Blog Archive

Wednesday, April 18, 2007

கதம்பமாலைக்கு வாழ்த்துக்கள்..100 பதிவுகள் ஆயிடுத்தா!!!

கதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.
தஞ்சாவூர்க் கதம்பம் சொல்லுவாங்க.


இப்போ இணையத்தில கதம்பம் கட்டிக் கொடுக்க

கதம்பமாலை வந்துவிட்டது.
அது வந்து 100 பதிவுகள்
ஒரு சதமும் போட்டாச்சாம்.
எல்லாம் பெரிய கையா இருக்கு.

எழுதறவங்களைச் சொல்றேன்மா.


பலவிதப் பூக்கள் சேரும் கதம்பமாலையில் நானும்
ஒரு பதிவு போட்டுட்டேன்.

அதை நம்ம பதிவிலேயும்மிணைத்தாகி விட்டது.

பிரேமலதா-----கோம்பை பதிவும்
எழுதி இந்த சேவையையும் ஆரம்பிச்சு இருக்காங்க.

எல்லோரும் வாழ்த்தலாம்.இந்த அழகான
ஆக்கபூர்வமான முயற்சிக்கு.

அவங்களுக்கு இன்னும் நிறைய பதிவர்கள் அவங்க மாலையில்லெழுத வேண்டும் என்றுஆர்வம் .

நானும் சில வலைப்பூக்களைச் சொன்னேன்.
அதில

ரவி கண்ணபிரான்
காட்டாறு
அபி அப்பா,
கண்மணி,
கீதா சாம்பசிவம்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்



இவர்கள் பேரெல்லாம் கொடுக்க ஆசை.
நிறைவேறினா நல்லா இருக்கும்.

கீழே படமில்லாமல் (?????) ஒரு பதிவு எழுதி இருக்கேன் கதம்பமாலைக்கு;

வாழ்த்துக்கள் கதம்ப மாலைக்கு;


கதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.
தஞ்சாவூர்க் கதம்பம் சொல்லுவாங்க
அது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.

எங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி ஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.




பாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.அவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டுக் கேட்டே மணக்க ஆரம்பித்துவிடும்.
கூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.
அந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.
காலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.
பதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை
கூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.




சாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில
பிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு வண்டியில் மாடு இழுக்க உருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க.
எல்லாப் பொருளுக்கும் அன்று ஒரு ரூபாயிக்குள்வாங்கி இருப்போம்.
இந்த மாதிரி ஒரு எண்டர்ப்ரைசிங் லேடிநான் இதுவரை பார்த்தது இல்லை.அதான் 50 வருஷம் கழிச்சி அவங்க நினைவு வருது.
அதே மாதிரி ஆல் ரௌண்டராக் கதம்ப மாலையும் வரும்னு வாழ்த்துக்கிறேன்.
அது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.எங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி ஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.
பாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.அவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டுக் கேட்டே மணக்க ஆரம்பித்துவிடும்.
கூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.
அந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.
காலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.
பதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை
கூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.
சாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில
பிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு வண்டியில் மாடு இழுக்க உருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க.
எல்லாப் பொருளுக்கும் அன்று ஒரு ரூபாயிக்குள்வாங்கி இருப்போம்.
இந்த மாதிரி ஒரு எண்டர்ப்ரைசிங் லேடிநான் இதுவரை பார்த்தது இல்லை.அதான் 50 வருஷம் கழிச்சி அவங்க நினைவு வருது.
அதே மாதிரி ஆல் ரௌண்டராக் கதம்ப மாலையும் வரும்னு வாழ்த்துக்கிறேன்.

18 comments:

Premalatha said...

நன்றி.

கதம்பமாலைல நீங்களும்தானே ஒரு கை. :-)

//பிரேமலதா-----கோம்பை பதிவும்
எழுதி //

பிரேமலதா கோம்பை பதிவு மட்டுமா எழுதுறாங்க!! (a truly jobless armchair theorist!)


//இந்த சேவையையும் ஆரம்பிச்சு இருக்காங்க//

சேவையா!! எனக்குத்தெரியுமா?

//பலவிதப் பூக்கள் சேரும் கதம்பமாலையில் நானும்
ஒரு பதிவு போட்டுட்டேன்.//

வெல்கம் வெல்கம்.

//ரவி கண்ணபிரான்
காட்டாறு
அபி அப்பா,
கண்மணி,
கீதா சாம்பசிவம்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்//

மேலேயுள்ளவர்களுக்கு சம்மதமென்றால் எனக்கோ ரேவதிக்கோ (வல்லி சிம்ஹன்) தெரிவிக்கவும்.

விருப்பமிருக்கும் யாரும் எனக்கோ ரேவதிக்கோ தெரிவிக்கவும்.


//வாழ்த்துக்கள் கதம்ப மாலைக்கு;//
நன்றி நன்றி.

துளசி கோபால் said...

கதம்பத்துக்கு வாழ்த்துக்கள். நல்லாத்தான் அடிச்சு ஆடறாங்க. அதுக்குள்ளே சதம்!!!!

வல்லி, கதம்பம் கட்டும் அவசரத்தில் ஒரே பூவை பக்கத்துலே பக்கத்துலே ரெண்டு
கண்ணி கட்டிட்டீங்களே:-))))

காட்டாறு said...

வைல்லியம்மா, கதம்பமாலை எந்த விதத்துல தமிழ்மணத்துல இருந்து மாறுபட்டதுன்னு சொன்னீங்கன்னா... சரின்னு சொல்லுறதுக்கு வசதியா இருக்கும்.

அந்த லிங்க் போயும் எனக்கு சரியா புரியலன்னு நினைக்கிறேன். புரியும் படியா விளக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

நானும் ஒரு கை.
ஹா நல்லா இருக்கே.
எப்போ இந்தக் கச்சேரி ஆரம்பிச்சது:-)

பிரேமலதா கோம்பை பதிவு மட்டுமா எழுதுறாங்க!! (a truly jobless armchair theorist!)//
பதிவு இருக்கு.
நீங்க பதியரீங்க.
இதிலென்ன ஜாப்லெஸ்.
ஒரு அருமையான அம்மா இல்லையா நீங்க!?
சேவை தெரியாதா.
இடியாப்பம்பா:-)
நானும் இணைந்தா அது இடி ஆப்பம் ஆயிடும்.

விரும்பி சேர்ந்தால் எத்தனை சோபிக்கும்.!! மறுபடியும் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
என்ன செய்வது:-)
ஆர்வக் கோளாறு!!
கட்@பேஸ்ட்
சரியாவுதில்ல நமக்கு.:-)

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு, உங்க இமயில் தெரிந்தால் எழுதிடுவேன்.

http://kathambamaalai.wordpress.com

போனீங்களா?
துளசி,
முத்துலட்சுமி எல்லாம் அதில இருக்காங்க.

விவரமா சொல்லச் சொல்றேன்.

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,
இந்தப் பதிவைப் பாருங்க.
http://kathambamaalai.wordpress.com/2007/03/30/mozhi_review/

மெளலி (மதுரையம்பதி) said...

அடிக்கடி மதுரையைப் பற்றிச் சொல்லி நாஸ்டாலஜிக்காக செய்துவிடுகிறீர்கள்....

இப்போ மதுரையில் மட்டுமல்ல, எங்குமே அந்த மாதிரி கதம்பம் கிடைப்பதில்லை. இன்றைய கதம்பம் என்பது, பன்னீர் இலை (மரு/மருகொழுந்து கூட இருப்பதில்லை), அரளி, ஜெவ்வந்தி மட்டுமே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,
நாற்பது வருஷத்துக்கு முந்தின மதுரை நன்றாகத்தான் இருந்தது.
இப்போதெலாம் சென்னையில் கூட முழம் பத்து ருப்பாய் கொடுத்தால் கதம்பம் கெட்டியாகத் தொடுத்துக் கொடுக்கிறார்கள்.
ஆனால் வாசனை?? ஒண்ணும் கிடையாது.

நினைவிலாவது மதுரையைச் சுவைக்கலாம் என்றுதான் எழுதினேன்.

காட்டாறு said...

சேர்ந்துட்டேன் வல்லியம்மா! என்னையும் சேர்க்க எண்ணியதற்கு நன்றி!

வல்லிசிம்ஹன் said...

அப்டிபோடு.
இப்ப எனக்கு சந்தோஷம்.
யங் ப்ளட்னு சொல்றது இதுக்குத்தான்.

நீங்க யங்ப்ளட்தானே:-)

நல்லா எழுதுங்கப் பா.
வெல்கம் ஆன் போர்ட்.
வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

Congratulations Valli. I am sorry I am unable participate in your job due to my pressure of workload. There will be no justification from my side. I want to avoid it. Anyhow Long Live Kadambamalai and its flavour. Heartiest Congrats to its members also including you.

வல்லிசிம்ஹன் said...

that is fine geetha.
I do understand.

It is just ,like I thought this will be good for all of us.
anyway you are already involved in many other projects.

Kathambamaalai 0fcourse shd be fine with all your wishes.
Thank you for the immediate response.

ambi said...

இது என்ன கதம்பம் மாதிரியே ரெண்டு தடவை வந்து இருக்கு சில பாராக்கள்! :)

ambi said...

//I am sorry I am unable participate in your job due to my pressure of workload.//

@Geetha madam, அட இங்க பாருடா காமெடிய! :)

//anyway you are already involved in many other projects.
//
@valli madam, ஹாஹா! உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு!

வல்லிசிம்ஹன் said...

அம்பி, கதம்பத்தை மாற்றிக் கட்டி விப்பார்கள்.

துளசி சொன்னது போல ஒரே பூவை இரண்டுதரம் கட்டிவிட்டால் போல வந்ததற்குக் காரணம்,
நோட்பாடில எழுதிட்டு ப்ளாக்ல ஏத்தினதனாலெ.

காப்பி அடிச்சதே இல்லை அம்பி:-)

வல்லிசிம்ஹன் said...

கீதாவை வம்புக்கு இழுக்காதீர்கள் பாவம்.அம்பி
குழந்தை பிறந்து நான்கு மாதத்தில் எனக்கெ
வேலை நெட்டி முறிகிறது.

அவங்களுக்குக் கேட்க வேண்டாம்.
சென்னை வரட்டும் யாரு விட்டா அவங்களை.:-)

காட்டாறு said...

மனசு பதினாறா இருந்தா என்றும் இளமைதானே வல்லியம்மா?