“சூடிக் கொடுத்தசுடர்க்கொடி வந்தாள்
சுரும்பார்க் குழற்கோதை வந்தாள்.
திருப்பாவைபாடிய செல்வி வந்தாள்.
தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”
ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தைஅடைந்தனர்.
அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.
ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து,
பருத்த செங்கழுநீர் மாலை சூடி,
சீரார்வளையொளிக்க,
சிலம்புகள் ஆர்க்க,
அன்ன நடையிட்டு அரங்கன் பால்சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீதுகால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள்.
அங்கிருந்த அனைவரும் வியக்கமறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப்பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில்உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.//
இது நான் படித்த உரை.
இதுதான் காதல். அரங்கனை மணப்பேன்.அவனைத் தவிர வேறு எவரையும் என் மனம் தீண்டாது என்று திண்ணமான எண்ணத்துடன் காதலித்து அந்த உரத்தோடு,
நேர்முறையில் அவனை அடைந்தும் விட்டாள்.
இந்த வாக்கியங்களை எத்தனை தடவை படித்தாலும்
அலுக்காது .
இது என்ன காதல்? அது எந்தக் காலமாயிருந்தால் என்ன.. எப்படி இது சாத்தியமாயிற்று என்று மீண்டும் மீண்டும் எங்கள் தந்தையைக் கேட்பேன்.
அவரும் அவருக்குத் தெரிந்த வகையில்
எனக்குப் புரிய வைக்கப் பாடுபடுவார்.
மனசு வைத்தால் நடக்க முடியாது என்று ஒன்றும் கிடையாது என்பதில் அவர் உறுதியாய் இருப்பார்.
நேற்று இந்தக் காதலர்தின நிகழ்ச்சிகள், பாடல்கள்,வாழ்த்துகள், வாக்குவாதங்கள் இவைகள்,பத்திரிகை,,மற்ற ஊடகங்களில் பார்த்து ரசித்தாகிவிட்டது:))
ஆண்டாள் அரங்கன்,
சீதை ராமன்,
ஊர்மிளை இலக்குவன்,
மீரா கிருஷ்ணன்(அவங்க இல்லை)
இவர்களுக்கெல்லாம் இருந்த காதலின் திண்மை,
இன்னும் இப்போது இருக்கிறதா?? என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அது தொலைக்காட்சி
சன் ம்யூசிக்கிலோ, லாண்ட்மார்க்கிலோ,மெரினா கடற்கரையிலோ கண்ணால் பார்க்க முடியவில்லை.
மருத்துவ மனையிலிருந்து கணவனை , ஆட்டோவில் முதலில் உட்கார வைத்துவிட்டு,
மற்ற பொருட்களையும்,பணத்தையும் குழந்தைகளையும்
பிறகு தானும் ஏறிக்கொண்டு
வீட்டுக்கு அழைத்து வந்து இறங்கும்
மனைவியிம் கண்களில் இருக்கிறது.
தன்னை இத்தனை நைந்து நூலாக்கிய பின்னாலும்
சூடா சாப்பிட்டா என்னா என்று கடியும் மனைவியைக் கணவன் பார்க்கும் புன்னகைப் பார்வையில் இருக்கிறது.
கமலம், கொஞ்சம் கையைப் பிடித்துவிடேன் என்ற, தன் வலிமையான கரங்களை நீட்டும்
என் மாமனார் கையை ஐயொடக்ஸ் போட்டுத் தடவிக் கொண்டே சொற்களில் (நாற்பத்தேழு வருஷமா இதே பொழப்பாப் போச்சு மாமா!)அலுப்புக் காட்டும் என் மாமியாரின்
கண்களில் இருந்தது.
இன்னும் எங்கெ யெல்லாமோ ஒளிந்து கொண்டிருக்கிறது:)
காலமெல்லாம் காதல் வாழ்க.
19 comments:
காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு பதிவு....Love Story by Erich Segal
படிச்சிருகீங்களா வல்லி? அதுல அந்த ஹீரோயின் சொல்லுவா,
"to love is to never having to say sorry"ன்னு என்னமொ உங்க பதிவ படிச்சதும் அது நியாபகம் வந்துது.!!
ராதா!!
லவ்ஸ்டோரி படிக்காமல் நாம் இந்த வயது வரை இருக்க முடியுமா.
அலி மாக்ராவும் ரையான் ஓநிலும்
வெகு நாட்கள் எங்களுடனேயெ இருந்தார்கள்.
புத்தகம் இன்னும் இருக்கிறது.;00))
நன்றிம்மா.
அந்த வாக்கியத்தை நாங்கள் இருவரும் நிறைய நினைவுப் பயிற்சியாக வைத்துக் கொள்ளுவோம்.
இருவரும் obstinate egoists:)))
அழகாக சொல்லியிருக்கிங்க..
\\இன்னும் எங்கெ யெல்லாமோ ஒளிந்து கொண்டிருக்கிறது:)
காலமெல்லாம் காதல் வாழ்க.\\
காதல் வாழ்க ! ;)
//சன் ம்யூசிக்கிலோ, லாண்ட்மார்க்கிலோ,மெரினா கடற்கரையிலோ கண்ணால் பார்க்க முடியவில்லை.//
நிச்சயமாப் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள், அருமை வல்லி, காதலர் தின வாழ்த்துகள் தாமதமாய். நேற்று ரொம்ப பிசி, அதனால் வர முடியலை! :))))))))
சூடா சாப்பிட்டா என்னா என்று கடியும் மனைவியைக் கணவன் பார்க்கும் புன்னகைப் பார்வையில் இருக்கிறது
அடடா எப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது.
வரணும் கோபிநாத். காதலர்தினம்
எப்படிப் போச்சு:)
அம்மா அப்பாவுக்கு விஷ் செய்தீங்களா.
நன்றி கீதா,
இந்த ஒரு நாளோட நமது அன்பு முடிவதில்லை.
சோதனைகளில் செழுமையோடு இருந்தால் அதன் மதிப்பே தனி.
பீச்சில் எப்பவாவ்து நடந்தால் அங்கே கண்ணை மூடிக்கொள்ளும் காட்சிகள்தான் இருக்குன்றன.:(
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.
என்ன தி.ரா.ச சார் உங்க வீட்டில நடக்காம இருக்குமா.
தங்கமணி உங்களைக் கண்ணும் கருத்துமாக் கவனிக்கிறதில, கொஞ்சம் நேரம் தவறினாக் கண்ணாலியே கேப்பாங்களாமே:)))
சும்மாச் சொன்னேன்மா.
//சன் ம்யூசிக்கிலோ, லாண்ட்மார்க்கிலோ,மெரினா கடற்கரையிலோ கண்ணால் பார்க்க முடியவில்லை.//
//இன்னும் எங்கெ யெல்லாமோ ஒளிந்து கொண்டிருக்கிறது//
உண்மையோ உண்மை...
//கொஞ்சம் கையைப் பிடித்துவிடேன் என்று தன் வலிமையான கரங்களை நீட்டும்
என் மாமனார் கையை ஐயொடக்ஸ் போட்டுத் தடவிக் கொண்டே சொற்களில் அலுப்புக் காட்டும் என் மாமியாரின் கண்களில் இருந்தது. இன்னும் எங்கெயெல்லாமோ ஒளிந்து கொண்டிருக்கிறது:)//
'ஒளிந்து கொண்டிருக்கிறது' பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சிரிப்பானிலும்
//காலமெல்லாம் காதல் வாழ்க.//
வாழ்க! வாழ்க!!
ஆமாம் பாச மலர், இந்த மாதிரி காட்சிகளையும், காதல் அன்பு சம்பந்தப்பட்டது எனறு என்னால் நம்ப முடியவில்லை.
ஃபார் த சிம்பிள் ரீசன் தே ஆர் டூ யங் ஃபார் திஸ்.
ஒரு டைம்பாஸ்:(
வரணும் சுல்தான்.
மாமானார் எப்பவுமே மாமியாரைக் கூட வைத்து உட்கார்ந்து பேசுவார்,.
எத்தனையோ முரண்பாடுகளோடு அவர்கள் வாழ்க்கை சென்றாலும்,
அவர்களுக்குள் இருந்த அன்பு மாறவே இல்லை.
அவருக்கு தீராத நோய் வந்த போது கூட, எங்க மாமியார், தன் கணவருக்கு எது நல்லதோ அது நடக்கட்டும் என்றுதன் வேண்டிக்கொன்டார். அவர் நோயினால் கஷ்டப்படுவதை அவர் விரும்பவில்லை.
காதல் உணர்ச்சிக்குத்தாண் அத்தனை பண்பாடுகள் இருக்கின்றதாமே.
அதில கட்டாயம் அன்பு இருக்கும்போது உலகமே மாறிவிடுகிறது:))
நன்றி டெல்ஃபின்.
இன்றுதான் படிக்க முடிந்தது. மிக அருமை.
நன்றி மௌலி.
மணமுறிவு செய்துகொண்ட பின்னும் visiting rights என்று சொல்லிக்கொண்டு குழந்தையைப் பார்க்கிற சாக்கில் தன் பழைய மனைவியைப் பார்க்கும் கணவன் பார்வையில் உண்மையான காதல் இருக்கிறது.
அதை மறக்காதார்கீள்!
அன்புடன்
கமலா
அப்படியா கமலா.
அப்படியானால் விவாகரத்து செய்தது மனனவியாக இருக்கவேண்டும்.
ஏனெனில் இவர் அவர்களை மறுத்திருந்தால்,
காதல் செயல் பட அங்கு நியாஅம் இல்லையே:)
நன்றி கல்யாணகமலா.
வல்லியம்மா. தொடங்கியவிதம் மிக அருமை. ஒன்றரை மாதம் கழித்துப் படிக்க முடிந்தாலும் படிக்காமல் விட்டுவிடவில்லையே என்பதில் மகிழ்ச்சி. :-)
அன்பு குமரன்,
உங்கள் பின்னூட்டத்துக்கு ஒரு வருடம் கழித்துப் பதில் போடுகிறேனே மன்னியுங்கள்.
Post a Comment