இன்று சிங்கம் குகையைவிட்டுக் கிளம்பி விட்டது.
மாரி முடிந்தது.தன் அரசாங்கத்தைப் பார்வையிடவேண்டும். தன் மக்களை ஆராயவேண்டும்.
நித்திரை கலைந்த சிங்கவேளின் கண்கள் தீப்பொறி போலச் சிவந்திருந்தன.
மெள்ள தன் பெரிய,நீண்ட,உறுதியும் பலமும் மிகுந்த உடலைச் சிலிர்க்கிறது.
அதன் பெரிதாயிருக்கும் தலையின் பிடரி உலுக்கப்பட்டுஎல்லாத்திக்குகளிலும்
விரிந்து நிற்கிறது.
சோம்பல் முறிக்கிறது.
வாலைச் சுழட்டுகிறது.
ஒரு நீண்ட கர்ஜனை அதன் அடிவயிற்றிலிருந்து கிளம்பி குகைகளிலும் குகை வாயிலிலும் எதிரொலிக்கிறது.
என்ன ஒரு காட்சி. !!!!
மதர்த்த அதன் கால்களை அழுந்தப் பதித்து நடக்கிறது.
மார்கழி மாதத்துப் பாவையில் 23 ஆவது பாடலாக வரும் நிகழ்ச்சிதான் இது.
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்''
அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போல நீ பூவைப் பூவண்ணா '' என்று ஆண்டாள் கண்ணனை விளிக்கிறாள்.
நரசிம்ஹம்,ராகவசிம்ஹமாகி இப்போது கிருஷ்ணசிம்ஹமாகி அவளுக்கு வேண்டிய பலனைக் கொடுக்க அவள் பாடுகிறாள்.
சிங்கம் குகையிலிருந்து புறப்பட்டது போல''கண்ணா நீ உன் கோவிலை விட்டு இந்த அரச சபைக்குக் கம்பீர நடை நடந்து
வந்து,
உன் நீதி வழுவா சிங்கதனத்தில் இருந்து எங்கள் காரியம் என்ன என்று செவி மடுக்க(ஆராய) வேண்டும் என்றும் அவனிடம் உரைக்கிறாள்.
சபையில் கண்ணன் உட்கார்ந்திருக்கும் அழகும்,
ஆண்டாளும் அவள் தோழிப்பாவைகளும் கைகூப்பி நிற்கும் சித்திரமும் மனதில் பதிகிறது.
வைகுண்ட ஏகாதசிக்குக் கண்ணனை நினைத்து
அரங்கனை நினைத்து,பார்த்தசாரதியை நினைத்து,அந்த நினைவுகளும் புண்ணியம் கொடுத்து நம் தீராத கர்மங்கள் களைய வேண்டிக்கொண்டால்,
இதோ நரசிங்கனும் நானும் வந்தேன் என்று பாட்டு மூலம் வந்துவிட்டான்.
திருமால் பாதம் சரண்.
அவன் பாதங்களை அடைந்து அவனுடன் ஒன்றிவிட்ட எங்கள் கோதை பாதங்களுக்கும் பூமாலை சார்த்துகிறேன்.
26 comments:
ஆகா, அருமையான பாடலும், அதன் விளக்கமும்!
ஆனா பதிவைபடிக்க ஆரம்பிச்சபின்னே உங்க வீட்டு சிங்கம் தான் திரும்பவும் உலகம் சுத்த கிளம்பிடுச்சோன்னு நெனச்சேன்!!:-))
\\\ஆனா பதிவைபடிக்க ஆரம்பிச்சபின்னே உங்க வீட்டு சிங்கம் தான் திரும்பவும் உலகம் சுத்த கிளம்பிடுச்சோன்னு நெனச்சேன்!!:-))\\
ஆகா..நானும் இதையே தான் நினைச்சேன் ;))))
வாங்க அபி அப்பா.
உண்மையான பெருமாள் சிங்கம் கோபிக்காம இருக்கத்தான் இந்தப் பாட்டு.
நம்ம வீட்டு ரங்கமணி சிங்கத்துக்கு தன் வழியில் யாராவது குறுக்கிட்டால் கோபம் வரும். மற்றபடி எல்லார்கிட்டஏயும் அப்படியொரு பேரு வாங்கிக்கிட்டு இருக்கார்.ஹ்ம்ம்.:)
ஆண்டாள் எங்கே,அவள் சிங்கம் ஸ்ரீரங்க சிங்கம்.
நாம் அவள் வீட்டுக்காரரையும் அவளையும் சேர்த்து வணங்கும் தூசிகள்தானே.
வந்ததிற்கு நன்றிம்மா.
வரணும்பா கோபி.
பொங்கலுக்கு ஊர் வருவீங்களா.
இனிய பொங்கல் வாழ்த்துகள் மா. சென்ஷி கிட்டயும் சொல்லுங்க.
//"தெரியலைன்னு கைவிரிக்கறதை விட்டுத்தள்ளு. நல்லதைத் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருந்தாப் போதும். அதுவே பெரிய விஷயம். நெறையத் தெரிஞ்சிக்கலாம்."//
அதேதான் நானும் நினைச்சேன்!
அழகான படம் நரசிங்கத்தோடது. சேமிச்சு வெச்சுட்டேன். நன்னி!
லக்ஷ்மி நரசிம்மர் மனத்தைக் கொள்ளை கொள்கிறார் அம்மா. நானும் சேமித்து வைத்துக் கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தது ராஜசிம்மத்தைப் பாடும் இந்தப் பாசுரம்.
வரணும் வாசுதேவன்.
நரசிங்கத்துக்கு வாசுதேவன் சர்டிஃபிகேட் கொடுத்தது அருமை.:)
ஆர்வம் ஒன்றுதான் நம் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. நாடி நாடி நரசிங்கானு போய் ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆசை இருந்தால் போதும்.
கண்ணும் காதும் மனமும் அவனை நாட,நினைக்க அவனையே பிரார்த்திக்கிறேன்.
வரணும் குமரன்.
அழகியசிங்கன். துணையை வேறு அணைத்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அழகு மனதைக் கொள்ளாமல் வேறு என்ன செய்யும்:)
'சிங்கம் ஒன்று புறப்பட்டதே' பாட்டுப் பாடினீங்களா?
வீட்டுவீட்டுக்கு ஒரு சிங்கமும், சிங்கியும் இருந்து அந்த அழகிய சிங்கத்தைச் சேவிச்சுக்கிட்டோம்.
எங்க வீட்டுக் குட்டிச் சிங்கத்துக்குப் படத்தைக் காமிச்சேன்:-)))))
அருமையான பதிவுப்பா.
ரசிச்சேன் & சோம்
லஷ்மி நரசிம்மர் படம் அருமை
மிக நல்ல பாசுரத்துக்கு படம் பாந்தம்
லஷ்மி நரசிம்மர் படம் அருமை
அருமையான விளக்கம், சிங்கத்தை நேர்ல பாக்ற மாதிரி இருந்தது.
//அழகியசிங்கன். துணையை வேறு அணைத்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அழகு மனதைக் கொள்ளாமல் வேறு என்ன செய்யும்//
நீங்க பெருமாளை தானே சொல்றீங்க? :p
துளசி, எனக்கு அந்தப் பாட்டும் ரஜினியும் ரொம்பவே பிடிக்கும்.
நம்ம வீட்டு சாமியையே படம் போடலாம்னு நினைச்சேன்.
வெளிச்சம் போறலை.
இது கூகிள் ஆண்டவன் தந்த படம். சின்னச் சிங்கத்துக்கு காது சரியாகி இருக்கணூமே...
ஆஹா எந்த சிங்கத்தை பத்தி சொல்றீங்கன்னு ஒரு டவுட்!
நல்லவேளை சோழமண்டலம் சார்பா கண்ட ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தலாம்ன்னு நினைச்சேன் :))))
ரெண்டாவது படம் அழகா சாந்தமா இருக்கு !
பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலன்னுசொல்லுவாங்களே அது மாதிரி !
நன்றி வல்லிம்மா! :)
வாங்கம்மா சங்கர்.
ஆமாம் முப்பது பாசுரங்களில் இந்தப் பாடலுக்குத் தனி இடம் எங்கள் வீட்டில்.
நன்றி.
அம்பி, சாமியைப் பத்தி தான் சொல்லி இருக்கிறேன்.
ஆசாமியைச் சொல்லவில்லை:)
உண்மையிலியே சிரிக்கும் சிங்கத்தை அழகாஅக ஓவியம் வரைந்து கொடுத்து இருக்கிறார் எங்கள் நண்பர். அதிசயமான படம்.
பாடலும் விளக்கமும் அருமை. முதலில் எல்லோருக்கும் வந்த டவுட்டு எனக்கும் வந்தது. ஹிஹி.
இப்பத்தான் ஒரு பத்திரிக்கையில் இதே சப்ஜெக்ட் படித்தேன். கர்ப்பகாலத்தில் பெண்சிங்கத்துக்கு ஓய்வு கொடுக்க, ஆண்சிங்கம் பிடறி சிலிர்க்க குகைக்குள்ளிருந்து கம்பீரமாக வெளியே வந்து இரை தேட கிளம்புமாம். சிங்கத்தைப் பற்றி விவரித்திருந்த விதம் அருமையாயிருந்தது. அப்போ உங்க சிங்கம் ஞாபகம்தான் வந்தது.
இப்போ நீங்கள் விளக்கியவிதமும் அருமை. எனக்கும் அதே டவுட் வந்தது.
\\வல்லிசிம்ஹன் said...
வரணும்பா கோபி.
பொங்கலுக்கு ஊர் வருவீங்களா.
இனிய பொங்கல் வாழ்த்துகள் மா. சென்ஷி கிட்டயும் சொல்லுங்க.
\\
வாழ்த்துக்கு நன்றிம்மா..சென்ஷிக்கு வாழ்த்து சொல்லியாச்சி..இந்த முறையும்ம ஷார்ஜா பொங்கல் தான் ;)
வரணும்பா ராமலக்ஷ்மி. எல்லாரும் இவரை நினைத்ததில் எனக்கு மகாப் பெருமையாத்தான் இருக்கு. அவரையே பதிவு ஆரம்பிக்கச் சொல்லிடறேன்:)
நன்றிம்மா.
ஆயில்யன் நீங்களுமா:)
என்னய்யா இது.
ஆமாம் இந்தக் கிருஷ்ணன் படம் அப்படியே மனசை கண்களால் வருடுகிறான். இதை வரைந்தவர் ஒரு பெரிய மகானாகத்தான் இருக்கும். இவ்வளவு பேசும் கண்களை நான் பார்த்ததே இல்லைமா.
நன்றிப்பா.
அன்பு நானானி, உங்கள் அன்புக்கு
எண்ணங்களுக்கு
எல்லாம் என்ன செய்யலாம்
என்று யோசித்தேன். அடுத்த பதிவர் மீட்டிங்கில் இவரையும் அழைத்து வர வேண்டியதுதான்.:)
நன்றிப்பா.
ஷார்ஜாவில் பொங்கினாலும் அது பொங்கல்தான். எல்லாரும் சேர்ந்து நல்ல பொங்கி சாப்பிடுங்கப்பா.
தை மாத முதல் வெள்ளி விடுமுறைக்கு செய்துடுங்க.
சரியா.
படங்கள் கண்ணுக்கும் எழுதிய வாசகங்கள் மனசுக்கும் நிறைவா இருக்கு வல்லிம்மா! இப்போதான் திருவரங்கம்போய் மேட்டழகியசிங்கரைதரிசித்துவந்தேன்! இங்கும் சிங்கநடைகண்டேன் உங்க எழுத்துல!
அன்பு ஷைல்ஸ்,
நீங்க வந்ததே எனக்குப் பெரிய பெருமையா இருக்கு.
ஸ்ரீரங்கத்து சம்பந்தம்.
திருச்சியில் சில காலம் தங்கி கூட அந்த சிங்கனை நான் தரிசிக்கவில்லை. நீங்கள் எழுதும் தொடரைத்தான் எதிர்பார்த்து இருக்கிறேன்.
நன்றிம்மா. மனசார நன்றி.
தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :-)
அன்பு சென்ஷி, வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி. தைப் பொங்கல்
எல்லோருக்கும் நலன்களை வாரி வழங்க வேண்டும்.
நன்றிம்மா.
Post a Comment