியின்
கதவு எதிர்பாராமல் என் மேல் மோத
பூப்போல சரீரம் கீழே விழுந்துவிட்டது:)டீ ஹீ ஹீ!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமலக்ஷ்மி, அவ்வப்போது தலை சுற்றுவது நின்றிருக்கிறது.அந்தப் பெரிய அத்தை எத்தனையோ காரணங்கள் சொன்னார். தலையில் பதியவில்லை:)எழுத ஆரம்பித்து விட்டேன். பாதியில் முடித்துவிட்டேன். பிரிவு தரும் வருத்தம் எத்தனையோ. மீண்டும் அவர்கள் தோழமையோடு இருக்க என் பிரார்த்தனைகள். நன்றிமா.

ADHI VENKAT said...

இப்ப உடம்பு எப்படிம்மா இருக்கு. கண்ணுக்கு மருத்துவரை பார்த்தீங்களா?

அற்ப காரணங்களுக்காக முறைச்சுக்கிறவங்க தான் நிறைய....:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி. கண் மருத்துவரை வெள்ளியன்று பார்க்கணும்.சரியாகிடும்.ரோஷ்ணிக்கு என் அன்பு.

வெங்கட் நாகராஜ் said...

இப்ப எப்படிம்மா இருக்கீங்க?

Geetha Sambasivam said...

பிறந்த வீட்டுக் கல்யாணம்னால் உனக்குத் தலைகால் தெரியாது.
எங்கயாவது உடைஞ்சு இருக்கா.?
அவர் கவலை அவருக்கு:)//

ஹிஹிஹிஹி



இதுவும் இல்லையானால் உங்களோடு உட்கார்ந்து டிவி பார்ப்பேன் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறேன்//


ஹிஹிஹீஈஈஈஈ சேம் ப்ளட்!

விழுந்தது தெரியும், விழுந்த கதை இப்போத் தான் தெரியும். :P

வல்லிசிம்ஹன் said...

என்ன செய்யறது கீதா. பெட்டர் ஹாஃல்ப் பிட்டர் ஹால்ஃப்னு ஆகிடறது சிலசமயம்.:)
இவராஇ யாரு மேட்டைப் பார்த்து காரை நிறுத்தச் சொன்னது.

இதில வேற பார்த்து பார்த்துனு அலறுகிறார்:)
காலைக் கீழ வச்சதும், கதவிலிருந்து கையை எடுத்ததும். ஸ்விங் ஆக்ஷனில் கதவு என் மேல மோதி டமால்:)பசங்க கிட்ட எல்லாம் ஒரே புலம்பல். வேற.இட்டோட போச்சுனுன்னு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

பத்து நாட்கள் பட்டாச்சு வெங்கட்.
இப்ப தெளிவா இருக்கேன்:)
நன்றி மா. உங்க அம்மா நங்கநல்லூரிலியே தடுமாறுகிறாள். இன்னும் ஸ்ரீரங்கம் போகணுமாம்.இப்போதைய டயலாக்:)

இராஜராஜேஸ்வரி said...

கரம்பிடித்தவர்தான் கரம் கொடுத்தார்.

"விலகும் உறவுகள் சேரும் திருமணம்"

உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் !!

ஸ்ரீராம். said...

இந்தப் பதிவை விட்டிருக்கிறேன்...! இப்போது முற்றிலும் தேவலாமா? விழுந்ததினால் கண் மருத்துவரைப் பார்க்க வேண்டி வந்ததா, இல்லை வழக்கமான ரெவியூவா?

உறவுகளில் இதெல்லாம் சகஜமப்பா.... என்று தோன்றினாலும் இது இத்தனை நாள் நீடிப்பது ஆச்சர்யம்தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.

பாவம் அவருக்குக் கஷ்டம்தான்.
உண்மையாகவேக் கவலைப் பட ஆரம்பித்துவிட்டார்.
இனி விழுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். அதனால என்னப்பா.அப்புறம் பெயர் சொல்லாத சுப்பு சார் வாசனை அடிக்காம இருக்கணுமேன்னு வேண்டிக்கொண்டேன்(உங்கவீட்டுப்பக்கம்)
விழுந்தததோட பாதிப்புதான் வைத்தியரிடம் நேற்றுப் போயிருக்கவேண்டும். அதற்கு முன்னால் உறவினர் ஒருவருக்கு உடல் முடியாமல் போய்விட்டது.அடுத்த வாரம்தான் போக முடியும்.நன்றி மா.