Blog Archive

Wednesday, January 17, 2007

மீண்டும் பாட்டி......

ஊருக்கு வந்ததும்,
இருக்குமிடம் பழக இந்த ஊரில் நான்கு நாள் ஆகுமே.

அதை மறவாமல் கடைப்பிடித்தாச்சு.
அதாவது பகலில் தூங்கி,
இரவிலும் தூங்கி காலத்தைக் கழித்து
மறக்காமல் தமிழ்மணம்,தினமல்ர், ஹிண்டு ஆன்லைன்,
ஆபிச்சுவரி காலம்
எல்லாம் பார்த்தேன்.
இவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
''அது எப்படிம்மா உனக்கு கம்ப்யூட்டர் பக்கம் போனால் முழிப்பு வருகிறது,
சோஃபா பக்கம் வந்தால் தூக்கம் வரதே '' என்று கேட்டார்கள்.

என்னைக் கொண்டுவிட வந்த கடைசிப் பையன்
சொன்னான்,''அம்மா முன்ன மாதிரி இல்லை.
எட்டு வருட இண்டர்னெட் மெயிலம்மா இல்லை.
இப்போது புதிய வல்லியம்மா.''

என்றான். என்னடா இது நியூ, இம்ப்ருவ்டு
சர்ஃப் மாதிரி கமெண்ட் வரதேனு பார்த்தேன்.

ஏனெனில் ஏற்கனவே இந்த வயதில் இதென்ன புதிதா
அப்படினு கேக்கறவங்களை

ஆசிய,ஐரொப்பாக் கண்டங்களில் பார்த்த அனுபவம் இருந்ததால்,
''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே''
என்று தமிழ், தேன்கூடு என்று சொல்ல
ஆரம்பித்தேன்.
நீ எழுதுவதை யாரும்மா படிக்கிறாங்கனு
கேள்வி.
தொடர்ந்து நீ ஒரு ஆண் பெயரில் எழுதலாமேனு ஒரு யோசனை,
வீட்டு சமாசாரமெல்லாம் எழுதிவிடுவாயோனு ஒரு சந்தேகம்.''
ஹ்ம்ம். என்னதான் பிரபலமாயிருந்தாலும்(!!)
படிக்கிறவங்களைக் கண்டுபிடிக்கிற யுக்தி இன்னும் தெரியலை என்று அவர்களைச்
சமாதானப் படுத்தினேன்.

அப்பொழுதுதான் ஒரு பழைய எழுத்தாளரின்
மனைவி என்னிடம் புலம்பியது நினைவு வந்தது.
அந்த அம்மா ''இவரு நான் நின்னா உக்கார்ந்தா, யாரவது வீட்டுக்கு வந்தா எழுதிடுவாரும. எதுக்கும் அவரிடம் பேசும்போது சாக்கிரதையா இருங்க.
அதை வைத்து ஒரு சரித்திரமே எழுதிடுவாருனு''
சொன்னாங்க.:-0)

அப்போதுதான் எனக்கு,அட இது கூட நல்லா , சிந்தனைக்குரிய ஐடியாவா இருக்கே '

என்று தோன்றியது.
இப்படியாகத் தானே நாட்கள் கழிய
கண்ணன் பிறக்கும் நாளும் வந்தது.

4 comments:

இலவசக்கொத்தனார் said...

இன்னும் நிறையா சம்பங்கள் அம்பலமேறப் போகுதுன்னு சொல்லுங்க! :))

ஐயம் தி வெயிட்டிங்!

வல்லிசிம்ஹன் said...

ஜஸ்ட் யூ வெயிட்.
நிறைய சம்பவங்கள் எழுதப்படாமல் ஒனால் பிற்காலத்து சந்ததியர் வருத்தப் படுவார்கள்கள் அல்(ல)வா:)

குமரன் (Kumaran) said...

புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை இப்படி வந்தது போனது பேசினது தூங்கினது எல்லாம் எழுதிவைக்கப் போய் தானே இப்போது அந்தக் காலத்தில் என்ன நடந்தது என்று தெளிவாத் தெரியுது. நீங்களும் அப்படியே எழுதுங்க அம்மா. :-)

லேட்டா வந்தாலும் வந்து உங்க பதிவையெல்லாம் படிச்சிருவேன். ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தாமதமா வந்தாலும் கோவிச்சுக்காதீங்க. :-)

வல்லிசிம்ஹன் said...

குமரன்,
வாங்க. இப்போதான் கோதையின் பக்கம் போலாம்னு நினைச்சேன். உங்க ஊரு குளிர்,
கை கால் எல்லாம் சுலபத்தில
வேலை செய்வேனா என்கிறது.
துணிவெ துணைனு வேற சொல்லிட்டீங்க.
பையன் சொல்லைக் கேக்காத அம்மா இருக்க முடியும.சரளத்தமிழில் தான் எழுதறேன்.
எ.பி. நிறைய வருது. ஒரு வேளை இந்த ஊருக் கீபோர்ட்
அப்படித்தானோ?:-)