சமத்தா, சாமர்த்தியமா இரு---கேக்கவில்லை
அசட்டு நம்பிக்கை, அசட்டு தைர்யம் கூடாது--கேக்கவில்லை
யாரைப் பார்த்தும் குடும்பத்தைப் பற்றி விமரிசிக்கக் கூடாது---கேக்கவில்லை.
பிறந்த வீட்டுப் பெருமையோ, இல்லை தாழ்வோ
புகுந்த வீட்டிலே பேச வேண்டாம்--சரி என்று சொல்லிவிட்டு மீறுவேன்.
சமத்தா, சாமர்த்தியமா இரு---கேக்கவில்லை
அசட்டு நம்பிக்கை, அசட்டு தைர்யம் கூடாது--கேக்கவில்லை
யாரைப் பார்த்தும் குடும்பத்தைப் பற்றி விமரிசிக்கக் கூடாது---கேக்கவில்லை.
அதே போல் பிறந்த வீட்டுக்கு வந்து
வாழும் வீட்டு உறவு பத்தி சொல்லாதே, உன் மதிப்பு தான் குறையும்.-----அம்மாவே இப்படித்தான்.சும்மா ஜாலிக்காகப் பேசினால் என்ன?
ஆறு திரி போட்டு விளக்கு ஏத்து
குடும்பம் மங்களமாக இருக்கும்,
வாங்கவே இல்லியே!
அதனாலெ தானாம்மா ? நீ கடைசியா
இதுகிட்டே நாம என்ன சொல்லி
என்ன கேக்கும்னு
நினைச்சுட்டியா.
சொல்லிக்காமயே போயிட்டியே?
3 comments:
வல்லி,
உங்களுக்காவது அம்மா சொல்லவாவது சொல்லி இருக்காங்க.
எனக்கு அந்தச் சான்ஸ்கூட கிடைக்கலை.
அப்புறம் கொஞ்சம் வளர்ந்தபிறகு சொல்லலாமுன்னு இருந்திருப்பாங்களோ என்னவோ?
அதுக்குள்ளெ விதி முடிஞ்சாச்சு(-:
Gopalan,
yes you are right. not all of them are bad.they just do not have the patience.
I cannot comment on anyone. parents are one set of people who will be there always for you was my center thought.
we were good obedient children. but that has not stopped me from being guilty ,
for not listening more.
thank you.
துளசி,
அதுதான் எனக்கு துயரமா இருக்கு.
எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கிடைத்தாலும்,
லட்சியம் செய்யாமல் போற போக்கில் விட்டு விடுகிறோம்.
ஈடு செய்ய முடியாது.நான் எழுதினால் கூட அவங்க வந்து படிக்கவா போறாங்க.:-(
Post a Comment