எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பாலைவன ரோஜாக்களுக்கு ஏது வாசம்
என்று நினைத்தே காமிராக்களுக்குள் அடைத்தேன்.
மக்கள் தொலைக்காட்சியில்
வேறுவிதமாக விளக்கினார்கள்.
இந்த ரோஜாக்களுக்கும் வித வித வாசனைகள் உண்டாம்.
அதற்காக ஒரு இணைய தளமும் இருக்கிறது.
www.adeniumsindia.com
இதில் இந்த அழகான செடிகளை வளர்ப்பது, உரமிடுவது,ஒட்டுச் செடிகள்
உற்பத்தி செய்து பலவித வாசனைகளைக் கொண்ட
மற்றவகை ரோஜாக்களை உற்பத்தி செய்வது பற்றியும்
விரிவாக க் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நம் பதிவர்களில் பலருக்கு தோட்டக்கலையில்
மிகவும் ஆர்வம் இருப்பது தெரிந்ததே.
அதுவும் டெல்லி, ஜெய்ப்பூர் பகுதிகள்,
அஹமதாபாது போன்ற வெயிலும் குளிரும் அதிகமாக
இருக்கும் இடங்களிலும் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றும் விவரித்துச் சொன்ன அம்மா, மற்ற இடங்களிலும் வளர்க்க உபயோகமான குறிப்புகளைக் கொடுத்தார்கள்.
இந்தப் பதிவும் நண்பர்களுக்குப் பயன்படும் என்று
நினைக்கிறேன்.
பஞ்சகல்யாணிக்கு என்ன வேலை என்று கேட்காதீர்கள். அது படிக்க வந்திருக்கிறது செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து.:)
17 comments:
கொடுத்திருக்கும் சுட்டியும் பயனுள்ளது. நல்ல பகிர்வு வல்லிம்மா.
/டெல்லி, ஜெய்ப்பூர் பகுதிகள்,
அஹமதாபாது போன்ற வெயிலும் குளிரும் அதிகமாக
இருக்கும் இடங்களிலும் இதன் வளர்ச்சி /
இவற்றை பெங்களூரிலும் பார்த்த மாதிரி உள்ளது.
இரண்டாவது படம் ரொம்ப அழகு......
பஞ்சகல்யாணி... :))
Is the website address correct? Or is it *www.adeniumsindia.com* ?
வரணும் ராமலக்ஷ்மி. உங்க ஊரில் இல்லாமல் இருக்குமா. :) கள்ளிச் செடிகள் வளருகிறதே இதுவும் இருக்கும். க்ரீன் ஹௌசில் வைப்பார்களாக இருக்கும். தள சுட்டியில் ஈ விட்டுப் போயிருக்கிறது.:)
காப்பி செய்யும்போது போட்டுவிடுங்கள்.நன்றிமா.
வரணும் வெங்கட். கணினி வைரசில் படுத்துவிட்டது. மீண்டும் எழுந்து ஓடட்டும் என்பதற்காக பஞ்சகல்யாணியைக் கூப்பிட்டேன்:)
பொம்மைக் கல்யாணிதான்.
துபாய்காரர்கள்.பொதுவாக அமீரகத்துக்காரர்களுக்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்.எங்க வீட்டிலயே நிறைய வந்திருக்கிறது. நன்றி மா.
வரணும் கௌதமன்.இணைய அட்ரஸ் தப்பு. ஈ சேர்த்துவிட்டேன். சிங்கம்தான் சொன்னார். உன் பெயரில் இ எடுத்தால் உனக்குக் கோபம் வராதானு கமெண்ட் வேற. ஆநந்தத்திற்கு மிஸ்ஸ்ட் கால் கொடுக்க ஆரம்பித்திருக்கேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. மிகவும் நன்றிமா.
பகிர்வுக்கு நன்றி வல்லிமா..
சுட்டியையும் தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி!
பஞ்ச கல்யாணி எங்களுக்கு போட்டியாகவா?! :-)
சின்ன வயசிலேர்ந்து நிறையா செடி வெச்சு வீடு வேணும்னு ஆசை தான்... பாட்டி வீட்டுல அத்தன மரம்/செடி உண்டு. ஆனா எங்க வீட்டுல கிடையாது!
அதனால என்ன-- சின்ன வயசிலேர்ந்து பூனை வளர்க்கணும்னு ஆசை பட்டது இப்போ நடக்கறது போல இதுவும் நடக்கும்! :D அதுவரைக்கும், இந்த details மட்டும் note பண்ணிக்கறேன்...
"punch kalyani"-- looking good! :)
படங்களும், தகவல்களும் அழகு.
/தள சுட்டியில் ஈ/
கூகுளே ‘இதையா கேட்கிறாய்’ என சரிசெய்து கூட்டிச் சென்று விட்டது.
நாங்களும் மாடியில் ஒரு சில பூச் செடிகள் வைத்துள்ளோம். நித்தியமல்லி, சிகப்பு, மற்றும் மஞ்சள் செம்பருத்தி என்று...விருப்பமிருந்தால் பூக்கும்!
படங்கள் அருமை ! பாராட்டுக்கள் !
அன்பு மலர் மிகவும் நன்றி மா.
@மாதங்கி செடிகள் மனசுக்கு ரொம்ப இதம். நிறைய வளருங்கோ. அப்பா அம்மாவைக் கவனிச்சுக்கச் சொல்லுங்கோ:)
@ ராஜி மா, பஞ்சகல்யானியின் அழகு உங்கள் கவிதை கதைக்கு ஈடாகுமா!!!!
அன்பு ரால, கூகிள் நல்ல மாஸ்டர்தான்.:)
அன்பு ஆதி, மிகவும் நன்றி மா.
@ வரணும் ஸ்ரீராம் எல்லோருக்கும் தனிதனியாக பதில் போட முடியவில்லை. பூக்கள் பூக்கிற நேரந்தான் இது. தொட்டியை மாற்றிப் பாருங்கள்.கட்டாயம் பூக்கும்.
நன்றி தனபாலன்.
ஸ்ப்ளிட் ரோஜாக்களா இவை? இல்லைனா இவை வேறேயா? நல்லா இருக்கு,. குதிரையை ஓட்டிட்டுப் போகலாம், ஆனால் கீழே தள்ளின அனுபவம் இருக்கா; பயம்ம்ம்ம்மா இருக்கு. :))))))
Split rose னு கேட்டு இதுக்குக் கொடுத்த பின்னூட்டம் காக்கா கொண்டு போச்சா?? :))))))
Post a Comment