Blog Archive

Saturday, July 22, 2006

ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார்




கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி.

கண்ணனைப் பார்த்ததில்லை அவள். காணாமலே , கேட்டே, காதல் கொண்டாள்.
அவனில்லாமல் தன் வாழ்வு இல்லை என்ற தீர்மானத்துக்கு
உடனே வநதாள்.
இது , இந்த முறை நடப்பது வழக்கம்தான்.
பத்து வயதோ ,அதற்கு முன்னால் திருமணம் செய்யும் நாட்கள் அவை.
பத்து வயதில் காதல் வருமா.
வரும். வந்து காதலித்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன் பேதைப்பருவம் என்று சொல்லப்படும்
என்று அழைக்கப்படும் அந்தக் காலங்களில்,
அதை மகனும் மாமன் மகளும் அறிமுகம் செய்து கொள்வதே கணவனும் மனைவியாகத்தான்.
இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுரையில் அனைவரும் சகோதர சகோதரியாகவே அறியப்படும் அழகும் இருக்கிறது.
இப்போது, இந்தப்பதிவில்
ருக்மிணியின் காதல் நிறைவேறப்போகும் நேரம்!

அது ஒரு கனவுகளில் சஞ்சரிக்கும் காலங்களாக இருக்கத் தேவை இல்லை.
உணர்வுகள் மட்டுமே அறிந்து தேர்ந்து தன் துணையை அடையாளம் கண்டு கொள்ளும்.அந்த துவாபரயுகத்தில்
அரசுகளும் அரசுகளும் திருமணம் செய்து கொண்டன.
ருக்மிணியின் தந்தைக்குக் கண்ணன் மேல்தான் நினைவு
தன் சிறு மகளுக்கு ஏற்ற காளை அவன் என்று தீர்மானம்.
செய்து ஆண்டுகளாகிவிட்டன.

நடுவில் வந்தவன் சிசுபாலன்.

கண்ணனிட்ம் வேண்டுமென்றே பகை வளர்த்தவன்
இல்லாததும் பொல்லாததுமாக தூற்றுக்களை பரப்பி
தனக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டான்.

அவன் வலையில் சிக்கினவர்களில் ஒருவன் ருக்மி...ருக்மிணியின் அண்ணன்.

அவன் நினைப்பு வேறாகப் போயிற்று.
ஜரசந்தன்,சிசுபாலன் இவர்கள் கூட்டத்தில் தன் பெருமை உயரும்,
தன் தங்கையைக் கடி மணம் செய்து கொடுத்து விடலாம் என்று நினைத்து ,
தன் தந்தையிடமும் சொல்லி விட்டான்.
அவருக்கோ தனக்குப் பிறகு நாட்டை ஆளப்போகும் மகனை மறுத்து சொல்ல பயம்.
ஜராசந்தனின் கொடூரமான குணநலங்களையும் அறிந்தவர் அவர்.
சிசுபாலனின் அக்கிரமங்களும் தெரியும்.
ஆனாலும் ஒரு சிற்றரசன் தானே அவர், இந்த அரக்கர்கள் முன்னால்?
வாய்மூடி மவுனியானார்.
ருக்மிணியின் மனதறிந்தவன் கண்ணன்.
அவனுக்குப் பொறுப்பும் நிறைய. பொறுமையும் அப்படியே.
அவன் உலக அதிபதி. அவனுக்கு ந்த அரசியல் முறைகள் தெரிந்ததால் அமைதியாக இருந்தான்.
காலம் கனிவது என்று ஒரு சொல் அப்போதும் உண்டு.
ருக்மிணிக்கு ஒரு நாள் நகருவதே நரகமாக இருக்கிறது.
சுயம்வரம் ஏற்பாடுகள் என்ற பெயரில் சிசுபாலனுக்கு அவளை மணமுடிக்க ஆலோசனைகள் ஆரம்பித்து முன்னேறிக்கொண்டு இருந்தன.
மனதுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு ஏழைப் புரோஹிதரை அழைத்து ஆலொசனைக்
கேட்கிறாள்.
அழகாக ஒரு எளிமையான கடிதம் கிருஷ்ணனுக்கு
வரைகிறாள்.
"கிருஷ்ணா,
என் உயிர்,என் தலைவன்,என் கடவுள் நஈதான்.
உன் ஒருவனுக்குத்தான் நான் உரிமை,
இங்கே சேடி நாட்டு அரசனுக்கு என்னை
மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

என் அன்பிற்கு பாத்திரமான இந்தப் புரோஹிதரோடு
நீ வரவேண்டும்.உடனே.
நானும் தோழியரும் மங்கள கௌரி விரதத்தைப்
பூர்த்தி செய்ய
கோவிலூக்கு வரும் நேரம் நீ என்னைக் காத்து உன்னுடன்
அழைத்துச் செல்ல வேண்டும்.
உன்னுடைய வீரமும் இதில் விளங்கி பரிமளிக்க வேண்டும்.
அப்போதுதான் எனக்கும் உனக்கும் பெருமை,
என்று(அல்மொஸ்ட் ஆர்டெர்)
எழுதி அனுப்பி விட்டுத் தவிப்புடன் காத்திருக்கிறாள்.

வேதியரும் கண்ணனைக் கடுகி அணுகுகிறார்.
ஒரே ஒரு பார்வைதான் கடிதத்தைப் பார்க்கிறான்.
அடுத்த நிமிட்ம அவன் தேர் அந்தணரோடு
ருக்குமணியைத் தேடிப் பறக்கிறது.

அப்போதிலிருந்தே பழகி இருக்க வேண்டும் இந்த சாரதி.
மாயன் விதர்ப்ப நாட்டில் டி பதித்தான்.
ருக்மினி தந்தை பீஷ்மகனிடம் ஆசி பெற்று விரைகிறாள்
தன் மங்கள கௌரியைத் த்ிசிக்க.

கோவிலில் பூஜித்து வெளியே வரும்போது
வ்ுகிரது கண்ணன் ரதம்.
நீட்டுகிறான் கண்ணன் தன் பொற்கரத்தை.
பிடிக்கிறாள் ருக்மிணி தன் வாழ்வை.
அணைத்து அவளை அமர வைக்கிறான் ரதத்தில்.
துரத்தி
வரும் அத்தனை பேரையும்
வென்று த்வாரகை வந்து கோலாஹலமாக
மணம் முடிக்கிறான். மஹாராணி, கண்ணனின்
பட்டமஹிஷி ருக்மிணி தன் நாயகனுடன்
அரியணை ஏறினாள்.
மங்களம் சுப மங்களம்..



Thursday, July 20, 2006

புது வரவு, நல்வரவு


என் அன்பு சக வலைப்பூ நண்பர்களுக்கும்,சினேகிதிகளுக்கும்
மனு வல்லி சந்தோஷத்துடன் தரும் சேதி.
புதிய வரவான எங்கள் பேத்தி.

மனம் நிறைந்த ஆசிகளைக்
கோருபவள்,
எங்கள் புத்தம் புதிய பேத்தி.

ஆடி மாதம், முதல் தேதி, திங்கள் கிழமை july 17th
இரவு 10.45க்கு

பிறந்து இருக்கிறாள்.

ரேவதி,நரசிம்ஹன் பாட்டி&தாத்தா

Friday, July 14, 2006

SRI LAKSHMINRUSIMHAN




SRILAKSHMINRUSIMHA ! CHARANAM






Thvayi rakshathi rakshakai
ki
kimanmyai
thvayisaa rakshathi rakshaiki
kimanayai hi
ithi nischayathiisrayaami nithyam
nruhare vekavathi thadaasrayam thvaam
இந்த பாடல் ஸ்லோகத்திற்கு ப் பொருள்
ச்ரி ந்ருசிம்ஹா

உன்னைத்தவிர வேறு யாரால் என்னை ரக்ஷிக்க முடியும்?
நீ வந்து என்னை ரக்ஷிக்க வேண்டும்
ரக்ஷிக்கவில்லை என்றால் யார் ரக்ஷிப்பார்?
நீதான் ரக்ஷிக்க வேண்டும்.
உன்னாலேயெ முடியாது என்றால்
வேறு யாரால் முடியும்?
ரஷித்தாலும் ரஷிக்காவிட்டாலும் நீயே சரண்.

இந்த ஸ்லோகம் ச்ரி வேதாந்த தேசிகரின் "காமசிகாஷ்டகம்" என்ற பாடலில், வேகவதி நதிக்கரையில் இருக்கும் லகஷ்மிநரசிம்மரைப் பார்த்துப் பாடியது.
எல்லாப் பாடல்களுக்கும் மேல் இந்தப் பாடல் எனக்குப் பிடித்தது எதனால் என்று பார்த்ததில் ,

அதில் பொருந்தி இருக்கும் ச்ரணாகதிதான்.
'உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை என்றூ அவனிடம் சொல்லி விட்டால் போதும்.
நம் கவலை விட்டது.
எத்தனையோ சங்கடங்கள்,நோய், மன வருத்தம்
இவை எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம்தான்.
பயம் என்னை வாட்டும்பொது என்னைக் காப்பாற்றும் மந்திரம் இதுதான்.
ராம ராமா என்று சொல்லிவிட்டு,
இதையும் சொல்லிக்கொண்டே இருக்கத் தோன்றும்.
எல்லாம் என் மாமியார் செய்த மாயாஜால்ம தான்.
மிக இளவயதிலேயெ வந்த மருமகளை
எப்படியாவது மன நலத்தோடு வைத்துக்

கொள்ளவேண்டும் என்ற தீர்மானம். அவருக்கு.

இங்கே வா' என்று அழைத்து இந்த ஸ்லோகம்
சொல்லு. முடிஞ்சபோது ப்ழகிக்கோ'
என்று சொல்லிக் கொடுத்தார்.

அப்போது பிடித்ததுதான் நரசிம்ஹன் மேல் பித்து.
நமக்கு எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
ப்ரஹலாதனைக் காக்க எடுத்த அவதாரம்,
தூணில் பிறந்தவன்,
முகம் சிம்மம்
உடல் மனிதம்

கைகளில் , கால்களில் நகம் ஆயுதம்
பற்கள் ஒரு க்ருவி ,
சுவாமியின் மடியில் கிடக்கக் கொடுத்து வைத்தான் ஹிரண்யகசிபு.
எங்கேயடா உன் ஹரி?
என்று தந்தை கர்ஜிக்கிறான்.
ப்ரஹலாதன் கை கூப்பி ,எங்கும் இருப்பான்
என்று பதில் சொல்கிறான்

ஒஒ!! இந்த தூணிலும் இருப்பானோ என்று எக்காளமிடுகிறான் ஹிரண்யன்.
அப்போதுதான் சிறுவன் ஹரி தூணிலும் இருப்பான்
இந்தத் துரும்பிலும் இருப்பான் என்று
திண்ணமாக உறுதி அளிக்கீறான்.

ஹிரன்யனுக்கோப் பிள்ளையின் வீரத்தைப் பார்த்துப்
பெருமை ஒருபுறம்
தன்னை மிஞ்சிப் பேசுகிறானெ ேன்று சினம்
.
அங்கெ விஷ்ணுவுக்கு கிலி ,கவலை வந்துவிட்டது.
இந்தக் குழந்தை எங்கே கையைக் காட்டப்போகிறதோ
தெரியவில்லையே.
அங்கெ வெளிவரவேண்டுமே என்று யோசனை.
பக்தன் வார்த்தை பொய்க்ககூடாதே!!

அதனால் ெல்லா இடத்திலும் வியாபித்து விட்டானாம்.
எங்கே த்ட்டினாலும் குதிக்கத் தயார்!!
இந்த மாயவனை அசுரனுக்குத் தெரியாதே.

'"அவன் வரடடும் ,அந்த ஹரி. !
தீர்ந்தது இன்றோடு பகை.' என்று
எக்காளமிட்டபடி தூணில் கதையை வைத்து அடிக்கிறான்.
அப்போது கண்ணை மூடியவன் தான் ப்ரஹலாதன்.
நாராயண ஜபம் அவன் உடல் பூராவும் ஒலிக்கிறது.
அடுத்த நொடியில் தூண் பிளந்தது
வந்தது வெளியே ஒரு அழகிய சிங்கம்.

அழகா ?சிங்கமா என்று கேளாதீர்கள்.
ஆமாம் பக்தனைக் காப்பாற்ற வருபவன்
கோரமாகவா இருப்பான்/?

எங்கள் சிங்கன் அழகாக ஹிரண்யனை
முறித்தான்.
மடியில் கிடத்தி அவனை அனுப்பினான் அவன் முன்னொரிடத்து.
உலகின் அப்போதைய துயரம் முடிந்தது.
நான் சிங்கம் சிரித்து பார்தது இல்லை. எங்கள் வீட்டு ல்கஷ்மிநரசிம்ஹ்ன சிரிப்பான். கண்களொ கருணை வெள்ளம். பிட்ரி மயிர் சிலிர்க்க ஒரு கையில் லட்சுமியை அணைப்பான்.
இன்னொரு கரத்தால் ப்ரஹலாதனுக்கு அருள்வான்
எந்னாளும் அவன் பாதமே துணை.





Friday, July 07, 2006

ஸ்ரீவில்லிபுத்தூர்



வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
சொல்மங்கை ஆண்ட வடபத்ரசாயீ,
அவனைக் கொண்டாடியே, வாழ்நாட்களைக் கழித்தவர்., அதன் பின் அவனையே
மருமகன் வடிவில் கண்டு, மாமனாரும்
ஆகிய (பட்டர்,விஷ்னுசித்தர்) பெரியாழ்வார்.
கோதையையும் ரங்கனையும் சேர்த்து வைத்த கருடாழ்வார்,
கோதையைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொண்டாடும் வில்லிபுத்தூர் மக்கள்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கண்நிறைக்கும் கோபுரம்.
ஆடிப்பூரம் கண்டாள்  ஆண்டாள்.

அவளைக் காண நாமும் போகலாமா?
எந்த அழகைப் பார்த்து விட்டு இமைப்பது கண்களை?

அவள் மாலை அழகு.
சின்னஞ்சிறு பெண்ணாக அவள் குளக்கரை போகும் அழகு.
அவள் திருமஞசன மஞ்சளுக்காகக் காத்திருக்கும் பெண்களின் அன்பு அழகு.
மஞ்சனமாடி விட்டு அலங்கார பவனி வந்து
அழகனை வந்தடையும் ஒய்யாரம்.
இவை எல்லாவற்ரையும் வருடங்கள் கணக்கில் பார்த்தாலும்
அதே உற்சாகத்தோடு அவள் ஊர்வலம் வரும் தெருக்கள் முழுவதும் போடப்படும் கோலங்கள், கட்டப்படும் தோரணங்கள்,
ஆண்டாளை நீராட்டத்துக்கு, ஏற்றீச் செல்ல பிளிரிய வண்ணம் மகிழ்ச்சியோடு காத்திருக்கும் கறுத்த யானைகள் அவள் கையில் தினம் புதிதாகப் பறந்து வந்து அமரும்
பச்சைக்கிளி,

(தினமும் கிளி செய்பவர்களுக்குத் தான் என்ன புண்ணியம்?)
அதைப் பாஙகுற அவள் இடது தோளைப் பார்ப்பது போல்,

அவள் காதில் ரகசியத்தூது சொல்வதுபோல்
அலங்காரம் செய்யும் பட்டாச்சாரியர்,
அந்தக் கிளியைப் பார்த்து பொறாமைப் பட்டு
நமக்கு கிடைக்காதா இந்த ஆனந்தம் என்று ஏங்கி ,,
ஆண்டாள் காதில் போய் ரங்க நாமம் விழட்டும் ,அப்போதாவது அவள் நம்மைப் பார்ப்பாளோ
என்று நினைத்து
ரங்க ரங்கா என்று மழலையில் இசைக்கும் உயிர்க்கிளிகள்,
தாழம்பூ தரித்த பின்னல்கள்
அசைய அசையக் கோலாட்டம் போடும் சிறுமியர்,
தலையில் கொண்டை தரித்து ஆண்டாளாகவேத் தங்களைப் பாவிக்கும் மங்கையர்,
இந்த வண்ணங்களை, வேத கோஷங்களை, ப்ரபந்தம்
சேவிக்கும் வேதியர்களைப் பார்க்க யாருக்குக் கொடுத்து வைத்து இருக்கிறதோ?
போய் வந்தவர்கள் சொல்லுங்கள்.

Saturday, July 01, 2006

எனக்குப் பிடித்த ஆறு

மா.சிவகுமார் அவர்கள் இடமிருந்து வந்த பின்னூட்டம்+ஆறு அழைப்பு
மிக்க இன்ப அதிர்ச்சி.
அட நம்மளைக்கூட அழைத்து மரியாதை செய்யராங்களே!!

அதனாலே 6 மாதமே ஆன ஆரம்ப நிலைப் பதிவாளரின் ஆறு விருப்பப் பதிவை படிக்க வேண்டிய அவசியம்
உங்களுக்கு.
ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மா.சிவகுமார் அழைத்ததால் ஆறு பற்றிப் பேச(எழுத) வந்து இருக்கிறேன்தமிழ்மணம் புதிய பதிவாளர் என்று தெரிந்தும் என்னை அழைத்துஇருக்கும் சிவகுமாரின்வீரத்தை பாராட்டுகிறென்.
இதோ ஆறு.
ஆறுகளில்----------பிடித்தவை
வைகை
தாமிரபரணி,
காவேரி,
பெண்ணாறு
பழையாறு(எங்களுக்கு ஏதுவாக குறைந்த ஆழத்தில் ஓடியதால்)
பார்க்காத கங்கை
என்னைப் பிடித்து வைத்து இருப்பவை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
1, படிப்பதுபடித்ததைப் பேசுவது(பேச்சைக் கேட்கவிட்டாலும் அறுப்பது)
2,,,தமிழ்மணம்
3,சிரித்து , சிரிக்க வைக்க வேண்டும்,
4 , நினைவுகள், எதிர்பார்ப்புகள்,
5,பாடல்கள் ,எம்.எஸ் அம்மாவின் கீதம்,ஜாஸ் ம்யுசிக்
, சினிமா,
6, குழைந்தைகளின் மழலை..
பிடித்த நண்பர்கள்-------------------------------

1எங்கள் பேரன்
2, என் ஆத்மார்த்தமான தோழி சாந்தி
3, துளசி கோபால் (பதிவே போடணுமே)
4, உதவ வந்த மன்சூர் ராஜா, கீதா சாம்பசிவம்
5, வலைத்தோழி பிரியா (காளமேகம் புலவரின் பாடல்கள்)__,6, தேசிகன்(தேசிகன் பக்கம்)-(குரு)----------------------------------------------------------------அழைக்க விரும்பும் ஆறு 1பதிவாளர்கள்**************************************************
*****1,தேசிகன்,
2,அம்பி (அம்மாஞ்சி)
3,பிரியா
4,டெல்ப்ஃன் விக்டோரியா
5,பரஞ்சோதி
6,தி.ரா.ச
7, இட்லிவடை.
வர முடிந்தால்(ஏற்கனவே யாராவது அழைத்து இருப்பார்கள்)அழைக்க விரும்புபவர்கள்+++++++++++++++++++++++++++++
துளசி கோபால்,
கீதா சாம்பசிவம்
உஷஅ ராமச்சந்திரன்
குமரன்
மதுமிதா
யோசிப்பவர்
-----------------------------------------------------
பிடித்த எழுத்தாளர்கள்-------------------------------கி.ராஜநாராயணன் அவர்கள்,
சுஜாதா
கல்கி,
டி.கே.சி
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்,
அனுரதா ரமணன்
சீதா ரவி

ஆறு ஏழானாலும் என்ன. தப்பு இல்லை என்று நினைத்ததால் நீண்டு விட்டது பட்டியல்.
=