உயர்ந்து வீட்டின் மூன்றாம் தளத்தையும் தொட்டுவிட்டது இந்த
டெம்பிள் ட்ரீ..
அவ்வப்போது உதிர்க்கும் பூக்களின் மணம் மனதை மயக்கும்.
அதைக் குனிந்து எடுத்து முகர்பவர் சிலர்.
இறைவனுக்கு இது ஏலாது என்பவர் சிலர்.
வீட்டின் அடித்தளத்தைத் துன்புறுத்தக் கூடும்
எடுத்துவிடலாமே இது சிலரின் கருத்து.
பெயருக்கு ஏற்ற மாதிரி
ஒரு கோபுரத்தின் கம்பீரத்தோடு
கடவுளை அடைய இன்னும் உயருகிறது இந்த உயிர்.
எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
29 comments:
எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு உயர்கிறது டெம்பிள் ட்ரீ. -அருமையாகச் சொல்லியிருக்கீங்க. படமும் நல்லா வந்திரு்க்கு. மிக ரசித்தேன்.
/எல்லாச் சொற்களியும் உரமாக எடுத்துக் கொண்டு./
கவிதையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் இதன் கம்பீரத்தை. அருமை. இன்னும் உயர்ந்து வளர்ந்து பூத்துக் குலுங்கட்டும்.
கடவுளை அடைய இன்னும் உயருகிறது இந்த உயிர்.
எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு.//
மனிதருக்கும் பொருந்தும். :))))) எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்பது சிலராலே மட்டும் இயலும். அதற்கு இது முன்மாதிரி.
'எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு' - நானும் மிகவும் இரசித்தேன்.
நன்றி கணேஷ். எங்கள் எஜமானர் வைத்த மரம். அவர் போலவே பொறுமையும் உரமும் பெற்று வளர்ந்திருக்கிறது.
உங்களின் அருமையான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
//கடவுளை அடைய இன்னும் உயருகிறது இந்த உயிர்.
எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு//
பின்றீங்க கவிதாயினி வல்லிம்மா..
படமும் அருமையா வந்துருக்கு. அவன் படைச்ச படைப்புகள்ல அவனுக்கே ஆகாததுன்னு ஒன்னு இருக்கா என்ன!!!!
வரணும் ராமலக்ஷ்மி. என் தந்தை முதன்முதலில் காரைக்குடியில் வீட்டருகே வைத்தார். பிறகு ஒரு கிளை கல்பாக்கத்துக்கு வந்தது.
அப்பொழுதிலிருந்து இவரை நச்சரித்துக் கொண்டே இருப்பேன்.
வந்து பத்னைந்து வருடமாகிறது.வெகு மென்மையான,வண்ணத்துடன் மணமும் கொண்டது.உங்கள் ஊர் செண்பகம் போல.;)வைத்தவரின் குணத்தை அது கொண்டிருக்கிறது.
உண்மைதான் கீதா. நல்லவற்றையும் மற்றவற்றையும் ஒன்றாக் கண்டுகொள்ளும் குணம் வந்துவிட்டால் வளர்வது சுலபம்.எங்கள் வீட்டில் தொட்டால்சிணுங்கியும் இருக்கிறது:)
நன்றி கௌதமன்.
தற்செயலாக அமையும் சொற்கள் எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது.
நல்லதுதான்.
சாரல். கவிதாயினி லெவலுக்கு என்னை உயர்த்திட்டீங்களா. டெம்பிள் ட்ரீக்குத் தான் நன்றி மா.
ஆமாம் இந்தப் பூக்கள் இறைவன் சந்நிதானத்துக்கு ஆகாதுன்னு சொன்னாங்க. நான் ஒரு பெரிய தாம்பாளத்தில் தண்ணீர் விட்டு கூடத்தில் வைத்துவிடுவேன்:)
எல்லோரும் பாராட்டிய வரிகளை நானும் பாராட்டுகிறேன். கூட பின்னூட்டத்திலிருந்து ஒரு வரியும் சேர்த்து....!
//வைத்தவரின் குணத்தை அது கொண்டிருக்கிறது//
வரணும் ஸ்ரீராம்.
உண்மைதான். அவர் பொறுமை எனக்கு வராது.
நல்ல உழைப்பாளி.
நன்றி மா.
கடவுளை அடைய இன்னும் உயருகிறது இந்த உயிர்.
எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு.//
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று எல்லா வற்றையும் உரமாக எடுத்து கொண்டதோ!
நல்ல கவிநய பதிவு அக்கா.
//எல்லாச் சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு//
மனிதர்களாகிய நாமும் இப்படித் தான் இருக்கணும்னு நினைக்கிறேன்.
அந்த மரம் கம்பீரமாக உயர்ந்து நின்று பூத்துக் குலுங்கி மணம் பரப்பட்டும்...
எனக்கும் பிடித்திருக்கிறது.
மரம் கம்பீரமாகத்தான் நிற்கிறது....
படம் நன்றாக இருக்கிறது....
அழகாகச் சொன்னீர்கள் வல்லிம்மா. நானும் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி கோமதி.
கிட்டத்தட்ட எல்லா மரங்களும் இந்த வகைதான். நமக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுக்கவே கடவுள் படைத்திருக்கிறார் என்று தோன்றும்.
ஆமாம், வாழ்வில் உயர்வடைய நம்பிக்கையும் பொறுமையும் எவ்வளவு அவசியம் என்பதை உணர நம் தோட்டத்துக்குள் உட்கார்ந்திருந்தால் போதும். நூறு புத்திமதிகள் கிடைக்கும்.
உங்கள் தோட்டப் பதிவைப் படித்ததும் எனக்கு அதுதான் தோன்றியது ஆதி.
வரணும் திருமதி ஸ்ரீதர்.உங்கள் ஊரிலும் இப்போது வசந்தம் வந்திருக்கணுமே.
நன்றி வெங்கட்.
மரத்தைப் போல உறுதியும் உரமும் எப்போதும் நம்மிடம் இருக்கவேண்டும் என்றே அதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்.
அன்பு கவிநயா, உங்களிடம் இதே உறுதியையும் நம்பிக்கையையும் பார்த்திருக்கிறேன்.அமைதியையும் தான்.
அசத்தல் பகிர்வு !
உயரும் உயிர் வளர்ந்து நிலைக்கட்டும்.
மரமும் அழகு படமும் அழகு உங்கள் கவிதை வர்ணனையும் அழகு
சகஸ்ர அலங்கார தீபமண்டபத்தின் மேல் உள்ள செந்தூர ஹனுமனை தரிசிக்க இங்கு வாருங்கள் வல்லியம்மா.
http://garudasevai.blogspot.in/2012/02/blog-post.html
படம் பிரமாதம். என்ன பூ இது?
படத்தை விட வரிகள் பிரமாதம். சுருக்னாலும் திரும்பத் திரும்பப் படிக்கத் தோணுது.
ரொம்ப ரொம்பநன்றி.கைலாஷி. ஆஞ்சனேயர் கண்ணைக் கொள்ளை கொள்ளும் அழகோடு மனதில் நிறைந்து விட்டார்.
மிகவும் நன்றி.
வரணும் துரை. ஹெட்டர்ல இருக்கும் லில்லி உங்கள் ஊரில் வாங்கியதுதான். பல்ப் ஆக வாங்கி வந்தோம். ஸ்விட்சர்லாண்ட் குளிர் அதற்குக் ஒத்துக் கொண்டுவிட்டது. ஐந்துவருடங்களுக்கு முன் எடுத்தது.
ஏதோஅன்று நடந்தது என்னை எழுத வைத்தது.:)
Post a Comment