Blog Archive

Thursday, January 29, 2009

விடுமுறைநாட்கள்





வலை மேயாமல் இருப்பது கடினம் என்று நினைத்தேன்.
அவ்வளவு கடினம் இல்லை:)
முக்கியமாக இரண்டு மழலைச் செல்வங்கள் போட்டி போட்டுக்கொண்டு
நம்மேல் சாயும் போது உலகத்தில் எதுவுமே கஷ்டமில்லை.
துபாய்ப் பேத்தியின் ஆண்டு நிறைவு இனிதே நடந்து முடிந்தது. திருப்பதி சென்று திரும்பி வந்தோம்.
மக்கள் வெள்ளம். நெரிசல். அத்தனையும் மீறி கையூட்டு யாருக்குமே கொடுக்காமல் ஒரே ஒரு நொடி அவனைத் தரிசனம் செய்து மனசை நிறைத்துக் கொண்டு வந்தோம்.
முடியிறக்கிய பாப்பா இன்னும் அழகா இருக்காள்.
தலையைத் தடவி முடியைத் தேடுகிறாள். பின்னால் எங்களைப் பார்க்கிறாள்.
காற்றடிக்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தனக்குத்தானே ரசித்துக் கொள்ளுகிறாள்.
இப்போது அவளுடைய அக்காவும் பாசலிலிருந்து வந்திருப்பதால் ஒருவரை ஒருவர் கணித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை சிதறிக் கிடைந்த லொட்டு லொசுக்கு உடைந்த உடையாத பொம்மைகள் எல்லாம் மிக முக்கியத்துவம் பெற்று
அவரவர் பக்கம் கட்சி கட்டி கொண்டு விட்டார்கள். இவள் வைத்திருக்கும் ஆட்டு உரல் தான் அவளுக்கும் வேண்டும். அவள் வைத்திருக்கும் குரங்குக் குட்டிதான் இவளுக்கு வேணும்:)
இன்னும் ஒரு வாரம் எனக்கு இந்த வரம்.
பெரியவர்களைப் புரிந்து கொள்வதுதான் சிரமம். இவர்கள் உலக இன்னும் கொஞ்ச நாட்களுக்காவது எனக்கு வசப்படும் என்றே நினைக்கிறேன்.
''பாட்டி உன்கிட்ட 24 சாரீஸ் இருக்கா??
ஓ இருக்கே.
என்கிட்ட 24 டிரஸ் இருக்கு.
சேம் சேம்.
இது ஒரு சந்தோஷம்.
''பாட்டி ,துப்பட்டா போட்டுக்காம சல்வார் போடக் கூடாது. இது புத்திமதி.
சாப்பிடும்போது டி வி பாக்கக் கூடாது பாட்டி.
இதெல்லம் இனிமேத்தான் மூணு வயசு ஆகப் போகிற பேத்தி எனக்கு சொல்லிக் கொடுக்கும் அறிவுரைகள்.
மீண்டும் பார்க்கலாம்.

24 comments:

Geetha Sambasivam said...

இனிமை! இனிமை! வாழ்த்துகள் வல்லி, நன்றாய் மனசார அனுபவியுங்கள். அருமை!

அபி அப்பா said...

ஆகா! பேத்திகள் வந்தாச்சா அங்க! இளமை திரும்பி இருக்குமே உங்களுக்கும் சிங்கத்துக்கும்! நெட் என்ன நெட் இனி 1 வாரம் இந்த பக்கம் வராம அவங்க கூட முழுமையா இருங்க! பசங்களுக்கு ஆசீர்வாதங்கள்!

ராமலக்ஷ்மி said...

//இன்னும் ஒரு வாரம் எனக்கு இந்த வரம்.//

வரும் வாரமும் இனிமையாய் அமைந்திட வாழ்த்துக்கள்:)!

சந்தனமுல்லை said...

விடுமுறை நல்லபடியா போகட்டும், இனியநினைவுகளோடு! அப்புறமு துப்பட்டா மேட்டர்..சூப்பர்! இங்கேயும் நடக்குது!!

//சேம் சேம்.//

:-)) இன்னும் கொஞ்சநாள் கழிச்சு சேம் பின்ச் கொடுப்பாங்க?!

துளசி கோபால் said...

மழலைக்கு மிஞ்சுனது உலகில் ஏதேனும் இருக்கா என்ன?

'அவன்' கூட இதுக்குப் பின்னாலேதான்.

கலாச்சாரக் காவலர்கள் ஆரம்பிச்சுட்டாங்களா வேலையை!!!!!

துப்பட்டாவை எங்கேன்னு தேடுவேன்????

எஞ்சாய் எஞ்சாய் எஞ்சாய்

காற்றுள்ளபோதே..... பழமொழி இங்கேயும் சரியா இருக்கும்:-))))

திவாண்ணா said...

ரசிக்க வேண்டியது ரசிக்க முடியுது, கிடைக்கவும் கிடைக்கிறது. ம்ம்ம் கொடுத்து வைத்தவங்கதான்! என்சாய்!

Unknown said...

அனுபவிங்க, ஒரு மாசத்தையும் ஒரு வாரத்துக்குள்ள அனுபவிக்க முடியற அளவு!

//காற்றடிக்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்// ரசிச்சேன். பெரியவளுக்கு மூணு வயசுன்னா சும்மாவா? எல்லாம் ரொம்பவே தெரிஞ்ச வயசு:-)

//இன்னும் ஒரு வாரம் எனக்கு இந்த வரம்.// இது படிக்கும் போது (என் அம்மாவின் மனசும் சேர்ந்து) உங்க மனசு புரியுது....

கோபிநாத் said...

ஆகா...என்ன இன்னும் சவுண்டு எதுவும் இல்லையேன்னு பார்த்தேன்..குழந்தைகள் விஷயமா!! ;)

நல்லா என்ஜாய் பண்ணுங்கம்மா...:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. குழந்தைகள் உலகம் மாறாத சந்தோஷம் தரும் இடம்.
வாய்ப்புக் கொடுத்த கடவுளுக்குத் தான் நன்றி.

நானானி said...

//பாட்டி, துப்பட்டா போட்டுக்காம சல்வார் போடக்கூடாது.//
செல்ல அறிவுரை...! ரொம்ப ரசிச்சேன். சமத்தா கேட்டுக்கிட்டீங்களா...வல்லி?
வாழ்வை இனிமையாக்கும் இதுபோன்ற நேரங்கள்தான் நமக்கு நல்ல டானிக். என்ஜா....ய்!!!!

Unknown said...

//இன்னும் ஒரு வாரம் எனக்கு இந்த வரம்//
அருமை. மகிழ்வே தரும் வரம்

வல்லிசிம்ஹன் said...

வாங்க அபி அப்பா. இளமை ஊஞ்சலில் தான் ஆடுகிறோம். உண்மையாவே:)
பாப்பாவுக்காக ஒரு தொட்டி ஊஞ்சல் தொங்க விட்டு இருக்கோம்.
ஆட்டம்தான்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ராமலக்ஷ்மி. எல்லாப் பதிவையும் படிக்கணும். இந்த இனிமையை விட மனமில்லை.:)
ஒரு செட் இன்னிக்குக் கிளம்பிவிட்டது. இன்னோரு குடும்பம் இன்னும் ஒரு வாரம் இருக்கும்.

பாப்பா ,உங்க ஊருக்குப் போகணுமான்னு கேட்டா,வேணாம் பாட்டி, உன்னோடயே இருக்கேன்னு சொல்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா முல்லை. ரொம்ப ஸ்டெரைட் ஃபார்வர்ட் இந்தப் பேத்தி. உண்மை விளம்பி. சமயத்தில மாட்டிக்கறேன்:)

நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆமாம் துளசி.நல்ல காற்று வீசும்போது சுவாசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஒரே இறுக்கமாக இருக்கேன்னு கையில துப்பட்டாவை வைத்துக் கொண்டு வீசிக்கொண்டேன். அதுக்குத்தான் பேத்திம்மா சென்சார் பண்ணாங்க.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க சார் வாசுதேவன்:)

மழலையில் கூட்டிக் கூடிப் பேசும்போது இன்னும் ஏதாவது கேட்கணும்னே தப்பும் தவறுமாகக் கதை சொல்லுவேன். தலையில் குட்டிக் கையை வைத்துக் கொண்டு பாட்டி பாவம். கதையே தெரிலியே'' அப்படின்ங்கறது.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமா ஆமா. எல்லாம் வெளியூர்ல உக்காந்து கிட்டு எங்களுக்கு நியாயமாக் கிடைக்க வேண்டியா இன்பங்களைத் திருடிக் கொள்ளுகிறீர்கள் சொல்லத் தோன்றுகிறது. ஆனா உங்க எதிர்காலத்தை நினைத்து நானும் (உங்க அம்மாவும்) நாங்களும் வாயை மூடிக் கொள்ளுகிறொம்:((

வல்லிசிம்ஹன் said...

ஆமா ஆமா. எல்லாம் வெளியூர்ல உக்காந்து கிட்டு எங்களுக்கு நியாயமாக் கிடைக்க வேண்டியா இன்பங்களைத் திருடிக் கொள்ளுகிறீர்கள் சொல்லத் தோன்றுகிறது. ஆனா உங்க எதிர்காலத்தை நினைத்து நானும் (உங்க அம்மாவும்) நாங்களும் வாயை மூடிக் கொள்ளுகிறொம்:((

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோபிநாத்.

நன்றி. அடுத்த முறையாவது உங்களை வந்து பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோபிநாத்.

நன்றி. அடுத்த முறையாவது உங்களை வந்து பார்க்கணும்.

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கீயளா? :)

நாமக்கல் சிபி said...

:)

இனிய வரம்! இனிய வாரம்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா கொத்ஸ் சாரே. நலத்துக்குக் குறையே இல்லை
இல்ல.
நல்லாவே இருக்கோமுங்க.
ஏதோ குசும்புக்கார நண்பர்ர்கள் உபயத்தில வண்டி தடத்தில ஓடிட்டிருக்கி.:)

வல்லிசிம்ஹன் said...

ஷிபி சார். எவ்வளவு நாளாச்சுமா பார்த்து.