Blog Archive

Tuesday, September 12, 2006

லிஃப்ட்?

அம்மா
பிறந்ததிலிருந்தே இவள் நம்மைத் தூக்கி நிறுத்துகிறாள்.அவளுக்கு முன்னால் மற்ற

லிஃப்ட்எல்லாம் சிறியது.உலகத்திலேயே அம்மா அப்பா இருவரைத்தவிரவேறு யார் கேள்வி கேட்காமல் நம்மைமேலே மேலே அழைத்துப் போகிறவர்கள்/?

அடுத்த லிஃப்ட் அப்பா.
தூக்கிப்
படிக்க சேர்த்த
லிஃப்டர்.
அப்புறம் நான்
படித்த பள்ளி ஆசிரியைகள்..ஓவியம், பாட்டு, ஓட்டம்,நடனம்விளையாட்டு......எல்லாத்துறைகளிலும் உன்னால் முடியும் என்று சொன்னவர்கள்.


பாதுகாப்பாக அறிவை புத்தியில் தூக்கி வைத்தவர்கள்;அவர்கள் கொடுத்த ஊக்கம்கல்லூரிக்குக் கூட்டிப் போனது.

அவர்கள் ஏற்றி வைத்த ஞானம்தான் எங்கள்குழந்தைகள் பள்ளிக்குப் போகும் காலத்தில்
அவர்களுடைய ஹோம்வொர்க் செய்யும் நேரம்கைகொடுத்தது.இல்லாவிட்டால் பெற்றோர் ஆசிரியைகள் சந்திப்பில் வழிந்து ஆறாகஓடியிருக்கும் என் மானம்.:-0)

இப்போது நம்மை மகிழ்ச்சியாக இருக்க வைப்பதும்
நாம் பெற்ற செல்வங்கள் கொடுக்கும் ஊக்கம் தான்.

இவர்கள் எல்லொருக்கும் மேலாக நம்முடன் எப்போதும் இருந்து வாழ்வின் எல்லா தளங்களிலும் நம்மை விடாமல் தூக்கி நிறுத்துபவர்இறைவன் தானே.

6 comments:

துளசி கோபால் said...

பெரிய லிஃப்ட்(டர்) சாமின்னு சொல்லியாச்சு.

மறுத்துப்பேச எனக்கு வாய் இருக்கா என்ன? :-)))


சிம்பிள் & சூப்பர்

வல்லிசிம்ஹன் said...

துளசி, தமிழ்மணம்+துளசிதளம் விட்டுட்டேனேபா. மன்சூர் ராஜாவும், தமிழாவும்,இ-கலப்பை...
விடலாமா.
சாமி எல்லொரையும் காப்பாத்துனு சொல்லிக்கறேன்.நீங்க தான் கலப்பையில் உழறதுக்கு என்னனு கேப்பீங்க.

FAIRY said...

"மாதா, பிதா, குரு, தெய்வம்" என்பதை அழகாக எடுத்துரைத்தீர்கள் வள்ளி

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன வல்லியம்மா நீங்கள் எழுதும் நல்ல விஷயங்களை படித்து எங்களது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு உங்களை மேலும் மேலும் எழுதத்தூண்டி ஓரளவுக்கு உயர்த்தும் எங்களையும் லிfடில் சேர்க்காதது நியாயமா?

வல்லிசிம்ஹன் said...

fஃஏரி,,நாம எழுதற்தைப்
புரிஞ்சக்கிறவங்க அடுத்த
லிஃப்ட்
லிஸ்ட்லே இருக்காங்க.
சாரி
அவங்களை விட்டுவிட்டேன்
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அட ராமா, தி.ரா.ச,
இப்போதான் தேவதைக்கு பதில் சொன்னேன்.
அடுத்தாப்பில உங்க காமெண்ட்.
உங்களை விட்டது தப்புதான்.
இன்னோரு பதிவு போட்டுடலாமா?:-))