Blog Archive

Saturday, September 09, 2006

கூவி அழைத்தால் வருவானோ





நம்மில் சில பேர், சாமிக்கு ஏன் ஏதாவது படைக்க வேண்டும்? நாம் சாப்பிடும் பொருட்களை அவர் சாப்பிடப் போகிறாரா. ராத்திரி வேளையில் அவருக்கு எதற்கு ஏகாந்த சேவையும் நாதஸ்வரமும் நீலாம்பரி இசையும் /அவர் தூங்கப்போகிறாரா/?



டெல் மி ஒய் என்று முன்னால் சிறுவர் சிறுமியருக்கு ஒரு செலக்ஷன் of குட் க்வெஸ்டியன்ஸ் அண்ட் ஆன்சர்ஸ் வரும். ஆனால் அதில் நம்ம சாமியைப் பற்றி ஒண்ணும் கிடைக்காது. நமக்கு இவ்வளவு முன்னோடிகள் இருக்கும்பொதே சில கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை



. வரப்போகும் தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? ஏனெனில் நமக்குத் தெரிந்ததும் கொஞ்சம் தான்.

அப்போதுதான் இன்று காலை இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. வடமொழியில் இருந்தாலும் புரிந்தது. எனக்குத் தெரிந்தவரை அதன் பொருளைக் கொடுத்து இருக்கிறேன்.
யார் சொல்வது ராமன் சாப்பிடவில்லை என்று.? நீங்களும் சபரியின் அன்போடு கொடுத்தால் அவன் ஏற்றுக்கொள்ளுவான்.
யார் சொல்வது கிருஷ்ணன் தூங்குவதில்லை என்று. நீங்களும் யசோதா போல் அவனுக்குத் தாலாட்டுப் பாடினால் அவன் தூங்குவான்.


யார் சொலவது அவன் பாடி ஆடிக் களிக்க மாட்டான் என்று, நீங்களும் கோபிகளுடன் சேர்ந்தால் பக்தியில் அவன் பாடி ஆடுவான். அவர்களைப் போலப் பாடிப் பழகுங்கள்.

யார் சொல்வது அவன் அழைத்தால் வரமாட்டான் என்று
நீங்களும் த்ரூவனைப் போல்,
த்ரௌபதிபோல்,கஜேந்திரனைப் போல், பிரகலாதனைப் போல் கதறிக் கூப்பிடுங்கள்
அவன் வருவான்.
என்று
இதே போல் போகிறது. இனிமையான பாடல். சில கேள்விகளுக்குப் பதில் இப்படித்தான் கிடைக்கும். இதை நம்பினால் போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.

4 comments:

துளசி கோபால் said...

ஏன் வரமாட்டார்? அதைவிட அவருக்கு வேறு என்ன வேலை?
என்ன ஒண்ணு, அந்தக் கிரீடம் எல்லாம் வச்சுண்டு வரமாட்டார். வேற எதாவது
ரூபத்தில் வந்து உதவி செஞ்சுட்டுப் போவார்.

நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பினால்தான் சாமி.

ஆமாம், அந்த முதல் படத்தில் நம்ம 'நேயுடு' ச்செல்லம் போல ஒரு சின்ன ஆசனத்தில்
உக்கார்ந்திருக்கறது ரொம்பப் பிடிச்சது.

உங்க பதிவுகளில், எனக்கு இப்படிப் படம் பார்க்கறதுதான் ரொம்ப ஜோர்!

வல்லிசிம்ஹன் said...

அப்பா. நேயுடுவை விதவிதமாப் படம் போட்டுறலாமா/
பக்தையின் வேண்டுகோளுக்கு
இணங்க தினம் ஒருவர் தனி மெயிலில் பறந்து வருவார்.

"கோனு கஹதேஹை பகவானு காதே நஹி"
என்று இந்தப் பாடல் ரொம்ப நல்லா இருக்கு துளசி.

ஜெயஸ்ரீ said...

படங்கள் அருமை வல்லி அவர்களே. பாடலின் கருத்தும் மிக இனிமை. பாடலுக்கு சுட்டி தர முடியுமா? பாடலை எழுதியவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்.

வல்லிசிம்ஹன் said...

ஜெயஸ்ரீ,வாங்கப்பா.
இந்த அவர்களே வேண்டாமே. யாரொ மாதிரி இருக்கு.
ஒரு சாதாரண அம்மாதான்.
இந்தப் பாட்டு சன்ஸ்கார் டி வியில் கேட்டேன்.
கோனு கஹே என்று ஒரு நாள் கேட்டேன். ஆர்ட் ஆஃப் லிவிங் செஷன் வரும். அதில் ஒருத்தர் கிடார் வச்சுண்டு பாடுவார்.
மார்னிங் 5.30க்கு வரும்.
சாரிம்மா. லின்க் கொடுக்க முடியவில்லை. தான்க்ஸ், நன்றி.:-))