Sunday, January 21, 2007

ரங்கா ரங்காஸ்ரீரங்கநாதனை அடைய,
ஜய விஜயரிடம் வணங்கி அனுமதி கேட்டு,
தாயாரிடம்'அம்மா உன் நாயகனைத் தரிசித்துப்
பரிசு வாங்க வேண்டும்.
பக்திப் பரிசு. அடியார் படுதுயர் அகற்றும் பரிசு. நீ, இந்த சப்தப்பிரகாரங்களை நாங்கள் சுற்றும் நேரம்,
அவரிடம் சொல்லி வை. எங்களை , நெடுமால் அங்கண் இரண்டும் கொண்டு பார்த்து அருள் செய்யட்டும்''
என்று வேண்டிக்கொள்ளவேண்டும்,
என்பது பெரியோர் வாக்கு.
பிறகு அரங்கனை அந்த வாயில்களின் அருகே நின்று பார்த்து ,
அழகனின் அருகாமையை அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டும் இருக்கிறேன்.

ஒரு நான்கு வருடங்கள்(2003) முன்னால் அவனைத்
தரிசிக்கப் போன போதும் வெளியே வரும்வரை அரங்கன் அமுதமே மனதில் நிறைந்து இருந்தது.

பிறகுதான் அவன் செய்த வேலை பிடிக்கவில்லை.
தன் பெயர் கொண்ட என் தம்பியையும் தன்னிடம் அழைத்துக் கொண்டான் ஒரே இரவுத் தூக்கத்தில்.

அப்போதிலிருந்தே நான் அரங்கனை நினைக்கும் போதெல்லாம் இவனையும் கூப்பிடுகிறேனோ என்று சந்தேகமாய் இருக்கிறது.

நாமும் அங்கேதானே போகப் போகிறோம்,
கேட்டு விடலாம் என்றுதான் நினைக்கிறேன்.
ரங்கா உன்னை மறக்கலையப்பா.11 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல படங்கள்.
உங்கள் தம்பியின் நினைப்பு எப்பொழுதும் இருந்து கொண்டேதானே இருக்கும்.

துளசி கோபால் said...

'ரங்கா ரங்கா ரங்கா............
மோகன ரங்கா என்னைப் பாரடா....
அழகுள்ள மனமோகன ரங்கா என்னைப்(எண்ணிப்) பாரடா......

தனக்கு ரொம்பப் பிரியமானவங்களைச் சீக்கிரமாக் கூப்புட்டுக்குவானாமே! நானும் நேரில் போகும்போது கேக்கணும் இதைப் பத்தி.

நினைவுகள் நீங்காது வல்லி.

kekkE PikkuNi #25511630 said...

சீரங்கம் கோயிலுக்குப் போகும் போதெல்லாம் இத்தன protocol இருக்குன்னு தெரியாம போச்சே! பழைய/பார்த்த ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள். அருமையான படங்கள். என் கண்கள் கொள்ளை கொண்ட அரங்கனை சீக்கிரம் போய்ப் பாக்கணும்.

உங்கள் தம்பியின் மறைவுக்கு என் அனுதாபங்கள். அரங்கனின் அடியார் பாடும் படியில் அவரும் இருப்பார். எங்க ஊர்ல அப்பிடித் தான் சொல்லுவாங்க: நல்லவங்க/புண்ணியம் செஞ்சவங்க கோயில் படியில் இருப்பாங்கன்னனு.

கெ.பி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கொத்ஸ்.
நினைவிலேதான் இருக்கிறாண்.
'ஏய், எனக்கு ஒரு போன் போடு 20 நிமிஷத்தில வந்துடுவேன்.
கவலப்படாதேனு'' சொன்னவன் அவன்தான்.
நல்லவன்.
நன்றி கொத்ஸ்.
அவனுக்குக் கவிதை எழுத நிறைய பிடிக்கும்.
அவனது அலுவலகத்தில் அவன் கடைசியாய் எழுதின கவிதையை ப்ரிண்ட் எடுத்து போர்டில் மாட்டி இருந்தார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாடி,
துளசி வந்தாச்சு.
இந்தப் பாட்டுதான் தம்பியைக் கேலி செய்ய நாங்கள் பாடும் பாட்டு. காது மூக்கெல்லாம் அவனுக்கு சிவந்துவிடும் கோபத்தில்:-)

அவனுக்கு''உன்னைப் போல உண்டாடா''னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஓடி ஓடி செய்வான்.
வருஷ நினைவுநாள்னு வரும் இல்லையா.அதனால் அவன் பேரைப் பதித்தேன்.
துளசி ரொம்பத் தான்க்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பாக, கே.பி.
அவன் சுத்தாத ஊர்கள் கிடையாது. எல்லாக் கோவில்களுக்கும் போய்,
பிரசாதம் கொண்டுவந்து தருவான்.

சிரமமில்லாமல் அரங்கன் கூட்டிக் கொண்டுவிட்டான்.
புண்ணிய ஆத்மா.
மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.
நம்மைவிடக் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர்.
அதனால் ரொம்ப சொல்லக்கூடாது என்று சும்மா இருக்க வேண்டியதுதான்.
ரொம்ப ரொம்ப நன்றி.

கீதா சாம்பசிவம் said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு வல்லி, எங்கே இருந்து எடுத்தீங்க?
தம்பியின் பிரிவு ஆறாத வடுவாய் இருக்கு உங்க மனசிலே, என்ன செய்யலாம்? ரொம்பவே நல்லவங்க தன்னோடயே இருக்கணும்னு அந்த ஆண்டவன் நினைக்கிறான் போல் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கீதா.
வருஷத்துக்கு ஒரு தடவை அவனைப் பதிவில் கொண்டுவரவேண்டும்னு நினைக்கிறேன்.
அப்புறம் நினைத்துக் கொண்டேன், இதிலென்ன சாதிக்கப் போகிறேன்?
அவன் என்ன திரும்பி வந்து யேய், ரொம்ப நல்லா எழுதி இருக்கியேனு சொல்லப் போகிறானா:(
தான்க்ஸ்பா.

தி. ரா. ச.(T.R.C.) said...

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
இந்தப் பாடலை நம்மைப் போன்றோர்க்காவே கண்ணதாசன் எழுதினார் போலும்.அரங்கனுடன் அந்தரங்கமாகி விட்ட அந்த ரங்கனை
மறக்க முடியுமா?

வல்லிசிம்ஹன் said...

நன்றி. தி.ரா.ச.

உங்க வீட்டில் இதெ சம்பவம் நடந்ததும் நினைவுக்கு வந்தது.

குமரன் (Kumaran) said...

அருமையான பதிவு என்று எண்ணிக் கொண்டு படங்களைப் பார்த்துக் கொண்டும் உங்கள் வார்த்தைகளின் அரங்கனைத் தரிசித்துக் கொண்டும் வந்தேன். நெகிழ வைத்து விட்டீர்கள்.