இத்தனைக்கும் உங்க அம்மாவோட அறுபதுக்கு சம்பந்திகள் வரலைன்னு ஒரு இஷ்யூ ஆச்சே அதுமாதிரி ஏதாவது கேட்டேனா'' என்று மீண்டும் புலம்பலை ஆரம்பித்தவளைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது.
''அம்மா அம்மானு நீயும் தான் எங்க அம்மாகிட்டப் பாசமாயிருந்த. அவளும் பெருமாள் கிட்டப் போய் 15 வருஷம் ஆச்சு . இப்ப என்னத்துக்கு அவளை இழுக்கிற??
'அப்ப எல்லாரும்(என் அக்கா,தங்கை,பாட்டி) சேர்ந்து நான் அன்னிக்கு சாயந்திரம் காரைக்குடிக்குப் போறேன்னூ
சொன்னதுக்கு'' ..........,சரி வேண்டாம் நான் ஒண்ணும் சொல்லலை. விடுங்கோ.
என்னைக்கு ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்கு.!
இவள் ஏழையா:)
ஒரு தனியார் கம்பனியின் தலைமை அதிகாரியின் பெண்டாட்டி. வாழ்க்கைத்துணை.
அண்ணா நகர்லியே முதலாக வீடு வாங்கின பெருமை. ஊஞ்சலென்ன, போர்ட்டிகோ என்ன,
தோட்டம் என்ன. மாடு ஒன்றுதான் இல்லை.
அலுக்காமல் என் உயர்வுக்கு துணை இருந்தவள் தான். எத்தனை வெளிநாடுகள்
போய்வந்தாலும் அலுக்காமல் துணிமணிகள் ,மருந்துகள் மொத்தமும்
அழகாக அன்போடு எடுத்து வைப்பாள்.
'எங்க இரண்டு பேருக்கும் இதுதான் சரிப்படும். அவரோட ஸ்டைலே வேற. நானே வேற.
கூடவே இருந்தால் தகறார் வரச் சந்தர்ப்பங்கள் அதிகம்''னு வேற சொல்லுவாள்..
இதோ ரிடயரும் ஆகி இரண்டு வருஷங்கள் போயாச்சு.
அதிலயும் அவளுக்கு ஆதங்கம்.
''ஊர்ல உலகத்தில ரிடயராவதற்கும் ,எங்க வீட்ல ரிடயராகரதுக்கும் வித்யாசம் உண்டு தெரியுமோ விமலா.?
இவர் இன்னமும் ஆஃபீஸ் போகிறார்..என்னன்னால் கன்சல்டண்டாம் !!
நினைத்த பொது போகலாம் வரலாம் .மீட்டிங் இருக்கிற அன்னிக்கு முழு நாள் என்று யாரிடமோ அளந்து கொண்டிருந்தாள்.
என் கதையை யார்கிட்டயோ சொல்றியே 'என்று கேட்டால் '' நிஜத்தைத் தானே சொல்றேன்.
நீங்க ரிடையரானால் என்ன கோவிலுக்குப் போகணும், எந்த பாக்கேஜ் டூர் எடுக்கனும்னு கனவு கண்டு கொன்டிருந்தால், நீங்கள் இப்படி செய்து இருக்கிறீர்கள்.''
என்கிறாள் .
''நான் வீட்டிலிருந்தால் உனக்குத் தான் சிரமம்.
இப்பப் பாரு சுலபமா கார்ந்ப்லேக்ஸ் சாப்பிட்டு விட்டு ,மதியம் அலுவலக காண்டீனில் பத்திய சாப்பாட்டை முடித்துக் கொள்கிறேன்.
சாயந்திரம் நானும் நீயும் பேரக்குழந்தைகளும் பார்க் போகிறோம்.
உனக்கு நடையாச்சு.எனக்கு குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷம்.
இதில கஷ்டப்பட என்ன இருக்கு ?''
''அதானே!! நான் செய்ததையே செய்துண்டு இருக்கேன். ஒரு மாற்றமும்
இல்லை. நாப்பைந்து வருஷம் இப்படியே போயாச்சு.
செக்கு மாடு மாதிரி சுத்தி வந்து.''....முடிக்காமல் அழ ஆரம்பித்துவிட்டாள் ஜானகி.
என்னையும் பட்டம் படிக்க விட்டிருந்தால் , வேலைக்குப் போயிருக்கலாம்.
இப்ப இந்தப் பெண்கள் ,
பறக்கிற மாதிரி நானும் ஏதாவது சாதிச்சிருப்பேன்.''
''அதுக்குப்புறம் எனக்கும் என் வயசுக்கு ஏத்த தோழிகள், எனக்கு என்று ஒரு
குழு, சிரிக்க,பேச,அழ எல்லாத்துக்கும்தான். ''
எனக்குப் புரியலை ஜானு. இப்ப இந்த வாழ்வுல என்ன குறை ?
நீ சந்தோஷமாத் தான இருக்க.
இந்த அறுபதாவது பிறந்த நாளுக்கு மட்டும் , உனக்கு திடீர்னு
என்ன ஆச்சு.
பிள்ளைகள் உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறார்கள்.
பெரியவன் நுங்கம்பாக்கம் ஸ்ரிநிவாசர் கோவிலில் சர்க்கரைப் பொங்கல் சொல்லி இருக்கிறான். சின்னவன் புரசைவாக்கம் பிள்ளையார் கோவிலில் நூத்தி எட்டு கொழுக்கட்டைக்கு சொல்லி இருக்கிறான்.
நாளை சாயந்திரம் வந்துவிடுவார்கள்.
நேத்திக்கு நடந்த சமாசாரத்துக்கு இன்னிக்கு வருத்தப் படாதே.! என்றேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

10 comments:
ரெண்டாவது பாகம் போட்டாச்சா வல்லிம்மா ரெண்டு பாகமும் நன்றாக உள்ளது வல்லிம்மா. நீங்கள் சொல்வது போல் பெண் குழந்தை ஒன்று இருந்தால் வீட்டிற்கு அழகுதான் வல்லிம்மா:))))
நல்லாருக்கு வல்லிம்மா.. சரசரன்னு எழுத்து நடை அப்படியே இழுத்துக்கொண்டு போகிறது :-))
ரொம்பத்தெரிஞ்ச 'ஆத்து' விஷயங்கள் எல்லாம் வந்துண்டு இருக்கு:-))))))
நல்லாத் தேறிட்டீங்க வல்லி.
நம்மைச்சுற்றி நடப்பதைக் கண்திறந்து பார்த்தாலே கதைக்கரு கோடி கிட்டும்.
சபாஷ்!
வாழ்த்து(க்)கள்.
வாங்க சுமதி . எழுதி வச்சுட்டேன். சரி போட்டுடலாம்னு பதிவிட்டேன். கை சும்மா இருக்காது:).கட்டாயம் நாம சொல்கிறதைக் கேட்க ஒரு பொண்ணு வேண்டும்பா.:)
வாங்கப்பா சாரல். உங்க பின்னூட்டத்தைப் படிக்கும் போது ஜோரா மழை பெய்து கொண்டிருந்தது. . இதமா காத்து.உங்க கமெண்டும் மனதை வருடுகிறது நன்றிம்மா.
தெரிஞ்சவங்களோட வாழ்க்கை வரலாறு கண்ணு முன்னால ஓடுதா துளசிமா.:)
அநேகமா எல்லா வீட்லயும் இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டி இருப்பாங்கன்னு இனைக்கிறேன். ரெண்டு நாள் முன்னாடி இந்தத் தம்பதியைப் பார்த்தேன். கொஞ்சம் கற்பனை.:)
கதை வசனம் நல்லாவே ஓடுது.. :)
//அநேகமா எல்லாவீட்டிலயும் இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்,//
உண்மை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
தலைப்பு நன்றாக இருக்கு அக்கா.
அன்பு முத்து,
எல்லாம் நாம பேசற வசனம் தானே:)
இவர் கூட கேட்பார். எல்லாவற்றையும் ஒரு டிராமா கோணத்திலியே பாக்கறியேன்னு:))
சினிமா வசனம் எழுதப் போயிடட்டுமா:)
வரணும் தங்கச்சி. தலைப்பு நம் வாழ்வு பூராவுக்கும் பொருந்தும்.
நீங்க எழுத ஆரம்பிச்சிடுங்க. எடிட் செய்யத் துணைக்கு ஆளும் இருக்காங்களே.:)
Post a Comment