Blog Archive

Wednesday, December 24, 2008

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
புத்தாண்டு வருகிறது. தயாராகுங்கள்





இது நானே பரிசோதித்துத் தயார் செய்த புத்தாண்டு வாழ்த்து.:)
ஒவ்வொரு வருடமும் நினைப்பது உண்டு.
என்ன செய்தோம். திட்டமிட்டோமா.
மற்றவர் திட்டப்படி நடந்தோமா என்று யோசித்தால்,
அது மற்றவர்கள் கைகாட்ட நான் நடந்திருக்கிறேன்.
அதுதான் உண்மை.
இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு திரும்பினால் மற்ற மாடும் திரும்ப வேண்டியதுதானே.
அதனால் குழப்பம் இல்லாமல் வண்டி ஓடும்.
இறைவன் எல்லா விதத்திலும் கருணையோடு நடத்தி வந்திருக்கிறான்.
பாதுகாவல் கொடுத்து இருக்கிறான்,.
மேலும் நட்புகளை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து
செய்து கொடுத்து இருக்கிறது இணையம்.
எத்தனை விதமான எண்ணங்கள்!!!
நினைப்புகள்
கணிப்புகள்,
கவிதைகள்,
எல்லாவற்றுக்கும் மேலான நட்புகள்.
அனைவரும்
நோய் நொடி இல்லாமல், ஆரோக்கியமாக, உற்சாகத்தோடு,குடும்பத்தோடு, குழந்தைகளோடு,
இருக்க வாழ்த்துகள்.
நல்லதொரு புத்தாண்டு நம்மை நோக்கி வருகிறது.
அந்த ஒளி வழியில் நாம் நடந்து கொண்டாடுவோம்.

27 comments:

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அம்மா ;)

துளசி கோபால் said...

வெற்றி உமதே.

வாழ்த்து அட்டை நல்லா இருக்கு.

ஒரு மாடு தொருமினால் மற்றொன்று இருமும்:-)))))

சதங்கா (Sathanga) said...

//எத்தனை விதமான எண்ணங்கள்!!!
நினைப்புகள்
கணிப்புகள்,
கவிதைகள்,
எல்லாவற்றுக்கும் மேலான நட்புகள்.//

அதே ! அதே !! வாழ்த்துக்கள் !!!

Kavinaya said...

வாழ்த்துகள் அழகா இருக்கு. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபி,
மனம் நிறைய மகிழ்ச்சியும் உடல் நிறைந்த ஆரோக்கியமும், வாய் நிறைந்த நல் வார்த்தைகளும் எப்போதும் உங்களோடு இருக்க வாழ்த்துகள்மா.

வல்லிசிம்ஹன் said...

வெற்றி எமதா துளசி:)

சரி. எல்லாம் கண்ணனுக்கே இந்த மாதத்தில்:)
தொருமின மாட்டை,திருப்பி விட்டு விட்டேன்!!!
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சதங்கா,
இதே போல எப்பவும் நம் நட்பும் அன்பும் சிறந்து இருக்கணும்னு வேண்டிக்கொள்கிறேன்.

நல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா,
நன்றிம்மா.
மேலும் மேலும் நல்ல கவிதைகளும் ,கருத்துகளும் நீங்கள் படைக்க,,நாங்களும் படிக்கணும்.

திவாண்ணா said...

வாழ்த்துக்களுக்கு நன்னி!

படத்தின் கீழே எழுத்துக்களை போட்டு இருக்கப்படாதோ? நடுவிலே போட்டுட்டீங்க!

வல்லிசிம்ஹன் said...

வரணும் வாசுதேவன்.
வாழ்த்துகளுக்கும்,
ஸ்பெஷல் வார்த்தைகளுக்கும்

நன்னியோ நன்னி.
இன்னோரு தடவை சரியாச் செய்யறேன் ஓகேயா:)

Geetha Sambasivam said...

//இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு திரும்பினால் மற்ற மாடும் திரும்ப வேண்டியதுதானே.
அதனால் குழப்பம் இல்லாமல் வண்டி ஓடும்.
இறைவன் எல்லா விதத்திலும் கருணையோடு //

சத்தியமான உணர்வோடு ஆத்மார்த்தமாய்ச் சொல்லப் பட்டிருக்கிறதை உணர முடிகின்றது வல்லி, வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இங்கே வரும் பதிவர்களுக்கும், மற்ற அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

புத்தாண்டு வாழ்த்திக்களும் வணக்கங்களும் வல்லியம்மா.

ambi said...

வாழ்த்து அட்டை அருமை,

உங்களூக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள், வேணும் உங்கள் இருவர்(மிஸ்டர் அண்ட் மிஸஸ் சிங்கம்) ஆசிர்வாதம்.

இப்படிக்கு
அம்பி,
மிஸஸ் அம்பி
& ஜுனியர் அம்பி :))

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகுக!

வல்லிசிம்ஹன் said...

கீதா, நாம மிரண்டா வண்டி ஓடாது இல்லையா. அதுதான் சமாதானமாகவே மாடுகள் போகட்டும்னு எழுதினேன். நன்றி,இத்தனை அன்புக்கு நான் என்ன பதில் சொல்றது....

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
குடும்பத்தோடு இன்னும் பல் புத்தாஅண்டுகள் நலமாக இருக்கணும்னு பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

எங்க ஆசீர்வாதம் அம்பிக்கும் தங்கமணிக்கும்,பட்டம்பிக்கும் உண்டு

எப்போதும்.

எப்போதும் வளத்தோடு இருக்கணும் அம்பி.

வல்லிசிம்ஹன் said...

வ்வாங்கப்பா சந்தனமுல்லை. நன்றிம்ம்மா.
நீங்களும், மகளும் கணவரும் மிகச் சந்தோஷத்தோடு இன்னும் பல புத்தாண்டுகள் கண்டு மகிழ்ச்சியா இருக்கணும்.

cheena (சீனா) said...

மிக்க நன்றி வல்லிம்மா

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வாழ்க்கை இவ்வாறே இனியதாக நடக்க இறைவன் துணையிருக்க பிரார்த்தனைகள்

வல்லிசிம்ஹன் said...

வாங்க சீனா.

அப்படியே நடக்க இறைவனையும் நம் மீனாட்சியையும்
வேண்டிக்கொள்ளுகிறேன்.
மக்கள் வளமாக வாழ் அவள் அருளட்டும்.

நானானி said...

வாழ்கை வண்டி உருண்டோட நல்ல வழி சொல்லியிருக்கிறீர்கள்!!(நாமெல்லாம் செய்யாததா?)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!
நல்ல படியா செட்டிலாயாச்சாப்பா?

தி. ரா. ச.(T.R.C.) said...

Happy new yera valliyamma. thanks for your good wishes.

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி. நன்றிம்மா.
ஒரு வழியாக முதல் இரண்டு அறைகளைச் சுத்தம் செய்தாச்சு.
வர்ணமும் தீட்டியாச்சு.

எலிகள் வாசனையும் போயாச்சு.
வரூம் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நல்லதே செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆமாம் மாடுகள் ஒத்துப்போவது போல நாமும் அப்படியேதான் இருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச சார். நன்றி. மேலும் மேலும் நல்நிகழ்ச்சிகள் இன்பமும் இனிமையும் நிறைந்த ஆண்டு மலரட்டும். நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

//மேலும் நட்புகளை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து
செய்து கொடுத்து இருக்கிறது இணையம்.
எத்தனை விதமான எண்ணங்கள்!!!
நினைப்புகள்
கணிப்புகள்,
கவிதைகள்,
எல்லாவற்றுக்கும் மேலான நட்புகள்.//

உண்மைதாங்க. நான் இந்த வருடம் வந்து இணைய நட்பில் இணைந்தவளாயிற்றே:)!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

//நீங்களும், மகளும் கணவரும் மிகச் சந்தோஷத்தோடு இன்னும் பல புத்தாண்டுகள் கண்டு மகிழ்ச்சியா இருக்கணும்.//

மிக்க நன்றி வல்லியம்மா, உங்கள் ஆசிகளுக்கு! :-)