மக்களே,பெருமதிப்பிற்குரிய தமிழ் வலைப்பதிவர்களே
வணக்கம்.
கிட்டத்தட்ட எட்டு பேராவது விசாரிச்சுட்டாங்க. ஏன் எழுதலை கொஞ்ச நாளா அப்படீன்னு.
ரொம்பவே மகிழ்ச்சியாப் போய், தலை கனம் கூடிடுச்சு.
அதற்காக ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவாங்களேன்னு தங்கவேலு வசனம் பேச முடியுமா.
நம்ம எழுத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
என்னவெல்லாம் இந்த நாலு வருஷம் எழுதி இருக்கேன்னு ஒரு சுய அலசலில் இந்தப் பத்து நாட்கள் ஓடி விட்டனப்பா.
ஆரம்பம் என்னவொ பூஜ்யம் பின்னூட்டத்தோடுதான். ஃபிப்ரவரி 2006 ல ஆரம்பித்த ஆங்கில வலைப்பூ ,
துளசி, மஞ்சுரார் அவர்கள் உதவியால் கலப்பைக்கு மாறி அறுவடை செய்துதான் வரேன்.
ஆகக் கூடி நான்கு வருஷம் ஓடிப்போச்சு. ரெண்டு பத்திரிக்கையில் நம்ம பேரு வேற வந்துடுத்தா....கேக்க வேண்டாம். ஒரே தொலைபேசி அழைப்பும், இங்க வரீங்களா, அந்தப் பத்திரிகைல எழுதறீங்களான்னு ஒரே கேள்வி மயம்.:)
உறவுகாரங்களை மட்டும் நம்ப வைக்க முடியவில்லை..:)
நீயா,கதையா என்று இரண்டு மூன்று பெரியவர்கள் கேட்டார்கள்.
ஆமா ஆமா என்று ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டியதாப் போச்சு.
என் குழந்தைகள் மட்டும் பெரீயதாகத் தலை ஆட்டி ஆமோதித்தார்கள். நீ அப்பவே ரீல் விடுவியேம்மா. ஒரு சமாசாரத்தையாவது கண்,காது, மூக்கு வைக்காம சொல்லுவியா.
உதாரணத்துக்கு சாலையைக் கடந்து நடைப் பயிற்சி செய்ய வணங்கவில்லை என்று ஒரு விஷயத்தைச் சொல்ல உன்னால்தான், பல்லவனையும், பாங்க் ஆஃப் பரோடாவையும், பக்கத்துவீட்டில் மண் கொட்டிக் கிடப்பதால் வழுக்குகிறது என்று இத்தியாதி நூறு பொய் சொல்ல முடியும்.
அத்தனையையும் கோர்வையாக விவரித்து, ''ஐய்யோ பாவம்டா அம்மா. பாவம் , பயிற்சி செய்ய முடியவில்லை, நாம் வேணுமானால் மாடியில் ஒரு பார்க் கட்டிக் கொடுத்துவிடலாம்'' என்று சொல்லும் அளவுக்கு வைத்துவிடுவாய் நீ!!
இப்படிப் பேசிப் பேசிப் பேசி நான் சொல்லும் எந்த விஷயத்தையும் தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சி செய்துதான் ஒப்புக் கொள்ளுவார்கள். ஒரே விஷயத்தைக் காலையில் ஒரு மகன் விசாரித்து வைத்துக் கொள்ளுவான். அதே விஷயத்தைப் பகலில் இன்னோரு மகன் ஏம்மா அப்படியா??? அப்டீனு கேட்டுப்பான்.
கடைசியா ராத்திரி பொண்ணு கேப்பாங்க. ஏதோ கேள்விப்பட்டேனே நிஜமா? என்று. எல்லோருக்கும் கையில் சிவப்பு பெரி,நீல பெரி எல்லாம் இருக்கு .உடனுக்குடன் உறுதி செய்து கொண்டு நம்மை மாட்டுவார்கள். சிலசமயம் என்னையும் மீறி உண்மையைச் சொல்லிவிடுவேன்:)
அதுக்காக இந்த வலைப்பூவை கப்சா பதிவுன்னு நினைக்கக் கூடாது நீங்க.:)
அப்பப்போ நல்ல விஷயங்களும் எழுதி இருக்கிறேன்.
இதய பூர்வமான நன்றி சொல்லி ,உங்களோட வாழ்த்துகளை எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்த பதிவுக்குப் போகலாம்.:) நன்றிங்கோவ்!!
எல்லோரும் வாழ வேண்டும்.

33 comments:
வருட நிறைவு வாழ்த்துக்கள் வல்லிம்மா.. நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா?..புத்துணர்ச்சியோட பதிவை படிக்கும்போதே ஃபார்முக்கு வந்துடீங்கன்னு தெரியுது.
வாழ்த்துகளும் வணக்கங்களும்.
வாழ்த்துக்கள் வல்லியம்மா . இதே உற்சாகத்துடன் இன்னும் பல வருடம் எழுத வேண்டும்
வாங்கப்பா சாரல். துளசில்லாம் ஆறு வருடமா இருக்காங்க. நமக்கு வெறும் நாலு வருஷம்தானே ஆகிறதுன்னு பார்த்தேன். எங்க குரு சொன்னது எந்த விஷயமானாலும் பதிவாப் போட்டுடணும் என்கிற பாடம்:)
நன்றிம்மா. இன்னும் சுவாரஸ்யமா எழுதணும்.முயற்சிக்கிறேன்.
வணக்கம் பாலராஜன் கீதா.ரொம்ப நாளாச்சு பார்த்து. வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
கலக்கலான பதிவு, வாழ்த்துகள் வல்லி. இன்னும் பல பத்திரிகைகளிலும் உங்கள் பதிவுகள் பற்றி வரவும் வாழ்த்துகள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் வல்லிம்மா. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.
இனிய வாழ்த்து(க்)கள்.
ஜூப்பர் பதிவு:-))))))
நம்ம தோஸ்து 'குல்மால்' சொல்லும் விஷயங்களில் 95% சக்னு வெட்டிப்போட்டால் மீதி இருப்பது அத்தனையும் சத்தியமான உண்மை:-))))
வாழ்த்துக்கள்.. :)
வாழ்த்துக்கள் வல்லியம்மா...இன்னும் பல ஆண்டுகள் உங்கள் நடையில் நீங்க எழுதணும், நாங்க படிக்கணும். :)
வாழ்த்துக்கள் வல்லிம்மா ;-))
நாலு வருஷம், ஆறு வருஷம்னெல்லாம் பாக்கும்போது, பிரமிப்பா இருக்குது. பிறர் மனம் புண்படாம எழுதுறதுல, உங்களையெல்லாம் முன்மாதிரியா எடுத்துக்கணும் நாங்க;
//மக்களே,பெருமதிப்பிற்குரிய தமிழ் வலைப்பதிவர்களே வணக்கம்.//
அடுத்தது, சினிமாவா, அரசியலா வல்லிம்மா? (ஹி..ஹி.. சும்மா..)
துளசிம்மா ரொம்ப ரொம்ப நன்றி. பல பதிவுகளில் உங்களுடையதும், கீதாவுடையதும்தான் பின்னூட்டங்கள் இருக்கின்றன..
வரணும்பா கீதா. வெறும் நான்கு வருஷம் தான் ஆகியிருக்கிறது.
ஏதோ மாமாங்கம் ஆன உணர்வுதான் வருகிறது. பல பல நேரங்களில்
இந்த எழுத்து என்னைப் பலவாறு மீட்டிருக்கிறது.
இனியும் நல்லபடியா எழுதணும்னு தான் நினைக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.எந்த ஒருபதிவையும்
தவறவிடாமல் ,பின்னூட்டமிடும் உங்கள் நற்குணம் என்னை அதிசயிக்க வைக்கிறது.உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளரவேண்டும்.
வரணும் மௌலி. முன்பு போல எழுதாவிட்டாலும் அவ்வப்போது எழுத எண்ணுகிறேன். இப்போது நிறையப் படிப்பதில் ஆசை அதிகமாகிறது.
அர்த்தமுள்ள உங்கள் பதிவுகளைப் போல வேறு ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்.
ரொம்ப நன்றி முத்துலட்சுமி. :)
நன்றி கோபிநாத். உங்கள் எல்லோரையும் பார்க்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வரணும் ஹுசைனம்மா.ரொம்ப நன்றி. துளசி,கீதா இன்னும் உங்களைப் போன்றவர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்ளும் விஷயங்கள் என்னை அதிசயிக்க வைக்கின்றன.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அந்த வரிகளில் ஆரம்பித்துவிட்டேன். மாற்றி எழுதுவது எப்பவுமே பிடிக்காது.:)
நமக்கு அரசியல் சினிமா எல்லாம் படிக்கத்தானே பிடிக்கும்!!!
வாழ்த்துக்கள், வல்லி!!
வாழ்த்துக்கள் வல்லியம்மா...;) //...இன்னும் பல ஆண்டுகள் உங்கள் நடையில் நீங்க எழுதணும், நாங்க படிக்கணும். :)// repeeeeatu...:)
வாழ்த்துக்கள் !வல்லி அக்கா.
உங்கள் எழுத்துக்கள் இன்னும் நிறைய பத்திரிக்கைகளில் வர வாழ்த்துக்கள்.
நாலு வருடங்களில் எத்தனைப் பேரை உற்சாகப் படுத்தி எழுதவைத்தது இருக்கிறீர்கள்,(குறிப்பாய் என்னை) உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் இளையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
வாழ்த்துக்கள்!
வரணும் தக்குடு.ரொம்ப நன்றிம்மா வாழ்த்துகளுக்கு.
அன்பு தங்கை கோமதிக்கு ரொம்ப நன்றி. உங்கள் எழுத்துகள் ஆக்க பூர்வமாக இருக்கின்றன.இந்தச் சிறு முயற்சி பெரும்பலனைத்தரும் எதிகாலத்தில் .அப்போது நான் வந்து வாழ்த்துவேன். உங்க அக்கா.:)
அன்பு நானானி. ரொம்ப நன்றிப்பா.
இன்னிக்கு னைன் வெஸ்ட் பக்கம் வரணும் என்று நினைத்தேன்.
அட எழுதியாச்சா.அச்சா 4 வருஷம் ஆறதா? இப்பொ சமீபத்தில தானே வாழ்த்தினதா ஞ்யாபகம் . அதுக்குள்ல ஒரு வருஷம் போயிடுத்து!! மனமார்ந்த வாழ்த்துக்கள்:)
வரணும் ஜயஷ்ரீ.நன்றி. இன்னும் நல்லபடியாக எழுதணும்.அடுத்த வருஷமும் பார்க்கலாம்.
வல்லி அக்கா, உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
உங்கள் ஆசிர்வாதங்களை எல்லோருக்கும் வழங்குங்கள்.
உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!
நன்றி பாலராஜன் கீதா. வந்ததற்கும் வாழ்த்தினதுக்கும். உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் ஆசிகள்.
இங்கயும் ஆசீர்வாதங்களைச் சொல்லியாச்சு தம்பிக்கு.:)
Post a Comment