Sunday, December 28, 2008

பூமி ஆளலாம்.
Posted by Picasa
இன்னுமொரு மார்கழி.இன்னுமொரு வருடம்.
இன்னுமொரு பதிவு.
இன்னுமொரு சுனாமி நாள்.
இன்னும் இந்தக் கடலைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

உன்னைச் சொல்லி என்ன பயன். எய்தவன் யாரோ.
நீ வலியால் தூண்டப்படே கரையைத் தாண்டினாய் கடலே.
எத்தனை அழியாத நினைவுகளைக் கொடுத்து இருக்கிறாய். எத்தனை ஆனந்தமான சாயங்காலப் பொழுதுகளை நாங்கள் உன் மணலில் கழித்திருக்கிறோம்.
மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கத்தெரிந்த உன்னைக் கரை மேல் ஏவிவிட்டது யார்.

இத்தனை கேள்விகள் என்னுள் எழுந்தன நேற்று மெரினாவில் நடந்த போது.
டிசம்பர் மாதக் காற்று இதமாக இருந்தது.
கடல் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் பயமாக இல்லை.
வங்கக் கடல் எனக்குத் தெரிந்த சிலரையும் உள்ளே வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அவர்களை நினைப்பதற்காக, மானசீகமாக அவர்களிடம் பேச நான் கடலின் கரைக்கு வருவேன்.

இதெல்லாம் பழைய கதை,இனிப் புது ஆண்டு வரப்போகிறது. புது நினைவுகளையும் ,புதுக் குழந்தைகளையும்,புதுப் பதிவுகளையும்,திண்ணிய எண்ணம் கொண்ட மனிதர்களையும் அடையாளம் காட்டப் போகிறது.
நல்லதே நடக்கட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஹாப்பி நியூ யியர் 2009.

30 comments:

கீதா சாம்பசிவம் said...

//டிசம்பர் மாதக் காற்று இதமாக இருந்தது.
கடல் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் பயமாக இல்லை.
வங்கக் கடல் எனக்குத் தெரிந்த சிலரையும் உள்ளே வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அவர்களை நினைப்பதற்காக, மானசீகமாக அவர்களிடம் பேச நான் கடலின் கரைக்கு வருவேன்.//
:((((((((((((((((

அபி அப்பா said...

உங்களுக்கும் என் குடும்பத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆஹ சென்னை போயாச்சா?

கீதா சாம்பசிவம் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வல்லி, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் இங்கே வரும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்.

பாச மலர் said...

புத்தாண்டு வாழ்த்துகள்..

நானானி said...

சுனாமியின் வலியை மணற்சிற்பங்களாக வடித்து அஞ்சலி செய்திருந்தார்கள் மெரினாவில், கலைக்கல்லூரி மாணவர்கள். டிவீயில் பார்த்த போது இப்போதும் வலிக்கிறது. யார் ஏவியது? இயற்கையை தொந்தரவு செய்யும் நாமேதான்!!
எல்லா வலிகளையும் மறந்து புது வருடத்தை வரவேற்போம். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!
ஹப்பா....!மீ த ஃபர்ஸ்ட்!!!!ஃபார் தஃ நியூ இயர்!!!

கவிநயா said...

நல்ல எண்ணங்கள் அம்மா. இன்பமும் துன்பமும் போல இரவும் பகலும் போல நல்லவை அல்லாதவை அனைத்திலும் உண்டல்லவா? நல்லதே நடக்கட்டும். வாழ்த்துகள் அம்மா.

மாதவராஜ் said...

வல்லி நரசிம்ஹன்!

கடந்தகால் நினைவுகளை அசை போட வைக்கிறது உங்கள் வரிகள்.
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,கீதா.

கடலுக்கும் சோகம் இருக்கும் என்று எனக்குத் தோன்றும்.
அந்தக் கட்சிகளை படங்களில் பார்க்கும்போது மிரண்டு ஓடுகின்ற குதிரைகள் தான் நினைவுக்கு வந்தது.

இந்தப் புத்தாண்டு எல்லோருக்கும் நல்லதே கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா. நலமா.
நிங்க அங்க இல்லாததுனால நான் யாரையுமே பார்க்காம சென்னை வந்துவிட்டேன்:)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர்.

சென்னை வரும்போது என்னை மறக்கவேண்டாம்.:)

வல்லிசிம்ஹன் said...

பார்த்தேன் நானானி. மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
இந்தப் பதிவை எழுதவே அந்த நினைவுதான் காரணம். எல்லோரிடமும் பேசிப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.


புது வருடம் ஆரோக்கியத்தையும் அன்பையும் அள்ளித் தரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கவிநயா.

நல்லதே நடந்தால் வாழ்வில் நாம் இறைவனை நினைக்கும் பொழுதுகள் குறைந்து விடும் இல்லையா.

மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கு. குளிர் வாட்டாமல் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதவராஜ்.

எண்ணங்களே நம்மைச் செலுத்துகின்றன.

எழுத வைக்கின்றன.

பகிர்ந்துகொண்டால் இன்பம் அதிகரிக்கிறது.துன்பம் குறைகிறது. இணைய நட்புகளைத்தான் நன்றியுடன் நினைக்கிறேன்.

உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அழகா சொன்னீங்க வல்லி..
சன் டிவி நியூஸ் ல யானையை காட்டிக்காட்டி யானைனாலே பயம் வந்தமாதிரி இந்த கடல்மேலயும் ஒரு வித பயம் வந்துபோச்சு.. ஆனாலும் இப்ப போனாலும் அழகா நம்மகூட சின்ன சின்ன அலையால் கால் நனைச்சிட்டு.. பெரிய அலையால் பூச்சாண்டி காட்டும் போது ..ஒருமாதிரியாத்தான் இருக்கும்.. ஆனா நீங்க அழகா கேட்டீங்க எய்தவன் யாரோன்னும்.. ம்

உங்களுக்கும் புதுவருடவாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

//எண்ணங்களே நம்மைச் செலுத்துகின்றன.

எழுத வைக்கின்றன.

பகிர்ந்துகொண்டால் இன்பம் அதிகரிக்கிறது.துன்பம் குறைகிறது. இணைய நட்புகளைத்தான் நன்றியுடன் நினைக்கிறேன்//

அழகா சொல்லியிருக்கீங்க!

வல்லியம்மாவுக்கு மற்றும் அனைத்து இணைய நட்புக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)))

துளசி கோபால் said...

நடந்ததையே நினைத்திருந்தால் மனதில் அமைதி என்றுமில்லைப்பா.

போனது போகட்டும். இனியாவது அனைவருக்கும் எல்லாம் நல்லபடியாக அமையணுமுன்னு வேண்டிக்கலாம்.

இனிய புத்தாண்டாக இருக்கட்டும்.

வாழ்த்து(க்)கள்.

கோபிநாத் said...

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா ;))

சுல்தான் said...

குழந்தைகளோடு கடலுக்குப் போன போது ஒரு குட்டி அலை இதமாய் வந்து கால்களைத் தழுவி போன போதும், பேரலைகள் காலனாய் வந்து காவு கொண்ட நினைவுகள் வந்து பயமுறுத்தத்தான் செய்கிறது.

புது வருட வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கயல் லட்சுமி,

எங்க மகளை நினைச்சுக்கறேன். பீச்சுனா அப்படி ஒரு சந்தோஷத்தோட வருவாள். குழந்தைகளோட கும்மாளம்தான்.
ஆனா இப்ப அங்கே சிகாகோலேருந்து எனக்கு புத்திமதி. பீச் பக்கமா வாக்கிங்போகாதேன்னு.

எனக்கு அந்தக் கவலைல்லாம் இல்லை.
நீங்க சொன்னச் சின்னப்பயம் அப்பப்போ யோசிக்க வைக்கிறது நிஜம்.

புத்தாண்டு நல்லதே கொடுக்கும். குழந்தைகளுக்கும்,உங்க ரங்கமணிக்கும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஒரு

வல்லிசிம்ஹன் said...

வாங்க குடுகுடுப்பை.நன்றிம்மா.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்லது நிறைய நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அப்படியே உண்மை. ஆயில்யன்
புத்தாண்டு
நம் எல்லோருக்கும் நல்லது கொடுக்கும். நான் நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா துளசி.

ரொம்ப உண்மை.இனிமேற்கொண்டு பழசை நினைக்காமல் புதுசா நல்லதா நினைச்சு எழுதறேன்.
சரியாப்பா.

நம்ம நியுசிக் குடும்பத்துக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்:))

வெய்யில்ல ஜிகே சார் கஷ்டப்படாம பார்த்துக்க சொல்லுங்க. அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், நன்றி.நன்றி.

வரும் புத்தாண்டில திருமண வாய்ப்புகள் கூடும்னு பக்ஷி சாஸ்திரம் சொல்கிறது. நல்லவை நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுல்தான்,
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிம்மா.

நீங்க சொல்கிறது ரொம்ப உண்மை.
சாதுவாகவே இருந்த கடல் பொங்கினது பயங்கரம்தான்.
அதுவே ஒரு எச்சரிக்கையாக மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் நல்ல சந்தோஷமாக வளரட்டும்.
இறைவன் நல்லதே செய்வான்.
நன்றிம்மா.
நல்வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Happy new year valliyamma.
THINK WELL AND BE WELL

ராமலக்ஷ்மி said...

கடலம்மா கருணை காட்டுவாள். இனி வரும் வருடம் எல்லோருக்கும் இனிதாகவே அமையும் வல்லிம்மா. வாழ்த்துக்கள்:)!

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா. தி.ரா.ச.

ததாஸ்து.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராம்லக்ஷ்மி.
இனி இந்தக் கவலை நமக்கு வேண்டாம்.

நன்றாகவே இருப்போம்.

வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

//நீ வலியால் தூண்டப்படே கரையைத் தாண்டினாய் கடலே.
எத்தனை அழியாத நினைவுகளைக் கொடுத்து இருக்கிறாய். //

அழகாய் சொல்லியிருக்கீங்க வல்லியம்மா! மிக உண்மை!!