

வினாயகனே வெவ்வினையை வேறருக்க வல்லான்.
கணேசனைத் தொழாத கைகள் உண்டா?
அப்பனே காப்பாத்து என்று அரசமரத்தடியை நோக்கி
வணங்காதவர்கள் உண்டா?
எத்தனை நல்ல பிள்ளை இவர். அம்மாவுக்காக அரசமரத்தடி போதும் கூரையும் வேண்டாம்

கும்பாபிஷேகம் வேண்டாம் என்று இருப்பார்.
ஆத்திலே தண்ணீர் மொண்டு வீட்டுக்குப் போகும்போது இவருக்கும் ஒரு அபிஷேகம் செய்துவிட்டுக், காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் வழக்கம் இப்பவும் உண்டு.
கருணையுள்ள பிள்ளை.
ஒரு சதுர்த்தேங்காய் போதும்.
மனசு சமாதானமாகிவிடும்.
அவரா சாப்பிடுகிறார்.
சுத்தி இருப்பவர்காளுக்கு பசி தீர்ப்பதற்கே சூறைத்தேங்காய்
என்று சிரிப்பது போல முகம்.
மதுரை முக்குருணிப் பிள்ளயார்,
திருச்சி உச்சிப் பிள்ளயார்,
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்,
சேலம் ராஜ கணபதி,
நம்ம நவசக்திப் பிள்ளயார்--லஸ்ஸிலிருந்து கொண்டு
காலையில் ராஜ் டிவிலேயும் வந்து விடுவார்.
இதைத்தவிர வீடு தோறும் வாஸ்துப் பிள்ளையார் வேறு.
அப்பா எப்படி இத்தனை கருணை உனக்கு.??
எங்கே போயி உன்னை நினைத்தாலும் கணத்தில் அருள்கிறாயே.
கணபதியே.
நித்தம் உன்னை நினைக்கும் மனம் கொடு.
நிர்மல கணநாதா.
சித்தம் கலங்கி சிதறி விடாமல்
பொற்பதம் அருள்வாய்
சித்தி விநாயகனே.
நவ சக்தி விநாயகனே.
விளாம்பழம், நாவல் பழம்
அவல் பொரி சுண்டலுடன்
அப்பமும் அதிரசமும்
வெல்லக் கொழுக்கட்டையும்
உனக்குக் கைகாட்டி,
அருகம்புல்லையும் சந்த்னத்தையும்
குங்குமம் விபூதியையும்
சாம்பிராணி வாசனையும் கூட்டி,
வேறு யேதும் தேடாமல்
வீட்டுக்கு வந்த விக்கினேஸ்வரா,
சரணம் சரணம் உன் பாதம்.
சரணம் சரணம் உன் பாதம்
7 comments:
விளி விண்ணுக்குள்ளே இருந்த பிள்ளையார்
களி மண்ணுக்குள்ளே வந்தாலும்
ஒளி கண்ணுக்குள்ளே வந்தாலும்
என் உள்ளத்துக்குள் வரும் நாள் எந்நாளோ?
அதெல்லாம் டொண்ட் ஒர்ரி.
கூடவே இருந்து காப்பாத்திடுவார் நம் (வெல்ல) செல்ல பிள்ளையார்.
அதைவிட அவருக்கு வேறு என்ன வேலையாம்? :-))))
பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.
நம்ம பிள்ளையார் எப்பவும் நம்மை கைவிடாமல் இருக்கிறார், நாம் தான் சமயத்தில் அவரை நினைப்பதில்லை. எல்லாம் சேர்த்து வைத்து விடுகிறோம். எப்படி இருந்தது சதுர்த்தி பூஜை எல்லாம்?
ஆமாம் டி.ஆர்.சி.
அவரும் வருடா வருடம் மண்ணில்
புகுந்து அவதாரங்களாக பல வண்ணத்தில் வருவது இவர் ஒருத்தர்தான்.
மனத்தில் நினைப்பது காலையில் ஒரு தடவை.ராத்திரி ஒரு தடவை.
புத்தி போட்டுகொண்டே இருக்கணும்.
நன்றி.
அன்பு துளசி, ஆமாம்பா அவர் கண்டுக்காம இருந்துடுவாரா.
யாரு விட்டா/
சாமியே சரணம்.
Fairy,
சதுர்த்தி நல்ல போச்சு.
அவர் பேரு சொல்லி கொழுக்கட்டை தள்ளியாச்சு.
அலங்காரம் அப்படியே இருக்கு. திருப்பி அவரைக் கிணத்தில் போடும்போது மனசே கேக்காது.
ஊரெல்லாம் கச்சேரி, சொற்பொழிவு.
உங்க ஊரில உண்டா?
ஆம் வள்ளி ஆனால் நான் பார்க்கவில்லை. கொஞ்சம் busy அதான் answer லேட் ஆயிடுத்து sorry.
Post a Comment