Blog Archive

Thursday, September 04, 2008

மந்தையில் தனியாய்

கூட்டத்தில் தனியாய்(alone in a crowd)  9/4/2008

தனியாகப் பிறந்தாய்
தனியாக அலைந்தாய்...இன்று
தனியாக இருக்கப் பயமேன்

இளமையில் கூட்டம் போடும்  மனிதம்
முதுமையில் கலையும்
நினைக்காத உறவுகளை
நினைக்கும் நாள்
நீயும் இளமையும் பிரியும் நாள்.

நினைக்காத இறைவன் அருகில் வரும் நாள்
நீயும் முதுமையும்  கூடும்  நாள்.

22 comments:

வல்லிசிம்ஹன் said...

என்னை விட முதியவர் ஒருவர்,வீட்டுக்கு வந்த போது
சொன்ன எண்ணங்கள்,
அதைக் குறித்து வைத்தேன்.

புலம்பல் இல்லை:)

இலவசக்கொத்தனார் said...

என்னமோ சொல்லறீங்க!! ஒண்ணும் புரியலை. ரெண்டு படம் போட்டாலாவது பாத்துட்டுப் போயிருப்பேன். இது கவுஜ மாதிரி இல்ல இருக்கு!!

Kavinaya said...

நல்ல வேளை, சொன்னீங்க :)

//நினைக்காத உறவுகளை
நினைக்கும் நாள்
நீயும் இளமையும்
பிரியும் நாள்.//

ஆனால் இது உண்மைதான்னு தோணுது.

ஆயில்யன் said...

//நினைக்காத உறவுகளை
நினைக்கும் நாள்
நீயும் இளமையும்
பிரியும் நாள்.//

அருமை !

வல்லிசிம்ஹன் said...

படமில்லாம என்னால் பதிவு போட முடியுமா கொத்ஸ்.????
அநியாயத்துக்கு ப்ளாகர் சண்டித்தனம் செய்கிறது.
நல்ல 'ஓல்ட் கோட்' படம் கிடைத்தது.அதுவும் மேலேயிருந்து கீழே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.
சே.!!!
போட முடியலைம்மா.
அப்புறம், எனக்கும் கவிதைக்கும் ரொம்பத் தூரம்னு உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும்:)))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கவிநயா. இப்ப ஃப்ளாரிடாவில் நல்லதொரு முதியவர்கள் இல்லத்தில் இருக்கிறார்.

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் சொல்லாலையே மனைவியை வெருட்டியவர்.(நமக்காவது மறக்கிறதா பாருங்கோ:) )
அவங்களும் சிரிச்சுகிட்டே இவரைத் தனியா விட்டுப் போயிட்டாங்க.(சாமி கிட்டத்தான்)

இப்போது எங்கள் நினைவு வந்து இங்கேயும் வந்தார்.பாவமாகத்தானிருக்கு. என்ன செய்யலாம்.......

நானானி said...

//தனியாக இருக்கப் பயமேன்//
நல்ல நச் வரிகள்!!
நான் ஒரு தனிமை விரும்பிப்பா!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆயில்யன்.

உண்மையிலயே நல்லாஇருக்கா:)
நன்றிம்மா.
தமிழ் எழுதி நாளாச்சு..

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் தனியா இருக்க ரொம்பப் பிடிக்கும். ஆனால்
சில சமயம்,

கூடியிருக்கும் கூட்டத்து நடுவே
திடீரென ஒரு வெறுமையாய்த் தோன்றும் .பிரமையோ:)

துளசி கோபால் said...

வல்லி,

நலமா?


அப்புறமாப் புரிஞ்சுக்கிட்டேன்!!!!

திவாண்ணா said...

//நினைக்காத உறவுகளை//
"நிலைக்காத உறவுகளும்" பொருத்தமாவே இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
நல்ல நலம்தான்.

ஒவ்வொரூத்தருக்கும் இது ஒவ்வொரு விதத்தில் புரிகிறது:0)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வாசுதேவன்.
அவர் நிலைக்காதுன்னு உறவுகளைத் தள்ளினார். இப்ப அவைகளை நினைத்து வருகிறார்.

அவர்(இறந்த தன்) மனைவியை நினைத்து வருந்தினார்.
இப்ப என்ன பயன்னு எனக்குத் தோன்றியது.அதுதான் நினைக்காதன்னு போட்டேன்.:)

Anonymous said...

அருமை

Geetha Sambasivam said...

//மந்தையில் தனியாய் //

ம்ம்ம்ம்ம் உண்மை தான் வல்லி, மனதும் கனத்துப் போகிறது. :(((((((((

வல்லிசிம்ஹன் said...

ஆனந்த் ரசித்ததற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.

சிலசமயம் மனம் தனிப்பட்டு விடுகிறது. அவர் வந்து போனதிலிருந்து ,
அதே யோசனையில் இந்த வரிகள் நினைவுக்கு வந்தன.

உங்களை மாதிரி ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தான் மனசுக்கு நிம்மதி.
இடைவிடாத படிப்பு. ஞான விருத்தி...இப்படி இருக்கவேண்டும்.

ராமலக்ஷ்மி said...

//நினைக்காத உறவுகளை

நினைக்கும் நாள்
நீயும் இளமையும்
பிரியும் நாள்//

உணராத உண்மைகளை

உணரும் நாள்
நீயும் நிற்பாய்
'மந்தையில் தனியாய்'!


அந்தப் பெரியவர் காலங்கடந்து உணர்ந்து வருந்தியதை, காலம் கடக்கும் முன் எல்லோரும் உணர்ந்து நடக்க...தந்திருக்கும் கவிதை.. நல்ல வாழ்க்கைப் பாடமாகும். நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி.... வெகு அருமை.!!!!!!!!!!!!!
நான் சொல்ல விட்டதை அப்படியேஅழகாகப் பூர்த்தி செய்துவிட்டீர்கள்.

உணராத உண்மைகள் என் வாழ்விலும் எத்தனையோ.பாதி சமயம் கண்ணை மறைத்துவிடுகிறது. பாதிசமயம் தெரிந்தே விட்டுவிட்டேன்.

விழிப்புணர்வு வேலை செய்தால் பல துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
மிகமிக நன்றிப்பா.

Geetha Sambasivam said...

//உங்களை மாதிரி ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தான் மனசுக்கு நிம்மதி.
இடைவிடாத படிப்பு. ஞான விருத்தி...இப்படி இருக்கவேண்டும்.//

ஹாஹாஹா வல்லி, இடைவிடாத படிப்பு எல்லாம் இப்போ இல்லை, சிலநாட்கள் புத்தகத்தைக் கையிலே எடுக்கக் கூட முடியாது! :((((((((( மற்றபடி இக்கரைக்கு அக்கரை பச்சைதான் எப்போவுமே!

வல்லிசிம்ஹன் said...

கீதா,

இப்பப் படிக்கிறதைப் பத்தி எனக்குத் தெரியாது.

ஆனால் உங்களையும், துளசியையும் மற்றவர்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன்.

நல்ல அறிவு விருத்தி செய்திருக்கிறீர்கள். எவ்வளவு ஈடுபாடு இருந்தால் இது சாத்தியம்!!!
நானும் இக்கரையிலிருந்து அக்கரைக்கு வரப் பார்க்கிறேன்:)
நன்றிம்மா.

துளசி கோபால் said...

வல்லி,

இது என்னப்பா?

//நல்ல அறிவு விருத்தி செய்திருக்கிறீர்கள்//

ஹாஹாஹாஹா...... நெசமாவாச் சொல்றீங்க?